Monday, November 16, 2020

வரலாற்று ஆதாரத்தோடான ஆய்வு கருத்துகள் கருத்து சுதந்திரம்; மத விரோதம் இல்லை

  


மத நம்பிக்கைகளால் கருத்து  சுதந்திரத்திற்கு சவால்  - உயர் நீதிமன்றம்

முகமது நபிகள் பற்றி முகநூலில் அவதூறு கருத்து பதிவிட்டதாக கைது செய்யப்பட்ட பா.ஜ.க. நிர்வாகி கல்யாணராமன் என்பவருக்கு ஜாமீன் வழங்கிய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

https://tamil.news18.com/news/tamil-nadu/bjp-kalyanaraman-gets-bail-114957.html

மத நம்பிக்கைகளை தொட்டு கருத்துக்கள் தெரிவிக்கும் போதெல்லாம், கருத்து சுதந்திரம் சவாலை எதிர்கொள்கிறது என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

முகமது நபிகள் பற்றி முகநூலில் அவதூறு கருத்து பதிவிட்டதாக கைது செய்யப்பட்ட பா.ஜ.க. நிர்வாகி கல்யாணராமன் என்பவருக்கு ஜாமின் வழங்கிய சென்னை உயர் நீதிமன்றம் இக்கருத்தை தெரிவித்துள்ளது.

கல்யாணராமன் தாக்கல் செய்த ஜாமின் மனுவை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், குறிப்பிட்ட ஒரு மதத்துக்கு எதிராக ஆதாரமற்ற அவதூறு கருத்துக்களை தெரிவிப்பது வேறு எனவும், மதத்தில் கடவுள்களாக வழிபடக் கூடியவர்களின் வாழ்க்கையை முழுமையாக படித்து, அதை பதிவிடுவது வேறு எனவும், அது அவதூறாகாது எனவும் தெரிவித்துள்ளார்.

கல்யாணராமன், நபிகள் நாயகத்தின் வாழ்க்கையை படித்து, தன் புரிதலை பதிவிட்டுள்ளாரே தவிர அவதூறு கருத்து எதையும் பதிவிடவில்லை எனக் கூறி, அவருக்கு ஜாமின் வழங்கி நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

‘Researched opinions on religion not derogatory’

No comments:

Post a Comment

உரிமை இல்லாத இடத்திற்கு இழப்பீடு கேட்க முடியாது - சென்னை உயர் நீதிமன்றம்

  உரிமை இல்லாத இடத்திற்கு இழப்பீடு கேட்க முடியாது - சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு! - PANDIYAN LODGE COMPENSATION புறம்போக்கு இடத்தில் கட்டப...