சென்னை-திருச்சி ஜி.எஸ்.டி தேசிய நெடுஞ்சாலையில் செங்கல்பட்டிலிருந்து சுமார் 28 கி.மீ. தொலைவில் ஏரி காத்த ராமர் கோவில் உள்ளது. மகிழ மரங்கள் (வகுளம் என்றும் குறிப்பிடப்படும்) அதிகம் இருந்த காரணத்தால் ‘வகுளாரண்ய ஷேத்திரம்’ என்றும் அதற்கு பெயர் உண்டு. அந்தப் பகுதியை ஆட்சிபுரிந்த மதுராந்தக சோழன் நினைவாக அந்தப்பகுதி ‘மதுராந்தகம்’ என்றும், கல்வெட்டுக்களில் ‘மதுராந்தக சதுர்வேதி மங்களம்’ என்றும் குறிப்பிடப்படுகிறது.
சீதையை மீட்க செல்லும் வழியில், ராமபிரான் விபண்டக மகரிஷி ஆசிரமத்தில் தங்கி, அவர் உபசரிப்பை ஏற்றுக்கொண்டு, அவரது வேண்டுதலுக்கேற்ப அயோத்தி திரும்பும் வழியில் சீதையுடன் திருமண கோலத்தில் இங்கு காட்சி தந்தார். அதன் அடிப்படையில் புஷ்பக விமானத்துடன் கோதண்ட ராமர் கோவில் அங்கே அமைக்கப்பட்டது. விபண்டக முனிவர் கோயில் கருவறையிலேயே உள்ளார்.
சுவாமி சன்னதிக்கு வலப்புறம் ஜனகவல்லித் தாயார் சன்னதி உள்ளது. திருமழிசை ஆழ்வார் மற்றும் இராமனுஜர் இக்கோயில் தலத்திற்கு தொடர்புடையவர்கள்.
செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியராக இருந்தா ஆங்கிலேய கிறிஸ்துவ மிஷநரி கர்னல் லயோனல் ப்ளேஸ் சாட்சி (Colonel Lionel Blaze1795 – 1799) கட்டித் தந்ததே இந்த ஜனகவல்லித் தாயார் சன்னதி.
கிறிஸ்துவ பைபிள் கதை வணக்க மூட நம்பிக்கையாளரானவர் உள்ளூர் மக்கள் ராமர் வணக்கத்தை - சிலை வணக்கம் என மிகவும் கேலி செய்வார், அவர் பதவியில் இருந்த போது அவர் ஆட்சியின் போது இரண்டு முறை வெள்ளம் வர சிறு உடைப்புகள் ஏரிக்கு வர 1898ல் அவர் ஏரியை பலம் செய்யும் பணியை துவங்கினார், அதற்கு கோவிலை சேர்ந்த சில பல தூண்களைக் கேட்க, கோவிலினுடையது இறைவன்க்கு ஆனதை தர இயலாது என்றிட, மிகவும் கேலி பேசி லயோனெல் ப்ளேஸ் மாற்று வழி தேடும் நிலையில் பெரும் மழை வந்து மாவட்டத்தின் பல சிறிய ஏரி உடைய மத்ராந்தகம் ஏரியும் நிராம்பியது, மேலும் நீர் வந்தால் கரை உடையும் மிகப் பெரும் இழப்பு வரும், ஏன் எனில் மதுராந்தகம் ஏரி ஒரு சிறு கடல் போன்றது 34 சதுர கிமீ பரப்பு கொண்டது, ஊர் பெரியவர்களை கலந்திட இராமர் மட்டுமே தங்கள் பாதுகாப்பு அவர் காப்பார் என மக்கள் கூற அந்த கிறிஸ்துவ கர்னல் லயோனல் ப்ளேஸ் மனமுருக வேண்டினார்.
அன்று இரவு முழுவதும் மழை பெரிதும் தொடர்ந்தது, நிச்சையமாக கரை உடைந்திருக்கும் என அதிகாலை சென்று பார்க்க அத்தனை நீரையும் வாங்கியும் ஏரிக்கரை தாங்கி நின்றது, வானில் மின்னல் மின்னச் மிஷநரி கிறிஸ்துவ ஆட்சியர் கர்னல் லயோனல் ப்ளேஸ் காணுகையில் ஏரிக்கரையில் இரண்டு வாலிபர்கள் வில் அம்போடு இருபக்கமாய் நடந்து ஏரியைக் காத்தனராம். சிறிது நேரம் கண்டவர், அது இறைவன் ராமரும் தம்பி லக்ஷ்மணருமே என உணர்ந்தார்.
அந்த கிறிஸ்துவ ஆட்சியாளர் இறைவன் ராமருக்கு நன்றி சொல்ல ஜனகவல்லித் தாயார் சன்னதியை கட்டி தந்தார். அது பற்றிய கல்வெட்டு இன்றும் உள்ளது.
No comments:
Post a Comment