Sunday, July 1, 2012

இயேசு- பெத்லஹேமில் பிறந்தாரா?

மத்தேயு 2:1 ஏரோது அரசன் காலத்தில் யூதேயாவிலுள்ள பெத்லகேமில் இயேசு பிறந்தார். அப்போது கிழக்கிலிருந்து ஞானிகள் எருசலேமுக்கு வந்து,2 ' யூதர்களின் அரசராகப் பிறந்திருக்கிறவர் எங்கே? அவரது விண்மீன் எழக் கண்டோம். அவரை வணங்க வந்திருக்கிறோம் ' என்றார்கள்.3 இதைக் கேட்டதும் ஏரோது அரசன் கலங்கினான். அவனோடு எருசலேம் முழுவதும் கலங்கிற்று.4 அவன் எல்லாத் தலைமைக் குருக்களையும், மக்களிடையே இருந்த மறைநூல் அறிஞர்களையும் ஒன்று கூட்டி, மெசியா எங்கே பிறப்பார் என்று அவர்களிடம் விசாரித்தான்.5 அவர்கள் அவனிடம், ' யூதேயாவிலுள்ள பெத்லகேமில் அவர் பிறக்க வேண்டும்.6 ஏனெனில், ″ யூதா நாட்டுப் பெத்லகேமே, யூதாவின் ஆட்சி மையங்களில் நீ சிறியதே இல்லை; ஏனெனில், என் மக்களாகிய இஸ்ரயேலை ஆயரென ஆள்பவர் ஒருவர் உன்னிலிருந்தே தோன்றுவார் ″ என்று இறைவாக்கினர் எழுதியுள்ளார் ' என்றார்கள்.7 பின்பு ஏரோது யாருக்கும் தெரியாமல் ஞானிகளை அழைத்துக் கொண்டு போய் விண்மீன் தோன்றிய காலத்தைப் பற்றி விசாரித்து உறுதி செய்து கொண்டான்.8 மேலும் அவர்களிடம், ' நீங்கள் சென்று குழந்தையைக் குறித்துத் திட்டவட்டமாய்க் கேட்டு எனக்கு அறிவியுங்கள். அப்பொழுது நானும் சென்று அக்குழந்தையை வணங்குவேன் ' என்று கூறி அவர்களைப் பெத்லகேமுக்கு அனுப்பி வைத்தான்.9 அரசன் சொன்னதைக் கேட்டு அவர்கள் புறப்பட்டுப் போனார்கள். இதோ! முன்பு எழுந்த விண்மீன் தோன்றிக் குழந்தை இருந்த இடத்திற்கு மேல் வந்து நிற்கும்வரை அவர்களுக்கு முன்னே சென்று கொண்டிருந்தது.10 அங்கே நின்ற விண்மீனைக் கண்டதும் அவர்கள் மட்டில்லாப் பெருமகிழ்ச்சி அடைந்தார்கள்.11 வீட்டிற்குள் அவர்கள் போய்க் குழந்தையை அதன் தாய் மரியா வைத்திருப்பதைக் கண்டார்கள்; நெடுஞ்சாண்கிடையாய் விழுந்து குழந்தையை வணங்கினார்கள்; தங்கள் பேழைகளைத் திறந்து பொன்னும் சாம்பிராணியும் வெள்ளைப்போளமும் காணிக்கையாகக் கொடுத்தார்கள்.12 ஏரோதிடம் திரும்பிப் போக வேண்டாம் என்று கனவில் அவர்கள் எச்சரிக்கப்பட்டதால் வேறு வழியாகத் தங்கள் நாடு திரும்பினார்கள்.

மத்தேயுவின் இந்த இயேசுவின் பெற்றோர் யார்?

மத்தேயு1: 15எலியூதின் மகன் எலயாசர்; எலயாசரின் மகன் மாத்தான்; மாத்தானின் மகன் யாக்கோபு. 16யாக்கோபின் மகன் மரியாவின் கணவர் யோசேப்பு. மரியாவிடம் பிறந்தவரே கிறிஸ்து என்னும் இயேசு.

லூக்கா 1:26ஆறாம் மாதத்தில் கபிரியேல் என்னும் வானதூதரைக் கடவுள் கலிலேயாவிலுள்ள நாசரேத்து என்னும் ஊரிலிருந்த ஒரு கன்னியிடம் அனுப்பினார்.  27அவர் தாவீது குடும்பத்தினராகிய யோசேப்பு என்னும் பெயருடைய ஒருவருக்கு மண ஒப்பந்தமானவர். அவர் பெயர் மரியா.

லூக்கா2:1அக்காலத்தில் அகுஸ்து சீசர் தம் பேரரசு முழுவதும் மக்கள் தொகையைக் கணக்கிடுமாறு கட்டளை பிறப்பித்தார்.2அதன்படி சிரிய நாட்டில் குரேனியு என்பவர் ஆளுநராய் இருந்தபோது முதன்முறையாக மக்கள் தொகை கணக்கிடப்பட்டது.3தம் பெயரைப் பதிவு செய்ய அனைவரும் அவரவர் ஊருக்குச் சென்றனர்.4தாவீதின் வழிமரபினரான யோசேப்பும், தமக்கு மண ஒப்பந்தமான மரியாவோடு, பெயரைப் பதிவு செய்ய,5.கலிலேயாவிலுள்ள நாசரேத்து ஊரிலிருந்து யூதேயாவிலுள்ள பெத்லகேம் என்ற தாவீதின் ஊருக்குச் சென்றார். மரியா கருவுற்றிருந்தார்.6அவர்கள் அங்கு இருந்தபொழுது மரியாவுக்குப் பேறுகாலம் வந்தது.7அவர் தம் தலைமகனைப் பெற்றெடுத்தார். விடுதியில் அவர்களுக்கு இடம் கிடைக்கவில்லை. எனவே மாட்டுத் தொழுவத்தில் பிள்ளையைத் துணிகளில் பொதிந்து தீவனத் தொட்டியில் கிடத்தினார்.
 
லூக்கா வின் இந்த இயேசுவின் பெற்றோர் யார்?

லூக்கா3: 23 இயேசு தம் பணியைத் தொடங்கியபோது, அவருக்கு வயது ஏறக்குறைய முப்பது; அவர் யோசேப்பின் மகன் என்று கருதப்பட்டார். யோசேப்பு ஏலியின் மகன்;24 ஏலி மாத்தாத்தின் மகன்; மாத்தாத்து லேவியின் மகன்; லேவி மெல்கியின் மகன்; மெல்கி யன்னாயின் மகன்; யன்னாய் யோசேப்பின் மகன்

இரண்டு கதாசிரியர்களும் இரு வெவ்வேறு (90மைல் தள்ளி உள்ள) ஊரைச் சேர்ந்த தாய் தந்தையைக் கூறுகிறார்கள்.
யாக்கோபு மகன் ஜொசப்பும்- ஏலீ மகன்  ஒருவர் என்றால் படிப்போருக்கு மூளை இல்லை என்பார்கள்.

http://en.wikipedia.org/wiki/Bethlehem
original name was Beit Lachama, from the Canaanite god Lachama. The earliest mention of the city is in the Amarna correspondencec.1350-1330 BCE as "Bit-Lahmi".Modern scholars are doubtful that Jesus was born in Bethlehem, seeing the biblical stories not as historical accounts but as symbolic narratives invented to present the birth as fulfillment of prophecy and imply a connection to the lineage of King David.
 In a 2005 article in Archaeology magazine, archaeologist Aviram Oshri points to an absence of evidence of the settlement of Bethlehem near Jerusalem at the time when Jesus was born, and postulates that Jesus was born in Bethlehem of Galilee.
Some scholars hold the view that this site was one that had originally been dedicated to Adonis-Tammuz and Christians had taken it over.

லுக்கவின் நாசரேத் வாழும் ஏலியின் மகன் யோசேப்பு  மக்கள் தொகை கணக்கிடுக்காக பெத்லஹேம் வந்தாராம்.

இக்கணக்கீடு கிரேனியு தலைமையில், அதாவது பொ.கா. 7ல் தான் நடந்ததாம்

மத்தேயுவோ பெரிய ஏரோது காலத்தில்; அதாவது பொ.மு.6ல் என்கிறார்.
Vatican nativity does away with the manger Image result for taylor - christian holy places
மத்தேயுவின்படி பெத்லஹேமில் யாக்கோபு மகன் ஜொசப் வீடு, எனவே தான், தற்கால போப்பரசர் பெனடிcடும் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களில் மாட்டுத் தொழுவம் 
 நீக்கினார்.

இஸ்ரேல் சென்றால் இயேசுக்கிறிஸ்து இந்த பூமியில் வாழ்ந்ததற்கான ஆதாரேமே இல்லை இன்று இஸ்ரேல் தொல்பொருள் துறையே கூறியுள்ளது. இயேசு  எப்போது வாழ்ந்தார்? எக்காலத்தைச் சார்ந்தவர் என்பது பற்றி அதிகாரபூர்வமாக எதுவும் தெரியாது? இயேசு பற்றிய வரலாறு கூட ஒன்றுக்கொன்று முரணாக உள்ளது. யாரின் கூற்றைத்தான் நம்புவதோ?

Now Please see what is the position Historically of the First -2-3 Chapters of Matthew and Luke which are called Infancy Narratives.As per New Catholic Encyclopedia-by Washington’ Catholic University-
There seems to be no doubt that the Infancy Narratives of Matthew and Luke were later additions to the original body pf the Apostolic Catechesis, the content of which began with John the Baptist and ends with Ascension.  -Page- 695’ Vol-14 ; New Catholic Encyclopedia.
Winner of Levil Sala Prize for a book on archaeology in Israel, 1995

Christians and the Holy Places

The Myth of Jewish-Christian Origins

Joan E. Taylor
Clarendon Press
406 pages | halftones, line figures, maps | 216x138mm
978-0-19-814785-5 | Hardback | 01 April 1993

மத்தேயு மற்றும் லுக்கா சுவிக் கதைகளில் குழந்தைப் புனையல்கள் என உள்ள பகுதிகளில் நிச்சயமாய் பிற்காலத்தில் சேர்க்கப்பட்டது; அப்போஸ்தலர்கள் மூலம் செவிவழிப் பாரம்பரியம் என் இருந்த கதை- ஏசு ஞானஸ்நானி யோவானைத் தேடிச் சென்று பாவமன்னிப்பு ஞானஸ்நானம் பெறுதலில் தொடங்கி மேலே எடுத்து செல்ல்ப் பட்டார் என்பது தான் என கத்தோலிக்க பல்கலைகழகத்தின் கலைகளஞ்சியம் கூறுகிறது.

6:3!3 இவர் தச்சர் அல்லவா! மரியாவின் மகன்தானே! யாக்கோபு, யோசே, யூதா, சீமோன் ஆகியோர் இவருடைய சகோதரர் அல்லவா? இவர் சகோதரிகள் இங்கு நம்மோடு இருக்கிறார்கள் அல்லவா? ‘ என்றார்கள். இவ்வாறு அவரை ஏற்றுக் கொள்ள அவர்கள் தயங்கினார்கள்.

The Greek word in Mark 6:3 for brothers and sisters that are used to designate the relationship between and the relatives have meaning of full blood brothers and isters in the Greek speaking world oat the Evangeslist’s time and would naturally be taken by his Greek readers in this Sense.-New Catholic Encycolpedia Vol-9 Page-337; fom Catholic University America

வரலாற்று ஏசு பற்றி ஹாவர்ட் பல்கலைக் கழக புதிய ஏற்பாடுத்துறைத் தலைவர் ஹெல்மட் கொயெஸ்டர் சொல்வது:Introduction to the New Testament. New York: DeGruyter, 1982. 2nd ed., 2002-The Quest for the Historic Kernels of the Stories of the Synoptic Narrative materials is very difficult. In fact such a quest is doomed to miss the point of such narratives, because these stories were all told in the interests of mission, edification, cult or theology (especially Christology) and they have no relationship to the question of Historically Reliable information.Precisely those elements and features of such narratives which vividly lead to the story and derived not from Actual Hisorical events, but belong to the form and style of the Genres of the several Narrative types. Exact statements of names and places are almost always secondary and were often introduced for the first time in the literary stage of the Tradition. P-64 V-II
ஒத்த கதை சுவிகள்(மாற்கு, மத்தேயூ, லூக்கா) சொல்லும் புனைக் கதைகளுக்கும் வரலாற்றைத் தேடுவது மிகக் கடினம். வரலாற்று உண்மைகளைத் தேடுபவர்கள் – சுவிகதைகள் எதற்காகப் பு¨னெயப்பட்டுள்ளன என்பதை விட்டுவிடுவர், ஏனென்றால் சுவிகள் – மதம் பரப்ப, சிறு விஷயத்தைப் பெரிது படுத்திட, மூடநம்பிக்கைக் குழு அமைக்க, இறையியல்- (அடிப்படையில் இறந்த ஏசுவைத் தெய்வமாக்கும்) தன்மையில் வரையப்பட்டவை; சுவிகளுள் நம்பிக்கைக்குரிய வரலாற்று விபரங்கள் ஏதும் கிடையாது.சுவிகளின் முக்கியமான புனையல்கள் நம்மைத் தள்ளிக் கொண்டு செல்லும் விவரங்கள் அடிப்படையில் வரலாற்றில் நடந்த சம்பவங்கள் இல்லை, பல விதமாக கதை செய்யும் யுக்தியில் புனையப்பட்டவை, சம்பவங்களில் வரும் நபர்கள் -நடந்த இடங்கள் முக்கியத்துவம் தராமல் பெரும்பாலும் முதல் முறை அவ்வப்போது தரப்படும்.

கிறிஸ்துவ மதப் புராணக் கதை நாயகர் ஏசு, இந்த ஏசு பற்றி நடுநிலையாளர் ஏற்கும்படி ஒரு ஆதாரமும் இல்லை, இதை பிரிட்டானிகா கலைக்களஞ்சியம் கூறுவது
 “None of the Sources of his Life can be Traced on to Jesus himself. He did not leave a Single Known Written Word. Also there are no Contemporary Accounts of Jesus’s Life and Death” – Vol-22, Pg.336 Encyclopedia Britanica.
இஸ்ரேலில் நடந்த புதைபொருள் அகழ்வாராய்ச்சிகளின்படி பெத்லஹேமில் உள்ள நேடிவிடி சர்ச் எனக் காட்டப்படும் இடம் 4ம் நூற்றாண்டில் ரோமன் மன்னன் கான்ஸ்டன்டைன் தாயார் ஹெலனா கனவினால் அடையாளம் காட்டி கட்டுமுன்னர் அது கடவுள் அதோனிஸ் ஆலயமாய் இருந்தது என்பது தெளிவாக நிருபமாயுள்ளது.
http://archaeologynewsnetwork.blogspot.in/2011/07/adonis-and-jesus-christ.html#.VNcm8-aUfGC
A Palestinian soldier rests outside of the Entry of Humility, Church of the Nativity, Bethlehem [Credit: Wayne McLean]
 பைபிளியல் அறிஞர்கள் கூற்று. கேம்ப்ரிட்ஜ் பல்கலைகழக பேராசிரியர் கூறியது- ஏசு, நாசரேத்டில் வாழ்ந்த ஜோசப்- மேரி மகன், நாசரேத்திலே தான் பிறந்திருக்க வேண்டும். ஏசு பிறப்பில் அதிசயம் இருக்கவேண்டும் என கன்னி கருத்தரிப்பு, பெத்லஹேம் பிறப்பு போன்றவை நுழைந்தன, இவற்றில் உண்மை இருக்க வாய்ப்பில்லை
“Jesus was the first-born son of a Jewish girl named Mary and her husband Joseph, a deasendant of King David, who worked as Carpenter, at small town of Nazareth in the region of Palestine known as Galilee. The date of birth was about -5 B.C., and the place of birth in all probability Nazareth itself. Towards the end of first century A.D. it came to be widely believed by Christians that at the time of his birth his mother was still a virgin, who bore him by the miraculous intervention of God. This view, however though dear to many modern Christians for its doctrinal value, is unlikely to be true in point of fact.” Life of Jesus; J.C.Cadoux, Page -27.
கிறிஸ்து என்பதானது, மேசியா எனும் எபிரேய பட்டத்தின் கிரேக்கம். மேசியா என்றால் மேலே எண்ணெய் தடவப் பட்டவர். இஸ்ரேலின் யூத அரசன், படைத் தலைவர், ஆலயத் தலைமைப் பாதிரி பதவி ஏற்பின்போது எண்ணெய் தடவப் படுதலைக் குறிக்கும் சொல். மேலுள்ள பதவிகட்கு தேர்ந்தெடுக்கப் பட்டவர் என்னும் பொருள். எபிரேய யூத மதத்தில் கடவுள் மனிதனாக வருதல் ஏதும் கிடையாது.

17 comments:

 1. மூல சுவிசேஷம் கொண்டு தான் சொல்லி உள்ளீர்கள்.

  ஆனால் ஏசு பிறப்பில் உள்ள அதிசயங்கள்- தீர்க்கதரிசனங்கள் நிறைவேறுதல் என்னும் கிறிஸ்துவம் சொல்வதை சற்றும் பார்க்காமல் ஒருதலைப்பட்ட விதத்தில் சொல்வது தவறு.

  ReplyDelete
 2. ஆச்சரியமாக உள்ளதே!

  இப்படித் தான் பைபிளில் உள்ளதா?

  இதனால் தான் - உலகம் முழுதும் கி.பி.- கி.மு. என்று சொன்னதை கைவிட்டார்களா?

  ReplyDelete
 3. நண்பர்களே,

  வருகைக்கும், பதிலிற்கும் நன்றி.

  தேவப்ரியா சாலமன்

  ReplyDelete
 4. நீங்கள் கிறிஸ்துவத்தை மறுக்க எழுதுகிறிர்கள்.

  உங்கள் பல கேள்விகளுக்கு கிறிஸ்துவ அறிஞர்கள் சமாதான விளக்கம் தந்துள்ளதையும் நீங்கள் கவனிக்க வேண்டும்.

  மாறுபடு கொண்ட சுவிசேஷங்களை அப்படியே தருவதால் தான் நீங்கள் சொல்கிறீர்கள். மேலும் மத்தேயூ, யோவான் சீடர்கள்-லுக்கா பவுலின் சீடர், மாற்கு பேதுருவின்சீடர்.

  மேலும் இவர்கள் தாங்கள் பணிபுரிந்த இடத்தின் மக்கள் தேவைக்காக எழுதியதே.
  நான்கு சுவிசேஷங்களும், நான்கு வகையான பிரிவினருக்காக எழுதப்பட்டது என்று வேதபண்டிதர்கள் சொல்கிறார்கள்.

  1. மத்தேயு : இஸ்ரவேல் மக்களுக்காக எழுதப்பட்டது. எனவே தான் யூதர்களின் இலக்கிய மொழியாகிய எபிரேய மொழியில் எழுதப்பட்டது.

  2. மாற்கு : ரோமர்களுக்காக ஏழுதப்பட்டது.

  3. லூக்கா : கிரேக்க மக்களுக்காக அதாவது எல்லாவற்றையும் ஆராய்ந்து, ஞானத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் மக்களுக்காக எழுதப்பட்டது.

  4. யோவான் : விசுவாசிகளுக்காவும், மற்றும் சாதாரண மக்களுக்காகவும் எழுதப்பட்டது.

  சானின் ஜெர்ரி தாமஸ் - டி.என்.டி.ஜெ வின் பீ.ஜே. விவாதத்தில் 27000 பிரதிகள் கிடைத்துள்ளன என்றனர். இப்படி பாதுகாகப்பட்டதை உரிய மதிப்பு தராது மறுக்கின்றீரே.

  ReplyDelete
 5. Aruputham says here
  ஒவ்வொரு நற்செய்தி நூல்களும் வெவ்வேறு பிண்ணணியத்தில் எழுதப்பட்டன.
  முதலாவதாக எழுதப்பட்ட மாற்கு நற்செய்திநூல் பேதுருவின் வாய்மொழியைக் கேட்டு மாற்கு எழுதியதாகும். ஆதிச்சபை சிதறி எங்கும் சுவிசேஷத்தை பிரசங்கித்தபோது கட்டுக்கதைகள் பரப்பப்படாமல் இருப்பதற்காக துரிதகதியில் சுருக்கமாக இன்னூல் எழுதப்பட்டது.

  மத்தேயு நற்செய்திநூல் யூதர்களுக்காக எழுதப்பட்டது ஆகும். ஆகவேதான் அதில் பல்வேறு தீர்க்கதரிசன நிறைவேருதல்கள் சொல்லப்பட்டுள்ளன. இயேசுவும் மேசியாவாக, இராஜாவாக காட்டப்படுகிறார்.

  லூக்கா நற்செய்தி நூல் எழுதப்பட்ட நோக்கம் என்ன என்பதை லூக்கா முதல் வசனத்திலேயே திரிபற கூறிவிடுகிறார். இன்னும் சொல்லப் போனால் மத்தேயு, மாற்கு நர்செய்தி நூல்களின் தொகுப்புதான் லூக்க என்றும் கூட சொல்லலாம் . இன்னூல் புறவினத்தவருக்காகவே எழுதப்பட்டது.
  ஆகவேதான் இயேசு மாம்சத்தில் வெளிப்பட்ட தேவனாக மட்டுமல்லாது மனுஷகுமாரனாக இதில் வெளிப்படுகிறார். மத்தேயு, மாற்கு,லூக்கா ஆகிய இம்மூன்றையும் ஒத்திசைவு நர்செய்தி நூல்கள் (synoptic gospels) என்று சொல்வர்.
  யோவான் இயேசுவின் அன்பு சீடரால் எழுதப்பட்டது. ஆகவே இயேசு பேசின வார்த்தைகள் மற்ற நற்செய்தி நூல்களைக் காட்டிலும் இங்கு அதிகம் கொடுக்கப்பட்டிருக்கிறது.
  http://tamilchristians.com/index.php?option=com_ccboard&view=postlist&forum=10&topic=402&Itemid=287
  நீங்கள் சொன்ன யாரும் எழுதவில்லை என ஏற்பது

  ReplyDelete
 6. Mam,

  You seem to know Bible,

  but use it with comtempt.

  Can the same be done on Hinduism

  ReplyDelete
 7. மத்தேய் -- லியூதின் மகன் எலயாசர்; எலயாசரின் மகன் மாத்தான்; மாத்தானின் மகன் யாக்கோபு. 16யாக்கோபின் மகன் மரியாவின் கணவர் யோசேப்பு

  லூக்கா --யோசேப்பு ஏலியின் மகன்;24 ஏலி மாத்தாத்தின் மகன்; மாத்தாத்து லேவியின் மகன்; லேவி மெல்கியின் மகன்; மெல்கி யன்னாயின் மகன்; யன்னாய் யோசேப்பின் மகன்

  இந்த இரண்டையும் ஒரு லிஸ்ட் போட்டுப் பார்த்தேன். தலைமேலிருந்த நாலைந்தும் போச்சுது!

  ReplyDelete
 8. //“None of the Sources of his Life can be Traced on to Jesus himself. He did not leave a Single Known Written Word. Also there are no Contemporary Accounts of Jesus’s Life and Death” – Vol-22, Pg.336 Encyclopedia Britanica.//

  //இஸ்ரேல் சென்றால் இயேசுக்கிறிஸ்து இந்த பூமியில் வாழ்ந்ததற்கான ஆதாரேமே இல்லை இன்று இஸ்ரேல் தொல்பொருள் துறையே கூறியுள்ளது. இயேசு எப்போது வாழ்ந்தார்? எக்காலத்தைச் சார்ந்தவர் என்பது பற்றி அதிகாரபூர்வமாக எதுவும் தெரியாது? இயேசு பற்றிய வரலாறு கூட ஒன்றுக்கொன்று முரணாக உள்ளது. யாரின் கூற்றைத்தான் நம்புவதோ?//

  இந்த வரலாற்று உண்மைகளோடு தொடர்பு படுத்திப் பார்க்கும்போது இதிலிருந்து 500 ஆண்டுகள் கழித்த பின் வரும் முகமது வாழ்வின் ஒவ்வொரு நிகழ்வும் (பிறப்பு:April 26, 570 AD; மற்ற யுத்தங்கள் நடந்த ஆண்டுகள் என்று குறிப்பாகச் சொல்லும் அளவிற்கு) எப்படி எல்லாமே எழுதிவைக்கப்பட்டுள்ளன. வரலாற்றுப் பதிவர்கள் எப்படி இரு வேறு விதமாக இந்த நிகழ்வுகளைப் பதிவாக்கினார்கள் என்பது என் ஐயம். 500 ஆண்டுகள் வித்தியாசத்தில் இந்த இரு வேறு பதிவுகள் இவ்வளவு மாறுபட்டிருக்குமா?

  ReplyDelete
 9. நீங்கள் என் இவ்வலையில் பட்டியல் தனிதனியாக தரப்பட்டுள்ளதைப் பார்க்கலாம். மத்தேயு பட்டியலில் பழைய ஏற்பாட்டு சந்ததிகள் சில விடுபட்டுள்ளன.
  http://devapriyaji.activeboard.com/t49455807/topic-49455807/

  முகம்மது வரலாற்றில் இருந்தாரா? Did Muhammad Exist? புத்தக விமர்சனம்
  http://puthu.thinnai.com/?p=11553

  ReplyDelete
 10. யார் எந்த வாசகார் வட்டத்திற்கு எழுதினாலும்

  ஜோசப் - மரியாள் எந்த ஊரைச் சேர்ந்தவர் என்பது மாறாதே?

  நாசரேத் ஏலி மகன் ஜோசப் 57 வது சந்ததி.

  பெத்லகெம் யாக்கோபு மகன் ஜோசப் 41 வது சந்ததி.

  என்ன விளையாட்டு இது?

  ReplyDelete
 11. ஏசுவின் குடும்பம் எந்த ஊர்க்காரர்கள் என்பது கூட சுசேஷக் கதாசிரியர்கள் அறியவில்லை.

  ReplyDelete
 12. லுக்காவில் உள்ள பட்டியல் மேரியின் பரம்பரை என்பதாக விளக்கம் தருகின்றனரே.
  http://www.biblequery.com/

  ReplyDelete
 13. யோபு 25:4
  4 அப்படியெனில், எப்படி மனிதர் கடவுள்முன் நேரியவராய் இருக்க முடியும்? அல்லது பெண்ணிடம் பிறந்தவர் எப்படித் தூயவராய் இருக்கக் கூடும்?5 இதோ! வெண்ணிலவும் ஒளி குன்றியதே! விண்மீனும் அவர்தம் பார்வையில் தூய்மையற்றதே!6 அப்படியிருக்க, புழுவைப்போன்ற மனிதர் எத்துணைத் தாழ்ந்தவர்! பூச்சி போன்ற மானிடர் எவ்வளவு குறைந்தவர்!

  ReplyDelete
 14. http://dir.groups.yahoo.com/group/OriginsTalk/message/20323

  http://www.religioustolerance.org/xmaswwjb.htm

  ReplyDelete
 15. அல்லா தான் ஜிப்ரேலை கன்னி மரியம்மின் பெண்ணுறுப்பில் ஊதிட மரியம் கர்ப்பம் ஆனார். 66:12 & 21:9

  ReplyDelete
 16. ஏசாயா 47:13 உனக்கு ஏராளமான ஆலோசகர்கள் இருக்கிறார்கள்.
  அவர்களது ஆலோசனைகளால் நீ சோர்வடைந்து விட்டாயா?
  நட்சத்திரங்களை வாசிக்கிற உனது ஆட்களை வெளியே அனுப்பு.
  எப்போது மாதம் தொடங்கும் என்று அவர்களால் சொல்ல முடியும்.
  உனது துன்பங்கள் எப்போது வரும் என்றும் அவர்களால் உனக்குச் சொல்ல முடியும்.
  14 ஆனால், அவர்களால் தங்களைக்கூடக் காப்பாற்றிக்கொள்ள முடியாது.
  அவர்கள் பதரைப்போன்று எரிந்துபோவார்கள். அவர்கள் விரைவாக எரிந்துபோவார்கள். அப்பம் சுடுவதற்கான கனல்கூட மீதியாகாமல் எரிந்துபோகும். குளிர் காய்வதற்குக்கூட நெருப்பு இல்லாமல் போகும்.

  ReplyDelete
 17. http://miraclefaith123.blogspot.com/2014/05/5.html

  ReplyDelete