Sunday, June 13, 2021

இயேசு சுவிசேஷக் கதைகள்படி சீடர்களோடு இயங்கிய காலம் - எங்கே ?? தெரியாதே!!

இஸ்ரேலில் ரோமன் மரண தண்டனையில் செத்த மனிதன் இயேசுவை தெய்வீகராகப் புனைவதே சுவிசேஷக் கதைகள்.  நம்மிடம் மத வியாபார பாதிரிகள் தரும் புதிய ஏற்பாடு கதைகளிற்கு வெளியே இயேசு பற்றிய ஆதாரம் ஏதும் கிடையாது.

மாற்கு சுவிசேஷக்  கதைப்படி சீடர்களோடு இயேசு இயங்கிய காலம் - எங்கே?

பைபிளியல் அறிஞர்கள் ஆய்வு கருத்துபடி இயேசு பொ.ஆ.29ம் ஆண்டு பஸ்கா பண்டிகைக்கும் ஜெருசலேம் வந்தபோது, ரோம் கவர்னர் படையால் கைது செய்யப்பட்டு, ரோமன் விசாரணைக்கு பின், ரோமன் மரண தண்டனையில் மரணமடைந்தார் -எனும் மாற்கு சுவிசேஷக்  கதையை  முதலில் வரைந்தது பொ.ஆ. 70 - 80 இடையே.

யூதேயாவில் இயேசு பாவமன்னிப்பு  ஞானஸ்நானம் பெற்றார்   

மாற்கு 1:4 யோவான்   வானாந்தரப் பகுதியில் மக்களுக்கு ஞானஸ்நானம் வழங்கினான். அவன் மக்களிடம் மனம் மாறியதைக் காட்டும்படியான   ஞானஸ்நானம் பெற்றுக்கொள்ளும்படி சொன்னான். அப்பொழுது அவர்களது பாவங்கள் மன்னிக்கப்படும் என்றான். 5. யூதேயா நாட்டினரும் எருசலேமில் வாழ்கின்ற அனைத்து மக்களும் யோவானிடம் வந்தனர். அவர்கள் செய்த பாவங்களை அறிக்கையிட்டனர். யோர்தான் ஆற்றின் கரையில் யோவான் அவர்களுக்கு ஞானஸ்நானம் கொடுத்தான்.       

                 

9. கலிலேயாவில் உள்ள நாசரேத் நகரத்திலிருந்து இயேசு அப்பொழுது அங்கே வந்தார்இயேசு  யோர்தான் ஆற்றில் யோவானால் பாவமன்னிப்பு ஞானஸ்நானம் பெற்றார்.

கலிலேயா- இயேசுவின் ஊழியம் தொடக்கம் & சீஷர்களைத் தேர்ந்தெடுத்தல்  

 14..பிறகு யோவான் சிறையில் அடைக்கப்பட்டான். இயேசு கலிலேயா  சென்று, தேவனிடமிருந்து பெற்ற நற்செய்தியைப் போதித்தார். 

16.இயேசு கலிலேயாவின் கடற்கரையின் ஓரமாய் நடந்து சென்றார். சீமோனையும் சீமோனின் சகோதரனான அந்திரேயாவையும் இயேசு கண்டார். அவர்கள் இருவரும் மீன்பிடிப்பவர்கள். அவர்கள் கடலுக்குள் வலையை வீசி மீன் பிடித்துக்கொண்டிருந்தனர். 17இயேசு அவர்களிடம், “வாருங்கள். என்னைப் பின் தொடருங்கள். நான் உங்களை வேறுவிதமான மீன் பிடிப்பவர்களாக மாற்றுவேன். நீங்கள் மீனை அல்ல, மனிதர்களைப் பிடிப்பவர்களாவீர்கள்” என்று கூறினார். 18ஆகையால் சீமோனும், அந்திரேயாவும் வலைகளை விட்டு விட்டு இயேசுவைப் பின் தொடர்ந்து சென்றனர். 19.இயேசு கலிலேயாவின் கடற்கரையோரமாய் தொடர்ந்து நடந்து சென்றார். அவர் செபெதேயுவின் மகன்களான யாக்கோபு, யோவான் என்னும் சகோதரர்களைக் கண்டார். அவர்களும் படகில் இருந்து கொண்டு மீன்பிடிக்கும் தம் வலைகளைப் பழுது பார்த்துக்கொண்டிருந்தார்கள். 20அவர்களோடு அவர்களின் தந்தை செபெதேயுவும் அவனோடு வேலைபார்க்கும் சில மீனவர்களும் படகில் இருந்தனர். இயேசு அவர்களைக் கண்டதும் தம்மோடு வரும்படி அழைத்தார். அவர்கள் தம் தந்தையை விட்டுவிட்டு இயேசுவைப் பின் தொடர்ந்தனர்.

மாற்கு 11:1 இயேசுவும் அவரது சீஷர்களும் எருசலேமை அடைந்தனர். அவர்கள் ஒலிவமலையில் உள்ள பெத்பகே, பெத்தானியா என்னும் நகரங்களுக்கு அருகில் வந்தனர். அங்கே இயேசு இரண்டு சீஷர்களை அனுப்பிச் சிலவற்றைச் செய்யச் சொன்னார்.

மாற்கு 14: 12 அன்று புளிப்பில்லாத அப்பம் உண்ணும் பஸ்கா பண்டிகை முதல் நாள். அன்றுதான் அவர்கள் பஸ்கா ஆட்டுக் குட்டியைப் பலி  டுவார்கள். இயேசுவின் சீஷர்கள் அவரிடம் வந்தனர். “நாங்கள் உமக்காகப் பஸ்கா விருந்து உண்ண எங்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என்று விரும்புகிறீர்கள்?” என்று கேட்டனர்.   

இயேசு பாவமன்னிப்பு ஞானஸ்நானம் பெற்ற பின் கலிலேயாவில் மட்டுமே இயங்கினார். அடுத்து வந்த முதல் பஸ்கா பண்டிகைக்கு, பைபிள் கதை யாவே தெய்வம் எபிரேயக் குழந்தைகளை கொன்றதைக் கொண்டாடும் ஆடு கொலை பலி தர கதைதெய்வம் யாவே உள்ள ஒரே ஆலயம் ஜெருசலேமில் வந்த போது ரோமன் ஆட்சி மரண தண்டனையில் இறந்தார். 

லிலேயா - யூதேயா என்பது 80 மைல் தூரம், அன்றைய நிலையில் இயேசு நடந்து வந்து ஞானஸ்நானம் பெற்றார் எனில் அது ஒரு பண்டிகைக்காவே இருக்கவேண்டும், பெரும்பாலும் கூடாரப் பண்டிகை எனில்  இயேசு சீடரோடு இயங்கியது 7 மாதம், முழுவதும் கலிலேயாவில் தான்   

 

யோவானின் நான்காவது சுவி கதையில் 3 பஸ்கா பண்டிகைகளுக்காய் யூதேயா வந்தது உள்ளது.

யோவான் 2:13அப்போது யூதர்களின் பஸ்கா பண்டிகை நெருங்கிக் கொண்டிருந்தது. ஆகையால் இயேசு எருசலேமுக்குச் சென்றார். அங்கே அவர் தேவாலயத்தில் நுழைந்தார். 14தேவாலயத்தில் வியாபாரிகள் ஆடுகள், மாடுகள், புறாக்கள் போன்றவற்றை விற்றுக்கொண்டிருந்தனர். மேசைக்கு அருகில் அமர்ந்திருக்கும் வேறு சிலரையும் இயேசு கவனித்தார். அவர்கள் பொதுமக்கள் பணத்தை பண்டமாற்று செய்தபடி இருந்தார்கள். 15இயேசு கயிறுகளால் ஒரு சவுக்கை உருவாக்கினார். அந்த வியாபாரிகளையும் ஆடுமாடுகளையும் தேவாலயத்திற்கு வெளியே அடித்துத் துரத்தினார். அவர் மேஜைகள் பக்கம் திரும்பி காசுக்காரர்களுடைய காசுகளைக் கொட்டினார். அப்பலகைகளைக் கவிழ்த்துப்போட்டார்.

யோவான் 6: 3இயேசு மலையின்மேல் ஏறினார். அங்கே தம்மைப் பின் தொடர்ந்தவர்களோடு உட்கார்ந்தார்.4அப்பொழுது யூதருடைய பஸ்கா பண்டிகை நெருங்கிக் கொண்டிருந்தது.

யோவான் 11:55  யூதருடைய பஸ்கா பண்டிகை நெருங்கிக்கொண்டிருந்தது. பஸ்கா பண்டிகைக்கு முன்பே நாட்டிலுள்ள மக்களில் பலர் எருசலேமிற்குச் சென்றனர். அங்கு அவர்கள் தம்மை சுத்தப்படுத்திக்கொள்வதற்கான சடங்குகளைச் செய்வர்.                                                                                                   யோவான் 12:1 பஸ்கா பண்டிகைக்கு இன்னும் ஆறு நாட்கள் இருந்தன. இயேசு பெத்தானியாவுக்கு வந்தார்.

யோவான் 13:1 இது ஏறக்குறைய பஸ்கா பண்டிகைக்கான நேரம். 

முதல் வருடம் பஸ்காவிற்கு வந்து பண்டிகைக்கு முன்பு இயேசு பாவமன்னிப்பு ஞானஸ்நானம் பெற்றார் எனில் இயேசுவின் இயக்கம் 2 ஆண்டுகள் மேலும் சில நாட்கள் 

கடைசி 8 மாதங்கள் முழுதும் யூதேயாவில் மட்டுமே. இரண்டில் ஒன்று பொய், அல்லது இரண்டுமே கூட பொய்யாக இருக்கலாம்


No comments:

Post a Comment

காலில் செருப்பு, நெருப்பு இல்லத அடுப்பு பொங்கல் போட்டோ ஷூட் செய்த தமிழர் விரோத்கள்- மனிதர்களா

 காலில் செருப்பு, நெருப்பு இல்லத அடுப்பு பொங்கல் போட்டோ ஷூட் செய்த தமிழர் விரோத்கள்- மனிதர்களா