Tuesday, November 17, 2020

மோகன் சி லாசரஸ் குடும்ப சத்தியம் டிவி 27 ஊழியர்கள் கரோனா பாதிக்கப்பட்டு மருத்துவ கிச்சையால் குணம்

 சென்னையில் சத்தியம் டிவி அலுவலகம் மூடல் – 27 பேருக்கு கொரோனா பாதிப்பு

சென்னையில் இருந்து செயல்பட்டு வரும் சத்தியம் டிவியில் பணியாற்றும் ஊழியர்கள் 27 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதையடுத்து, சத்தியம் செய்தித் தொலைக்காட்சி தற்காலிகமாக ஒளிபரப்பை நிறுத்திவைத்துள்ளது.

சென்னை, ஏப்ரல்-22



சென்னையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு சத்தியம் தொலைக்காட்சி சேனலில் பணியாற்றும் இரண்டு செய்தியாளர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து உடனடியாக பாதிப்பு ஏற்பட்ட குறிப்பிட்ட சேனலில் பணியாற்றும் அனைத்து ஊழியர்களுக்கும் (95 பேருக்கும்) கொரோனா வைரஸ் பரிசோதனை நடத்தப்பட்டது. இதில் 95 பேரில் 27 பேருக்கு கொரோனா வைரஸ் பாசிட்டிவ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அந்த சேனலில் தற்போது தற்காலிமாக லைவ் ஒளிபரப்பு நிறுத்தப்பட்டுள்ளது. சத்தியம் தொலைக்காட்சியில் தற்போது பதிவு செய்யப்பட்ட நிகழ்ச்சிகள் ஒளிபரப்பப்படுகின்றன

இதனிடையே, கொரோனா நோய்த் தொற்று ஒழிப்பில் அரசுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்கும் வகையில் ஒளிபரப்பை நிறுத்திவைத்துள்ளதாகவும் விரைவில் தொடங்கும் என்றும் வீடியோ செய்தியொன்றில் சத்தியம் தொலைக்காட்சி மேலாண் இயக்குநர் ஐசக் லிவிங்ஸ்டன் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து 27 ஊழியர்களின் குடும்பத்தினர் , அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என அனைவரையும் தொடர்பு தடமறிதல் முறை மூலம் உடனடியாக தீவிரமாக தேடி தனிமைப்படுத்தும் முயற்சியில் சென்னை மாநகராட்சி அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். தமிழகத்தில் ஒரே நேரத்தில் 27 ஊடகவியாளர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருப்பது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

https://www.themainnews.com/article/14750

https://indianexpress.com/article/cities/chennai/covid-19-at-least-25-people-of-tamil-news-channel-test-positive-in-chennai-6372444/

No comments:

Post a Comment

‘France earns $400-$500B annually from Africa as colonial tax’

  Zahid Oruj: ‘France earns $400-$500B annually from Africa as colonial tax’ Foreign policy April 18, 2024   13:18 https://report.az/en/fore...