Wednesday, September 19, 2012

இயேசு மரணம்- புதைத்த கல்லறை கட்டுக் கதைகளே!

இயேசுவினைக் கைது செய்தது ரோமன் படை வீரர்கள்,  மரண தண்டனை ரோமன் முறையில் தூக்குமரத்தில் தொங்கவிடப்படும் முறையில்.
         
ரோமன்  தூக்குமரத்தில் தொங்கவிடப்படும் முறையில் 4- 5 நாள் கழித்தே மரணம் வரும். ஆனால் 3 மணி நேரத்தில் இயேசு இறந்ததாகவும் அவர் உடலை அரிமத்தேயா என்னும் ஊரைச் சேர்ந்த ஜோசப் என்பவர். அவர் யார்? ஒவ்வொரு சுவிசேஷக் கதாசிரியரும் விடும் கதைகள்.
       
மாற்கு15:43 அரிமத்தியா ஊரைச் சேர்ந்த யோசேப்பு என்பவர் துணிவுடன் பிலாத்திடம் போய் இயேசுவின் உடலைக் கேட்டார். அவர் மதிப்புக்குரிய தலைமைச் சங்க உறுப்பினர். அவரும் இறையாட்சியின் வருகைக்காகக் காத்திருந்தவர்.
.46 யோசேப்பு மெல்லிய துணி ஒன்றை வாங்கி வந்து, இயேசுவின் உடலை இறக்கித் துணியால் சுற்றிப் பாறையில் வெட்டப்பட்டிருந்த கல்லறையில் கொண்டு வைத்தார்; அதன் வாயிலில் ஒரு கல்லை உருட்டி வைத்தார்.
மத்தேயு27: 57 மாலை வேளையானதும் அரிமத்தியா ஊரைச் சேர்ந்த யோசேப்பு என்னும் பெயர் கொண்ட செல்வர் ஒருவர் அங்கே வந்தார். அவரும் இயேசுவுக்குச் சீடராய் இருந்தார்.58 அவர் பிலாத்திடம் போய் இயேசுவின் உடலைக் கேட்டார். பிலாத்தும் அதைக் கொடுத்துவிடக் கட்டளையிட்டான். 59 யோசேப்பு அவ்வுடலைப் பெற்று, தூய்மையான மெல்லிய துணியால் சுற்றி,60 தமக்கெனப் பாறையில் வெட்டியிருந்த புதிய கல்லறையில் கொண்டுபோய் வைத்தார்; அதன் வாயிலில் ஒரு பெருங்கல்லை உருட்டி வைத்துவிட்டுப் போனார்.
 லூக்கா 23:50 யோசேப்பு என்னும் பெயருடைய ஒருவர் இருந்தார். அவர் தலைமைச் சங்க உறுப்பினர், நல்லவர், நேர்மையாளர். 51 தலைமைச் சங்கத்தாரின் திட்டத்துக்கும் செயலுக்கும் இணங்காத அவர் யூதேயாவிலுள்ள அரிமத்தியா ஊரைச் சேர்ந்தவர்; இறையாட்சியின் வருகைக்காகக் காத்திருந்தவர்.52 அவர் பிலாத்திடம் போய் இயேசுவின் உடலைக் கேட்டார்.53 அவர் அவரது உடலை இறக்கி, மெல்லிய துணியால் சுற்றிப் பாறையில் குடைந்திருந்த கல்லறையில் வைத்தார். அதற்கு முன்பு யாரையும் அதில் அடக்கம் செய்ததில்லை. 
யோவான் 19:38 அரிமத்தியா ஊரைச் சேர்ந்த யோசேப்பு என்பவர் இயேசுவின் சீடர்களுள் ஒருவர்.
41 அவர் சிலுவையில் அறையப்படடிருந்த இடத்தில் ஒரு தோட்டம் இருந்தது. அங்கே புதிய கல்லறை ஒன்று இருந்தது. அதில் அதுவரை யாரும் அடக்கம் செய்யப்படவில்லை.42 அன்று பாஸ்கா விழாவுக்கு ஆயத்த நாளாய் இருந்ததாலும் அக்கல்லறை அருகில் இருந்ததாலும் அவர்கள் இயேசுவை அதில் அடக்கம் செய்தார்கள்.

அரிமத்தேயா யோசேப்பு - இவர் பெயர் இந்த இடத்தில் மட்டுமே கதையில் ஆனால் யார் என்பதிலும் நேர்மையான உண்மை இல்லை.
http://en.wikipedia.org/wiki/Joseph_of_Arimathea
அரிமத்தேயா என்றொரு ஊர் இன்று வரை எங்கே உள்ளது என்பதும் தெரியாது.
http://en.wikipedia.org/wiki/Arimathea
அரிமத்தேயா யோசேப்பு இயேசுவின் சீடர்களுள் ஒருவர் என்பது மத்தேயுவும் யோவன் சுவியும்;  இல்லை அரிமத்தேயா யோசேப்பு யூத மதப் பாதிரிகள் தலைமைச் சங்க உறுப்பினர் என மாற்கு லூக்கா கதை புனைகின்றனர்.
மத்தேயு27: 60 "அரிமத்தேயா யோசேப்பு தமக்கெனப் பாறையில் வெட்டியிருந்த புதிய கல்லறையில் கொண்டுபோய் வைத்தார்; அதன் வாயிலில் ஒரு பெருங்கல்லை உருட்டி வைத்துவிட்டுப் போனார்."

(சொந்தமாக கல்லறை எல்லாம் வைத்திருப்பவரா- இப்படி எல்லாம் ஆட்கள் உண்டா? --ஓ ஏசுச் சீடரோ?)


சரி ஏசு புதைக்கப்பட்ட கல்லறை இருந்த இடம் எனச் சொல்லி அதைச் சுற்றி கட்டப்பட்டுள்ளது புனிதப் பிணக் கல்லறை சர்ச். 
  
ஆனால் அது சரியான கல்லறை அல்ல.

உண்மையான கல்லறை இருந்தது கார்டன் கல்வாரி என்னும் 
தோட்டக் கல்வாரி என்பது தான் பல பைபிளியலாளர் சொல்கின்றனர்.
                              


  

Map
இல்லை இன்னும் சற்று தூரம் தள்ளி என்கின்றனர் சில.


ரோமன் மரணதண்டனையால் இறந்தவர்க்கு முறையானபடி அடக்கம் செய்ய அனுமதி கிடையாது வரலாற்றிலே. ஆனால் சீடர்கள் ஓட யாரோ ஒருவர் ஒரு புது கல்லறையில் அடைத்தார் எனக் கதை. அப்படி செய்தவர் பற்றி வெவ்வேறு கதைகள்.





கல்லறை எங்கே என்பது கூடத் தெரியாது, ஆனால் அது காலி; 
பெண்கள் கண்டனர் என்றெல்லாம் புனைவர். 



யி
ர்த்து எழுந்தார் என்றெல்லாம் புனைவர்.



1 comment:

  1. யூதர்களின் பஸ்கா பண்டிகையின் ஓய்வுநாளன்று பிணங்கள் தொஙக் கூடாது என உடல் கேடகப்பட்டது எனில், சிலுவையில் 3 பேர் அடைக்கபட்டனர், மற்றவர்கள் உடல் என்ன செய்யப்பட்டது.

    அரிமத்தியா யோசேப்பு அடக்கம் கதை நம்பத் தக்கது அல்ல

    ReplyDelete