Tuesday, December 15, 2015

பாதிரியார் மனைவி ஜெனிஷா குழந்தையுடன் தற்கொலை

மத போதகர் மனைவி குழந்தையுடன் தற்கொலை

திருவட்டார், டிச.15–
http://www.maalaimalar.com/2015/12/15125945/The-pastor-wife-suicide-near-t.html
http://www.dinamani.com/edition_thirunelveli/kanyakumari/2015/12/16/%E0%AE%AE%E0%AE%A4-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9/article3179842.ece
திருவட்டார் அருகே சுவாமியார்மடத்தை அடுத்துள்ள நெடியங்காட்டைச் சேர்ந்தவர் ஜஸ்டின் (வயது 40). இவர் திருவட்டார் பகுதியில் உள்ள ஒரு ஆலயத்தில் உதவி போதகராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி ஜெனிஷா (30). இவர்களுக்கு செலின் சத்யா (7), சுஜித் (4) என 2 மகள்கள் இருந்தனர்.
நேற்று வழக்கம்போல் போதகர் ஜஸ்டின் ஆலய பணிக்கு சென்றார். ஆலயத்தில் கிறிஸ்துமஸ் பண்டிகை சிறப்பு நிகழ்ச்சிகள் நடப்பதால் இரவு வீட்டுக்கு தாமதமாக வந்தார்.
அப்போது வீட்டில் மனைவி ஜெனிஷா, மகள்கள் செலின் சத்யா, சுஜித் ஆகியோர் படுக்கையறையில் வாயில் இருந்து நுரை தள்ளியபடி கிடந்தனர். அதிர்ச்சி அடைந்த ஜஸ்டின் அருகில் ஓடிச் சென்று பார்த்தார். அவர்களில் ஜெனிஷாவும், சுஜித்தும் ஏற்கனவே இறந்து இருந்தனர். செலின் சத்யா மட்டும் உயிருக்கு போராடிக் கொண்டு இருந்தார்.
அவர்களை பார்த்து ஜஸ்டின் கண்ணீர் விட்டு கதறி அழுதார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் அங்கு திரண்டு வந்தனர். அவர்கள் உயிருக்கு போராடிக்கொண்டு இருந்த செலின் சத்யாவை மீட்டு திருவனந்தபுரத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.
சம்பவம் குறித்து திருவட்டார் போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் பென்சாம் தலைமையிலான போலீசார் நேரில் சென்று விசாரணை நடத்தினர்.
விசாரணையில் 2 குழந்தைகளுக்கும் விஷம் கொடுத்து ஜெனிஷா தற்கொலை செய்து இருப்பது தெரியவந்தது. ஜெனிஷா வலிப்பு நோயால் அவதிப்பட்டு வந்ததாகவும், அதனால் அடிக்கடி தற்கொலை செய்யப்போவதாக மிரட்டியதாகவும் கூறப்படுகிறது. ஜஸ்டினும், அவரது குடும்பத்தினரும் ஜெனிஷாவை சமாதானப்படுத்தி வைத்துள்ளனர்.
இதற்கிடையே ஜஸ்டின் புதிய வீடு ஒன்று கட்டியுள்ளார். அதில் அவருக்கு கடன் ஏற்பட்டுள்ளது. இதனாலும் ஜெனிஷா வேதனை அடைந்துள்ளார். இதில் மனம் உடைந்து தான் ஜெனிஷா தற்கொலை என்னும் துயர முடிவை தேடிக்கொண்டது தெரியவந்தது.
ஜெனிஷா மற்றும் சுஜித் ஆகியோரின் உடல்களை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர்.
பலியான சுஜித் எல்.கே.ஜி. படித்து வந்தார். ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட செலின் சத்யா 2–ம் வகுப்பு படித்து வருகிறார்.

First Published : 16 December 2015 01:59 AM IST
குமரி மாவட்டம், சுவாமியார்மடம் அருகே கிறிஸ்தவ மத போதகரின் மனைவியும், ஒரு குழந்தையும் விஷம் குடித்து இறந்தனர். மற்றொரு குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
சுவாமியார்மடம் நெடியாங்கோடு பகுதியைச் சேர்ந்தவர் ஜெஸ்டின் (37). இவர் குலசேகரத்திலுள்ள ஒரு கிறிஸ்தவ ஜெப அமைப்பில் போதகராக உள்ளார். இவரது மனைவி ஜெனிஷா (30). இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள். இவர்களுக்கு ஹெப்சி மனோசுஜித் (7), ஹெலன் சத்தியசுஜித் (4) என இரு பெண் குழந்தைகள்.
ஜெனிஷாவுக்கு வலிப்பு நோய் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. மேலும், இத் தம்பதிக்கு கடன் தொல்லையும் இருந்ததாம். அதனால் இருவருக்குமிடையில் பிரச்னை ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் ஜெஸ்டின், ஜெபத்துக்குச் சென்றுவிட்டு திங்கள்கிழமை நள்ளிரவில் வீடு திரும்பினாராம்.
அப்போது விஷம் குடித்த நிலையில் ஜெனிஷாவும், ஹெலன் சத்திய சுஜித்தும் இறந்து கிடந்துள்ளனர். உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த மற்றொரு மகள் ஹெப்சி மனோசுஜித்தை மீட்டு மார்த்தாண்டத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர், அங்கிருந்து திருவனந்தபுரத்திலுள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இதுகுறித்து திருவட்டாறு போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். ஜெனிஷா தன் இரு குழந்தைகளுக்கும் விஷம் கொடுத்துவிட்டு தானும் விஷம் அருந்தியிருக்கலாம் எனக் கூறப்படுகிறது. இதில் அதிர்ஷ்டவசமாக ஒரு குழந்தை தப்பியுள்ளது.

No comments:

Post a Comment

மதுரையில் மாநகராட்சி இளம் பெண் ஊழியரிடம் 4 வருடம் உல்லாசமாக இருந்து குழந்தை பிறந்த பின் கழட்டிவிட்ட திருமணமான பாஸ்டர் மீது புகார்.

மதுரையில் பாஸ்டர் செய்த வேலை.. "கணவன் மனைவியாய் வாழ்ந்தோமே".. கமிஷனர் ஆபீசுக்கு ஓடிய மாநகராட்சி பெண்  By Hemavandhana Updated: Wed...