Wednesday, June 30, 2021

செயின்ட் ஜார்ஜ் உயர்நிலை பள்ளி ஆசிரியர் பாலியல் புகார் - நிர்வாகம்


சென்னை பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ளது செயின்ட் ஜார்ஜ் பள்ளி. இங்கு படித்த மாணவிகளுக்கு உடற்கல்வி ஆசிரியர் ஜே.எபி.தாஸ் பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்தது. அந்தப் புகார் மீதான விசாரணையை தமிழ்நாடு குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் மேற்கொண்டு வருகிறது.



ஆசிரியர் மீதான பாலியல் குற்றச்சாட்டு: செயின்ட் ஜார்ஜ் பள்ளி நிர்வாகிகள் ஆணையம் முன்பு ஆஜராகவில்லை

https://www.hindutamil.in/news/tamilnadu/679722-st-george-school-teacher-1.html

முன்னதாக, சென்னை ஷெனாய் நகரில் உள்ள செயின்ட் ஜார்ஜ் உயர்நிலை பள்ளியின் மாணவிகளுக்கு உடற்கல்வி ஆசிரியர் ஜே.எபி.தாஸ் பாலியல் தொல்லை கொடுத்ததாக அப்பள்ளியின் முன்னாள் மாணவரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் வழக்கறிஞர் அணி இணை செயலாளருமான எம்.தர் ஆணையத்திடம் புகார் அளித்திருந்தார். மேலும், 2017-ம் ஆண்டு நடைபெற்றதாகச் சொல்லப்படும் இந்த சம்பவம் குறித்த ஆதாரங்களை ஆணையத்திடம் வழங்கியிருந்தார்.

அதன் அடிப்படையில், செயின்ட் ஜார்ஜ் பள்ளி நிர்வாகி ஜி.கே.பிரான்சிஸ் உள்ளிட்டோர் 7-ம் தேதி (நேற்று) ஆஜராகி விளக்கமளிக்க ஆணையம் சம்மன் அனுப்பியது.

இந்நிலையில், பள்ளி நிர்வாகி பிரான்சிஸ் நேற்று ஆணையம் முன்பாக ஆஜராகவில்லை. மேலும், உடற்கல்வி ஆசிரியர் தாஸ் சார்பாக அவரது வழக்கறிஞர் ஆணையம் முன்பாக ஆஜராகி, புகார் குறித்து விளக்கமளிக்கக் கூடுதல் அவகாசம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார்.

 https://react.etvbharat.com/tamil/tamil-nadu/state/chennai/scpcr-postponed-investigation-of-sexual-abuse-allegations-on-st-george-school/tamil-nadu20210607160138357?fbclid=IwAR0BeGRkB498q_4hAg7oXF4shfqhv48iyQImxbH0--kXSwE-KNU4wE0Gilc

https://www.dinamalar.com/news_detail.asp?id=2780932

No comments:

Post a Comment

உரிமை இல்லாத இடத்திற்கு இழப்பீடு கேட்க முடியாது - சென்னை உயர் நீதிமன்றம்

  உரிமை இல்லாத இடத்திற்கு இழப்பீடு கேட்க முடியாது - சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு! - PANDIYAN LODGE COMPENSATION புறம்போக்கு இடத்தில் கட்டப...