Tuesday, November 17, 2020

மோகன் சி.லாசரஸ் நாலுமாவடி திறப்பின் வாசல் சர்ச் கட்டிடம் விழுந்து இரண்டு பேர் மரணம்



 http://jamakaran.com/tam/2013/august/velivaraadha.htm

மோகன் சி.லாசரஸ் சர்ச் கட்டிடம் இடிந்து விழுந்து இருவர் மரணம்.

வெளிவராத சாட்சிகள்

 

“இயேசு விடுவிக்கிறார்” திறப்பின் வாசல் பிரமாண்ட ஜெப கட்டிடம் இடிந்துவிழுந்து இருவர் மரணம். சன் டிவியில் இது காட்டப்பட்டபோது பலர் தொலைபேசிமூலம் என்னோடு தொடர்புகொண்டபடி இருந்தார்கள். என்னிடம் இதை ஏன் விசாரிக்கிறீர்கள்? என்றேன். மரணவிவரம் அறிய நாலுமாவடி மோகன் சி.லாசரஸ்ஸிடமே கேட்டு அறிந்துக்கொள்ளலாமே என்னிடம் ஏன் கேட்கிறீர்கள்? என்றேன். நாங்கள் அவர் அலுவலகத்தோடு தொடர்புக்கொண்டு கேட்டோம். அப்படி ஒன்றும் விபத்து நிகழ்ந்தாகவோ, சிலர் மரித்ததாகவோ கூறுவது குறித்து எங்கள் அலுவலகத்துக்கு தகவல் இல்லை. எங்களுக்கு தெரியாது என்று கூறி போனை வைத்துவிட்டதாக அறிவித்தார்கள்.

அதன்பின் அந்த விபத்துப்பற்றி பல விவரங்கள் ஒன்றன்பின் ஒன்றாக ஜாமக்காரன் அலுவலகத்துக்கு வந்தது. அந்த பிரமாண்டமான கட்டிடத்தை மோகன் சி.லாசரஸ்ஸிடம் கட்ட சொன்ன இயேசுகிறிஸ்து 100 அடி உயரத்துக்கு கட்ட சொன்னதாகவும், அதன் மாதிரியைகூட இயேசு தனக்கு காட்டியதாகவும், (சகோ.DGS.தினகரன் கூறியதைப்போல் கூறுகிறார்) ஆனால் கட்டிட கலைஞர்கள் 100 அடி உயரத்துக்கு கட்டமுடியாது என்று கூறி 75 அடி உயரமாக குறைத்ததால்தான் இந்த விபத்து ஏற்பட்டு ஆட்கள் மரிக்க நேர்ந்ததாக கூறி சமாளிக்கிறார்கள். அதன் அர்த்தம் கர்த்தர் மோகன் சி.லாசரஸ்க்கு சொன்னபடி 100 அடி உயரத்துக்கு கட்டிடம் கட்டவில்லை என்பதாகும்.

https://devapriyaji.wordpress.com/2012/09/04/3970/

விபத்துக்கும் அதனால் ஏற்பட்ட மரணத்துக்கும், மற்றொரு காரணமாக அங்குள்ள மக்கள் கூறுவதாவது: ஜெப மண்டபத்தை சினிமா ஷூட்டிங்க்கு வாடகைக்கு விடப்பட்டதுதான் தேவ கோபத்துக்குமற்றொரு காரணம் என்கிறார்கள். திரு.சஞ்ஜய்ராம் அவர்களின் தயாரிப்பில் உருவான வீரமும்-ஈரமும்என்ற சினிமா படத்தின் காட்சிகள் முழுவதும் திறப்பின் வாசல் ஜெப மண்டபத்தில்தான் எடுக்கப்பட்டது என்று மிகவும் பரவலாக பேசப்படுகிறது. அது உண்மையா?.

  

அந்த பெரிய கட்டிடம் தமிழக அரசின் அனுமதி பெறாமல் கட்டப்பட்டதாக கூறப்படுகிறது. கட்டிடம் இடிந்துவிழுந்து மரணங்கள் சம்பவித்த உடன் பிரச்சனைகள் அரசாங்க பிரச்சனையாக மாறக்கூடிய அளவு சென்றதால் அரசாங்க அனுமதிக்காக இப்போது கடும்முயற்சியில் இறங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

கர்த்தர் சொன்னார் என்ற பெயரில் மோகன் சி.லாசரஸ்சும், சிலரும் சேர்ந்து சத்தியம் டிவிதொடங்கி விவரம் அறிவித்தவுடன் ஏராளமான ஏழை மக்கள், பணக்கார கிறிஸ்தவ வியாபாரிகள் ஆகியவர்கள் காணிக்கைகளை அள்ளிக்கொடுத்து அது தொடங்கப்பட்டது. ஆனால் பிரச்சனைவரும் என்பதாலேயோ? என்னவோ? வருமானவரி பிரச்சனைக்காக மோகன் சி.லாசரஸ் பெயரில் சத்தியம் டிவி தொடங்காமல் Mr.REX என்பவர் பெயரில் ஆரம்பிக்கப்பட்டு, இப்போது பெரிய பணக்கடன் பிரச்சனையில் அகப்பட்டு தற்சமயம் பெரிய வியாபாரிகளிடம் சத்தியம் டிவி அடகு வைக்கப்பட்டு இப்போதும் அந்த டிவி சேனல் ஓடிக்கொண்டிருப்பதாக கூறப்படுகிறது. கர்த்தர் சொன்னார் என்று கூறிய இவர் வார்த்தையால் ஏமாற்றப்பட்ட மக்களும், கிறிஸ்தவ வியாபாரிகளும் போட்ட காணிக்கை பணம் டிவி வியாபாரத்தில் எப்படி அடிப்படுகிறது பாருங்கள் என்கிறார். ஒருவர் இவ்விவரத்தை கூறியவர் இந்த ஸ்தாபனத்தோடு நெருங்கிய தொடர்புடைய ஒரு நபர் ஆவார்.

150665_325570104218338_2035137463_n.jpgPrayer Conference

சகோ.மோகன் சி.லாசரஸ் அவர்கள் பின்பற்றுவது மறைந்த இயேசு அழைக்கிறார் ஸ்தாபகர்சகோ.DGS.தினகரன் அவர்களைத்தான் என்பதை எல்லாரும் அறிவார்கள். அவரும் கர்த்தர் சொன்னார் ஏழைகளுக்காக காருண்யா கல்லூரியை தொடங்கு என்பதாகும். இப்படி இவர் அறிவித்தவுடன் அதோடுகூட இவர் அறிவித்த இளம்பங்காளர் திட்டத்தின்மூலம் ஏராளமானவர்கள் தங்கள் பிள்ளைகள் பெயரில் ஏராளமான பணம் செலுத்தினார்களே!. காரணம், எப்படியாவது நம் பிள்ளைகளுக்கு அந்த காருண்யாவில் ஒரு சீட் கிடைக்கும் என்று நம்பினார்களே. பிறகு என்ன ஆயிற்று? அது அத்தனையும்வியாபார தந்திர அறிவிப்பு என்று விளங்க ஆரம்பித்தது.

கர்த்தர் ஒருநாளும் பிள்ளைகள் பெயரில் காணிக்கை வாங்கி ஜெபிக்க சொல்லமாட்டார் ஜெபத்தை பணத்துக்காக விற்கவும் சொல்லமாட்டார் என்பதை நம் மக்கள் வழக்கம்போல் தாமதமாகத்தான் விளங்கிக்கொண்டார்கள்.

http://edwin1324.blogspot.in/2012_04_01_archive.html

அதன்பின் அந்த கல்லூரி ஏழை பிள்ளைகளுக்காகவே அல்ல என்பது இப்போது எல்லாரும் புரிந்துக்கொண்டார்கள், அதே வழியைத்தான் மோகன் சி.லாசரஸ் பின்பற்றி ஒவ்வொரு செயலுக்கும் கர்த்தர் சொன்னார் ஜெபமண்டபம் கட்டு என்று, கர்த்தர் சொன்னார் சத்தியம் டிவியை ஆரம்பி என்று, ஆனால் இப்போது இப்படிப்பட்ட பொய் சொன்னதால்தான் திறப்பின் வாசல் ஜெப மண்டபம் இடிந்து மரணங்கள் ஏற்பட்டு தண்டனையாக அவர்களுக்கு கர்த்தர் காண்பித்தார்.

சத்தியம் டிவியில் நஷ்டம், அது இப்போது அடகு வைக்கப்பட்டுள்ளது. கர்த்தர் பெயரை பொய்யாய் உபயோகித்தால் ஆசீர்வாதம் எப்படிவரும்?. இந்த சாட்சிகள் ஜீவனுள்ள இயேசு விடுவிக்கிறார் பத்திரிக்கையில் வெளிவராது.

திறப்பின் வாசல் ஜெப மண்டபம் இடிந்து மரித்தவர்கள் செய்தி சன் டிவியில் ஒளிப்பரப்பினார்கள். ஆனால் சத்தியத்தை சத்தியமாகவே அறிவிக்கும் என்று வார்த்தைக்கு வார்த்தை டிவியில் அறிவிக்கிற சத்தியம் டிவியில் இந்த மரணசெய்தி வெளிவரவில்லையே? ஏன் இது முக்கிய செய்தியில்லையா?. சத்தியம் எங்கே?திறப்பின் வாசலில் இப்போது தேவகோபம் அக்கினியாக இறங்கியுள்ளது. இப்படி நாலுமாவடியிலேயே பலர் பேசுகிறார்கள்.

இந்த பொய் தீர்க்கதரிசனங்களுக்கு துணை நின்ற அனைவருக்கும் இதில் காணிக்கை போட்டுதன்பங்கை அளித்தவர்களுக்கும் இந்த தேவகோப பிரதிபலிப்புகளால் அவர்கள் பாதிக்கப்படகூடாது என்று ஜெபிப்போம்.

http://jamakaran.com/tam/2013/august/velivaraadha.htm

No comments:

Post a Comment

'சிங்கம்' போன்ற படங்கள் ஆபத்தான செய்தியை அனுப்புகின்றன: பாம்பே உயர்நீதிமன்ற நீதிபதி

   Films Like 'Singham' Send Dangerous Message: Bombay High Court Judge https://www.newspointapp.com/news/india/films-like-singham-s...