Friday, October 30, 2026

தவெக இந்து சமய அறநிலையதுறை அமைச்சர் ஆணை ஏற்காத அதிகாரிகள்- பல்டி

 அறநிலையத்துறையில் அதிரடி பல்டி!

https://www.facebook.com/photo?fbid=3219603771578244&set=pcb.3219603868244901அரசாணை போட்ட 6 நாளில் U-Turn! 6 இணை ஆணையர்களுக்கு மீண்டும் மாற்றம் - அதிகாரிகள் பொறுப்பேற்காததால் அரசு அதிரடி முடிவு - அரசாணையை அதிகாரிகள் மதிக்க மாட்டார்களா?
இந்து சமய அறநிலையத்துறையில் கடந்த ஒரு வாரமாக நடப்பது பெரும் குழப்பம் -என்ன நடந்தது?
- *முதல் ஆணை: 23.10.2026 அன்று அரசாணை (வா) எண்.14* போட்டு 6 இணை ஆணையர்களை அதிரடியாக மாற்றினார்கள்
- *இரண்டாவது ஆணை: 6 நாளில் 29.10.2026 அன்று அரசாணை (வா) போட்டு, அந்த மாற்றத்தையே ரத்து பண்ணி, மீண்டும் புதிய இடத்திற்கு மாற்றியுள்ளது.
அதாவது, பணியிட மாற்றம் செய்யப்பட்டவர்களுக்கே மீண்டும் பணியிட மாற்றம்!
யார் யார் பல்டி அடிக்கப்பட்டார்கள்? - முழு லிஸ்ட்:
*1. ராமு Vs ரேணுகாதேவி - திருவேற்காடு
23-ம் தேதி ராமுவை திருவேற்காடு கருமாரி அம்மன் கோயிலில் இருந்து சென்னை-1-க்கு மாற்றினார்கள். ரேணுகாதேவியை மதுரையில் இருந்து திருவேற்காட்டிற்கு போட்டார்கள்.
ஆனா இவங்க ரெண்டு பேரும் போய் பொறுப்பு ஏற்கல!
அதனால் 29-ம் தேதி அரசு டக்குனு பல்டி அடிச்சு, மீண்டும் ராமுவை சென்னை-1, ரேணுகாதேவியை திருவேற்காடு என அதே இடத்தை மீண்டும் உறுதி செய்துள்ளது. ஒரே இடத்திற்கு ரெண்டு ஆணைகள்!
*2. ரமணி Vsஅனிதா Vs குமரதுரை - முக்கோண குழப்பம்:
23-ம் தேதி ரமணியை சென்னை மண்டலம்-3-ல் இருந்து தலைமையிட (சிறப்பு) பணிக்கு மாற்றினார்கள். அனிதாவை காரைக்குடியில் இருந்து சென்னை மண்டலம்-3-க்கு மாற்றினார்கள். குமரதுரையை தலைமையிடத்தில் இருந்து காரைக்குடிக்கு மாற்றினார்கள்.
இந்த மூன்று பேருமே பொறுப்பு ஏற்கவில்லை என்பதால், 29-ம் தேதி அதே மாற்றத்தை *"ரத்து செய்ததை ரத்து செய்கிறோம்"* என்று குழப்பமான முறையில் மீண்டும் அதே இடங்களை கொடுத்துள்ளது
அரசு. அதாவது ஒரு இணை ஆணையர் பணியிடத்தில் ரெண்டு பேர் இருக்கிற மாதிரி ஆகிவிட்டது!
3. விஜயா:
சென்னை-1-ல் இருந்து திருவண்ணாமலைக்கு மாற்றப்பட்டவர். இவரும் பொறுப்பு ஏற்காததால் இவரது ஆணையும் மீண்டும் மாற்றப்பட்டுள்ளது.
இப்படி எல்லாருக்கும் பண்ண முடியுமா? - கேள்வி
*அரசாணை போட்டா மதிக்கணும், அதுதான் அதிகாரிகள் பொறுப்பு. ஒரு அரசு ஆணை பிறப்பித்தால், அதை ஏற்று உடனடியாக பணியில் சேர வேண்டும்.
அதில் ஏதாவது குறை இருந்தால், மேல் அதிகாரிக்கு எழுத்துப்பூர்வமாக தெரிவிக்கலாம். ஆனால் பொறுப்பேற்காமல் இருப்பது என்பது அரசை அவமதிப்பது போல.
ஆனா இவங்க 6 பேரும் 23-ம் தேதி ஆணை போட்டும், பொறுப்பு ஏற்காமல் இருந்துள்ளனர்.
அதனால் தான் அரசு 6 நாளில் டக்குனு பல்டி அடித்து 29-ம் தேதி புது ஆணை போட்டுள்ளது.
இப்படி ஒவ்வொரு அதிகாரிக்கும் அரசு பல்டி அடித்துக் கொண்டே இருந்தால், நிர்வாகம் என்ன ஆகும்?
இன்று இணை ஆணையருக்கு பண்ணினால், நாளை கலெக்டர், எஸ்பிக்கும் இதே மாதிரி நடக்குமே!
அறநிலையதுறை அமைச்சர் அவர்களே என்ன நடக்கிறது உங்கள் துறையில்...?

No comments:

Post a Comment