Friday, October 30, 2026

அல்-முத்ஆ (Misyar/Mut'ah marriage) என்பது தற்காலிக ஹலால் இஸ்லாமிய திருமணம்

 அல்முத்ஆ திருமணம் முஹம்மது நபி அவர்கள் காலத்திலும் அரபிகளின் வழக்கிலிருந்தது. அல்முத்ஆ திருமணம் என்பது குறைந்தபட்சம் மூன்று நாட்களுக்கு மட்டும் செய்யப்படும் தற்காலிக திருமணம். அவர்கள் விரும்பினால் திருமண வாழ்க்கையைத் தொடரலாம் அல்லது பிரியலாம் இதில் எந்த நிர்பந்தமும், குற்றமும் இல்லை. அல்முத்ஆ திருமணத்திற்கு திரு குர் ஆனில் தடையெதும் காணவில்லை.

https://www.facebook.com/story.php?story_fbid=946969345161968&id=100095467321447

போர்காலங்களில் சஹாபக்கள் தங்கள் மனைவியரைப் பிரிந்து நீண்ட நாட்கள் இருக்க வேண்டியிருந்தது. சஹாபக்களின் உடல் தேவைக்காக மிகவும் சிரமப்பட்டனர். அதைக் கண்ட முஹம்மது நபி அவர்கள் போர் காலங்களில் அல்முத்ஆ திருமணத்தை அனுமதித்தார். சஹாபக்கள்தங்களும் உடல் தேவைகளை அல்முத்ஆ திருமணம் மற்றும் பெண் போர்க் கைதிகளை அனுபவித்தல் என அல்லாஹ்வின் முழு அனுமதியோடு நிறைவேற்றி மகிழ்ந்தனர்.
ஆண்கள், மனைவியை விடுத்து பிற பெண்களை இச்சையுடன் பார்ப்பதை தடுப்பதற்காகவே புர்க்கா – ஃபர்தா/ ஹிஜாப் என்ற உடையை பெண்கள் அணிய வேண்டும் என்று முஹம்மது நபி கூறினார். எனவே கற்புநெறியை ஆண்களும் பின்பற்ற வேண்டும் என்றே இஸ்லாம் போதிக்கிறது என்று உங்களையும் உலகை ஏமற்றிக் கொண்டிருக்கும் இஸ்லாமிய பிரச்சாரா பீரங்கிகளின் வார்த்தைகளில் ஏதாவது பொருளிருப்பதாக தோன்றுகிறதா?
அல்முத்ஆ (தவணை முறைத்திருமணம்) குறித்து இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம் வினவப்பட்டது. அவர்கள் அதற்கு அனுமதி உண்டு என்றார்கள். அப்போது அவர்களுடைய முன்னாள் அடிமை ஒருவர் (பயணத்தில் மனைவி இல்லாத) நெருக்கடியான சூழ்நிலை பெண்கள் குறைவாக இருத்தல் போன்ற சமயங்களில்தான் இத்திருமணத்திற்கு அனுமதியுண்டாமே! என்று கேட்டார். அதற்கு இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் ஆம்! என்று பதிலளித்தார்கள்.
(புகாரி 5116,5117,5118,5119)
பின் நாளில் முஹம்மது நபி அவர்கள் அல்முத்ஆ திருமணத்தை தடை செய்தார் என்று ஸுன்னி முஸ்லீம்கள் கூறுகின்றனர். ஆனால் ஷியா முஸ்லீம்களிடையே அப்படி எந்த தடையுமில்லை. ஒவ்வொருவரும், வாழ்வில் ஒருமுறையேனும் அல்முத்ஆ (தவணை முறைத் திருமணம்) செய்ய வேண்டும் என வலியுறுத்திக்கூறும் ஹதீஸ்களை ஷியாக்கள் முன்வைக்கின்றனர்.
அல்முத்ஆ திருமணம் என்பது (ஹலாலான) விபச்சாரத்தை தவிர வேறு என்ன? இன்று நம்மில் பல ஆண்கள் வயிற்று பிழைப்பிற்காக கடல் கடந்து செல்கிறார்கள். தங்கள் மனைவியர்களைப் பிரிந்து வருடக்கணக்கில் வாழவேண்டிய சூழ்நிலை அந்த ஆண்களும், அவர்களின் மனைவியரும் உணர்ச்சிகளற்ற ஜடமா? அவர்களுக்கும் அல்முத்ஆ திருமணம் செய்து வைத்தால் எப்படி இருக்கும்? கற்பனை செய்யவே அருவருப்பாக தோன்றவில்லையா?

No comments:

Post a Comment