Saturday, September 29, 2012

இயேசு சிலுவையில் இறந்தாரா- இல்லையா!

புராணக் கதை நாயகர் ஏசு மரணம் - தூக்கு மரத்தில்(சிலுவை) தொங்கவிடப்பட்டு என்பது 4 சுவிசேஷங்களும், பவுல் கடிதமும் சொல்லும் கதை. இது ரோமன் தண்டனை முறை. இதில் ரோம் ஆட்சிக்கு எதிரான ஆயுதப் போராளிகளுக்கு தரப் படும், குற்றவாளிகள் நிர்வாணமாக உயரமாக சாரம் கட்டி அதில் தொஙவிடப்படுவர். கழுத்து எலும்பு உடைந்து மண்டை ஓடு கீழே விழுந்து புரள வேண்டும் இதனால் தான், தூக்குமர தண்டனை தரும் இடம் கபாலஸ்தலம் அல்லது மண்டை ஓடு புரளுமிடம் எனப்படும். மரணம் வர 4- 5 நாள் ஆகும்.நிவாணத்தின் அசிங்கமும், கழுகு பருந்து போன்றவை துன்புமும் என நான்கு நாள் அலறல் கேட்டு- எவரும் ரோமை எதிர்க்க நினைக்கக் கூடாது என்பதே இத்தண்டனை முறை.
    
மாற்கு15:1 பொழுது விடிந்ததும் மூப்பரோடும் மறைநூல் அறிஞரோடும் தலைமைச் சங்கத்தார் அனைவரோடும் தலைமைக் குருக்கள் ஆலோசனை செய்து, இயேசுவைக் கட்டி இழுத்துச் சென்று பிலாத்திடம் ஒப்புவித்தனர்.
33 நண்பகல் வந்தபொழுது நாடெங்கும் இருள் உண்டாயிற்று. பிற்பகல் மூன்று மணிவரை அது நீடித்தது.34 பிற்பகல் மூன்று மணிக்கு இயேசு, ' எலோயி, எலோயி, லெமா சபக்தானி? 'என்று உரக்கக் கத்தினார். ' என் இறைவா, என் இறைவா ஏன் என்னைக் கைவிட்டீர்? 'என்பது அதற்குப் பொருள்..
37 இயேசுவோ உரக்கக் கத்தி உயிர் துறந்தார்.



முதன் முதலில் புனையப்பட்ட மாற்கு(70 - 75) சுவியின்படி காலை ஆறு மணிக்கு விசாரணை தொடங்கி 9 மணி வாக்கில் சிலுவையில் அடைக்கப்பட்டார். 3மணிக்கு இறந்தார் எனக் கதை.

ஆனால் நான்காவது சுவி யோவானில்(95- 110) ஏசு சிலுவையில் அடைக்கப்பட்டதே நண்பகல் 12 மணிக்கு தான். அதாவது சிலுவையில் இருந்த நேரம் 3 மணிநேரம் மட்டுமே

யோவான்19:14.14 அன்று பாஸ்கா விழாவுக்கு ஏற்பாடு செய்யும் நாள். ஏறக்குறைய நண்பகல் வேளை. பிலாத்து யூதர்களிடம், ' இதோ, உங்கள் அரசன்! ' என்றான்.15அவர்கள், ' ஒழிக! ஒழிக! அவனைச் சிலுவையில் அறையும் ' என்று கத்தினார்கள்.

முதல் நூற்றாண்டு யூதர் யோசிபஸ் நூலில் அவர் மூன்று நண்பர்கள் தூக்குமரத்தில்டப்பட, 3 நாள் கழித்து ரோம் ஆட்சியிடம் கேட்டு மீட்டுவர, மூவரில் இருவர் மரண காயங்களால் மரணம் அடைய ஒருவரை மட்டும் காப்பாற்ற முடிந்தது என்கிறார்.அதாவது 3 நாள் சிலுவையில் தொங்கியபின்னர் மூவரும் உயிரோடு தான் இருந்தனர்.

http://religiousstudies.uncc.edu/people/jtabor/cruc-josephus.html
//Life 76

And when I was sent by Titus Caesar with Cerealins, and a thousand horsemen, to a certain village called Thecoa, in order to know whether it were a place fit for a camp, as I came back, I saw many captives crucified, and remembered three of them as my former acquaintance. I was very sorry at this in my mind, and went with tears in my eyes to Titus, and told him of them; so he immediately commanded them to be taken down, and to have the greatest care taken of them, in order to their recovery; yet two of them died under the physician's hands, while the third recovered.//


இன்றைக்கும் நல்ல வெள்ளி அன்று சிலுவையில் ஏறித் தொங்கி ஈஸ்டர் அன்று கீழே இறன்குவது பிலிப்பைன்ஸ் நாட்டில் ஒரு கொண்டாட்டமே.
 
http://www.bagnewsnotes.com/2010/04/your-turn-philippine-woman-nailed-to-the-cross/  
நாம் அறிவது- 3 நாள் சிலுவையில் தொங்கினாலும் மரணம் வருவதில்லை என. ஏசு கதையைப் பார்ப்போம்.
http://greenpagan.newsvine.com/_news/2011/04/22/6513755-good-friday-crucifixions-in-the-philippines

இந்த குறைந்த நேரத்தில் 30 வயதான இயேசு மரணம் அடைய வாய்ப்பு இல்லை. இதை மாற்கு சுவிசேஷமே உறுதிப் படுகிறது.

மாற்கு15:42 இதற்குள் மாலை வேளையாகிவிட்டது. அன்று ஓய்வுநாளுக்கு முந்திய ஆயத்த நாளாக இருந்தபடியால்,43 அரிமத்தியா ஊரைச் சேர்ந்த யோசேப்பு என்பவர் துணிவுடன் பிலாத்திடம் போய் இயேசுவின் உடலைக் கேட்டார். அவர் மதிப்புக்குரிய தலைமைச் சங்க உறுப்பினர். அவரும் இறையாட்சியின் வருகைக்காகக் காத்திருந்தவர்.44ஏற்கெனவே இயேசு இறந்துவிட்டதைக் குறித்துப் பிலாத்து வியப்படைந்து, நூற்றுவர் தலைவரை அழைத்து, ' அவன் இதற்குள் இறந்து விட்டானா? ' என்று கேட்டான்.45 நூற்றுவர் தலைவரிடமிருந்து கேட்டு அறிந்ததும் உடலை அவன் யோசேப்பிடம் அளித்தான்.

இந்த வசனம் ரோமன் கவர்னர் "பிலாத்து வியப்படைந்து" மற்ற சுவிகளிலே இல்லவே இல்லை.
யோவான் சுவியில் ஏசு மரணமடைந்திருக்க முடியாது என்பதை உறுதிப் படுத்திகிறார்.

யோவான்19:31 அன்று பாஸ்கா விழாவுக்கு ஏற்பாடு செய்யும் நாள். அடுத்த நாள் ஓய்வு நாளாகவும் பெருநாளாகவும் இருந்தது. எனவே அன்று சிலுவையில் உடல்கள் தொங்கலாகா என்பதற்காகக் கால்களை முறித்துச் சடலங்களை எடுத்துவிடுமாறு யூதர்கள் பிலாத்திடம் கேட்டுக்கொண்டார்கள்.32 ஆகவே படைவீரர் வந்து இயேசுவோடு சிலுவையில் அறையப் பட்டிருந்தவருள் ஒருவனுடைய கால்களை முதலில் முறித்தார்கள்; பின்னர் மற்றவனுடைய கால்களையும் முறித்தார்கள்.33 பின்பு அவர்கள் இயேசுவிடம் வந்தார்கள். அவர் ஏற்கெனவே இறந்து போயிருந்ததைக் கண்டு அவருடைய கால்களை முறிக்கவில்லை.34 ஆனால் படைவீரருள் ஒருவர் இயேசுவின் விலாவை ஈட்டியால் குத்தினார். உடனே இரத்தமும் தண்ணீரும் வடிந்தன



யோவான் சுவியில் மூவரில் இருவர் மரணமடையவில்லை, ஏசு மயங்கி இருந்தார் எனலாம். ஆனால் யோவான் சுவி ரோமன் மன்னர் டிராஜன்(97 - 118 ) காலத்தில் தான் புனையப்பட்டது. இது யோவான் சுவியின் நம்பகத்தன்மையில்லை எனத் தெளிவாக்கும். ஆனால் இவரும் இருவர் இறக்கவைல்லை எனலாம். ஏன் இதிலும் உள்ள
//34 ஆனால் படைவீரருள் ஒருவர் இயேசுவின் விலாவை ஈட்டியால் குத்தினார். உடனே இரத்தமும் தண்ணீரும் வடிந்தன./  -/ இயேசு முழுமையாய் இறக்கவில்லை என்பர் மருத்துவர்கள்.

http://www.alislam.org/tamil/books/pdf/Siluvayil-Maranam.pdf
http://abcnews.go.com/GMA/jesus-christ-died-cross-scholar/story?id=11066130#.UGezr5g3qgQ

Jesus Christ May Not Have Died on Cross

Gunnar Samuelsson, an evangelical preacher and theologian, says he spent three years combing thousands of ancient texts to research his recently completed 400-page doctoral thesis "Crucifixion in Antiquity."


நாம் உறுதியாய் உணருவது - சிலுவையில் 3 அல்லது 6 மணி நேரம் சிலுவையில் ஏசு தொங்கினால் இறக்க வாய்ப்பில்லை என்பதை தெளிவாக உணரலாம்.

4 comments:

  1. யூதர்கள் வழக்கப்படி பிணங்களை அப்படியே மலை மீது போட்டுவிடுவார்கள் என்று படித்திருக்கிறேன்.
    உண்மையா? எலும்புகளை மட்டிலுமே சேகரித்து பெட்டியில் வைத்துப் புதைப்பதாக அறிந்தேன்.
    தாங்கள் கூறுங்கள்.

    ReplyDelete
  2. ரோமன் முறையில் கயிற்றில்கட்டித் தொங்க விடும் தண்டனை முறையை விவரித்து படங்களுடன் எழுதுங்கள்.
    ஆணிகள் அடிப்பார்களா? இல்லையா? ரத்தம் வெளியேறினால் 3 மணி நேரத்தில் மரணம் ஏற்படாதா?

    ReplyDelete
  3. ரோமன் தண்டனைமுறை பற்றி சரியான தகவல்கள் கிடையாது. உயரமான சாரத்தில் நிர்வாணமாய் குற்றவாளி தொங்கவிடப்பட்ட, கழுத்தெலும்பு உடைந்து மண்டை ஓடு கீழே விழும் வரை தொங்கவிடுவர், முறையான அடக்கம் குற்றவாளிகட்கு கிடையாது. தண்டனையை கோரமாக்க ஆணி போன்றவை உண்டு, இவற்றிற்கும் ஆதாரங்கள் கதைகள் மட்டுமே. 3 நாள் சிலுவையில் தொங்கியபின் 3 நண்பரை யோசிபஸ் கீழே இறக்கும் போது உயிரோடே இருந்தனர். காயங்களால் இருவர் இறக்க ஒருவர் மட்டுமெ பிழைத்தார். ஆனால் ஏசு 3 மணி நேரம் மட்டுமே சிலுவையில் இஉர்ந்தார்.

    யூதர்கள் முறையான அடக்கம் செய்வார்கள். குற்றவாளிகளுக்கு செய்வதில்லை.


    ReplyDelete
  4. jesus died on cross and raised again all is truths................last day the saturn will teaching false doctrin like this so dont believe anyone!only bible is truths.......jesus will return.....what happen in bible all truths.......because bible is jesus words not humans word

    ReplyDelete

காலில் செருப்பு, நெருப்பு இல்லத அடுப்பு பொங்கல் போட்டோ ஷூட் செய்த தமிழர் விரோத்கள்- மனிதர்களா

 காலில் செருப்பு, நெருப்பு இல்லத அடுப்பு பொங்கல் போட்டோ ஷூட் செய்த தமிழர் விரோத்கள்- மனிதர்களா