Tuesday, November 17, 2020

கிறிஸ்தவ கல்வி நிறுவனம் நர்சிங் கல்லூரி என்ற பெயரில் ஆதரவற்ற பெண்களைக் குறி வைத்து மதமாற்றம், விபச்சாரத்துக்கு தள்ளுகிறதாம்

 விருத்தாசலத்தில் 'கிரேஸ் கம்யூனிட்டி காலேஜ்'  நர்சிங் கல்லூரி 




பயிற்சி மாணவிகள் மத மாற்றம் - வெளிநாட்டுக்கு கடத்தப்படும் அதிர்ச்சி குற்றச்சாட்டு.! By Shiva V | 

https://kathir.news/tamil-nadu/shocking-allegation-that-religious-conversion-at-a-nursing/cid1761321.htm


விருத்தாசலத்தில் நர்சிங் கல்லூரி என்ற பெயரில் இயங்கும் ஒரு கிறிஸ்தவ கல்வி நிறுவனம் ஆதரவற்ற பெண்களைக் குறி வைத்து மதமாற்றம், விபச்சாரம் உள்ளிட்ட சட்ட விரோத செயல்பாடுகளில் ஈடுபடுவதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகி உள்ளது. கடலூரைச் சேர்ந்த செந்தில் குமார்- பழனியம்மாள் தம்பதியின் மகள் கீர்த்திகா.

பன்னிரண்டாம் வகுப்பு முடித்து விட்டு டிப்ளமோ படித்த இவர் விருப்பமில்லாமல் படிப்பை பாதியிலேயே விட்டு விட்டதால் விருத்தாசலத்தில் 'கிரேஸ் கம்யூனிட்டி காலேஜ்' என்ற பெயரில் இயங்கும் கல்வி நிறுவனத்தில் சேர்த்திருக்கிறார்கள். அங்கே நர்சிங் உதவியாளராக பயிற்சி பெற்ற கீர்த்திகா பயிற்சி முடிந்த பின்னர் அங்கேயே வேலைக்கு சேர்ந்திருக்கிறார்.

 முதல் ஒரு வருடம் எல்லாம் நன்றாகத் தான் இருந்திருக்கிறது. அதன் பின்னர் அவரது நடவடிக்கைகளில் மாற்றம் ஏற்பட்டதோடு "இயேசு தான் நம் கடவுள்" என்றெல்லாம் வினோதமாக பேச ஆரம்பித்திருக்கிறார். இது பற்றி கீர்த்திகாவின் பெற்றோர் கல்வி நிறுவனத்தின் உரிமையாளர் ஆராம் அப்பாவு என்பவரிடம் சென்று விசாரித்து இருக்கிறார்கள்.

முன்னர் கல்வி நிறுவனத்திலேயே வேலை போட்டுத் தருவதாகக் கூறி கீர்த்திகாவை வேலைக்கு அனுப்ப அப்பாவு அவரது பெற்றோரை சம்மதிக்க வைத்திருக்கிறார். இப்போது "கீர்த்திகா கடவுளின் குழந்தை. அவளை கர்த்தர் ஆராதிப்பார். உங்களுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை" என்று கூறியதாக கூறப்படுகிறது.

எனினும் திருப்தி அடையாத கிருத்திகாவின் பெற்றோர் திருமணம் ஆனால் எல்லாம் சரியாகி விடும் என்ற நம்பிக்கையில் உறவினர் ஆனந்தராஜ் என்பவருக்கு திருமணம் செய்து வைத்துள்ளனர். திருமணத்துக்கு ஆராம் அப்பாவு அவரது உதவியாளர் கோமதி என்ற பெண்ணுடன் வந்து ஆசீர்வதித்து பின்னர் வீட்டுக்கு அழைத்து இரண்டு நாட்கள் விருந்தெல்லாம் வைத்திருக்கிறார்.

இந்நிலையில் கடந்த அக்டோபர் 19ஆம் தேதி வேலைக்குப் போன கிருத்திகா வீடு திரும்பவில்லை என்று கூறப்படுகிறது. அவருடைய செல்போனும் ஸ்விட்ச் ஆஃப் ஆக இருந்த நிலையில் பெண்ணைக் காணாத கவலையில் பெற்றோர் கல்வி நிறுவனத்தில் சென்று கேட்ட போது கிருத்திகா அங்கு வரவே இல்லை என்று சாதித்திருக்கின்றனர். 

ஆனால் கிருத்திகாவின் பெற்றோரைப் பார்த்து பரிதாபப்பட்டு சிலர் அவர்களைத் தனிமையில் சந்தித்து ஆராம் அப்பாவு, கோமதி இருவரும் கிருத்திகாவை மூளைச்சலவை செய்து மதம் மாற்றி சென்னைக்கு அனுப்பி வைத்திருப்பதாகக் கூறி இருக்கின்றனர்.

அவர்கள் கோமதியிடம் சென்று இப்படி எங்கள் மகள் வாழ்க்கையை நாசமாக்கி விட்டீர்களே என்று முறையிட்ட போது, "உங்க பொண்ணு ஓடிப் போனதுக்கு நாங்க எப்படி பொறுப்பாக முடியும்" என்று திமிராக பதிலளித்திருக்கிறார். பின்னர் கெஞ்சிக் கேட்ட போது, கிருத்திகா 'தங்கள் மதத்துக்கு' மாறி விட்டதாகவும் பாதிரியாரிடம் ஆசி வாங்க சென்னை சென்றிருப்பதாகவும் கூறி இருக்கிறார்.
 

இதன் பின்னர் கிருத்திகாவின் கணவர் ஆனந்தராஜ் காவல் துறையில் புகார் அளித்து அவர்கள் கிருத்திகாவை மீட்டுக் கொடுத்திருக்கின்றனர். பெண்ணின் வாழ்க்கை விஷயம் என்பதால் கிருத்திகா தரப்பு வழக்கு பதியாமல் விட்டுவிட்டது.

ஆனால் அதன் பின்னரும் போனில் பேசிப் பேசி கோமதியும் அப்பாவுவும் கிருத்திகாவின் மனதை ட்கலைத்ததன் விளைவாக நவம்பர் 5ஆம் தேதி கிருத்திகா மீண்டும் வீட்டை விட்டு வெளியேறி விட்டதாக அவரது பெற்றோர் வேதனையுடன் தெரிவித்துள்ளனர். 

 மகளை மீட்பதற்காக கிருத்திகாவின் பெற்றோர் கிரேஸ் கம்யூனிட்டி காலேஜ் பற்றி விசாரித்த போது தான் அவர்கள் கல்லூரி என்ற பெயரில் மோசடியில் ஈடுபட்டு வருவது தெரிய வந்துள்ளது. மேலும் அது ஒரு கல்லூரி அல்ல‌ என்பதும் வெறும் பயிற்சி நிறுவனம் தான் என்பதும் தெரிய வந்துள்ளது. முதலில் இங்கு சேரும் ஆதரவள்ற, ஏழ்மையான நிலையில் இருக்கும் பெண்களைக் குறிவைத்து மூளைச்சலவை செய்து மதம் மாற்றுவார்கள் என்று கூறப்படுகிறது.

பின்னர் நர்சிங் படிப்புக்கு வெளிநாட்டில் தான்‌ நல்ல மதிப்பு, நிறைய சம்பாதிக்கலாம் என்று ஆசை காட்டி சென்னை, பெங்களூரு என்று அழைத்துச் சென்று பாதிரியார்களுக்கு விருந்தாக்குவதாகவும் விபச்சாரக் கும்பலிடம் விற்பதாகவும் குற்றச்சாட்டுகள் வைக்கப்படுகின்றன.

கீர்த்திகா மண்டியிட்டு பிரார்த்தனை செய்வது போன்ற புகைப்படத்தை பெத்தேல் சமூக ஆலயம் என்ற தங்களது சர்ச்சின் முகநூல் பக்கத்தில் பதிவிட்டு பின்னர் நீக்கியுள்ளனர். கிருத்திகா மேஜர் என்பதால் அவர் விருப்பப்படி முடிவெடுக்க அவருக்கு உரிமை இருக்கிறது என்று கூறி பயிற்சி நிறுவனம் பிரச்சினையை சமாளிக்க முயல்வதாக கூறப்படுகிறது.

வழக்கமாக பாதிக்கப்பட்ட பெண்களின் குடும்பத்தாரிடம்‌ பேரம் பேசியோ, மிரட்டியோ பணிய வைப்பது வழக்கம் என்றும், கிருத்திகா குடும்பத்தார் எதற்கும் மசியாததால் விஷயம் வெளிச்சத்துக்கு வந்ததாகவும் கூறப்படுகிறது.

No comments:

Post a Comment

கீழடி பொதுக் காலத்தின் ஆரம்ப ஆண்டுகளில் வியாபாரிகளின் சிறிய குடியிருப்பாக இருந்திருக்கலாம்

  Keeladi! Vaigai is a small river, rain dependent. It could not have sustained a large community in that age. It could not have had the re...