Thursday, September 6, 2012

ஏசு மரணம் ஏன்? என்றைக்கு?

முதலில் புனையப்பட்ட மாற்கு சுவி(70 - 75 வாக்கில்) இயேசுவின் கைது - மரணம் நிகழ்ந்தது பற்றி கூறுவது.
  
 பஸ்கா (யூத மதத்தின் சிறு இஸ்ரேல் எல்லைத் தெய்வம் கர்த்தருக்கு ஆடு கொலை செய்து பலி தருதல்) பண்டிகை  நாள் விருந்து- இது கடைசி இரவு விருந்து எனப் பெயர் பெற்றது, இது முடிந்த பின் கைதும், மறுநாள் அன்று மரணம்.

மாற்கு 14: 12 புளிப்பற்ற அப்ப விழாவின் முதல் நாள் வந்தது. பாஸ்கா ஆட்டுக்குட்டியைப் பலியிடும் அந்நாளிலே இயேசுவின் சீடர், ' நீர் பாஸ்கா விருந்துண்ண நாங்கள் எங்கே சென்று ஏற்பாடு செய்ய வேண்டும் என விரும்புகிறீர்? ' என்று கேட்டார்கள்.(மத் 26:17 - 19; லூக் 22:7 - 14, 21 - 23) 
மாற்கு 14: 17 மாலை வேளையானதும் இயேசு பன்னிருவரோடு வந்தார்.18 அவர்கள் பந்தியில் அமர்ந்து உண்டு கொண்டிருந்தபொழுது இயேசு, ' என்னோடு உண்ணும் உங்களுள் ஒருவன் என்னைக் காட்டிக்கொடுப்பான் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன் ' என்றார்.19 அவர்கள் வருத்தமுற்று, ஒருவர் பின் ஒருவராக, ' நானோ? நானோ? ' என்று அவரிடம் கேட்கத் தொடங்கினார்கள்.20 அதற்கு அவர், ' அவன் பன்னிருவருள் ஒருவன்; என்னுடன் பாத்திரத்தில் தொட்டு உண்பவன்.21 மானிடமகன் தம்மைப் பற்றி மறைநூலில் எழுதியுள்ளவாறே போகிறார். ஆனால் ஐயோ! அவரைக் காட்டிக் கொடுக்கிறவனுக்குக் கேடு! அம்மனிதன் பிறவாதிருந்தால் அவனுக்கு நலமாய் இருந்திருக்கும் ' என்றார்.(மத் 26:20 - 25; லூக் 22:21 - 23; யோவா 13:21 - 30)
 ஆண்டவரின் திருவிருந்து-LAST SUPPER
(மத் 26:26 - 30; லூக் 22:15 - 20; 1கொரி 11:23 - 25)
மாற்கு 14:  22 அவர்கள் உண்டுகொண்டிருந்தபொழுது அவர் அப்பத்தை எடுத்து, கடவுளைப் போற்றி அதைப் பிட்டு, அவர்களுக்குக் கொடுத்து, ' இதைப் பெற்றுக்கொள்ளுங்கள்; இது எனது உடல் ' என்றார்.23 பின்பு அவர் கிண்ணத்தை எடுத்துக் கடவுளுக்கு நன்றி செலுத்தி அவர்களுக்குக் கொடுத்தார். அனைவரும் அதிலிருந்து பருகினர்.24 அப்பொழுது அவர் அவர்களிடம், 'இது எனது உடன்படிக்கையின் இரத்தம்; பலருக்காகச் சிந்தப்படும் இரத்தம். 25 இனிமேல் இறையாட்சி வரும் அந்நாளில்தான் நான் திராட்சைப்பழ இரசத்தைக் குடிப்பேன்; அதுவரை ஒருபோதும் குடிக்க மாட்டேன் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன் ' என்றார்.26அவர்கள் புகழ்ப்பாடல் பாடிவிட்டு ஒலிவமலைக்குச் சென்றார்கள்.
 மாற்கு 14: 43 இயேசு தொடர்ந்து பேசிக் கொண்டிருந்தபோது பன்னிருவருள் ஒருவனான யூதாசு வந்தான். அவனோடு தலைமைக் குருக்கள், மறைநூல் அறிஞர், மூப்பர் ஆகியோர் அனுப்பிய மக்கள் கூட்டம் வாள்களோடும், தடிகளோடும் வந்தது.44 அவரைக் காட்டிக்கொடுக்கவிருந்தவன், ' நான் ஒருவரை முத்தமிடுவேன். அவர்தாம் இயேசு, அவரைப் பிடித்துக் காவலோடு கொண்டு போங்கள் ' என்று அவர்களுக்கு அடையாளம் சொல்லியிருந்தான்.45 அவன் வந்ததும் உடனடியாக அவரை அணுகி, ' ரபி ' எனக் கூறிக்கொண்டே அவரை முத்தமிட்டான்.46 அவர்களும் அவரைப் பற்றிப் பிடித்துக் கைது செய்தனர்.47 அருகில் நின்று கொண்டிருந்தவர்களுள் ஒருவர் தம் வாளை உருவி, தலைமைக் குருவின் பணியாளரைத் தாக்கி அவருடைய காதைத் துண்டித்தார்.

மாற்கு 14:  50 அப்பொழுது சீடர் அனைவரும் அவரை விட்டுவிட்டுத் தப்பி ஓடினர்.51 இளைஞர் ஒருவர் தம் வெறும் உடம்பின் மீது ஒரு நார்ப்பட்டுத் துணியைப் போர்த்திக் கொண்டு அவர் பின்னே சென்றார்; அவரைப் பிடித்தார்கள்.52 ஆனால் அவர் துணியை விட்டு விட்டு ஆடையின்றித் தப்பி ஓடினார்.

இப்படி நிவாணமாக ஓடியவர் தான் மாற்கு என சர்ச் புனைகிறது. மேலும் சீடர்கள் ஓடிவிட்டனர்.
   

யோவான் சுவியில் இந்த கடைசி இரவு விருந்து கிடையாது. கைதாகி மறுநாள் யூதப் பாதிரிகள் சங்கம் கூடி பின் ரோமன் கவர்னர் பிலாத்திடம் செல்கையில் -பஸ்கா பண்டிகை உணவை சாப்பிட யூதர் இல்லத பிலாத்து வீட்டின் உள்ளே செல்லவில்லை (தீட்டாம்- என்னே ஜாதி இனவெறி)
 

 28 அதன்பின் அவர்கள் கயபாவிடமிருந்து ஆளுநர் மாளிகைக்கு இயேசுவைக் கொண்டு சென்றார்கள். அப்போது விடியற்காலம். பாஸ்கா உணவை உண்ணுமுன் தீட்டுப் படாமலிருக்க ஆளுநர் மாளிகையில் அவர்கள் நுழையவில்லை.29 எனவே பிலாத்து வெளியே அவர்களிடம் வந்து, ' நீங்கள் இந்த ஆளுக்கு எதிராகக் கூறும் குற்றச்சாட்டு என்ன? ' என்று கேட்டார்.
 யோவான்19:14 அன்று பாஸ்கா விழாவுக்கு ஏற்பாடு செய்யும் நாள். ஏறக்குறைய நண்பகல் வேளை. பிலாத்து யூதர்களிடம், ' இதோ, உங்கள் அரசன்! ' என்றான்.15அவர்கள், ' ஒழிக! ஒழிக! அவனைச் சிலுவையில் அறையும் ' என்று கத்தினார்கள்

ஏசுவைக் கைது செய்ததும் ரோமன் வீரர்கள் என்றும் இங்கே பார்க்கலாம்

யோவான்18:  2 அவரைக் காட்டிக் கொடுத்த யூதாசுக்கு அந்த இடம் தெரியும். ஏனெனில், இயேசுவும் அவருடைய சீடர்களும் அடிக்கடி அங்குக் கூடுவர்.3  ரோமன்  படைப் பிரிவினரையும் தலைமைக் குருக்களும் பரிசேயரும் அனுப்பிய காவலர்களையும் கூட்டிக் கொண்டு யூதாசு விளக்குகளோடும் பந்தங்களோடும் படைக்கலங்களோடும் அங்கே வந்தான்.
10 சீமோன் பேதுருவிடம் ஒரு வாள் இருந்தது. அவர் அதை உருவித் தலைமைக் குருவின் பணியாளரைத் தாக்கி அவரது வலக்காதை வெட்டினார். அப்பணியாளரின் பெயர் மால்கு.

NASB -John18:3 Judas then, having received the Roman cohort and officers from the chief priests and the Pharisees, came there with lanterns and torches and weapons.
 யோவான் 18:  12  ரோமன் படைப்பிரிவினரும்  ரோமன்  ஆயிரத்தவர் தலைவரும் யூதர்களின் காவலர்களும் இயேசுவைப் பிடித்துக் கட்டி,13 முதலில் அவரை அன்னாவிடம் கொண்டுசென்றார்கள். ஏனெனில் அந்த ஆண்டில் தலைமைக் குருவாய் இருந்த கயபாவுக்கு அவர் மாமனார்.
NASB 12 So the Roman cohort and the commander and the officers of the Jews, arrested Jesus and bound Him,

  

தண்டனை தந்து நிருபிக்கப்பட்ட குற்றம் சொல்லும் குற்ற அட்டையை ரோமன் கவர்னர் பிலாத்து தன் கைப்பட் எழுதினார். யூதர்களின் ராஜா என்றதை- யூதப் பாதிரிகள் "யூதர்களின் ராஜா எனச் சொல்லிக் கொண்டவன்  என மாற்றும்படி சொல்ல பிலாத்து மறுத்தார்.  
 
யோவான்19: 19 பிலாத்து குற்ற அறிக்கை ஒன்று எழுதி அதைச் சிலுவையின் மீது வைத்தான். அதில் ' நாசரேத்து இயேசு யூதர்களின் அரசன் ' என்று எழுதியிருந்தது.20 இயேசு சிலுவையில் அறையப்பட்ட இடம் நகரத்துக்கு அருகில் இருந்ததால் யூதருள் பலர் இந்தக் குற்ற அறிக்கையை வாசித்தனர். அது எபிரேயம், இலத்தீன், கிரேக்கம் ஆகிய மொழிகளில் எழுதப்பட்டிருந்தது. 21 யூதரின் தலைமைக் குருக்கள் பிலாத்திடம், ' ″ யூதரின் அரசன் ″ என்று எழுத வேண்டாம்; மாறாக, ' யூதரின் அரசன் நான் ' என்று அவனே சொல்லிக் கொண்டதாக எழுதும் ' என்று கேட்டுக்கொண்டார்கள்.22 பிலாத்து அவர்களைப் பார்த்து, ' நான் எழுதியது எழுதியதே ' என்றான்.

கைது செய்தது ரோமன் வீரர்கள், தண்டனை ரோமன் தூக்கு மரத்தில் தொங்குதல். மரண தண்டனை தந்தது ரோமன் கவர்னர்.
அப்படியானால் செய்த குற்றம்

லூக்கா23:1 திரண்டிருந்த மக்கள் அனைவரும் எழுந்து இயேசுவைப் பிலாத்தின்முன் கொண்டு சென்றனர்.2 ' இவன் நம் மக்கள் சீரழியக் காரணமாக இருக்கிறான்; சீசருக்குக் கப்பம் கட்டக்கூடாது என்கிறான்; தானே மெசியாவாகிய அரசன் என்று சொல்லிக் கொள்கிறான். இவற்றையெல்லாம் நாங்களே கேட்டோம் ' என்று அவர்கள் இயேசுவின் மேல் குற்றம் சுமத்தத் தொடங்கினார்கள்.3 பிலாத்து அவரை நோக்கி, ' நீ யூதரின் அரசனா? ' என்று கேட்க, அவர், ' அவ்வாறு நீர் சொல்கிறீர் ' என்று பதில் கூறினார்.

ரோம் ஆட்சிக்கு எதிராக கலகம் செய்யத் தூண்டியதால் ஏசு ரோமன் வீரர்களால் கைது செய்யப்பட , ரோமன் கவர்னர் விசாரித்து மரண தண்டனை தர தண்டனை ரோமன் முறையில் தூக்கு மரத்தில் தொங்குதல்.

இயேசுவை சிலுவையில் அடைதது எப்போது?


மாற்கு15:25அவரைச் சிலுவையில் அறைந்தபோது காலை ஒன்பது மணி.26 அவரது மரண தண்டனைக்கான காரணத்தை அறிவிக்க ' யூதரின் அரசன் ' என்று அவர்கள் எழுதிவைத்தார்கள்;27 அவருடைய வலப்புறம் ஒருவனும் இடப்புறம் ஒருவனுமாக,28 இரு கள்வர்களை அவருடன் சிலுவைகளில் அறைந்தார்கள்.
33 நண்பகல் வந்தபொழுது நாடெங்கும் இருள் உண்டாயிற்று. பிற்பகல் மூன்று மணிவரை அது நீடித்தது.34 பிற்பகல் மூன்று மணிக்கு இயேசு, ' எலோயி, எலோயி, லெமா சபக்தானி? ' என்று உரக்கக் கத்தினார். ' என் இறைவா, என் இறைவா ஏன் என்னைக் கைவிட்டீர்? ' என்பது அதற்குப் பொருள்.
37 இயேசுவோ உரக்கக் கத்தி உயிர் துறந்தார்.
யோவான்19:14 அன்று பாஸ்கா விழாவுக்கு ஏற்பாடு செய்யும் நாள். ஏறக்குறைய நண்பகல் வேளைபிலாத்து யூதர்களிடம், ' இதோ, உங்கள் அரசன்! ' என்றான்.


மாற்குபடி 9 மணிக்கு சிலுவையில் அறையப்பட 3 மணிக்கு மரணம் - 6 மணி நேரம் சிலுவையில்.
யோவான் சுவிபடி 12 மணிக்கு சிலுவையில் அடைப்பு,  மணிக்கு மரணம் - 3 மணி நேரம் சிலுவையில்.

கைதானது பஸ்கா பண்டிகை அன்றைக்கா, முந்திய நாளா?
மரணம் பஸ்கா பண்டிகை அன்றைக்கா-மறு நாளா?
 சிலுவையில் அடைப்பு  மணி நேரமாஅல்லது   6மணி நேரமா ?

 இண்டில் ஒன்று சரியா? இரண்டுமே பொய்யா?

4 comments:

  1. யோவன் சுவி கதை- பஸ்கா பண்டிகை அன்று மதியம் தான் சிலுவையில் அறைஅயல், மாற்குபடி பஸ்காவிற்கு அடுத்த நாள்- ஏன் இது?

    ReplyDelete
  2. கைதானது பஸ்கா பண்டிகை அன்றைக்கா, மறு நாளா?
    சிலுவையில் அடைப்பு 3 மணி நேரமாஅல்லது 6மணி நேரமா ?
    இரண்டில் ஒன்று சரியா? இரண்டுமே பொய்யா?
    கிறிஸ்தவர்களைப் பொறுத்தவரை இரண்டுமே உண்மைதான். எதை வேண்டுமானாலும் பயன்படுத்தி ஏசுவின் கதையை மனம் உருகச் சொல்வார்கள். இப்படி முரண்பாடாக இருக்கிறதே என்று எவரும் கேட்க மாட்டார்கள். அவர்களின் விசுவாசம் அப்படி.

    ReplyDelete
  3. வாருங்கள் ராஜா, கருப்பையா,
    யோவான்1:29 ' இதோ! கடவுளின் ஆட்டுக்குட்டி! ஆட்டுக்குட்டியாம் இவரே உலகின் பாவத்தைப் போக்குபவர். எனப் புனைந்தவர் - ஏசுவின் மரணத்தை பஸ்கா பண்டிகை அன்று என மாற்றியதும், தூக்குமர்த்தில் அறைந்தது மதியம் என்றதும் ஏசு தான் புதிய பஸ்கா பலி எனப் புனைந்திட எனப்து மழுப்பலாளர் கூறும் கதை.
    தன் கற்பனைக்கு ஏற்ப கதையை மாற்றினாராம்

    வருகைக்கும் ஊக்கத்திற்கும் நன்றி.

    ReplyDelete
  4. வணக்கம் சகோ,

    ஒருபக்கம் இஸ்லாத்தை இறையில்லா இஸ்லாம் என தோலுரிக்க இங்கே கிறிஸ்து முதுகெலும்பை ஒடித்துக் கொண்டிருக்கிறீர்கள் எது எப்படியோ மூட நம்பிக்கைகள் முறியடிக்கப்பட்டால் குதூகலமே தொடருங்கள்.

    இனியவன்...

    ReplyDelete

'சிங்கம்' போன்ற படங்கள் ஆபத்தான செய்தியை அனுப்புகின்றன: பாம்பே உயர்நீதிமன்ற நீதிபதி

   Films Like 'Singham' Send Dangerous Message: Bombay High Court Judge https://www.newspointapp.com/news/india/films-like-singham-s...