Monday, August 26, 2024

கிருஷ்ணகிரி பட்டாளம்மன் கோவில் & தேன்கனிகோட்டை, நாகமங்கலம் ஹனுமந்தராயசாமி கோவில் நிலங்களில் ரூ.198 கோடி கனிமவளம் கொள்ளை

கோவில் நிலங்களில் கொள்ளை போன ரூ.198 கோடி கனிமவளம்    

 :ஜூலை 21, 2024 -கோவில் நிலங்களில் இருந்து, சட்டவிரோதமாக 198 கோடி ரூபாய் மதிப்புள்ள கனிமங்கள் எடுக்கப்பட்டுள்ளதாக ஐகோர்ட்டில் தமிழக அரசு அறிக்கை அளித்துள்ளது.

இதுகுறித்து என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்று, வரும் 26ல் நேரில் ஆஜராகி அறிக்கை அளிக்க, சேலம் சரக டி.ஐ.ஜி.,க்கு நீதிபதி உத்தரவு இட்டுள்ளார்.

தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் உள்ள கோவில்களுக்கு சொந்தமான நிலங்களில் கனிம வளங்கள் திருட்டு நடப்பதாகவும், இதுகுறித்து நடவடிக்கை எடுக்கக் கோரியும், சென்னை உயர் நீதிமன்றத்தில் ராதாகிருஷ்ணன் என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார்.

https://www.dinamalar.com/news/tamil-nadu-district-news-krishnagiri/news/3028109

உத்தரவு

இந்த வழக்கு, நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் முன் விசாரணைக்கு வந்தது. மனுதாரரின் புகார் குறித்து விசாரணை நடத்தி, அறிக்கை தாக்கல் செய்யும்படி அறநிலையத் துறைக்கு நீதிபதி உத்தரவிட்டார்.

ஆனால் அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை. எனவே, அதிகாரிகளுக்கு எதிராக அவமதிப்பு வழக்கை ராதாகிருஷ்ணன் தாக்கல் செய்தார். வழக்கு மீண்டும் நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் முன், விசாரணைக்கு வந்தது.

கிருஷ்ணகிரியில் உள்ள அறநிலையத் துறை உதவி ஆணையர் ஜோதிலட்சுமி நீதிமன்றத்தில் ஆஜராகி, அறிக்கை தாக்கல் செய்தார். அதை பரிசீலித்த பின், நீதிபதி பிறப்பித்த உத்தரவு:

உதவி ஆணையரின் அறிக்கை, அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது. கோவில் நிலங்களில், நுாற்றுக்கணக்கான கோடி மதிப்பில், சட்டவிரோதமாக கனிமங்கள் எடுக்கப்பட்டு உள்ளன.

தேன்கனிகோட்டை, நாகமங்கலத்தில் உள்ள ஹனுமந்தராயசாமி கோவில் நிலத்தில், 28.51 கோடி ரூபாய் மதிப்பிலும்; கிருஷ்ணகிரி, பலேகுலியில் உள்ள பட்டாளம்மன் கோவில் நிலத்தில், 170.14 கோடி ரூபாய் மதிப்பிலும் கற்கள் எடுக்கப்பட்டுள்ளன.

நடவடிக்கை

அறநிலையத் துறை அதிகாரிகளால் கூட, கோவில் நிலத்துக்குள் நுழைய முடியவில்லை; அவர்களை கடமையாற்ற விடாமல், சமூக விரோதிகள் தடுக்கின்றனர். இந்த நிலையை, அரசு அனுமதிக்கக் கூடாது.

கிருஷ்ணகிர, தர்மபுரி மாவட்டங்களில் பெரும் அளவில் சட்டவிரோதமாக கனிம வளங்கள் எடுக்கப்படுவதாகவும், நுாற்றுக்கணக்கில் குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டு இருப்பதாகவும், அவற்றில் எந்த முன்னேற்றமும் இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டது.

போலீஸ் அதிகாரிகள், வருவாய் துறை அதிகாரிகள், மற்ற துறை அதிகாரிகளுக்கு இதில் தொடர்பு இருக்குமோ என்ற சந்தேகம் எழுவதை, அப்படியே ஒதுக்கி விட முடியாது.

அதனால் தான், சட்டவிரோதமாக கனிம வளங்கள் எடுப்பதற்கு எதிராக, அதிகாரிகளால் நடவடிக்கை எடுக்க முடியவில்லை.

தேசத்தின் சொத்தை பாதுகாக்க, நீதிமன்றம் நடவடிக்கை எடுக்க வேண்டியதுள்ளது. தேசத்தின் சொத்தை, பேராசைக்காரர்கள் கொள்ளையடிப்பதை அனுமதிக்க முடியாது.

அறநிலையத் துறையின் அறிக்கையில் உள்ள தீவிரத்தை பரிசீலித்து, நீதிமன்றத்தில் ஆஜராக சேலம் சரக டி.ஐ.ஜி.,க்கு உத்தரவிடப்படுகிறது.

விபரம்

தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் கோவில் நிலங்கள் மற்றும் இதர நிலங்களில் நடந்துள்ள சட்டவிரோத கனிமவள நடவடிக்கைகள் குறித்து, அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். குற்ற வழக்குகள் பதிவு உள்ளிட்ட விபரங்களையும் அளிக்க வேண்டும்.

இந்த உத்தரவு குறித்து, சேலம் சரக டி.ஐ.ஜி.,க்கு உடனடியாக சிறப்பு பிளீடர், கூடுதல் பிளீடர் தெரியப்படுத்த வேண்டும். நடவடிக்கை எடுத்ததற்கான அறிக்கையுடன், சேலம் சரக டி.ஐ.ஜி., வரும் 26ல் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும்.

இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

https://www.facebook.com/watch/?v=1467353941327519

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான கோவில் நிலங்களில் முறைகேடாக கிரானைட் கற்கள் வெட்டி எடுப்பு.. யாராக இருந்தாலும் எந்த பதவியில் இருந்தாலும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் - அமைச்சர் சேகர்பாபு பேட்டி

  
https://www.youtube.com/watch?v=MmG__66oSHM
https://www.vikatan.com/crime/money/rs-1000-crore-mineral-smuggling-in-hosur

ோவில் நிலத்தில் கிரானைட் வெட்டி எடுப்பு பல கோடி ரூபாய் இழப்பு; அதிகாரிகள் ஆய்வு

ADDED : மே 12, 2022 12:38 PMஓசூர் அருகே கோவில் நிலத்தில், தனியார் நிறுவனம் கிரானைட் கற்களை வெட்டி எடுத்து, பல கோடி ரூபாய் அரசிற்கு இழப்பு ஏற்படுத்தியதாக வந்த புகாரை தொடர்ந்து, அதிகாரிகள் குழுவினர் நேற்று ஆய்வு செய்தனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம், உத்தனப்பள்ளி அடுத்த நீலகிரி கிராமத்தின் மலை மீது, அனுமந்தராய சுவாமி கோவில் உள்ளது. இக்கோவில் மலை அடிவாரத்தில், 12 ஏக்கர், 5 சென்ட் கோவில் மானிய நிலம் உள்ளது. இதில், 75 சென்ட் நிலத்தில், தனியார் கிரானைட் நிறுவனம், சட்டவிரோதமாக கிரானைட் கற்களை வெட்டி எடுத்து, 4.25 ஏக்கர் நிலத்தில் கொட்டி வைத்திருப்பதாக, மாவட்ட கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டியிடம், திருதொண்டர் சபை நிறுவனர் ராதாகிருஷ்ணன் சமீபத்தில் புகார் செய்தார்.

அதேபோல், கடந்த, 2005 முதல், சட்டவிரோதமாக கோவில் நிலத்தில் கிரானைட் கற்கள் வெட்டி எடுக்கப்பட்டதாக, உத்தனப்பள்ளி போலீசில் கடந்த ஜன., மாதம், ஹிந்து சமய அறநிலையத்துறை தேன்கனிக்கோட்டை பகுதி ஆய்வாளர் நரசிம்மமூர்த்தி புகார் செய்தார். இதையடுத்து, கர்நாடகா மாநிலத்தை சேர்ந்த சண்முகம் என்பவர் மீது, போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

அதன் பின் மேற்கொண்டு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால், திருதொண்டர் சபை நிறுவனர் ராதாகிருஷ்ணன், கடந்த மாதம், 28ல் கோவில் நிலத்தில் ஆய்வு செய்தார். அப்போது, கோவில் நிலத்தை ஆக்கிரமித்து கிரானைட் கற்கள் வெட்டி எடுக்கப்பட்டதில், பல கோடி ரூபாய் அரசிற்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

, ஓசூர் ஆர்.டி.ஓ., தேன்மொழி தலைமையில், மாசுஇந்நிலையில்க்கட்டுப்பாட்டு வாரிய உதவி பொறியாளர் ரங்கசாமி, ஹிந்து சமய அறநிலையத்துறை ஆய்வாளர் நரசிம்மமூர்த்தி ஆகியோர், சர்வேயர் கோவிந்தன் மூலம், கோவில் நிலத்தை நேற்று அளந்து ஆய்வு மேற்கொண்டனர்.

இதில், 5 ஏக்கர் நிலம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு, 75 சென்ட் நிலத்தில் கிரானைட் கற்களை வெட்டி எடுத்தது தெரியவந்தது. இதனால், தனியார் கிரானைட் நிறுவனம் மீது, மாவட்ட நிர்வாகம் அல்லது ஹிந்து சமய அறநிலையத்துறை நடவடிக்கை எடுக்கும் என, தகவல் வெளியாகியுள்ளது.

பட்டாளம்மன் கோவில் கும்பாபிேஷகம்

கிருஷ்ணகிரி பழையபேட்டை டி.பி., சாலையில் உள்ள பட்டாளம்மன் கோவில் கும்பாபிேஷகம் கடந்த, 1959ல் நடந்தது. 62 ஆண்டுகளுக்கு பிறகு இக்கோவில் புதிதாக புனரமைக்கப்பட்டு நேற்று கும்பாபிேஷகம் நடந்தது.

நேற்று காலை, 5:45 மணிக்கு கணபதி பிரார்த்தனை, தேவி மஹத்ய ஹோமம், சண்டி ஹோமம், பிராண பிரதிஷ்டாபன ஹோமம், மஹா பூர்ணாஹூதி, கலசம் புறப்படுதல் ஆகியவை நடந்தன. 9:00 மணி முதல், 10:30 மணிக்குள், மஹாராஜகணபதி, பட்டாளம்மன், கவுரிசங்கர், பாலமுருகர், வாசுகி நாகாலம்மன், துர்கா பரமேஸ்வரி, தித்யாதி நவகிரகங்கள் மற்றும் ராஜகோபுர விமான கலசங்களுக்கு புனித நீர் ஊற்றி மஹா கும்பாபிேஷகம் நடந்தது.

No comments:

Post a Comment

பாதிரியார், கன்னியாஸ்திரிகள் ஆசிரியர் பணி சம்பளத்துக்கு வரி சுப்ரீம் கோர்ட் திட்டவட்டம்

பாதிரியார், கன்னியாஸ்திரிகள் ஆசிரியர் பணி சம்பளத்துக்கு வரி -சுப்ரீம் கோர்ட் திட்டவட்டம் புதுடில்லி, நவ.8- தமிழகத்தில் உள்ள அரசு உதவி பெறும்...