Tuesday, September 25, 2012

கிறிஸ்து தேவகுமாரனா-இல்லை -சுவிசேஷக் கதாசிரியர்கள்


  
கதாசிரியர்கள் இறந்த இயேசு உயிர்த்து எழுந்தார் என்பதை நம்பி, அவர் கதையைப் பரப்ப புனைந்தவையே  சுவிசேஷங்கள். முதலில் புனையப்பட்டது மாற்கு, அதை பின்பற்றி அதை ஒத்து புனையப்பட்டவை மத்தேயு, லூக்கா சுவிகள், மாற்கு கதை அறிந்தும் மாறுபட்டபடி புனையப்பட்டது யோவான சுவிசேஷம்.
   
பைபிளியல் அறிஞர்கள் சுவிசேஷங்களின் ஆரம்ப வடிவம்  புனைந்த காலம் என்பது.இயேசு பேசிய மொழி எபிரேயம் அல்லது அரெமிகம். ஆனால் சுவிகள் அனைத்தும் கிரேக்க மொழியில் புனையப்பட்டவை.

மாற்கு - 70 - 75.
மத்தேயு- 80 - 90
லூக்கா 90- 100
யோவான் 105 - 110

மாற்கு சுவியில் சீடர்களோ எந்த ஒரு யூத மனிதரோ - கிறிஸ்து  என்றால் தேவ குமாரன் என அழைத்ததாக இல்லவே இல்லை.

ஓரிடத்தில் யூத மதசங்க தலைமைப் பாதிரி சொன்னதாக புனையல். கிறிஸ்து என்றால்  தேவ குமாரன் என ஒரு பொருள் எபிரேயத்தில் கிடாயவே கிடையாது. மாற்கின் இந்தப் புனையலை லூக்காவும் மத்தேயுவும் மாற்றி உள்ளதைப் பாருங்கள். யோவானில்  யூத மதசங்க தலைமைப் பாதிரி "தேவ குமாரன் நீரா" எனக் கேட்கவே இல்லை!

யோவான்18:19 தலைமைக் குரு இயேசுவின் சீடர்களைப் பற்றியும் அவருடைய போதனையைப் பற்றியும் அவரிடம் கேட்டார்.20 இயேசு அவரைப் பார்த்து, ' நான் உலகறிய வெளிப்படையாய்ப் பேசினேன். யூதர் அனைவரும் கூடிவரும் தொழுகைக் கூடங்களிலும் கோவிலிலும்தான் எப்போதும் கற்பித்து வந்தேன். நான் மறைவாக எதையும் பேசியதில்லை.21 ஏன் என்னிடம் கேட்கிறீர்? நான் பேசியதைக் கேட்டுக் கொண்டிருந்தவர்களிடம் கேட்டுப்பாரும். நான் என்ன சொன்னேன் என அவர்களுக்குத் தெரியுமே ' என்றார்.22 அவர் இப்படிச் சொன்னதால் அங்கு நின்று கொண்டிருந்த காவலருள் ஒருவர், ' தலைமைக் குருவுக்கு இப்படியா பதில் கூறுகிறாய்? ' என்று சொல்லி இயேசுவின் கன்னத்தில் அறைந்தார்.23 இயேசு அவரிடம், ' நான் தவறாகப் பேசியிருந்தால் தவறு என்னவெனக் காட்டும். சரியாகப் பேசியிருந்தால் ஏன் என்னை அடிக்கிறீர்? ' என்று கேட்டார்.24 அதன்பின் அன்னா அவரைக் கட்டப்பட்ட நிலையில் தலைமைக் குரு கயபாவிடம் அனுப்பினார்.
28 அதன்பின் அவர்கள் கயபாவிடமிருந்து ஆளுநர் மாளிகைக்கு இயேசுவைக் கொண்டு சென்றார்கள். அப்போது விடியற்காலம். பாஸ்கா உணவை உண்ணுமுன் தீட்டுப் படாமலிருக்க ஆளுநர் மாளிகையில் அவர்கள் நுழையவில்லை. 
லூக்கா 22: 54 பின்னர் அவர்கள் இயேசுவைக் கைதுசெய்து இழுத்துச் சென்று தலைமைக் குருவின் வீட்டுக்குக் கொண்டு போனார்கள். 
66 பொழுது விடிந்ததும் மக்களின் மூப்பர்களும் தலைமைக்குருக்களும் மறைநூல் அறிஞர்களும் கூடிவந்தார்கள்; இயேசுவை இழுத்துச் சென்று தங்கள் மூப்பர் சங்கத்தின்முன் நிறுத்தினார்கள்.67 அவர்கள், ' நீ மெசியா தானா? எங்களிடம் சொல் ' என்று கேட்டார்கள். அவர் அவர்களிடம், ' நான் உங்களிடம் சொன்னால் நீங்கள் நம்பமாட்டீர்கள்;68 நான் உங்களிடம் கேட்டாலும் பதில் சொல்ல மாட்டீர்கள்.69 இதுமுதல் மானிடமகன் வல்லவராம் கடவுளின் வலப்புறத்தில் வீற்றிருப்பார் ' என்றார் இயேசு.70 அதற்கு அவர்கள் அனைவரும், ' அப்படியானால் நீ இறைமகனா? ' என்று கேட்டனர். அவரோ, ' நான் இறைமகன் என நீங்களே சொல்லுகிறீர்கள் ' என்று அவர்களுக்குச் சொன்னார்.71 அதற்கு அவர்கள், ' இன்னும் நமக்குச் சான்றுகள் தேவையா? இவன் வாயிலிருந்து நாமே கேட்டோமே ' என்றார்கள்.
 மத்தேயு26: 57 இயேசுவைப் பிடித்தவர்கள் அவரைத் தலைமைக் குரு கயபாவிடம் கூட்டிச்சென்றார்கள். அங்கே மறைநூல் அறிஞரும், மூப்பர்களும் கூடி வந்தார்கள்.
59 தலைமைக் குருக்களும், தலைமைச் சங்கத்தார் அனைவரும் இயேசுவுக்கு மரண தண்டனை விதிக்க அவருக்கு எதிராகப் பொய்ச் சாட்சி தேடினர்.60 பல பொய்ச் சாட்சிகள் முன்வந்தும் ஏற்ற சாட்சி கிடைக்கவில்லை. இறுதியாக இருவர் முன்வந்தனர்.61 அவர்கள், ' இவன் கடவுளுடைய திருக்கோவிலை இடித்து அதை மூன்று நாளில் கட்டியெழுப்ப என்னால் முடியும் என்றான் ' என்று கூறினார்கள்.62 அப்பொழுது தலைமைக் குரு எழுந்து அவரிடம், ' இவர்கள் உனக்கு எதிராகக் கூறும் சான்றுக்கு மறுமொழி கூறமாட்டாயா? ' என்று கேட்டார்.63 ஆனால் இயேசு பேசாதிருந்தார். மேலும் தலைமைக் குரு அவரிடம், ' நீ கடவுளின் மகனாகிய மெசியாவா? வாழும் கடவுளின் பெயரால் ஆணையிட்டுச் சொல்லுமாறு உன்னிடம் கேட்கிறேன் ' என்றார்.64 அதற்கு இயேசு, ' நீரே சொல்லுகிறீர்; மானிட மகன் வல்லவராம் கடவுளின் வலப்புறத்தில் வீற்றிருப்பதையும் வான மேகங்கள்மீது வருவதையும் இதுமுதல் நீங்கள் காண்பீர்கள் என உங்களுக்குச் சொல்கிறேன் ' என்றார்.65உடனே தலைமைக் குரு தம் மேலுடையை கிழித்துக்கொண்டு, ' இவன் கடவுளைப் பழித்துரைத்தான். இன்னும் நமக்குச் சான்றுகள் தேவையா? இதோ, இப்பொழுது நீங்களே பழிப்புரையைக் கேட்டீர்களே. 
மாற்கு14:53 அவர்கள் இயேசுவைத் தலைமைக் குருவிடம் கூட்டிச் சென்றார்கள். எல்லாத் தலைமைக் குருக்களும் மூப்பர்களும் மறைநூல் அறிஞர்களும் ஒன்று கூடினார்கள்.
56 பலர் அவருக்கு எதிராகப் பொய்ச்சான்று சொன்னார்கள். ஆனால் அச்சான்றுகள் ஒன்றுக்கொன்று முரண்பட்டிருந்தன.
60 அப்பொழுது தலைமைக் குரு எழுந்து அவர்களின் நடுவே நின்று, ' இவர்கள் உனக்கு எதிராகக் கூறும் சான்றுக்கு மறுமொழி ஒன்றும் கூற மாட்டாயா? ' என்று இயேசுவைக் கேட்டார்.61 ஆனால் அவர் பேசாதிருந்தார். மறுமொழி ஒன்றும் அவர் கூறவில்லை. மீண்டும் தலைமைக் குரு, ' போற்றுதற்குரிய கடவுளின் மகனாகிய மெசியா நீதானோ? ' என்று அவரைக் கேட்டார்.62அதற்கு இயேசு, ' நானே அவர்; மேலும் மானிடமகன் வல்லவராம் கடவுளின் வலப்புறத்தில் வீற்றிருப்பதையும் வானமேகங்கள் சூழ வருவதையும் காண்பீர்கள் ' என்றார்.63 தலைமைக் குருவோ தம் அங்கியைக் கிழித்துக்கொண்டு, ' இன்னும் நமக்குச் சான்றுகள் தேவையா?

மாற்கு சுவியில் யூதரல்லாத ரோமன் படையின் நூற்றுவர் தலைவரும் சொன்னதாக புனையல்.  மத்தேயு ஏசுவின் மரணத்தின் போது -பூகம்பம் வர பல யூத தீர்க்கர்கள் கல்லறைகள் வெடிக்க தீர்க்கர்கள் உயிரோடு எழுந்து வந்தனர்- இந்த அதிசயம் பார்த்தபின்னர் ரோமன் படையின் நூற்றுவர் தலைவர் ஏசுவை தேவகுமாரன் என்றார்.

லூக்காவில் பூகம்பம் இல்லை  கல்லறைகள் வெடிக்க யூத தீர்க்கர்கள் உயிரோடு எழுந்து வந்தது இல்லை. ஆனால் ரோமன் படையின் நூற்றுவர் தலைவர் -   ' இவர் உண்மையாகவே நேர்மையாளர் ' என்றே சொன்னார். 

யோவானில் ரோமன் படையின் நூற்றுவர் தலைவர் "தேவ குமாரன் -உண்மையாகவே நேர்மையாளர்" ஏதும் சொல்லவே இல்லை.

  லூக்கா 23:47 இதைக் கண்ட ரோமன் படையின் நூற்றுவர் தலைவர், ' இவர் உண்மையாகவே நேர்மையாளர் ' என்று கூறிக் கடவுளைப் போற்றிப் புகழ்ந்தார். 
 மத்தேயு27:50 இயேசு மீண்டும் உரத்த குரலில் கத்தி உயிர்விட்டார்.51 அதே நேரத்தில் திருக்கோவிலின் திரை மேலிருந்து கீழ்வரை இரண்டாகக் கிழிந்தது; நிலம் நடுங்கியது; பாறைகள் பிளந்தன.52 கல்லறைகள் திறந்தன; இறந்த இறைமக்கள் பலரின் உடல்கள் உயிருடன் எழுப்பப்பட்டன.53 இயேசுவின் உயிர்த்தெழுதலுக்குப் பின்பு இவர்கள் கல்லறைகளிலிருந்து வெளியே வந்து எருசலேம் திருநகரத்திற்குச் சென்று பலருக்குத் தோன்றினார்கள்.54 ரோமன் படையின் நூற்றுவர் தலைவரும் அவரோடு இயேசுவைக் காவல் காத்தவர்களும் நிலநடுக்கத்தையும் நிகழ்ந்தயாவற்றையும் கண்டு மிகவும் அஞ்சி, ' இவர் உண்மையாகவே இறைமகன் ' என்றார்கள்.
 மாற்கு15:34 பிற்பகல் மூன்று மணிக்கு இயேசு, ' எலோயி, எலோயி, லெமா சபக்தானி? 'என்று உரக்கக் கத்தினார். ' என் இறைவா, என் இறைவா ஏன் என்னைக் கைவிட்டீர்? 'என்பது அதற்குப் பொருள்.
37 இயேசுவோ உரக்கக் கத்தி உயிர் துறந்தார்.38 அப்பொழுது திருக்கோவிலின் திரை மேலிருந்து கீழ்வரை இரண்டாகக் கிழிந்தது.39 அவருக்கு எதிரே நின்றுகொண்டிருந்த ரோமன் படையின் நூற்றுவர் தலைவர், அவர் இவ்வாறு உயிர் துறந்ததைக் கண்டு, ' இம்மனிதர் உண்மையாகவே இறைமகன் ' என்றார். 
யோவானில் ரோமன் படையின் நூற்றுவர் தலைவர் "தேவ குமாரன் -உண்மையாகவே நேர்மையாளர்" ஏதும் சொல்லவே இல்லை.

மத்தேயூவில் மட்டுமாக சீடர் பேதுரு இயேசுவை தேவகுமாரன் என்றதாகப் புனையல், ஆனால் மூல மாறிகிலோ- லூக்காவிலோ இது இல்லவே இல்லை. மத்தேயுவில் மேலும் பேதுருவை போப்பரசராக நியமித்த கதையை புரோட்டஸ்டண்டுகள் ஏற்பதில்லை.


மாற்கு8: 27 இயேசு தம் சீடருடன் பிலிப்புச் செசரியாவைச் சார்ந்த ஊர்களுக்குப் புறப்பட்டுச் சென்றார். வழியில் அவர் தம் சீடரை நோக்கி, ' நான் யார் என மக்கள் சொல்கிறார்கள்? ' என்று கேட்டார்.28 அதற்கு அவர்கள் அவரிடம், ' சிலர் திருமுழுக்கு யோவான் எனவும் வேறு சிலர் எலியா எனவும் மற்றும் சிலர் இறைவாக்கினருள் ஒருவர் எனவும் சொல்கின்றனர் ' என்றார்கள்.29 ' ஆனால் நீங்கள் நான் யார் எனச் சொல்கிறீர்கள்? ' என்று அவர் அவர்களைக் கேட்க, பேதுரு மறுமொழியாக, ' நீர் மெசியா ' என்று உரைத்தார்.30 தம்மைப்பற்றி எவரிடமும் சொல்ல வேண்டாம் என்று அவர்களிடம் அவர் கண்டிப்பாய்க் கூறினார்
 லூக்கா 9:18 இயேசு தனித்து இறைவனிடம் வேண்டிக்கொண்டிருந்தபோது சீடர் மட்டும் அவரோடு இருந்தனர். அப்போது அவர்களிடம், ' நான் யார் என மக்கள் சொல்கிறார்கள்? ' என்று அவர் கேட்டார்.19 அவர்கள் மறுமொழியாக, ' சிலர் திருமுழுக்கு யோவான் எனவும் வேறு சிலர் எலியா எனவும் மற்றும் சிலர் முற்காலத்து இறைவாக்கினருள் ஒருவர் உயிர்த்தெழுந்துள்ளார் எனவும் சொல்கின்றனர் ' என்றார்கள்.20 ' ஆனால் நீங்கள் நான் யார் என சொல்கிறீர்கள்? 'என்று அவர்களிடம் அவர் கேட்டார். பேதுரு மறுமொழியாக, ' நீர் கடவுளின் மெசியா ' என்று உரைத்தார். 
மத்தேயு 16:13 இயேசு, பிலிப்புச் செசரியா பகுதிக்குச் சென்றார். அவர் தம் சீடரை நோக்கி, ' மானிடமகன் யாரென்று மக்கள் சொல்கிறார்கள்? ' என்று கேட்டார்.14 அதற்கு அவர்கள், ' சிலர் திருமுழுக்கு யோவான் எனவும் வேறு சிலர் எலியா எனவும் மற்றும் சிலர் எரேமியா அல்லது பிற இறைவாக்கினருள் ஒருவர் என்றும் சொல்கின்றனர் ' என்றார்கள்.15 ' ' ஆனால் நீங்கள், நான் யார் எனச் சொல்கிறீர்கள்? ' என்று அவர் கேட்டார்.16 சீமோன் பேதுரு மறுமொழியாக, ' நீர் மெசியா, வாழும் கடவுளின் மகன் ' என்று உரைத்தார். அதற்கு இயேசு, ' யோனாவின் மகனான சீமோனே, நீ பேறு பெற்றவன்.17 ஏனெனில் எந்த மனிதரும் இதை உனக்கு வெளிப்படுத்தவில்லை; மாறாக விண்ணகத்திலுள்ள என் தந்தையே வெளிப்படுத்தியுள்ளார்.18 எனவே நான் உனக்குக் கூறுகிறேன்; உன் பெயர் பேதுரு; இந்தப் பாறையின்மேல் என் திருச்சபையைக் கட்டுவேன். பாதாளத்தின் வாயில்கள் அதன்மேல் வெற்றி கொள்ளா.19 விண்ணரசின் திறவுகோல்களை நான் உன்னிடம் தருவேன். மண்ணுலகில் நீ தடைசெய்வது விண்ணுலகிலும் தடைசெய்யப்படும். மண்ணுலகில் நீ அனுமதிப்பது விண்ணுலகிலும் அனுமதிக்கப்படும் ' என்றார்.20 பின்னர், தாம் மெசியா என்பதை எவரிடமும் சொல்லவேண்டாம் என்று இயேசு சீடரிடம் கண்டிப்பாய்க் கூறினார்.

இயேசுவை தூக்கு மரத்தில் தொங்கவிட்ட போது தொங்கிய குற்ற அட்டை

மாற்கு -  யூதரின் அரசன்
மத்தேயு- யூதரின் அரசனாகிய இயேசு
லூக்கா- யூதரின் அரசன்
யோவான் - நாசரேத்து இயேசு யூதர்களின் அரசன்

 மத்தேயு2:1 ஏரோது அரசன் காலத்தில் யூதேயாவிலுள்ள பெத்லகேமில் இயேசு பிறந்தார். அப்போது கிழக்கிலிருந்து ஞானிகள் எருசலேமுக்கு வந்து,2 ' யூதர்களின் அரசராகப் பிறந்திருக்கிறவர் எங்கே? அவரது விண்மீன் எழக் கண்டோம். அவரை வணங்க வந்திருக்கிறோம் ' என்றார்கள். 
லூக்கா2:8 அப்பொழுது அப்பகுதியில் உள்ள வயல்வெளியில் இடையர்கள் தங்கி இரவெல்லாம் தங்கள் கிடையைக் காவல் காத்துக்கொண்டிருந்தார்கள்.9 திடீரென்று ஆண்டவருடைய தூதர் அவர்கள்முன் வந்து நின்றபோது ஆண்டவரின் மாட்சி அவர்களைச் சுற்றி ஒளிர்ந்தது; மிகுந்த அச்சம் அவர்களை ஆட்கொண்டது.10 வானதூதர் அவர்களிடம், ' அஞ்சாதீர்கள், இதோ, எல்லா மக்களுக்கும் பெரும் மகிழ்ச்சியூட்டும் நற்செய்தியை உங்களுக்கு அறிவிக்கிறேன்.11இன்று ஆண்டவராகிய மெசியா என்னும் மீட்பர் உங்களுக்காகத் தாவீதின் ஊரில் பிறந்திருக்கிறார்

கதைப்படி உயிர்த்து எழுந்தபின்னர் சீடர்கள் இயேசுவிடம் கேட்டதாக
அப்போஸ்தலர் நடபடிகள்1:6 பின்பு அங்கே கூடியிருந்தவர்கள் அவரிடம், ஆண்டவரே, இஸ்ராயேலுக்கு ஆட்சியுரிமையை மீண்டும் பெற்றுத்தரும் காலம் இதுதானோ? என்று கேட்டார்கள்.
மேசியா - கிறிஸ்து எனில் அரசன் தாவீது பரம்பரை வீரன், அன்னியரிடம் அடிமைப்பட்டிருந்த இஸ்ரேலை மீட்கும் அரசின் ராஜா மட்டுமே.

இயேசுவை தெய்வீகர்- கடவுள் எனப் புனைய பல மதக் கதைகளை இறந்த மனிதன் தலையில் புகுத்தினர்.
மேசியா - கிறிஸ்து என்றால் யூதர்களின் அரசன் மட்டுமே. கடவுள் மகன் என்பதெல்லாம் ஆரியக் கோட்பாட்டின் காப்பியே.

4 comments:

  1. குழப்பங்களின் மொத்த வடிவம் பைபிள் என்பதை அழகாக எல்லா சுவிசேஷங்களையும் ஒப்பிட்டு காட்டி வருகிறீர்கள். அருமை. இது போன்ற முரணானவைகளுக்கு பாதிரிகள் என்ன விளக்கம் தருகிறார்கள் என்று தெரியவில்லை.

    ReplyDelete
  2. மத்தேயு சீடர், அவர் மாற்கு கேள்விப் பட்டதை எழுதியதைவிட தான் நேரில் பார்த்ததை எழுதினார். எனவே பேதுரு உண்மையில் சொன்னதை இயேசு தேவகுமாரன் என சொன்னதை மத்தேயு தான் சரியாக சொல்லி இருக்க வேண்டும்

    ReplyDelete
  3. மாற்கு நற்செய்தியின் முதல் வசனமே தேவகுமாரன் இயேசு என்றே தான். அற்புதங்கள் செய்யும் இடமெல்லம் தேவகுமாரன் என அடையாளம் காட்டப்படுதல் உண்டு.எனவே
    //மாற்கு சுவியில் சீடர்களோ எந்த ஒரு யூத மனிதரோ - கிறிஸ்து என்றால் தேவ குமாரன் என அழைத்ததாக இல்லவே இல்லை.//
    என்பது தவறு

    ReplyDelete
  4. மத்தேயு பெயரில் உள்ள சுவியை சீடர் எழுதவில்லை. சுவியில் கிரேக்க பழைய ஏற்பாடு தான் பயன்பட்டுள்ளது. பல தீர்க்கங்கள் தவறாக பயன்படுத்தியுள்ளார். கதாசிரியருக்கு எபிரேயமொழி தெரியாது.
    http://pagadhu.blogspot.in/2012/09/blog-post_26.html

    அதிசயம் போது மனநிலை பாதிக்கப் பட்ட மனிதர்கள் தான் சாட்சி- கெட்ட ஆவி மூலம் சொன்னார்களாம். ஏற்பீர்களா.

    வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.

    ReplyDelete

பாதிரி பள்ளி மாணவனை ஓரினச் சேர்க்கையில் கட்டாயப் படுத்தி பாலியல் வன்கொடுமை செய்தமைக்கு சாட்சி தந்தவர் வண்டியில் கஞ்சா வைத்தாராம்

  சர்ச்சு பாதிரி பள்ளி மாணவனை ஓரினச் சேர்க்கையில் கட்டாயப் படுத்தி பாலியல் வன்கொடுமை செய்தமைக்கு சாட்சி தந்தவர் வண்டியில் கஞ்சா வைத்தாராம் ப...