Thursday, September 13, 2012

இயேசு கிறிஸ்து யார்?

இயேசுவின் தாய் ஏசுவிடம் பேசியதாக உள்ளது.H
    


லூக்கா2:41 ஆண்டுதோறும் இயேசுவின் பெற்றோர் பாஸ்கா விழாவைக் கொண்டாட எருசலேமுக்குப் போவார்கள்;42 இயேசுவுக்குப் பன்னிரண்டு வயது ஆனபோது, வழக்கப்படி விழாவைக் கொண்டாட எருசலேம் சென்றனர்.  
48 அவருடைய பெற்றோரும் அவரைக் கண்டு வியப்பில் ஆழ்ந்தனர். அப்பொழுது அவருடைய தாய் அவரை நோக்கி, ' மகனே, ஏன் இப்படிச் செய்தாய்? இதோ பார், உன் தந்தையும் நானும் உன்னை மிகுந்த கவலையோடு தேடிக்கொண்டிருந்தோமே ' என்றார்.
மாற்கு3:20 அதன்பின் இயேசு வீட்டிற்குச் சென்றார். மீண்டும் மக்கள் கூட்டம் வந்து கூடியதால் அவர்கள் உணவு அருந்தவும் முடியவில்லை.21 அவருடைய உறவினர் இதைக் கேள்விப்பட்டு, அவரைப் பிடித்துக்கொண்டுவரச் சென்றார்கள். ஏனெனில் அவர் மதிமயங்கி இருக்கிறார் என்று மக்கள் பேசிக் கொண்டனர்.

இயேசுவின் தாயார்- ஏசுவிடம் தந்தையைப் பற்றிக் கேட்கிறார். அதாவது ஏசு பிறப்பில் அதிசயம்  எல்லாம் இடைசெருகல். ஏசுவை அவர் வீட்டினர் மனநிலை பாதிக்கப்பட்டவர் எனக் கூறி கூட்டி சென்றனர். (H)
    
 தன்னைப் பார்க்கத் தாயார் வந்தபோது சரியான முறையில் மரியாதை செய்யாது தாழ்த்தியே பேசினார்.

மத்தேயு 12:46 இவ்வாறு மக்கள் கூட்டத்தோடு இயேசு பேசிக் கொண்டிருந்த போது அவருடைய தாயும் சகோதரர்களும் வந்து அவருடன் பேச வேண்டும் என்று வெளியே நின்று கொண்டிருந்தார்கள்.47 ஒருவர் இயேசுவை நோக்கி, 'அதோ, உம்தாயும் சகோதரர்களும் உம்மோடு பேச வேண்டும் என்று வெளியே நின்று கொண்டிருக்கின்றார்கள்' என்றார்.48 அவர், இதைத் தம்மிடம் கூறியவரைப் பார்த்து, ' என் தாய் யார்? என் சகோதரர்கள் யார்? என்று கேட்டார்.49 பின் தம் சீடர் பக்கம் கையை நீட்டி, ' என் தாயும் சகோதரர்களும் இவர்களே.50 விண்ணகத்திலுள்ள என் தந்தையின் திருவுளத்தை நிறைவேற்றுபவரே என் சகோதரரும் சகோதரியும் தாயும் ஆவார் ' என்றார்.
  லூக்கா11:7 அவர் இவற்றைச் சொல்லிக் கொண்டிருந்தபோது, கூட்டத்திலிருந்து பெண் ஒருவர், ' உம்மைக் கருத்தாங்கிப் பாலூட்டி வளர்த்த உம் தாய் பேறுபெற்றவர் ' என்று குரலெழுப்பிக் கூறினார்.28 அவரோ, ' இறைவார்த்தையைக் கேட்டு அதன்படி செயல்படுகிறவர்களே என் தாயும் என் சகோதரர்களும் ஆவார்கள் 'என்றார்..

ஏசுவின் சகோதரர்கள் அவரை நம்பவில்லை. அதாவது பிறப்பில் அதிசயம் ஏதும் சகோதரர்களுக்கு தெரியாது.(H)
  

யோவான் 7:2 யூதர்களின் கூடார விழா அண்மையில் நிகழவிருந்தது.3இயேசுவின் சகோதரர்கள் அவரை நோக்கி, ' நீர் இவ்விடத்தை விட்டு யூதேயா செல்லும். அப்போது உம் சீடர்கள் நீர் புரியும் செயல்களைக் காணமுடியும்.4 ஏனெனில், பொது வாழ்வில் ஈடுபட விரும்பும் எவரும் மறைவாகச் செயல்புரிவதில்லை. நீர் இவற்றையெல்லாம் செய்வதால் உலகுக்கு உம்மை வெளிப்படுத்தலாமே! ' என்றனர்.5 ஏனெனில் அவருடைய சகோதரர்கள்கூட அவரிடம் நம்பிக்கை கொள்ளவில்லை.


ஏசு தன் பணி யூதர்களிடம் மட்டுமே என சீடர்க்கு சொன்னது.(H)
  


மத்தேயு10:1இயேசு தம் சீடர் பன்னிருவரையும் தம்மிடம் வரவழைத்தார். தீய ஆவிகளை ஓட்டவும், நோய் நொடிகளைக் குணமாக்கவும் அவர்களுக்கு அதிகாரம் அளித்தார்.
5 இயேசு இந்தப் பன்னிருவரையும் அனுப்பியபோது அவர்களுக்கு அறிவுரையாகக் கூறியது: ' ' பிற இனத்தாரின் எப்பகுதிக்கும் செல்ல வேண்டாம். சமாரியாவின் நகர் எதிலும் நுழைய வேண்டாம்.6 மாறாக, வழி தவறிப்போன ஆடுகளான இஸ்ரயேல் மக்களிடமே செல்லுங்கள்.
 மத்தேயு15:1 இயேசு அங்கிருந்து புறப்பட்டுத் தீர், சீதோன் ஆகிய பகுதிகளை நோக்கிச் சென்றார்.22 அவற்றின் எல்லைப் பகுதியில் வாழ்ந்து வந்த கானானியப் பெண் ஒருவர் அவரிடம் வந்து, ' ஐயா, தாவிதீன் மகனே, எனக்கு இரங்கும்; என் மகள் பேய் பிடித்துக் கொடுமைக்குள்ளாகி இருக்கிறாள் ' எனக் கதறினார்.23 ஆனால் இயேசு அவரிடம் ஒரு வார்த்தைகூட மறுமொழியாகச் சொல்லவில்லை. சீடர்கள் அவரை அணுகி, ' நமக்குப் பின்னால் கத்திக்கொண்டு வருகிறாரே, இவரை அனுப்பிவிடும் ' என வேண்டினர்.24 அவரோ மறுமொழியாக, ' இஸ்ரயேல் குலத்தாருள் காணாமற்போன ஆடுகளாய் இருப்போரிடமே நான் அனுப்பப்பட்டேன் ' என்றார்.25 ஆனால் அப்பெண் அவர்முன் வந்து பணிந்து, ' ஐயா, எனக்கு உதவியருளும் ' என்றார்.26 அவர் மறுமொழியாக, ' பிள்ளைகளுக்குரிய உணவை எடுத்து நாய்க் குட்டிகளுக்குப் போடுவது முறையல்ல ' என்றார்.27 உடனே அப்பெண், ' ஆம் ஐயா, ஆனாலும் தங்கள் உரிமையாளரின் மேசையிலிருந்து விழும் சிறு துண்டுகளை நாய்க்குட்டிகள் தின்னுமே ' என்றார்.28 இயேசு மறுமொழியாக, ' அம்மா, உமது நம்பிக்கை பெரிது. நீர் விரும்பியவாறே உமக்கு நிகழட்டும்என்று அவரிடம் கூறினார். அந்நேரம் அவர் மகளின் பிணி நீங்கியது.

யூதரினம் இல்லாத கிரேக்கப் பெண்ணிடம் - என் பணி யூதர்களுக்கு மட்டும், என்றும் யூதரல்லாதோர் நாய்கள், வீட்டுப் பிள்ளைகள் யூதருக்கானதை நாய்களுக்குக் கிடையாது என்றிட, அப்பெண் சாப்பாட்டு மேஜை மேல் சாப்பிடும் சிந்தும் எச்சில் என உதவுங்கள் எனச் சொல்ல, இப்பதிலினால் உதவி என்றார்.
ஏசு நம்பியது யூதர்கள் குழந்தைகள் - யூதர் அல்லாதவர் நாய்கள் 

மாற்கு10:இயேசுவைப் பின்பற்ற விரும்பிய செல்வர்
(மத் 19:16 - 30; லூக் 18:18 - 30)
17 இயேசு புறப்பட்டுச் சென்று கொண்டிருந்தபோது வழியில் ஒருவர் அவரிடம் ஓடிவந்து முழந்தாள்படியிட்டு, ' நல்ல போதகரே, நிலை வாழ்வை உரிமையாக்கிக்கொள்ள நான் என்ன செய்ய வேண்டும்? ' என்று அவரைக் கேட்டார்.18 அதற்கு இயேசு அவரிடம், ' நான் நல்லவன் என ஏன் சொல்கிறீர்? கடவுள் ஒருவரைத் தவிர நல்லவர் எவருமில்லையே.
.19உமக்குக் கட்டளைகள் தெரியும் அல்லவா? ″ கொலைசெய்யாதே; விபசாரம் செய்யாதே; களவு செய்யாதே; பொய்ச்சான்று சொல்லாதே; வஞ்சித்துப் பறிக்காதே; உன் தாய் தந்தையை மதித்து நட ″ ' என்றார்.20அவர் இயேசுவிடம், ' போதகரே, இவை அனைத்தையும் நான் என் இளமையிலிருந்தே கடைப்பிடித்து வந்துள்ளேன் ' என்று கூறினார்.21அப்போது இயேசு அன்பொழுக அவரைக் கூர்ந்து நோக்கி, ' உமக்கு இன்னும் ஒன்று குறைபடுகிறது. நீர் போய் உமக்கு உள்ளவற்றை விற்று ஏழைகளுக்குக் கொடும். அப்போது விண்ணகத்தில் நீர் செல்வராய் இருப்பீர். பின்பு வந்து என்னைப் பின்பற்றும்
 மாற்கு11:27 அவர்கள் மீண்டும் எருசலேமுக்கு வந்தார்கள். இயேசு கோவிலில் நடந்து கொண்டிருந்தபோது தலைமைக் குருக்கள், மறைநூல் அறிஞர்கள், மூப்பர்கள் ஆகியோர் அவரிடம் வந்து,28 ' எந்த அதிகாரத்தால் நீர் இவற்றைச் செய்கிறீர்? இவற்றைச் செய்ய உமக்கு அதிகாரம் கொடுத்தவர் யார்? ' என்று கேட்டனர்.29 இயேசு அவர்களுக்கு மறுமொழியாக, ' நானும், உங்களிடம் ஒரு கேள்வி கேட்கிறேன்; நீங்கள் மறுமொழி கூறுங்கள். அப்போது எந்த அதிகாரத்தால் இவற்றைச் செய்கிறேன் என நான் உங்களுக்குச் சொல்வேன்.30 திருமுழுக்கு அளிக்கும் அதிகாரம் யோவானுக்கு விண்ணகத்திலிருந்து வந்ததா? அல்லது மனிதரிடமிருந்து வந்ததா? எனக்குப் பதில் சொல்லுங்கள் என்றார்.31 அவர்கள், ″ ' விண்ணகத்திலிருந்து வந்தது ' என்போமானால், ' பின் ஏன் அவரை நம்பவில்லை ' எனக் கேட்பார். எனவே ' மனிதரிடமிருந்து வந்தது ' என்போமா? ″ என்று தங்களிடையே பேசிக் கொண்டிருந்தார்கள்.32 ஆனால் மக்கள் அனைவரும் யோவானை ஓர் இறைவாக்கினராகக் கருதியதால் அவர்கள் அவர்களுக்கு அஞ்சினார்கள்.33 எனவே, அவர்கள் இயேசுவிடம், ' எங்களுக்குத் தெரியாது ' என்று பதிலுரைத்தார்கள். இயேசுவும் அவர்களிடம், ' எந்த அதிகாரத்தால் இவற்றைச் செய்கிறேன் என்று நானும் உங்களுக்குச் கூறமாட்டேன் ' என்றார்.


அவர் தலைமையை ஏன் எனில் -இயேசு தன் பிறப்பில் அதிசயம், தன்னை யோவான் அடையாளம் காட்டினார், நான் தாவீது மகன் ஏதும் கூறாமல் விதண்டாவாதம் செய்தார்.
பாதிரியார்களும் மேற்கத்திய மழுப்பலாளரும் ஏசு ரோமன் ஆட்சியை எதிர்க்கவில்லை எனக் காட்டும் கதையில்- ஏசுவைப் பொருத்தவகையில் ரோமன் யூதரல்லாத அன்னியர் நாய்கள். சீசருக்கு உரியதை அவர்கள் காசுகளை அவர்களிடம் போடுங்கள். தேவனால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் யூதர்கள், தேர்ந்தெடுக்கப்பட்ட இடம் இஸ்ரேலை  தேவனால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களிடம் யூதர்கள் மீட்க வேண்டும். ரோமன் நாய்களை விரட்டுங்கள்.

சீசருக்கு வரி செலுத்துதல்
(மத் 22:15 - 22; லூக் 20:20 - 26)
13 பரிசேயர் இயேசுவை அவருடைய பேச்சில் சிக்கவைக்க ஏரோதியர் சிலரை அவரிடம் அனுப்பி வைத்தனர்.14 அவர்கள் அவரிடம் வந்து, ' போதகரே, நீர் உண்மையுள்ளவர்; ஆள் பார்த்துச் செயல்படாதவர்; எவரையும் பொருட்படுத்தாமல் கடவுளின் நெறியை உண்மைக்கு ஏற்பக் கற்பிப்பவர் என்பது எங்களுக்குத் தெரியும். சீசருக்கு வரிசெலுத்துவது முறையா, இல்லையா? நாங்கள் செலுத்தவா, வேண்டாமா? ' என்று கேட்டார்கள்.15 அவர் அவர்களுடைய வெளிவேடத்தைப் புரிந்து கொண்டு,'ஏன் என்னைச் சோதிக்கிறீர்கள்? என்னிடம் ஒரு தெனாரியம் கொண்டுவாருங்கள். நான் பார்க்க வேண்டும்' என்றார்.16 அவர்கள் அதைக் கொண்டு வந்தார்கள். இயேசு அவர்களிடம், ' இதில் பொறிக்கப்பட்டுள்ள உருவமும் எழுத்தும் யாருடையவை? ' என்று கேட்டார். அவர்கள் அவரிடம், ' சீசருடையவை ' என்றார்கள்.17 அதற்கு இயேசு அவர்களை நோக்கி, ' சீசருக்கு உரியவற்றைச் சீசருக்கும் கடவுளுக்கு உரியவற்றைக் கடவுளுக்கும் கொடுங்கள் ' என்றார். அவர்கள் அவரைக் குறித்து வியப்படைந்தார்கள்.
மத்தேயு 17:24 அவர்கள் கப்பர்நாகுமுக்கு வந்த போது கோவில் வரியாக இரண்டு திராக்மா தண்டுவோர் பேதுருவிடம் வந்து, 'உங்கள் போதகர் இரண்டு திராக்மா வரியைச் செலுத்துவதில்லையா?' என்று கேட்டனர்.25 அவர், ' ஆம், செலுத்துகிறார் ' என்றார். பின்பு வீட்டிற்குள் வந்து பேதுரு பேசத் தொடங்குவதற்கு முன்பே இயேசு, ' சீமோனே உனக்கு எப்படித் தோன்றுகிறது? இவ்வுலக அரசர்கள் சுங்க வரியையோ தலைவரியையோ யாரிடமிருந்து பெறுகின்றார்கள்? தங்களுடைய மக்களிடமிருந்தா? மற்றவரிடமிருந்தா?என்று கேட்டார்.26 ' மற்றவரிடமிருந்துதான் ' என்று பேதுரு பதிலளித்தார். இயேசு அவரிடம், ' அப்படியானால் குடிமக்கள் இதற்குக் கட்டுப்பட்டவரல்ல.27 ஆயினும் நாம் அவர்களுக்கு தடையாய் இருக்கக் கூடாது. எனவே நீ போய்க் கடலில் தூண்டில் போடு; முதலில் அகப்படும் மீனை எடுத்து அதன் வாயைத் திறந்து பார்த்தால் ஸ்தாத்தேர் நாணயத்தைக் காண்பாய். அதை எடுத்து உன் சார்பாகவும் என் சார்பாகவும் அவர்களிடம் செலுத்து' என்றார்.
அன்னியரான ரோமன்கள் தான் வெளியேற்றப்பட வேண்டும்.


ஏசு ஒரு யூத பாதிரி கேள்விக்கு ஏசு  தந்ததான பதில்-அவரை ஏற்றால் மட்டுமே வழி எல்லாம் கிடையாது.
முதன்மையான கட்டளை
(மத் 22:34 - 40; லூக் 10:25 - 28)
28 அவர்கள் வாதாடிக்கொண்டிருப்பதைக் கேட்டுக்கொண்டிருந்த 
மறைநூல் அறிஞருள் ஒருவர், இயேசு அவர்களுக்கு நன்கு பதில் கூறிக்கொண்டிருந்ததைக் கண்டு அவரை அணுகி வந்து, ' 
அனைத்திலும் முதன்மையான கட்டளை எது? ' என்று கேட்டார்.
29 அதற்கு இயேசு, இஸ்ரயேலே கேள். நம் ஆண்டவராகிய
 கடவுள் ஒருவரே ஆண்டவர்.30உன் முழு இதயத்தோடும் 
முழு உள்ளத்தோடும் முழுமனத்தோடும் முழு ஆற்றலோடும்
 உன் ஆண்டவராகிய கடவுளிடம் அன்பு கூர்வாயாக ' என்பது
 முதன்மையான கட்டளை.31 ' உன்மீது நீ அன்புகூர்வது
 போல் உனக்கு அடுத்திருப்பவர் மீதும் அன்புகூர்வாயாக '
 என்பது இரண்டாவது கட்டளை. இவற்றைவிட மேலான
 கட்டளை வேறு எதுவும் இல்லை 'என்றார்.32 அதற்கு
 மறைநூல் அறிஞர் அவரிடம், ' நன்று போதகரே,
 ' கடவுள் ஒருவரே; அவரைத் தவிர வேறு
 ஒரு கடவுள் இல்லை ' என்று நீர் கூறியது
 உண்மையே.33 அவரிடம் முழு இதயத்தோடும்
 முழு அறிவோடும் முழு ஆற்றலோடும்
 அன்பு செலுத்துவதும், தன்னிடம் அன்பு
கொள்வது போல் அடுத்திருப்பவரிடம் 
அன்பு செலுத்தவதும் எரிபலிகளையும்
 வேறுபலிகளையும்விட மேலானது ' என்று
 கூறினார்.34அவர் அறிவுத்திறனோடு
 பதிலளித்ததைக் கண்ட இயேசு அவரிடம்,
 ' நீர் இறையாட்சியினின்று தொலையில்
 இல்லை ' என்றார் அதன்பின் எவரும் அவரிடம்
 எதையும் கேட்கத் துணியவில்லை.
மத்தேயு 27: 45 நண்பகல் பன்னிரண்டு மணி
முதல் பிற்பகல் மூன்று மணிவரை 
நாடு முழுவதும் இருள் உண்டாயிற்று.
46 மூன்று மணியளவில் இயேசு,
 ஏலிஏலி லெமா சபக்தானி? ' அதாவது,
 என்இறைவாஎன் இறைவாஏன் 
என்னைக் கைவிட்டீர்என்று உரத்த குரலில் கத்தினார்.
50 இயேசு மீண்டும் உரத்த குரலில் கத்தி உயிர்விட்டார்.

ரோமன் ஆட்சியினரால் கைது செய்யப்பட்டு சிலுவையில் தன் நம்பிக்கை எல்லாம் போக கடைசியாய் புலம்பி உயிர் விட்டார்

இயேசு குடும்பம் அவரை சாதாரண 

மனிதனாகப் பார்த்தது. மரணம் வரை யூதராய்

 கர்த்தர் கைவிட மரணமடைந்தார்

3 comments:

  1. சரி...சரி...இப்ப என்னதான் சொல்லவர்றீங்க தம்பி..?????>ஏசு ஃப்ராடுன்னா....??????

    ReplyDelete
  2. ஏசுவின் பிறப்பில் நிறைவேறிய தீர்க்க தரிசனங்கள், தேவ தூதர்கள், ஏசு செய்த அதிசயங்கள் எல்லா வரலாற்றையும் விட்டு எழுதியுள்ள கதை இது.

    ReplyDelete
  3. வணக்கம் சகோ,

    நன்றாக தெளிவாக எல்லோருக்கும் உறைக்கும்படி எழுதியுள்ளீர்கள்,இருப்பினும் பழையதை நம்பியே பழக்கப்பட்டவர்கள் ஏற்க மறுப்பார்கள். காரணம் பாவம்,தண்டனை,மோட்சம்,உள்ளாசம், பரிகாரம் என்ற பெயரில் குறுக்கு வழியில் சுலபமாக பயனடைய(?)இவைகளை எதிர்பார்க்கும் சோம்பேரிகள்!!!

    இனியவன்...

    ReplyDelete

'சிங்கம்' போன்ற படங்கள் ஆபத்தான செய்தியை அனுப்புகின்றன: பாம்பே உயர்நீதிமன்ற நீதிபதி

   Films Like 'Singham' Send Dangerous Message: Bombay High Court Judge https://www.newspointapp.com/news/india/films-like-singham-s...