Friday, September 28, 2012

சுவிசேஷங்கள் புனையபட்டவைகளே. 1

இயேசு சொன்னாதாக உள்ளவை கூட கதாசிரியர்களே புனைந்தவையே!

  

ஏசு மரணத்திற்குப் பின் பழைய உடலில்  மீண்டும் உயிரோடு எழுந்து வந்தார் எனும் கதையை மாற்கு சுவியின் அத்தியாயம் - 16 சொல்கிறது. மாற்கு 16 என்பது வசனங்கள் 1-20 கொண்டுள்ளது. கிரேக்க மூலப் பிரதிகளின் பழமையானவைகள் 16: 1- 8 வசனத்தோடு முடிகிறது.
 
//மாற்கு16:8 பெண்கள்(மகதலா மரியா, யாக்கோபின் தாய் மரியா, சலோமி) கல்லறையைவிட்டு வெளியே வந்து ஓட்டம் பிடித்தார்கள்; நடுக்கமுற்று மெய் மறந்தவர்களாய் யாரிடமும் எதுவும் கூறவில்லை. ஏனெனில் அவர்கள் அச்சம் கொண்டிருந்தார்கள்//

 
இறந்த ஏசுவைப் புதைத்த கல்லறையில் -ஞாயிறு நடந்ததாகக் கதையில்
மாற்கு16: 4 ஆனால் அவர்கள் நிமிர்ந்து உற்று நோக்கியபொழுது கல் புரட்டப்பட்டிருப்பதைக் கண்டார்கள். அது பெரியதொரு கல்.5 பிறகு அவர்கள் கல்லறைக்குள் சென்றபோது வெண்தொங்கல் ஆடை அணிந்த இளைஞர் ஒருவர் வலப்புறம் அமர்ந்திருக்கக் கண்டு திகிலுற்றார்கள்.6 அவர் அவர்களிடம், ' திகிலுற வேண்டாம்; சிலுவையில் அறையப்பட்ட நாசரேத்து இயேசுவைத் தேடுகிறீர்கள்; அவர் உயிருடன் எழுப்பப்பட்டார்; அவர் இங்கே இல்லை; இதோ, அவரை வைத்த இடம்.
7 நீங்கள் புறப்பட்டுச் செல்லுங்கள், பேதுருவிடமும் மற்றச் சீடரிடமும், ' உங்களுக்கு முன்பாக அவர் கலிலேயாவுக்குப் போய்க் கொண்டிருக்கிறார்; அவர் உங்களுக்குச் சொன்னது போலவே அவரை அங்கே காண்பீர்கள் 

மாற்கு14: 28ஆனால் நான் உயிருடன் எழுப்பப்பட்ட பின்பு உங்களுக்குமுன்பே கலிலேயாவுக்குப் போவேன் ' என்றார்.
மத்தேயு28:1 ஓய்வுநாளுக்குப்பின் வாரத்தின் முதல் நாள் விடியற்காலையில் மகதலா மரியாவும் வேறொரு மரியாவும் கல்லறையைப் பார்க்கச் சென்றார்கள்.2 திடீரென ஒரு பெரிய நிலநடுக்கம் ஏற்பட்டது. ஆண்டவரின் தூதர் விண்ணகத்திலிருந்து இறங்கி வந்து கல்லறையை மூடியிருந்த கல்லைப் புரட்டி அதன் மேல் உட்கார்ந்தார்.
4அவரைக் கண்ட அச்சத்தால் காவல் வீரர் நடுக்கமுற்றுச் செத்தவர் போலாயினர்.5அப்பொழுது வானதூதர் அப்பெண்களைப் பார்த்து, ' நீங்கள் அஞ்சாதீர்கள்; சிலுவையில் அறையப்பட்ட இயேசுவைத் தேடுகிறீர்கள் என எனக்குத் தெரியும்.6 அவர் இங்கே இல்லை; அவர் கூறியபடியே உயிருடன் எழுப்பப்பட்டார். அவரை வைத்த இடத்தை வந்து பாருங்கள்.7நீங்கள் விரைந்து சென்று, ' இறந்த அவர் உயிருடன் எழுப்பப்பட்டார் ' எனச் சீடருக்குக் கூறுங்கள். உங்களுக்கு முன்பாக அவர் கலிலேயாவுக்குப் போய்க்கொண்டிருக்கிறார்.


மத்தேயு26: 
31 அதன்பின்பு இயேசு அவர்களிடம், ' இன்றிரவு நீங்கள் அனைவரும் என்னை விட்டு ஓடிப்போவீர்கள். ஏனெனில் ' ஆயரை வெட்டுவேன், அப்போது மந்தையிலுள்ள ஆடுகள் சிதறடிக்கப்படும் ' என்று மறைநூலில் எழுதியுள்ளது.32 நான் உயிருடன் எழுப்பப்பட்ட பின்பு உங்களுக்கு முன்பே கலிலேயாவுக்குப் போவேன் ' என்றார்..

லூக்கா24:1 வாரத்தின் முதல் நாள் விடியற் காலையிலேயே தாங்கள் ஆயத்தம் செய்திருந்த நறுமணப் பொருள்களை எடுத்துக் கொண்டு அப்பெண்கள் கல்லறைக்குச் சென்றார்கள்;2 கல்லறை வாயிலிலிருந்து கல்புரட்டப்பட்டிருப்பதைக் கண்டார்கள்.3 அவர்கள் உள்ளே நுழைந்தபோது அங்கே ஆண்டவர் இயேசுவின் உடலைக் காணவில்லை.4 அதைக் குறித்து அவர்கள் குழப்பமுற்றார்கள். அப்போது திடீரென, மின்னலைப் போன்று ஒளிவீசும் ஆடை அணிந்த இருவர் அவர்களுக்குத் தோன்றினர்.5 இதனால் அப்பெண்கள் அச்சமுற்றுத் தலைகுனிந்து நின்று கொண்டிருந்தனர். அவர்கள் அப்பெண்களை நோக்கி, ' உயிரோடு இருப்பவரைக் கல்லறையில் தேடுவதேன்?6 அவர் இங்கே இல்லை. அவர் உயிருடன் எழுப்பப்பட்டார். கலிலேயாவில் இருக்கும்போது அவர் உங்களுக்குச் சொன்னதை நினைவுப்படுத்திக் கொள்ளுங்கள்.
10 அவர்கள் மகதலா மரியா, யோவன்னா, யாக்கோபின் தாய் மரியா என்பவர்களும் அவர்களோடு இருந்த வேறு சில பெண்களும் ஆவர். 

லூக்காவில் தன் மரணம் பற்றி ஏசு சொன்னபோது கலிலேயா போவேன் எனச் சொல்லவே இல்லை.
யோவான்20:1 வாரத்தின் முதல் நாளன்று விடியற் காலையில் இருள் நீங்கும் முன்பே மகதலா மரியா கல்லறைக்குச் சென்றார்; கல்லறை வாயிலில் இருந்த கல் அகற்றப்பட்டிருப்பதைக் கண்டார்.
தன் மரணம் பற்றி ஏசு சொன்னபோது கலிலேயா போவேன் எனச் சொல்லவே இல்லை.
   
கல்லறைக்கு போன பெண்கள் பெயரில் குழப்பம், எதற்கு குழப்பம். யார் இருந்தது? வாலிபரா- ஒரு தூதர் பூகம்பத்திற்குப் பிறகா, இரண்டு மின்னலுடை வாலிபாரா- யாருமே இல்லையா?

கல்லறை உள்ளே இருந்தவர் கலிலேயா ஏசு போய்விட்டதாகச் சொன்னாரா இல்லையா?

இந்த சுவியில்  கலிலேயா ஏசு போய்விட்டதாக கதை உள்ளதோ அதில் தன் மரணம் பற்றி ஏசு முன்பே சொல்லிய கதையில்  கலிலேயா போவேன் என ஏசுவே சொன்னதையும் பார்க்கிறோம்.

மாற்கில் உயிர்த்த ஏசு காட்சியே இல்லை. மத்தேயுவில் கலிலேயா மலை மீது மட்டும். லூக்காவில் ஜெருசலேமில் மட்டும், யோவானில் பலமுறை ஜெருசலேமில், ஆனால் பின் சீடர் பழைய மீன்பிடித் தொழிலில் கலிலேயா ஆற்றில் மீன் பிட்டிக்கும்போது என ஒரு கதை.


இயேசு சொன்னாதாக உள்ளவை கூட கதாசிரியர்களே புனைந்தவையே....1 comment:

  1. மத்தேயுவில் தூதன் கலிலெயா செல்லுங்கள் என ஏசு சொன்னதை சொல்ல கலிலேயாவில் காட்சி அப்படி என்றால் மற்ற சுவிகள், லூக்கா, யோவான் கதைகளே

    ReplyDelete