பெண்ணை திருமணம் செய்து ஏமாற்றிய மதபோதகர் கைது : பல பெண்களை ஏமாற்றியது அம்பலம்
புதன் 23, டிசம்பர் 2015 11:31:21 AM (IST)
http://www.tutyonline.net/view/31_107855/20151223113121.html
தூத்துக்குடியில் 4 பெண்களை ஏமாற்றி திருமணம் செய்த மத போதகரை போலீசார் கைது செய்துள்ளனர்.
தூத்துக்குடி பி அன் டி காலனி 6வது தெருவைச் சேர்ந்தவர் ரத்தினசாமி மகள் எஸ்தர் பாலா (38). இவருக்கு திருமணமாகி, கடந்த 2010-ல் கணவர் மாரடைப்பால் மரணம் அடைந்துவிட்டார். இதையடுத்து அவர் தூத்துக்குடி மாவட்டம், மெஞ்ஞானபுரம் சர்ச் தெருவைச் சேர்ந்த தெய்வநாயகம் மகன் வின்சென்ட் பாஸ்கர் (37) என்பவரை 2வது திருமணம் செய்து கொண்டார். கடந்த 10.02.2015ல் இவர்களுக்கு திருமணம் நடந்தது.
வின்சென்ட் பாஸ்கர் மத போதகராக உள்ளார். ஊர் ஊராக சென்று பிரசங்கம் செய்து வருவாராம். திருமணத்திற்கு பின்னர் 15 நாட்கள் எஸ்தர் பாலாவுடன் குடும்பம் நடத்திய வின்சென்ட் பாஸ்கர், மத பிரசங்கத்திற்காக வெளியூர் செல்வதாக கூறிவிட்டு சென்றுள்ளார். அதன் பின்னர் அவர் திரும்பி வரவில்லையாம். இந்நிலையில், கடந்த 2 வாரங்களுக்கு முன்பு எஸ்தர் பாலாவின் உறவினர் ஒருவர் நெல்லையில் உள்ள ஜவுளிக்கடையில் வேறு ஒரு பெண்ணுடன் வின்சென்ட் பாஸ்கரை பார்த்தாராம்.
இதுகுறித்து அவர் எஸ்தர் பாலாவிடம் தெரிவித்தாராம். இதனால் சந்தேகம் அடைந்த எஸ்தர் பாலா, வின்சென் பாஸ்கர் தன்னை திருமணம் செய்து ஏமாற்றியதாக அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் வழக்குப் பதிவு செய்து வின்சென்ட் பாஸ்கரை கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடத்தியதில் இதுவரை அவர் 4 பெண்களை ஏமாற்றி திருமணம் செய்தது தெரியவந்தது. மேலும், அவரது அவருக்கு உடந்தையாக இருந்த தருமண புரோக்கர் ஜான் இன்பராஜ் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.
No comments:
Post a Comment