Tuesday, November 17, 2020

அனாதை குழந்தை இல்லம் பெயரில் கிறிஸ்துவ மோசடிகள்,பாலியல் வன்கொடுமைகள்

 

வருஷத்துக்கு 1000 கோடி! கோடிகளில் சம்பாதிக்கும் குழந்தை காப்பகங்கள்!

https://kathir.news/news/childrens-archives-receive-6-lakh-per-child-and-1000-crore/cid1767330.htm?fbclid=IwAR0NAx7A6oyrczz8rCm6s_JrnlfdKvP2h7aQPmeS3kjv5ZrWW7D43-li1Dk
 | 
தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையத்தின் அறிக்கையின்படி குழந்தைகளை பராமரிக்கும் 600க்கும் மேற்பட்ட தன்னார்வ நிறுவனங்கள் 2018-19 ஆண்டில் ஒரு குழந்தையை பராமரிப்பதற்காக நன்கொடையாக ₹ 2.12 லட்சம் முதல் ₹ 6.60 லட்சம் ரூபாய் வரை நன்கொடையாக பெற்றுள்ளது என்று FCRA உரிமம் பெற்ற என்.ஜி.ஓக்களின் தரவுகளில் இருந்து தெரியவந்துள்ளது.

  தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா மற்றும் தெலுங்கானா ஆகிய 5 மாநிலங்களில் உள்ள 638 தன்னார்வ தொண்டு நிறுவனங்களில் தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் நடத்திய ஆய்வின்படி 2018-19 ஆம் ஆண்டில்  மொத்தம் 28,900 குழந்தைகள் உள்ளதாக தெரியவந்துள்ளது.

 ஏன் இந்த ஐந்து மாநிலங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன என்பது பற்றி தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையத்தின் தலைவர் பிரியங்க் கனூங்கோ கூறுகையில், "2018-19 ஆம் ஆண்டு கணக்கின் படி மொத்தம் 7,163 குழந்தைகளை பராமரிக்கும் காப்பகங்கள் இருப்பதாகவும் அவற்றில் 2.56 லட்சம் குழந்தைகள் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. இவற்றில் 1.63 லட்சத்துக்கும் மேற்பட்ட குழந்தைகள் இந்த ஐந்து தென் மாநிலங்களில் உள்ளனர்.


முதலில் இந்த 5 மாநிலங்களில் வெளிநாட்டு நிதி எவ்வாறு பயன்படுத்தப்படுகிறது என்று கண்டறிய தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு அமைப்பு முடிவு செய்துள்ளது" என்று கூறினார். 

இந்த ஆய்வினை இந்த ஐந்து மாநிலங்களில் மேலும் விரிவுபடுத்த திட்டமிட்டு உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். "நாங்கள் யரையும் குற்றம் சாட்டவில்லை. ஆனால் இந்த குழந்தைகள் பராமரிப்பு அமைப்புகள் சிறார் நீதிச் சட்டத்தின் கீழ் இருப்பதால் குழந்தைகளின் பெயரில் பெறப்படும் நிதி குழந்தைகளின் நலனுக்காகவே பயன்படுத்தப்பட வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்" என்றும் அவர் விளக்கம் அளித்துள்ளார்.

  2018-19 ஆம் ஆண்டில் அகாடமி ஆப் மேனேஜ்மென்ட் ஸ்டடீஸ் அமைப்பு தணிக்கை செய்த குழந்தைகள் காப்பகங்களை இயக்கும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களைத் தேர்ந்தெடுத்து பகுப்பாய்வு செய்யப்பட்டுள்ளது. 2018-19 ஆம் ஆண்டிற்கான இந்த தரவுகளை உள்துறை அமைச்சகத்தின் இணையதளத்தில் (www.fcraonline.nic.in) கிடைக்கும் FCRA தரவுகளில் இருந்து எடுக்கப்பட்டுள்ளன. 2 முதல் 6 லட்சம் ரூபாய் வரை நிதி பெறப்பட்ட போதும் ஆண்டுக்கு ஒரு குழந்தைக்கான செலவு சுமார் 60,000 ரூபாயாக மட்டுமே இருப்பது இந்த ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
 

முன்னர் நடந்த ஆய்வின் போது ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட 7, 163 காப்பகங்களில் 28.5% காப்பகங்கள் பதிவு செய்யப்படவில்லை என்பதும், 38% காப்பகங்களில் தங்களுக்கு நடக்கும் கொடுமைகளைச் பற்றி குழந்தைகள் புகார் செய்ய எந்த நடைமுறையும் இல்லை என்றும், பல காப்பகங்கள் உரிய பணியாளர்கள் இன்றி இயங்கி வந்ததும் கண்டறியப்பட்டது. இவை அனைத்துமே சிறார் நீதிச் சட்டத்துக்குப் புறம்பானவை என்பது குறிப்பிடத்தக்கது.

எனவே இத்தகைய காப்பகங்கள் எவ்வளவு நிதி பெறுகின்றன, அவற்றை எவ்வாறு பயன்படுத்துகின்றன என்பது குறித்து ஆய்வு செய்ய தேசிய குழந்தைகள் உரிமைகள் ஆணையம் முடிவு செய்தது. இவ்வாறு செய்யப்பட்ட சோதனையில் தான் வெளிநாட்டு நிதி பெறும் காப்பகங்கள் ஆண்டுக்கு ஒரு குழந்தைக்கு 2 முதல் 6 லட்சம் ரூபாய் வீதம் நன்கொடை பெற்றது தெரிய வந்துள்ளது.

அரசின் குழந்தைகள் பாதுகாப்பு திட்டம் ஒரு ஆண்டுக்கு ஒரு குழந்தையின் தேவைகளை பூர்த்தி செய்ய 60,000 ரூபாய் தேவைப்படும் என்று நிர்ணயித்திருக்கும் இவ்வளவு நிதியை குழந்தைகளைக் காட்டி பெற்றதோடு அல்லாமல் தேவைக்கு அதிகமாக நிதி பெற்றும் குழந்தைகளின் அடிப்படைத் தேவைகள், உரிமைகளைப் பூர்த்தி செய்யவில்லை என்றால் இந்த அமைப்புகள் நிதியை என்ன செய்தன என்ற கேள்வி எழுகிறது.


No comments:

Post a Comment