Sunday, December 27, 2015

Respect Hindu faith and Rights. Madurai High Court- Defer Christmas

‘மத சுதந்திரம்’ என்பது பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் இருக்கக்கூடாது கிறிஸ்துமஸ் விழா நடத்த அனுமதி கோரிய வழக்கில் நீதிபதி கருத்து
http://www.dailythanthi.com/News/Districts/Madurai/2015/12/25030056/Religious-freedom-to-the-publicShould-not-affectPermission.vpf


மதுரை,
‘மத சுதந்திரம்’ என்பது பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் இருக்கக்கூடாது என்று கிறிஸ்துமஸ் விழா நடத்த அனுமதி கோரிய வழக்கில் ஐகோர்ட்டு நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார்.
கிறிஸ்துமஸ் விழா
கன்னியாகுமரி மாவட்டம் கல்குளம் அருகே உள்ள தும்பக்கோடு பகுதியைச் சேர்ந்தவர் ஜான்சன். தும்பக்கோடு பகுதியில் நாளை(அதாவது இன்று) கிறிஸ்துமஸ் விழா நடத்த அனுமதி மறுப்பதாகவும், கிறிஸ்மஸ் விழா நடத்த அனுமதி அளிக்க குலசேகரம் போலீசாருக்கு உத்தரவிட வேண்டும் என்றும் ஜான்சன் மதுரை ஐகோர்ட்டு கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு நீதிபதி எஸ்.வைத்தியநாதன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி உத்தரவில் கூறியிருப்பதாவது:–
‘‘தும்பக்கோடு பகுதியில் மனுதாரர் கிறிஸ்துமஸ் விழா நடத்த அனுமதி கோரி உள்ள இடத்தின் அருகே இந்துக்கோவிலில் 24–ந் தேதி முதல் 27–ந் தேதி வரை விழா நடத்த அனுமதி அளித்துள்ளதால் ஏதேனும் பிரச்சினைகள் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக மனுதாரர் 25–ந் தேதி கிறிஸ்துமஸ் விழா நடத்த அனுமதி மறுத்துள்ளதாக இன்ஸ்பெக்டர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்கள் பாதிக்கப்படக்கூடாது
ஒவ்வொருவரும் தங்களது மதத்தை பின்பற்ற உரிமை உள்ளது. மத சுதந்திரம் என்பது பொதுமக்களுக்கு எந்தவகையிலும் குந்தகம் விளைவிக்கும் வகையில் இருக்கக்கூடாது. மத விழாக்கள் என்ற பெயரில் நடத்தப்படும் விழாக்களால் பொதுமக்கள் எந்த வகையிலும் பாதிக்கப்படக்கூடாது.
அனைத்து தரப்பினரும் ஒரே சிந்தனையுடன் செயல்பட்டால் தான் வளமான தேசத்தை உருவாக்க முடியும். நீதிமன்றம் யாருக்கும் பாரபட்சமாக செயல்படாது. நியாயத்தைப் பார்த்துத் தான் தீர்ப்பு வழங்கும். இந்த வழக்கை பொறுத்தமட்டில் ஏற்கனவே, இந்துக்கோவிலில் பூஜை நடத்த போலீசார் அனுமதி அளித்துள்ளதால் மனுதாரர் 25–ந் தேதி கிறிஸ்துமஸ் விழா நடத்த அனுமதி அளிக்க முடியாது. ஆகவே மனு தள்ளுபடி செய்யப்படுகிறது.
வேறு தேதியில் விழா நடத்தலாம்
மனுதாரர் 27–ந் தேதிக்கு பின்னர் ஏதாவது ஒரு தேதியில் விழா நடத்த அனுமதி கோரும்பட்சத்தில் அதற்கு இன்ஸ்பெக்டர் அனுமதி அளிக்கலாம்.’’
இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

காலில் செருப்பு, நெருப்பு இல்லத அடுப்பு பொங்கல் போட்டோ ஷூட் செய்த தமிழர் விரோத்கள்- மனிதர்களா

 காலில் செருப்பு, நெருப்பு இல்லத அடுப்பு பொங்கல் போட்டோ ஷூட் செய்த தமிழர் விரோத்கள்- மனிதர்களா