பாதிரி ஜகத் கஸ்பர் ராஜ்- எனும் மரியா பவுலியன் கஸ்பர்ராஜ், பல வர்த்தக கம்பெனி இயக்குனரா? இவருக்கு வருமானவரி உண்டா??
இந்த கோவிட் கொரானா தொத்து வியாதி காலத்தில் 2020ல் புதிதாக இரண்டு கம்பெனி துவங்கியுள்ளாராம். அறக்கட்டளை எனப் பலகோடி மோசடி வேறாம்
SIXTHRISE TECHNOLOGIES PRIVATE LIMITED - U72900TN2020PTC138818 20-10-2020
பாதிரி ஜகத் காஸ்பர் எனும் மரியா பவுலியன் கஸ்பர்ராஜ் மீது அமெரிக்காவின் கிரிமினல் வழக்கு இவர் பெயரில் உள்ளது
https://dockets.justia.com/docket/circuit-courts/ca2/12-1049
2G வழக்கின் போது சிபிஐ இவருடைய சர்ச் குடியிருப்பு, அலுவுலங்களிலும் சோதனை செய்தன.
“நிதி வசூலுக்காகவே புதுப்புது திட்டங்கள்!”-ஆ.விஜயானந்த்
அறக்கட்டளை எனப் பலகோடி மோசடி வேறாம்
பாதிரியார் ஜெகத் கஸ்பரையும் சர்ச்சைகளையும் பிரிக்க முடியாது. ‘குட் ஃபுட் அலையன்ஸ்’ என்ற பெயரில் சமீபத்தில் ஜெகத் கஸ்பர் தொடங்கியிருக்கும் புதுத் திட்டமும் பலத்த சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது.
`தமிழ்நாட்டில் ஐந்து வருடங்களில், 5,000 ஏக்கரில் பசுமை வேளாண்மை செய்வோம்; இயற்கைமுறையில் விளைவிக்கப்படும் காய்கறிகளைச் சந்தைப்படுத்தி, புதிய பிராண்ட் மூலம் உலக அளவில் கொண்டு செல்வோம். இதில் முதலீடு செய்பவர்களுக்கு ஒரு வருடத்துக்குப் பிறகு அதிக அளவில் வருமானம் கிடைக்கும்’ என்று அந்தத் திட்டம் குறித்த அறிவிப்பில் சொல்லப்பட்டிருக்கிறது.
இது குறித்து நம்மிடம் பேசிய புலம்பெயர் தமிழர் ஒருவர், ‘‘கஸ்பரின் இந்தப் புதிய திட்டம் குறித்து, இதற்கான வாட்ஸ்அப் குழுவில் பெரும் விவாதமே நடந்தது. `ஒரே வருடத்தில் லாபம் என்பதெல்லாம் சாத்தியமில்லை’ எனக் குழுவில் பதிந்தார் ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரியான கோ.பாலச்சந்திரன். அவருக்கு இதுவரை கஸ்பர் எந்த பதிலும் சொல்லவில்லை. பாலச்சந்திரனைத் தொடர்புகொண்டால் அதிர்ச்சிக்குரிய பல தகவல்கள் தெரியவரலாம்’’ என்றார்.
மேற்குவங்க அரசில் கூடுதல் தலைமைச் செயலாளராக இருந்தவர்; ‘இஸ்ரோ’வில் பணிபுரிந்தபோது, ஆன்ட்ரிக்ஸ்-தேவாஸ் ஒப்பந்த ஊழலை வெளிக்கொண்டு வந்தவர்களில் முக்கியமானவர் கோ.பாலச்சந்திரன். அவரைத் தொடர்புகொண்டோம்...
‘‘கடந்த 2018-ம் ஆண்டு, நண்பர் ஒருவர் மூலமாக கஸ்பர் எனக்கு அறிமுகமானார். தமிழ்ப் பணியாற்றிவருவதாகச் சொன்னவர், சென்னையில் அவர் நடத்தும் சில கூட்டங்களில் கலந்துகொள்ள அழைத்தார். `ரைஸ்’ என்ற அமைப்பின் மூலமாக நடத்தப்பட்ட `அனைத்துலகத் தமிழ் தொழில்முனைவோர் மற்றும் திறனாளர்கள் மாநாட்டு’க்கு என்னை வற்புறுத்தி இணைத் தலைவராக்கினார். அதில், ஸ்டால் வைப்பவர்களிடம் பணம் வசூல் செய்ததிலும், கேட்டரிங்காரர்களுக்கு பணம் கொடுத்ததிலும் சில முறைகேடுகள் இருந்ததைத் தெரிந்துகொண்டேன். பண விஷயத்தில் கஸ்பர் தவறாக நடந்துகொள்வது தெரிந்தது. கணக்கு வழக்குகளைக் கேட்டதால், `நீங்கள் வகித்த இணைத் தலைவர் என்பது ஒரு கௌரவப் பதவி. உங்களுக்குக் கணக்குவழக்குகளைக் காட்ட வேண்டிய அவசியமில்லை’ என்றார்.
அதையடுத்து, கஸ்பரால் தொடங்கி வைக்கப்பட்ட... நான் பங்கெடுத்துக்கொண்ட... சில விஷயங்களை ஆராயத் தொடங்கினேன். ‘ரீகிரீன் சென்னை’, ‘பனை தேசம்’ என்று பெயரிட்டு, புயலால் வீழ்ந்த மரங்களுக்கு சென்னையில் மாற்று மரங்கள் நடப்போவதாகவும், ஒரு கோடி பனை மரங்களை தமிழகத்தில் பல இடங்களில் நடப்போவதாகவும் சொல்லி, லட்சக்கணக்கான ரூபாயை வசூல் செய்தார் கஸ்பர். இந்தத் திட்டங்களுக்காக நான் ஒன்றே கால் லட்ச ரூபாய் வரை கொடுத்திருக்கிறேன். எனவே, `எந்தெந்த இடங்களில் பனை விதைகளை நட்டிருக்கிறீர்கள்?’ என்று கேட்டேன். அதற்கு கஸ்பர், `நீங்கள் கொடுத்த ஒன்றே கால் லட்ச ரூபாய்க்கான கணக்கை வேண்டுமானால் கேட்கலாம். மற்ற விவரங்களை உங்களுக்குச் சொல்ல வேண்டியதில்லை’ என்றார். `பொதுவெளியில் ஒரு குறிக்கோளுக்கென பணம் வசூலித்தால், அதைப் பற்றி எவரும் கேள்வி கேட்க முடியும்’ என்றேன். இந்தக் கேள்விகளை வாட்ஸ்அப் குழுவிலும் நான் கேட்பேன் என்ற அச்சத்தாலோ என்னவோ, அந்தக் குழுவையே கலைத்துவிட்டார். அதன் பிறகு, நானும் அவரும் பொதுவாக இருக்கும் வாட்ஸ்அப் குழுக்களில், `புதிதாக நிதி வசூல் செய்யப்போகிறேன்’ எனக் கிளம்புவார். நான் கேள்வி எழுப்புவேன். ‘குட் ஃபுட் அலையன்ஸ்’ விஷயத்திலும் இதுதான் நடந்தது.’’
``சரி... ‘குட் ஃபுட் அலையன்ஸ்’ என்பது நல்ல திட்டம்தானே?’’ எனக் கேட்டோம்.
‘‘திட்டம் சரிதான். அதற்கான முறையான செயல்திட்டங்கள் கஸ்பரிடம் இருக்கின்றனவா எனப் பார்க்க வேண்டும். `இந்த கம்பெனிக்காக 5 கோடி ரூபாயை துபாய்வாழ் மற்றும் நண்பர்களிடம் வசூலித்துவிட்டேன். மேலும், பல கோடிகளை வசூலித்து விரிவுபடுத்த வேண்டும்’ என கஸ்பர் கூறியிருந்தார். இதைப் பற்றி ஆராய்ந்து அறிக்கை கொடுக்குமாறு வல்லுநர் ஒருவரிடம் கேட்டேன். அவர் கொடுத்த அறிக்கையில், `இந்தத் திட்டத்தின்படி பெரு நிறுவனங்களோடு போட்டி போட்டு வியாபாரம் செய்வது எளிதானதல்ல. பிராண்டை மக்களிடம் கொண்டு செல்வதற்கே பல கோடிகள் செலவழிக்க வேண்டும்’ எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. அந்த அறிக்கையை அந்த வாட்ஸ்அப் குழுவில் பதிவிட்டு, `மாற்றுக் கருத்து இருந்தால் அதை கஸ்பர் முன்வைக்கட்டும்’ என்றேன். அவர் பதில் சொல்லவில்லை.
இதையெல்லாம் பார்க்கும்போது, எதையாவது சொல்லி நிதியை வாங்கிவிடுவது, அதன் பிறகு அந்த நிதிக்கு முறையான கணக்குவழக்குகளைக் காட்டாமல் இருப்பது என்பதை கஸ்பர் வாடிக்கையாக வைத்திருக்கிறார் என்பது தெளிவாகிறது. அவர் வசூலிக்கும் பணத்துக்கு யாரும் கணக்கு கேட்டால் அவருக்குப் பிடிப்பதில்லை. எனவே, கஸ்பர் அறிமுகப்படுத்தும் திட்டங்களின் முழு விவரங்களையும் தெரிந்த பின்னர், அவற்றில் முதலீடுகள் செய்வது குறித்து உலகத் தமிழர்கள் யோசிப்பது நல்லது’’ என்றார்.
ஜெகத் கஸ்பரைத் தொடர்புகொண்டோம். ``இது குறித்துப் பேச நான் தயாரில்லை. 20 வருடங்களில் எனக்கும் ஜூனியர் விகடனுக்குமான உறவு என்ன என்பது எனக்குத் தெரியும். நீங்கள் யார் என்பதும் எனக்குத் தெரியும். நான் யார் என்பதும் உங்களுக்குத் தெரியும். பாலச்சந்திரன் சொல்வதையே எழுதிக்கொள்ளுங்கள். உங்களோடு எந்த உரையாடலையும் வைத்துக்கொள்ள விரும்பவில்லை. நீங்களும் அவரும் இணைந்து செய்கிற சதியாகத்தான் இதை நான் பார்க்கிறேன். நான் அப்படித்தான் சொல்வேன்’’ என ஆவேசமாகப் பேசிவிட்டு இணைப்பைத் துண்டித்தார்.
தன்மீது வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பாக, பாதிரியார் ஜெகத் கஸ்பர் விளக்கம் அளித்தால் அதை உரிய பரிசீலனைக்குப் பிறகு பிரசுரிக்கவும் தயாராக இருக்கிறோம்.
No comments:
Post a Comment