Tuesday, June 29, 2021

திருச்சி பிஷப் ஹீபர் கல்லுாரி பேராசிரியர்.பால் சந்திரமோகன் மீது பாலியல் புகார்

 https://www.dinamalar.com/news_detail.asp?id=2793667


திருச்சி: திருச்சி பிஷப் ஹீபர் கல்லுாரி தமிழ்த் துறை தலைவர் மீது, முதுகலை படிக்கும் ஐந்து மாணவியர் பாலியல் புகார் கூறி உள்ளது, பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


திருச்சி புத்துாரில் உள்ள பிஷப் ஹீபர் கல்லுாரி நாடு முழுதும் பிரசித்தி பெற்றது. இங்கு, எம்.ஏ., தமிழ் படிக்கும் ஐந்து மாணவியர், மார்ச் மாதம் கல்லுாரி முதல்வரிடம் அளித்த புகார்:

தமிழ் ஆய்வுத் துறை தலைவர் பால் சந்திரமோகன், 54 வகுப்பறையில் மிக நெருக்கமாக அமர்ந்து, இரட்டை அர்த்தம் வரும்படி கொச்சையாக பேசுவது போன்ற பல்வேறு பாலியல் சீண்டல்களில் ஈடுபட்டார்.உச்சகட்டமாக, சட்டை, பேன்டை தளர்த்தி, அவர் செய்த சேட்டைகளை பார்த்து, தலையை குனிந்தபடியே வகுப்பறையில் இருந்தோம்.


மாணவியரை தன் அறைக்கு வரச்சொல்லி கட்டாயப்படுத்துகிறார். அங்கும் ஆபாசமாக பேசுவது உள்ளிட்ட பாலியல் சீண்டல்களில் ஈடுபட்டார். இதே துறையில் பணியாற்றும் உதவி பேராசிரியை நளினி, 43, 'ஹெச்.ஓ.டி.,யை பார்க்க போகும் போது, முகம் கழுவி, மேக்கப் போட்டு தான் போக வேண்டும்' என வலியுறுத்துகிறார். எங்களால் தொடர்ந்து படிக்க முடியவில்லை. ஆகையால் கல்லுாரியில் இருந்து வெளியேற விரும்புகிறோம்.இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.


அதிர்ச்சி அடைந்த முதல்வர், கல்லுாரியில் செயல்படும் பாலியல் சீண்டல்களுக்கு எதிரான குழு மூலம் விசாரிக்க உத்தரவிட்டார்.இந்த குழுவினர், புகார் அளித்த மாணவியர், பால் சந்திரமோகன், நளினி உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்தி, அதன் அறிக்கையை கல்லுாரி நிர்வாகத்திடம் கடந்த மாதம் கொடுத்துள்ளனர்.இதன் அடிப்படையில், விரைவில் தமிழ்த் துறை தலைவர் மற்றும் உதவி பேராசிரியை மீது நடவடிக்கை பாயும் என தெரிகிறது.
திருச்சி பிஷப்ஹீபர் கல்லூரி கல்லூரி தமிழ்த்துறை தலைவர் மீது மாணவிகள் பாலியல் புகார்!Bynewsdesk
30/06/2021 5:24:00 AM
 https://www.toptamilnews.com/trichy-private-college-students-complain-about-sexual-harassment/
திருச்சி தனியார் கல்லூரி தமிழ்துறை தலைவர் மீது, அந்து துறையில் பயின்று வரும் மாணவிகள் பாலியல் புகார் அளித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருச்சி புத்தூரில் உள்ள பிஷப் ஹீபர் கல்லூரியின் தமிழ்த்துறையில் பட்ட மேற்படிப்பு படித்து வந்த மாணவிகள், 5 பக்க அளவிலான புகார் மனுவை கல்லூரி முதல்வருக்கு அனுப்பி உள்ளனர். அதில், தமிழ்துறை தலைவரான பேராசிரியர் பால் சந்திரமோகன் வகுப்பறையில், தங்களுடன் மிக நெருக்கமாக வந்து அமர்ந்து கொண்டு கால்களால் சுரண்டுவது, இரட்டை அர்த்தத்தில் பேசுவது என பல்வேறு பாலியல் சீண்டல்களில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்து உள்ளனர்.

மேலும், ஆடையை தளர்த்திக் கொண்டு பல்வேறு சீண்டல்களில் ஈடுபட்டு உள்ளதாகவும் குற்றம்சாட்டியுள்ள மாணவிகள், அவரது இந்த செயலுக்கு அதே துறையில் உதவி பேராசிரியராக பணிபுரியும் பெண் ஒருவர் ஆதரவாக செயல்பட்டு வருவதாகவும் கூறியுள்ளனர். இவர்களது செயலால், தாங்கள் கல்லூரியில் இருந்து வெளியேற விரும்புவதாகவும் அவர்கள் தங்களுடைய புகார் மனுவில் கூறியுள்ளனர்.

இது குறித்து, வழக்கறிஞர் ஜெயந்திராணி தலைமையிலான குழுவினர் புகாருக்கு உள்ளான தமிழ்த்துறை தலைவர் பால் சந்திரமோகன், உதவி பேராசிரியை உள்ளிட்டோரிடம் விசாரணை மேற்கொண்டு, அதன் அறிக்கையை கல்லூரி முதல்வரிடம் தாக்கல் செய்துள்ளனர். இந்த நிலையில், தற்போது மாணவிகளின் புகார் குறித்து காவல் துறையினரும் விசாரணையை துவங்கி உள்ளனர்.

இதனிடையே, புகாருக்கு ஆளான தமிழ்துறை தலைவர் மீது, கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பே பாலியல் புகார்கள் எழுந்த நிலையில், சில மாதங்கள் இடைநீக்கம் செய்யப்பட்டு, பின்னர் மீண்டும் பணியில் சேர்க்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

No comments:

Post a Comment

மதுரையில் மாநகராட்சி இளம் பெண் ஊழியரிடம் 4 வருடம் உல்லாசமாக இருந்து குழந்தை பிறந்த பின் கழட்டிவிட்ட திருமணமான பாஸ்டர் மீது புகார்.

மதுரையில் பாஸ்டர் செய்த வேலை.. "கணவன் மனைவியாய் வாழ்ந்தோமே".. கமிஷனர் ஆபீசுக்கு ஓடிய மாநகராட்சி பெண்  By Hemavandhana Updated: Wed...