Sunday, August 18, 2024

தங்கலான்' பார்த்த ரசிகர்கள் ஆத்திரம்.. டிக்கெட்டை திரும்ப கேட்டு வாக்குவாதம்.

`தங்கலான்' பார்த்த ரசிகர்கள் ஆத்திரம்.. டிக்கெட்டை திரும்ப கேட்டு வாக்குவாதம்.. வேறு வழியின்றி காசை கொடுத்த தியேட்டர் By தந்தி டிவி 15 ஆகஸ்ட் 2024 2:
கதை  நடக்கும் 1850 களில் மைசூர் சமஸ்தானத்தின் ஒரு பகுதியாக இருந்த கோலார் தங்கவயலுக்கு  வடஆற்காடு மாவட்டத்தின் ஒரு பகுதியாக குறிப்பிடுவது  கால வரலாற்று பிழை...
பூட்டனின்  காலத்தை தங்கலான் நினைவுகளில் காட்டும் பொழுது வரும் புலிக்கொடியோடு  வரும் மன்னர் சோழர்கள் கிடையாது...  விஜய நகர பேரரசின் காலம் தான் கணக்கு படி வர வேண்டும்..
நாகர்களின் கதையை,புத்தனின் மலை வருகையை ஆரத்தியின் காவல் காரணத்தை கொஞ்சம் எளிமைப் படுத்தி சொல்லியிருந்தால்...
சாதாரண உழைக்கும் வர்க்க பார்வையாளனையும் படத்துக்குள் இழுத்திருக்கலாம்...

https://www.thanthitv.com/News/Cinema/thangalan-paranjith-vikram-282056
 

https://www.thanthitv.com/News/Cinema/thangalan-paranjith-vikram-282056

 கோலார் என்பது நம் நாட்டை கொள்ளையடிக்க வந்த வெள்ளைக்கார கொள்ளைக்காரன் வைத்த பெயர். 
அதன் பெயர் குவலாளபுரம். மற்ற பெயர்களான குவலாளையம், குவலாளநாடு என்றெல்லாம் அழைக்கப்பட்டது. 
குவலம், குவலா என்பதெல்லாம் பழம் சொல். 
குவலயாபீடம் என்ற ஒரு யானையை கிருஷ்ணர் அழித்தார் என நாம் இன்றைக்கு படிக்கிறோம்.
திருமுலர் எழுதிய திருமந்திரத்திலே 
குறிப்பினி னுள்ளே குவலய தோன்றும்‌  --
கொணர்ந்தேன்‌ குவலயம்‌ கோயிலென்‌ னெஞ்சம்‌ --
எனவும் குவலயம் என்றால் உலகு என்ற பொருளிலே பாடியிருக்கிறார். 
உலகே நகரமாகி வந்தது என்பது தான் குவலாளபுரம் என்ற பெயரின் பொருள். 
கங்கவம்சத்து அரசர்கள் இரண்டாயிரம் வருடம் முன்பு நகரத்தை கட்டி நாட்டையும் கட்டி ஆண்டார்கள். 
குவலாபுரத்தை தலைநகராக கொண்டு பலநூற்றாண்டுகள் மேலைக்கங்கர்கள் ஆட்சி புரிந்தார்கள். 
பாரதத்தின் பெரும் பகுதியை ஆண்ட கங்க வம்சம் இரண்டாக பிரிந்து
கொங்கு நாட்டை கொண்ட கங்க வம்சம் மேலைகங்க வம்சம் அல்லது மேற்கு கங்க வம்சம் எனவும் 
ஒட்டர மற்றும் கலிங்க நாட்டை கொண்ட கங்க வம்சம் கீழைக்கங்க வம்சம் அல்லது கிழக்கு கங்க வம்சம் எனவும் பிரிந்தது. 
சோழர்கள் தலையெடுத்து ராஜராஜன் தலைமையிலே கங்கப்பாடியையும் இரட்டைப்பாடியையும் வென்றபின்பும் கங்க வம்சம் தனி ஆட்சியே புரிந்துவந்தது. 
கங்க தேசத்திலே முடியாண்ட மன்னர் அதிகாரம் செலுத்துவது என்பதில்லையாதலால்
நாட்டார் சபைகளும் அதிலே சித்ரமேழி நாட்டார் சபையுமே ஆதிக்கம் செலுத்தும் கூட்டாட்சி ஜனநாயக முறை என்பதால்
மூவேந்தராலும் வெல்லப்படாததாகவே இருந்தது. 
குவலாளபுரத்திலே தங்கம் இருப்பது இரண்டாயிரம் வருடங்களாக தெரிந்த விஷயம் தான். 
குவலாளபுரத்திலே பெரும் கோவில்களும் வேத ஆகமம் உட்பட பல்கலை வித்தைகளும் கற்றுத்தரும் வித்யாபீடங்கள் இருந்தது வரலாற்று ஆவணங்களாலேயே உறுதிப்படுத்தப்பட்டது. 
800 வருடங்களுக்கு முன்பு திரும்பவும் குவலாளபுரத்திலெ அதான் கோலாரிலே தங்கம் எடுக்க சமண முனிவரான பவணந்தி ஆலோசனை சொன்னார் என இப்போது வரலாறு எழுதப்பட்டிருக்கிறது. 
அதன்படியே கொண்டாலும் அந்த பவணந்தி முனிவர் இன்றைய ஈரோடு மாவட்டம் பெருந்துறை தாலுக்காவிலே இருக்கும் சீனாபுரத்திலே தான் வாழ்ந்தவர் என்பதும் வரலாறே. 
ஈரோடு மாவட்டம் மேட்டுபுதூரிலே இருக்கும் சமணர்களின் எட்டாம் தீர்த்தங்கர் சந்திரபிரபா அவர்களின் கோவிலிலே பவணந்தியாரின் உருவம் செதுக்கப்பட்டிருக்கிறது. 
இதெல்லாம் கங்க தேசத்தின் பகுதியாகவே குவலாளபுரம் இருந்தது என்பதை காட்டுகிறது. 
கொங்கு நாட்டிலே இருந்து பொன் தோண்டி எடுப்பதும் வரலாற்றிலே தொடர்ந்து இருந்ததே.
அதற்கு கொங்கப்பொன் என்றே பெயர். 
இதன் அடையாளமாகவே ஏரின் கைப்படியான மேழியை பொன்னிலே வரைந்து சித்ரமேழி என கொடி கட்டியதும்
முதல் ஏர் உழுவதை பொன் ஏர் பூட்டி உழுவதும் என வைத்திருந்தது கங்க தேச மரபு. 
இன்றைக்கும் தாய்லாந்து, கம்போடியா நாடுகளிலே அரசர்கள் பொன்னேர் பூட்டி உழுவது விழாவாக கொண்டாடப்படுகிறது. 
உலகே புரமாக வந்தது என பெயர் வைப்பதும் கங்க தேச மரபு. 
உலகபுரம் என இன்றும் கொங்கு மண்டத்திலே ஊர்கள் உண்டு. 
அன்றைய கங்கதேசத்து எல்லைகளிலே இருந்த ஊர்கள் இன்றைக்கும் உண்டு. விழுப்புரம், ராணிப்பேட்டை போன்ற இடங்களிலேயும் உலகபுரம் என ஊர்கள் உண்டு. 
இதெல்லாம் மொழிவாரி மாநிலம் எனும் மேற்கத்திய வெள்ளக்கார வெறுப்பு இங்கே வரும்வரை
இங்கே மக்கள் ஒற்றூமையாகவே வாழ்ந்தார்கள் என்பதை காட்டுகிறது. 
பெங்களூர் என்பது வெங்காலூர் என்பதிலே ஆரம்பித்து மங்களூர் (மங்களூரு) கோழிக்கூடு (கோழிக்கோட், காலிக்கட்) என்ற துறைமுகங்கள் வழியாக பெரும் வணிகம் செய்து வந்த கங்க தேசம் 
துரோகத்தாலும் சதியாலுமே வீழ்ந்தது. 
இன்றைக்கு கர்நாடகாவிலே உலகே புரமாக வந்தது என்பதை மறந்து மறைத்து கோலார் என்பது கோலாஹஹ புரா என்பதிலே இருந்து வந்தது அந்த பெயரின் பொருள் வன்முறை நகரம் என எழுதி வைத்திருக்கிறார்கள். 
எப்படி கதை? 
சோழர்கள் காலத்திலே அவர்களுக்கு தங்கம் எடுக்கவேண்டிய தேவையோ அல்லது ஆசையோ இருந்ததில்லை. 
பாரதத்திற்கு தேவையான தங்கம் இந்தோனேசியாவிலும் மலேசியாவிலும் இருந்து வெட்டியெடுக்கப்பட்டதாக இருக்கவேண்டும் என ஊகிக்கிறார்கள். இன்றைக்கும் உலகின் இரண்டாம் தங்க சுரங்கம் இந்தோனேசியாவிலே தான் இருக்கிறது. 
இப்போது இருக்கும் கோலார் தங்க சுரங்கம் கொள்ளையடிக்க வந்த வெள்ளைக்காரனால் திரும்பவும் தோண்டப்பட்டது. 
இங்கே பாரத்திலே இருந்த வளமையையும் செழுமையையும் கண்ட வெள்ளைக்கார ஐரோப்பியன்கள் 
கொடூரமாக கொள்ளையடிக்க ஆரம்பித்ததுகள். 
இங்கே இருக்கும் செல்வத்தை கொள்ளையடிப்பது
காடுகளை அழித்து டீ எஸ்டேட்டுகள் காப்பி எஸ்டேட்டுகள் , ரப்பர் எஸ்டேட்டுகள் என போட்டது
நிலங்களை அழித்து புகையிலை என விஷச்செடிகளை கொண்டு வந்தது
எதிர்த்து போரிட்டவர்களை அடிமைகளாக பிடித்துக்கொண்டு போய்
இலங்கை, மலேசியா, பிஜி தீவுகள், தென்னாப்பிரிக்க என்ற நாடுகளிலே கரும்புத்தோட்டத்திலே கொத்தடிமைகளாக போட்டது என   கொடூரமாக கொடுங்கோல் ஆட்சி புரிந்ததுகள். 
இந்த வரலாற்றை சொன்னால் அப்புறம் என்ன ஆவது? 
அதனால் ஆரியம், பார்ப்பானியம் என்றெல்லாம் உருட்டினால் தானே திரும்பவும் காசு கிடைக்கும்?


தங்கலான்

மின்னுவதெல்லாம் பொன் அல்ல; தலித் அரசியல் பேசுபவரெல்லாம் தலித் போராளி அல்ல.

தங்கலான் உண்மையிலேயே மிகவும் துணிச்சலான தமிழ்த் திரைப்படம். இதன் திரைக்கதை – திரைமொழி எளிய பார்வையாளாருக்கு மட்டுமல்ல; தேர்ந்த பார்வையாளருக்குமே புரிவது கடினம்.

அடுத்ததாக கதை நிகழும் கற்பனை உலகில் பேசப்படும் வசனங்கள், நடை, உடை, பாவனை இவையெல்லாம் தமிழ் பார்வையாளர்களை ரொம்பவே நெருக்கடிக்கு உள்ளாக்கும். இந்தக் கதாபாத்திரங்களின் புறத்தோற்றம், வசனங்கள் அடிப்படையில் எந்தவொரு தமிழ் பார்வையாளருக்கும் அவற்றுடன் தம்மைப் பொருத்திப் பார்த்துக் கொள்ளவே முடியாது.

கதை நிகழும் காலத்துக்குப் பொருத்தமானதாக இருக்கிறதா என்பதையெல்லாம் விட்டுவிடுவோம். இந்த கதாபாத்திர நடை, உடை, பாவனைகள் எதுவும் துளியும் ரசிக்கும்படியாகவும் இல்லை. 

ஆஸ்கர் போன்ற விருதுகளுக்கு அனுப்பும் நோக்கமும் உண்டு என்பதால் அந்த மேற்குலகம் பார்க்க விரும்பும்படியாக இந்தக் கதாபாத்திரங்கள் வடிவமைக்கப்பட்டிருக்கிறார்கள். அது தமிழ் பார்வையாளரிடமிருந்து படத்தை வெகுவாக அந்நியப்படுத்துகிறது.

இருந்தும் இந்தத் திரைப்படத்தை இப்படித் துணிச்சலாக எடுத்திருப்பதற்கான ஒரே காரணம் இந்தப் படத்தில் இடம் பெற்றிருக்கும் ’ஜாதி இந்து’கதாபாத்திரங்கள். சோழர் காலத்து பிராமண ராஜகுரு (?), பிரிட்டிஷ் துரையின் தெலுங்கு பிராமண துபாஷி, ராமானுஜ திருக்குலத்து வைஷ்ணவ கதாபாத்திரம் (பெருமளவுக்கு கேலிக்குரியதாகவே படைக்கப்பட்டிருக்கிறது).

அந்தக் கதாபாத்திரங்களின் வசனங்கள், அவை தொடர்பான காட்சிகள் எல்லாமும் படு செயற்கையானதாகவும், க்ளிஷேயாக அரசியல் பிரசார நெடி மிகுந்தவையாகவும் இருக்கின்றன. திரைப்படத்தில் தமிழ் பார்வையாளருக்குப் ’புரியும் படியாகப்’ பேசுவது இவர்கள் மட்டுமே. அதாவது தமிழக/இந்திய/சர்வதேசச் சூழலில் செல்லுபடியாகும் அரசியலைப் பேசுபவையாக இருக்கின்றன.

இயக்குநரின் துணிச்சலுக்கான காரணம் இந்தக் கதாபாத்திரங்களில் இருக்கிறது. அவற்றின் அரசியலில் இருக்கிறது.

மாட்டுக் கறி துன்னாதே என்று சொல்லியபடி அறிமுகமாகும் வைணவர் காமெடி-குணச்சித்திர கதாபாத்திரமாக இருக்க, அதையே சொன்ன புத்தர் (சிலைவடிவில்) படம் முழுக்க போராளியின் வழிகாட்டியாக காட்சிப் படுத்தப்படுகிறார்.

இந்த தலித் போராளிகளிடம் கேட்க வேண்டிய ஒரே ஒருகேள்வி: மாட்டுக் கறிதுன்னுவியா மாட்டியா… அப்படித் துன்னுவன்னா புத்தரை என்ன பண்ணுவ?

புத்தருடைய பஞ்சசீலம், அஷ்டசீலம், தசசீலம் என சொல்லப்படுபவற்றில் ஒரு மனிதர் முதல் முதலும் கடைசியுமாகக் கடைப்பிடிக்க வேண்டிய விஷயம் புலால் மறுப்பு. படம் முழுக்க புத்தர் வருகிறார். எருமை மாட்டுக் கறி துன்னவும் செய்கிறார்கள். புத்தர் என்றால் புலால் மறுப்பு மட்டுமேயா என்று ஒரு கேள்வி உங்களுக்கு வரக்கூடும். பிற சீலங்கள் எதையும் பின்பற்றுவதாகவும் தெரியவில்லை.

போராளிகளின் நிஜ வாழ்வில் இந்தப் போலித்தனமே மலிந்திருப்பதால் திரைப்படக் கதாபாத்திரங்களும் அப்படியே போலிகளாகப் படைக்கப் பட்டிருக்கிறார்கள்.

இந்தக் கதாபாத்திரங்களும் சர்ச் நோக்கிலான இந்திய வரலாறு பற்றிய சுவிசேஷ வசனங்களும்தான் பா.ரஞ்சித் வகையறாவின் அரசியலின் அடிப்படை.

பிறப்பின் அடிப்படையில் வேறுபாடு பார்க்கும் ஆண்டைகளிடமிருந்து அதாவது இந்துக்களிடமிருந்து தப்பித்து பேண்ட், சட்டையெல்லாம் கொடுத்து கூலி கொடுத்து கெளரவமாக நடத்தும் பிரிட்டிஷார் பக்கம் அதாவது கிறிஸ்தவர் போக வேண்டும் என்ற சுவிசேஷ அரசியலே திரைப்படத்தின் அடிநாதமாக முன் வைக்கப்படுகிறது.

ஆனால், இது சுல்தான் பாய்களுக்குப் பிடிக்காது என்பதாலோ என்னவோ கதையில் வரும் பிரிட்டிஷ்காரர் தங்கலானையும் அவனுடைய சனங்களையும் ஏமாற்றிக் கொல்பவராகவும் வருகிறார். இதுவும் துணிச்சலான விஷயமே.

உடனே இந்து மஹா ஜனங்கள் படம் பார்க்கப் படையெடுத்து விட வேண்டாம். ஜீசஸ் ஜீசஸ் என்று வார்த்தைக்கு வார்த்தை பேசும் கிறிஸ்தவர் நல்லவராக இல்லையென்றாலும் வில்லனாகக் காட்டப்படவில்லை. கிறிஸ்துவை விசுவசிக்காத பிரிட்டிஷ்காரரே கெட்டவராகக் காட்டப்பட்டிருக்கிறார்.

வில்லன் ஒரு பிரிட்டிஷ்காரர்… தங்க வேட்டையில் ஈடுபடுபவர். நான் ஒரு பிரிட்டிஷ்காரர் மாதிரி இருக்கிறேனா பார் என்று பிரிட்டிஷாரின் மிக பலவீனமான பிரதியாக எஜமான விசுவாசத்துடன்தான் அவரையும் காட்டியிருக்கிறார் இயக்குநர்.

இந்துக்களில் நல்லவர்கள் இருக்கவே முடியாது; கிறிஸ்தவர்களில் (முஸ்லிம்களில்) கெட்டவர்கள் இருக்கவே முடியாது. கெட்டவராக இருந்தால் கிறிஸ்தவராக (முஸ்லிமாக) இருக்கமாட்டார் என்ற வசனம் நினைவுக்கு வருகிறதா… வரவேண்டும்.

படம் எடுத்து முடித்ததும் பாதிரிக்குப் போட்டுக் காட்டியபோது இந்தத் திருத்தம் வந்திருக்க வாய்ப்பு உண்டு.

கலைநேர்த்தி (வடிவம்), உள்ளடக்கம் என்ற இரண்டின் அடிப்படையில் பார்க்கும் போது ஒரு கலைப்படைப்பாக படம் சிறப்பாக வந்திருக்கிறது. உள்ளடக்கம் சார்ந்துமே ரஞ்சித்தின் அரசியல் நெடி அடிக்கும் காட்சிகள் நீங்கலாக படம் நன்றாகவே இருக்கிறது. ஆனால், அந்த அரசியல் என்பது மலினமானதாக இருப்பதாலும் அது படுசெயற்கையாகக் காட்சிப்படுத்தப்பட்டிருப்பதாலும் இந்தப் படம் சுமார் என்ற தளத்துக்கு இறங்கிவிடுகிறது. மேல்பூச்சான கலை இனிப்பு கரைந்த பின் கசப்பு அரசியல்தானே. அதுவும் செயற்கையாகக் காட்டப் பட்டிருப்பது தானே நாவில் உரைக்கும்.

அழகிய பெரியவன் போன்றோரின் பங்கு படத்தின் கலைநயத்துக்கு (தொன்மம் சார்ந்த மேஜிக்கல் ரியலிசக் காட்சியமைப்பு உட்பட) உதவியிருக்கும் என்று நினைக்கிறேன். 

கதை, மொழி சார்ந்து கலைத் துணிச்சலுடன் செயல்பட்டிருக்கும் இயக்குநர் தன் அரசியல் சார்ந்த காட்சிகளில் அமெச்சூர்தனமாகவே வெளிப்பட முக்கிய காரணம்: அதைச் சொல்லிச் சொல்லி அவரை உசுப்பேற்றும் அறிவுஜீவிக் கூட்டமே.

பா.ரஞ்சித்தின் அரசியல் நிலைப்பாடு பல காரணங்களினால் பிழையானது.

முதலாவதாக, அது வரலாற்றில் நிகழ்ந்தவற்றின் அடிப்படையில் உருவானதல்ல. ஒரு அரசியல் நிலைப்பாட்டை உருவாக்கிக் கொண்டுவிட்டு வரலாறை அதற்கு ஏற்பத் திரித்துப் பார்க்கும் ஐரோப்பிய வழிமுறை அது.

இரண்டாவதாக, தமிழக அளவில் பட்டியல் ஜாதிகளின் போர்க்குண அரசியலாக அது முன் வைக்கப்படுகிறது. உண்மையில், அது சாம்பவர்கள் அரசியல் மட்டுமே. சாம்பவர்கள் நில உடமை இருந்து அதன் பின் இழந்தவர்கள்.

பட்டியல் ஜாதியினரில் வண்ணார்கள், தோட்டிகள், தோல் தொழில் செய்பவர்கள், சிகை அலங்காரம் செய்பவர்கள், வெட்டியார்கள் இவர்கள்தான் உண்மையான தலித்கள். நில உடமையே இல்லாத அவர்களின் அரசியலே உண்மையான பட்டியல் ஜாதி அரசியல்.

சாம்பவர் அரசியல் இவர்களுடைய அரசியல் அல்ல. பட்டியலின அடுக்கில் இருக்கும் மேட்டுக்குடியான சாம்பவர்களின் அரசியலை எளியவர்களின் அரசியலாக முன்வைக்கும் அயோக்கியத்தனம் கொண்டதாகவே ரஞ்சித்தின் அரசியல் இருக்கிறது. தாங்கள் அனுபவித்திராக் கொடுமைகளை தாங்கள் அனுபவித்ததாகச் சொல்லிக் கொண்டு அது சார்ந்த அரசியல் சாசனப் பிராயச்சித்த நடவடிக்கைகளின் பலன்களை முழுமையாக அபகரிக்கும் அரசியல் அது.

அடுத்ததாக, பிரிட்டிஷார் காலத்தில் பஞ்சமி நிலம் என்ற பெயரில் சாம்பவர்களுக்குக் கிடைத்தவற்றில் பெருமளவிலானதை திராவிடப் பண்ணையார்களின் நீதிக்கட்சியும், திராவிட இயக்கத்தினரும்தான் அபகரித்திருக்கிறார்கள். அதைப் பேசும் துணிச்சல் சாம்பவர்களில் ஒருவருக்கும் இல்லை. ரஞ்சித்துக்கும் இல்லை.

திமுக எப்போது பாஜக பக்கம் நகர்கிறதோ அப்போது வேண்டுமானால் தமிழக ஜே.என்.யு-வான லயோலா வளாகத்தில் பேசி முடிவெடுக்கப்பட்டு தலித் போராளிகள் இதைக் கையில் எடுப்பார்கள். அதுவுமே கூட நிலங்களை மீட்கும் நோக்கில் அல்ல; திமுகவை சனாதன, இந்துத்துவ எதிர்ப்பு டிராக்கில் ஸ்டெடியாக நிற்க வைக்கும் நோக்கில் மட்டுமே அவை செய்யவும்படும்.

பஞ்சமி நில மீட்பு தொடர்பாகப் பேசும் துணிச்சல் இந்துத்துவர்களுக்கும் இல்லை என்பதால் அந்த விஷயம் பேசப்படாமலே போய்க் கொண்டிருக்கிறது. அதைப் பேசினால் 10% மத்திய அரசு வசம் இருக்கும் இடங்கள் மட்டுமே பறிக்கப்படும். மத்திய அரசு மட்டுமே ’தமிழர்’ நிலத்தை அபகரித்ததாக, தன்னெழுச்சியாக ஓர் சமூக நீதிப் போராட்டம் முன்னெடுக்கப்படும் என்பதால் பயந்து இந்துத்துவர்கள் இதைப் பேசுவதே இல்லை. 

ஆக, பிராமணர்களுக்கு தானமாகக் கொடுக்கப்பட்ட நிலங்களையும் கோவில் நிலங்களையும் பறிப்பது ஒன்றே ஒரே செய்ய வேண்டிய போராட்டம். வகஃப் சொத்தெல்லாம் இந்து மன்னர்களும், இஸ்லாமியர்களும் தானமாகத் தந்தது. எனவே அது அவர்கள் வசம் தான் இருக்க வேண்டும். இந்து கோவில்களின் நிலம் எல்லாம் பிடுங்கப்பட்ட நிலம். எனவே, அதையெல்லாம் பறிக்கவேண்டும். ஆனால், அறநிலையத்துறையின் போர்வையில் க்ரிப்டோக்கள் (அதிகாரபூர்வமாக மதம் மாறாமல் வெறித்தனமாக கிறிஸ்தவத்தை கடைப்பிடிக்கும் மோசடியாளர்கள்) அதை ஆக்கிரமிக்கும் வரையில் அதை தலித் போராளிகள் மீட்கப் போராட வேண்டிய அவசியம் இப்போதைக்கு இல்லை. 

இறுதியாக, அது ரஞ்சித்தின் அரசியல் சாம்பவர் அரசியல் என்ற போர்வையில் க்ரிப்டோ அரசியலையே முன்வைக்கிறது. கதை நிகழும் காலம், இடம் ஆகியவற்றின் தேர்வில் மிகத் தெளிவான கிறிஸ்தவ நலன் இருக்கும். கபாலியில் சிங்கப்பூர்; காலாவில் மும்பை. அதிலும் ஹார்ட்கோர் இந்துத்துவமே எதிர்க்கப்படுகிறது என்ற போர்வையில் ஒட்டு மொத்த இந்து மதமும் எதிர்க்கப்பட்டது. தங்கலானின் கற்பனை உலகிலும் வர்ணாஸ்ரமவாதிகளே எதிரிகள். பிராமணர்கள் தங்க நகை அதிகம் அணிகிறார்கள் என்பதிலிருந்து இந்த வரலாறு உண்மை என்பது உறுதியாகவும் செய்கிறது.

பிரிட்டிஷார்காலத்தில் பங்காவாலாக இருந்தது தொடங்கி (குடிகாரதுரைக்கு ஒரு நொடி காற்று வீசுவது நின்றால் எழுந்து வந்து வயிற்றில் மிதித்துக் கொல்லப்பட்டதெல்லாம் தலித்களே) காஃபி, தேயிலை எஸ்டேட்களுக்கு சங்கிலி மாட்டி இழுத்துச் செல்லப்பட்டது வரை அனைத்து அராஜகங்களுக்கும் ஆளானதில் தலித்கள் கணிசமாக உண்டு. அந்த உண்மைகளைப் பேசினால் படத்துக்கு ஃபைனான்ஸ் கிடைக்காது. ஃபைனான்ஸ் கிடைத்தாலும் அறிவார்ந்த பார்வையாளர்களின் ஆதரவுகிடைக்காது. ஊடக வெளிச்சம் கிடைக்காது. கைவசம் இருக்கும் கலையைக் காசாக்கவும் தெரிந்திருக்க வேண்டும்தானே.

ஆக, ரஞ்சித்தின் அரசியல் என்பது ஜாதி இந்துக்கள் மீது மிகையான குற்றச்சாட்டுகளை முன்வைக்கிறது; திராவிட இயக்க அராஜகங்களைப் பற்றிப்பேசாமல் இருக்கிறது. க்ரிப்டோ கிறிஸ்தவ அரசியலை தந்திரமாக முன்னெடுக்கிறது. அந்த வகையில் பா.ரஞ்சித் மிகப்பெரிய கலை-வரலாறு-அரசியல் என அனைத்திலும் அயோக்கியராகவே இருக்கிறார்.

அவருடைய மலின அரசியலே அவரை இப்படியான ஒரு படத்தைத் துணிச்சலாக அதாவது தமிழ் பார்வையாளருக்கு புரியாத திரை மொழியில், பிடிக்காத தோற்றத்துடன் எடுக்க வைத்திருக்கிறது. அந்த அரசியலுக்கு ஆஸ்கார் விருது கமிட்டி தொடங்கி அத்தனை ஊடகங்கள், அறிவு ஜீவிகள் வரை அனைத்து மட்ட ஆதரவு உண்டு. அவர்கள் படத்தைத் தூக்கி நிறுத்தி விடுவார்கள்.

சனாதன, வைதிக, இந்துத்துவ அம்சங்கள் வேண்டாம். அவை தமிழர்களின் அடையாளம் அல்ல; அவையெல்லாம் திணிப்புகள் என்றுசொல்லப்படுகிறது. இயற்கை வழிபாடு, அறுவடை கொண்டாட்டம், நடுகல் வழிபாடு இடையே தமிழர் மதம் எனப்படுகிறது.

படத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் தலித் போராளிகளின் ஆவேசத்தைப் பார்க்கும்போது தமிழ்தேசியவாதிகளுடன் ’கை’ கோத்து அனைவரும் கிறிஸ்தவ, இஸ்லாமிய தமிழர்களை கொத்தாக கூண்டோடு தமிழர் மதம் பக்கம் அழைத்து வருவார்கள் என்று நினைக்கிறேன். புத்தரைக் கூட வழியில் விட்டு விடுவார்கள் என்று நினைக்கிறேன். ஏனென்றால் , கொஞ்சம் நெருங்கிப் பார்த்தால் அவர் அதிபிராமணரையே தன் லட்சியமாக முன் வைத்திருக்கிறார் என்பது தெரிய வரும்.

யாகம், வேள்வி, கர்ம மார்க்கம், பக்தி மார்க்கம் என்று நின்று விடாமல் வேத ஞான மார்க்கம் நோக்கி மக்களை அழைத்துச் செல்ல வந்தவர் அவர். அவருடைய மடாலய விதிகள் (ஆண்பிஷுகளுக்கு பெண் பிஷுகள் அடங்கியவர்கள் என்பது உள்ளிட்ட) அனைத்துமே வேதாந்தத்தின் சாராம்சத்தையே அடிப்படையாகக் கொண்டது. எனவே ’தமிழர் மதத்தில்’ புத்தருக்கு இடம்கிடையாது.

இப்படி தலித் போராளிகள் கிறிஸ்தவ, இஸ்லாமியர்களை தமிழர் மதம் நோக்கி அழைத்துச் சென்றால் நிச்சயம் வரவேற்கத்தான் செய்ய வேண்டும். கிறிஸ்தவமும் இஸ்லாமும் வந்தேறி மதங்கள் மட்டுமல்ல; உலகம் முழுவதிலும் வன்முறையைக் கட்டவிழ்த்த மதங்களும் கூட. 

உள்ளத்தில் உண்மையிருந்தால்தான் வாக்கினில் ஒளி உண்டாகும்.

ரஞ்சித்அடிப்படையில் திரைப்படக் கலைஞர் அல்ல; அரசியல்வாதி. உடனே தீவிர அரசியல் போராளி என்று நினைத்துவிட வேண்டாம்.

மணிரத்னம் தனது காதல் கதைகளுக்குப் பின்புலமாக காஷ்மீர் தொடங்கி ஈழப் பிரச்னை வரை ஊறுகாயாகத் தொட்டுக் கொண்டது போல் பா.ரஞ்சித்தன் கேங்ஸ்டர் (இம்முறை தங்கவேட்டை) படங்களுக்கு போராளி அரசியல் போர்வையைப் போர்த்திக் கொண்டு வருகிறார்.

காலா, கபாலி போன்ற படங்களைவிட கலை ரீதியாக நல்ல முன்னேற்றம் இந்தப் படத்தில் தெரிகிறது. அரசியலிலும் அவர் மேம்பட்டால் தமிழுக்கு நல்ல படம் அவர் மூலம் கிடைக்க நிறைய வாய்ப்பு இருக்கிறது. இல்லையென்றால், அவர் அரும்பாடுபட்டு எடுத்துக் கொடுக்கும் தங்கக் கட்டிகள் எல்லாம் மண் கட்டிகளாகவே இருக்கும்.

அவர் அதையே தங்கக்கட்டி என்று நம்புகிறார். ’ஆமாம் ஆமாம்’என்று தூக்கிக் கொண்டாட ஒருகூட்டம் தயாராகவும் இருக்கிறது. எனவே, அடுத்த ஜென்மத்திலாவது அவர் அதிலிருந்து வெளியே வர அருகரின் அருள் கிடைக்கட்டும்.

 சனாதன தர்மம் சரணம் கச்சாமி
"கௌதமர் இந்துவாகவே பிறந்தார். இந்துவாகவே வளர்ந்தார். இந்துவாகவே வாழ்ந்தார். இந்துவாகவே இறந்தார் என்றார் ரைஸ் டேவிஸ் 
"என் அறிவுக்கு எட்டியவரை உபநிடதங்களே புத்த மதத்தின் அடிப்படை. 
ஆசாரங்களின் அடிப்படையில் பார்த்தால்  இந்து துறவிக்கான வழிமுறைகளே பௌத்த பிஷுகளின் வழிகாட்டி  என்றார் மாக்ஸ் முல்லர்
"துறவறம் முதலில் இந்து மதத்தில்தான் தோன்றியது. 
கௌதம புத்தருடைய காலத்திலேயே ஆரியவர்த்தத்தில் ஆயிரக்கணக்கான துறவியர் கூட்டங்கள் இருந்ததாக பௌத்த, சமண நூல்களே சொல்கின்றன 
என்றார் ஹெர்மன் ஓல்டன்பர்க்.
சமணமும் பௌத்தமும்  சனாதன சந்நியாஸிகளிடமிருந்து உருவானது. புத்த தச சீலங்கள் எல்லாம் புராதன ஹிந்து தர்மத்தில் சொல்லப்பட்டவையே  என்றார் ஹெர்மன் ஜகோபி 
வெறும் பொம்மைச் சிலையை-செட் ப்ராப்பர்ட்டியாகக் காட்டுவது தாண்டி பெளத்த மடாலயம் சென்று ஒரு புத்தகமாவது  ஒரு பக்கமாவது படித்துப் பார்
ஒரு புத்த சங்கத்திலாவது  ஒரு நாளாவது வாழ்ந்து பார் சங்கியின் அருமை உனக்குப் புரியும்.*
இந்துக்களின் தரிசனங்களில் இல்லாதது எதுவுமே புதியதாக பௌத்த தத்துவ சாஸ்திரத்தில் இல்லை. 
முழுமையான ஜீவகாருண்யத்துக்கும் ஆழமான தியான நம்பிக்கைக்கும் அதிக முக்கியத்துவம் தந்தார் அருகர்
அதுவுமே கூட அவருடைய காலத்தில் அதி உத்தம பிராமணர்கள் பின்பற்றி வந்தவையே
புத்தருடைய சங்கத்தில் இருந்தவர்களில் பலரும் புண்ணியம் செய்த பிராமணர்களே. 
அருகத்துகளுக்கு அவர் தந்த அடைமொழிகளில் ஒன்று ஹே ஆர்யா… ஹே ப்ராமணா… -சொன்னது அதே ரைஸ் டேவிஸ்.
பௌத்த சங்கத்தில் ஜாதி பேதம் இல்லை
உண்மையே.பற்றறுத்தலே நிர்வாண மோக்ஷத்துக்கான ஒரே வழி
ஒரே பிறவியிலேயே அதை அடையவும் முடியும் என்றார் புத்தர்.
அது உண்மையா..? அது சாத்தியமா? அது அவசியமா?
அவரவர் ஆன்மிக இயல்புக்கு ஏற்ப  மோக்ஷத்துக்கான வழிகள் மாறும்; 
அதற்கான பிறவிகள் அந்த வகையில் தேவை என்றனர் ஆதி ஞானிகள். மோக்ஷம் என்றால் மறு உலக லட்சியம் மட்டுமே அல்ல
இவ்வுலக வாழ்வுக்கான  ஒழுங்கும் ஒழுக்கமும் ஒற்றுமையும் கூட்டுறவும் கூட்டுப் பொறுப்பும் எல்லாம் கலந்ததுதுவே
புரியும்படி எளிமைப்படுத்தவா?
நீ ஆடு மட்டும் அளவோடு தின்னலாம். நீ இறந்த மாடும் தின்னலாம். நீ காக்காவும் தின்னலாம்
நீ காய் கனி மட்டுமே தின்னலாம் என்று
மோக்ஷ வழியாக வகுத்ததும் 
தீக்ஷை பெற்று மேலெழலாம் என்றதும்
மறு உலக மோக்ஷ வாழ்க்கைக்கு மட்டுமல்ல
இக உலக வாழ்க்கைக்கும் இயற்கைக்கும் இசைவானதும் கூட
பிராமண, க்ஷத்ரிய, வைஸ்ய, நாலாம் வருணத்தினர் அனைவரையும் துறவுக்கு வா என்று அழைத்த புத்த தர்மம் தோற்றுப் போனது
அத்தனை வேலையும் செய்யப்படவேண்டியவையே அனைத்தையும் ஆண்டவனுக்கு அர்ப்பணித்து அதனதன் தர்ம வழியில் செய் என்று சொன்ன ஆதி தர்மம் வென்றது.
உடல் என்றால் பல உறுப்புகள் சமூகம் என்றால் பல ஜாதிகள் பெளத்தத்தை அழிக்க இந்துக்கள்  ஜிஹாத் போர் நடத்தவில்லை
நம் வரலாறென்பது வைதிகத்துக்கும் பெளத்ததுக்குமான போராட்டம் என்றவர் -பெளத்தத்தை அழித்தது இஸ்லாமியப் படையெடுப்பே என்றுதானே சொல்லியிருக்கிறார்)
பெளத்தர்களை அழிக்க இந்துக்கள்  சிலுவைப் போர் நடத்தவில்லை
வர்ண ஜாதி பேதமின்றி அனைவரையும் துறவுக்கு வரச் சொன்னதை ஆரம்பத்தில் ஏற்றுச் சிலர் அவர் பின்னால் சென்றனர்
புதியதை எதிர்ப்பது எப்படி இயல்போ புதியதைக் கண்டு மயங்குவதும் இயல்புதானே
பழகிய பாதையில் செல்வது போலவேதான் புதியதைத் தேடிச் செல்வதிலும் ஓர் ஆர்வம் இருக்கும்
ஆசை முப்பது நாள் மோகம் அறுபது நாள் பெளத்தம் கூடுதலாக சில காலம் 
விளக்காக தீப்பந்தமாக காட்டுத்தீயாகப் பற்றி எரிந்திருக்கிறது.
ஆதியிலேயே பலர் ஒதுங்கி நின்றனர் அந்தத்தில் அனைவரும் விலகிவிட்டனர்.
அது சரி… ஆனானப்பட்ட புத்தன் சொன்னவை உங்களில் யாருக்கேனும் தெரியுமா?
மனைவி செய்யவேண்டியவை என மாமுனிவன் சொன்னவை:
வீட்டு வேலைகளைத் திறமையுடன் 
விரும்பிச் செய்யவேண்டும்.
சுற்றங்களுக்கும் நண்பர்களுக்கும் 
சுவையாகச் சமைத்துக் கொடுக்கவேண்டும்.
கற்புடையவளாக இருக்கவேண்டும்.
குடும்பச் செலவைக் குறைவாகச் செய்யவேண்டும்.
சீடர்கள் செய்யவேண்டியவை என 
பேராசான் சொன்னவை:
ஆச்சார்யார்களை மதிக்கவேண்டும்; 
அவர்களுக்கு எதிரே அமரக்கூடாது.
பணிவிடைகள் செய்யவேண்டும்.
பணிவுடன் இருக்கவேண்டும்.
ஆச்சார்யார்களுக்கு வேண்டியவற்றைக் கொடுக்கவேண்டும்.
ஆச்சர்யர்கள் சொல்லும் உபதேசங்களைக் கடைப்பிடித்து 
அவர்களுக்குப் பெருமை தேடித்தரவேண்டும்.
பணியாளர் செய்யவேண்டியவை என 
பார் புகழ் புத்தன் சொன்னவை:
அதிகாலையில் எழுந்துவிடவேண்டும்.
ஆண்டை தூங்கிய பின்னரே தூங்கச் செல்லவேண்டும்.
ஆண்டை கொடுப்பதைப் பெற்றுக்கொண்டு 
ஆனந்தப்படவேண்டும். 
உற்சாகத்துடன் வேலை செய்யவேண்டும்.
ஆண்டை மீதான பக்தியை அவரிடம் காட்டவேண்டும்
அவரைப் பற்றி அத்தனை பேரிடமும் 
அன்புடன் கௌரவமாகப் பேசவேண்டும்.
கொல்லாமை, திருடாமை, விபச்சாரம் செய்யாமை, பொய் கூறாமை, கள்ளுண்ணாமை -பஞ்ச சீலங்கள் 
தூய்மை இல்லாத உணவைத் தவிர்த்தல்,  சந்தனம் போன்ற நறுமணப் பொருட்களை தவிர்த்தல் தரையில் பாய் விரித்துப் படுத்தல் இந்த மூன்றும் சேர்ந்து அஷ்ட சீலங்கள் 
நாட்டியம், பாடல் விலக்குதல், பொன் வெள்ளி மனதாலும் விலக்குதல் இவையும் சேர்ந்து தச சீலங்கள் 
தன் மதமே உயர்ந்தது என்று எண்ணிக்கொண்டு பிறருடைய மதத்தை அவமதிப்பது கூடாது என்ற பதினொன்றாம் சீலத்தையும் சேர்த்துச் சொன்னார் 
பண்பிற் சிறந்த தச சீல புத்தர். ஐந்து சீலங்கள் அனைவருக்கும் கட்டாயம் பத்து சீலங்கள் லட்சியம்.பதினொன்று சர்வ உத்தமம்.
(யாருக்கும் மாட்டுக்கறி கிடையாது) ஒரு செடி, வாடிய மலர்களை உதிர்ப்பது போல பிஷுக்களே நீங்கள் காமத்தையும் தீய எண்ணங்களையும் உதிர்த்துவிடுங்கள் என்றார் புத்தர்
பின் வந்த பிக்ஷுகள் சொன்னார்கள்: முற்றும் உணர்ந்த புத்தரின் முழு உபதேசங்களைக் கேட்டு அறிந்துகொண்டவர்கள்
வேள்வித்தீயை அந்தணர்கள் ஆராதிப்பதுபோல தர்மத்தை ஆராதித்து வரவேண்டும். பிராமணர்களுக்குத் துன்பம் இழைக்கக்கூடாது. *
பிராமணனின் பெருமை தெரியவேண்டுமா பெளத்தனாக வாழ்ந்து பார்.*
புத்தர் சொன்ன பெண் சமத்துவம் என்ன தெரியுமா? இரண்டு வருட காலம் பஞ்ச சீலம், அகாலத்தில் உண்பதைத் தவிர்த்தல் ஆகிய ஆறு தருமங்களையும் பின்பற்றிய பின்னர்தான் 
சந்நியாசம் பெற முடியும் அதன் பின்னரே சமமாக நடத்தப்படுவார்.
அதுவும் எப்படிப்பட்ட சமத்துவம் தெரியுமா? அறுபது வருடங்களுக்கு முன் சந்நியாசம் பெற்ற பிக்ஷுணியாக இருந்தாலும் 
அன்று சந்நியாசம் பெற்ற ஆண் பிக்ஷுவைக் கண்டால் எழுந்து நின்று கைகூப்பி வணங்கவேண்டும்
பிக்ஷுணியானவர் பிக்ஷுக்கள் ஒருவரும் இல்லாத இடத்தில் மழைக்காலத்தைக் கழிக்கக்கூடாது.
பிக்ஷுணிகள் மாதமொருமுறை பிராதி மோக்ஷ அனுஷ்டானத்துக்கும் (பாவ மன்னிப்பு பெறவும்)
தர்ம உபதேசம் பெறவும் பிக்ஷுகளிடம் செல்லவேண்டும் 
(பிக்ஷுகளுக்கு பாவ மன்னிப்பு தர பிஷுணிக்கு அதிகாரம் கிடையாது) 
எப்போதும் எவ்விதமான நிலையிலும் பிக்ஷுணியானவர் ஒரு பிக்ஷுவை வையவோ கடுமையான மொழி சொல்லவோ கூடாது
பிக்ஷுகளுக்கு விரோதமாக பிக்ஷுணிகள் எதுவும் பேசக்கூடாது. 
(பிக்ஷுகள் பிக்ஷுணிகளுக்கு எதிராகப் பேசுவதற்கு எந்தத் தடையும் கிடையாது).
இந்த உலகின் அதி அதி அதிசயம் என்னவென்றால் சனாதனத்தின் அதி உத்தம புருஷரை சனாதனத்தின் எதிரி என உளறும் கும்பலின் குரலே சனாதன பூமியில் ஓங்கி ஒலிக்கிறது.
ஆரியப் படையெடுப்பு என்ற புரட்டை விடவும் அதி அசட்டுத்தனமானது -அதி முட்டாள்த்தனமானது- புத்தர் ஒரு போராளி என்பது
இந்து தர்மத்தின் புராணங்களை, மூட நம்பிக்கைகளை எதிர்க்கும் பகுத்தறிவுப் பகலவன்களே புத்தரின் பிறப்பை மட்டுமாவது கொஞ்சம் படித்துப் பாருங்கள்
பூத்துக் குலுங்கும் அசோக மரத்தினடியில் தோகையை விரித்து ஆடிக் கொண்டிருந்தது மயில்
சிட்டுக் குருவிகள் மரக்கிளைகளில் அமர்ந்து 
இனிய குரலில் பாடிக்கொண்டிருந்தன. 
மாயாதேவி சற்று உயரத்தில் இருந்த 
அசோக மலரொன்றை எட்டிப் பறித்தார். 
அப்போது போதிசத்துவர் 
மாயாதேவியின் கர்ப்பப்பையில் இருந்து
சிறிதும் வலியைக் கொடுக்காமல் 
வலப்பக்கம் வழியே வெளியே வந்தார். 
காலடியில் முளைத்திருந்த நீலத் தாமரை 
அந்தக் குழந்தையைத் தன் இதழ் மடியில் தாங்கிக்கொண்டது. 
பிறந்த உடனேயே குழந்தை, 
சிங்கக் குட்டிபோல் ஏழடி நடந்துசென்று 
புத்தரே அவதரித்துள்ளார் என்பதை உணர்த்தியது. இரண்டு நீரோடைகள் வானில் இருந்து பொழிந்து  அந்தக் குழந்தையைத் திருமஞ்சனம் செய்தன. தேவர்கள் பூமாரி பொழிந்தனர். 
ஆகாயம் ஒரு பொட்டு மேகமின்றி அதி தூய்மையாகத் திகழ்ந்தது
விலங்குகள், பறவைகள் அனைத்தும்  தம்மிடையே இருந்த பகைமையை மறந்து நட்பு பாராட்டியபடி வந்து குழுமின. புத்தரை ஏற்பதென்றால் புராணத்தை ஏற்றுத்தான் ஆகவேண்டும்
புத்தர் வைதிக யாகங்களை மறுத்தார் ஆனால், சனாதன தவத்தையும் தியானத்தையுமே முன்வைத்தார்
பலியிடலையும் எதிர்த்தார் புத்தர் -சிறு தெய்வப் படையல்களை நிறுத்திவிடலாமா?
புத்தன் வழியில் செல்ல இன்று வைதிகரே தயார். போலி பெளத்தப் போராளிகளே நீங்கள் அல்ல. 
இன்று சனாதனத்தை எதிர்ப்போரிடம் கேட்க வேண்டிய ஒரே கேள்வி
நீ எதை மாற்றாகச் சொல்கிறாய் அதை முதலில் சொல்…
பூர்வகுடிக் கொல்லி கிறிஸ்தவமா?
வந்தேறி இஸ்லாமா…? வன்முறை கம்யூனிஸமா… உண்மை பெளத்தமா..? நடுகல் வழிபாட்டுக்கும் -இயற்கை அறுவடை வழிபாட்டுக்கும்
தாய்த் தெய்வ வழிபாட்டுக்கும்
பலியிடலுக்கும் எதிரானதுதானே உண்மை பெளத்தம்.
சொல்… சனாதனத்துக்கு மாற்றாக நீ முன்வைப்பது எதை? பெளத்தத்துக்கு குருவான, இயற்கை-முன்னோர் வழிபாட்டுக்கு உரிய இடம் தரும் சனாதனத்தை கிறிஸ்தவத்துக்குக் கையாளாக இஸ்லாமுக்கு எடுபிடியாக இருந்தபடி எதிர்த்துவிட்டு  எதை இங்கு ஊன்றப் பார்க்கிறாய்?
பெளத்தமே எங்கள் வழி என்கிறாயே மாட்டுக்கறியைக்கூட விடமுடியாமல் பிரிட்டிஷ்காரன் உன்னைக் கைதூக்கிவிட்டான் என்கிறாயே பின் எதற்காக உன் குல தெய்வத்தைக் காவுகொடுத்தாய்?
சிலுவையின் முன் முண்டியிட்டு இனிமேல் என் குல தெய்வத்தைக் கும்பிடமாட்டேன் என்று எதற்காக அடிமை சபதம் செய்துகொடுத்தாய்?
பாவ மன்னிப்பு கேட்பதென்றால் உன் ஆதித்தாய் வந்திறங்கும் சாமியாடியிடம் தானே செல்லவேண்டும்
அல்லது புத்தனிடம் தானே செல்லவேண்டும்? பாவாடைப் பாதிரியிடம் எதற்குச் செல்கிறாய்?
புத்தன் ஒரு கலகக்காரன் என்பதை  ஒரு பேச்சுக்கு ஒப்புக்கொள்கிறோம். இஸ்லாமுக்கும் கிறிஸ்தவத்துக்கும் ஓடிப்போய்விட்டவர்களை புத்தன் பக்கம் இழுத்துக் கொண்டு வாருங்கள் 
பூர்வ பெளத்தர்களே= முதல்கட்டமாக மசூதியிலும் சர்ச்சிலும் ஒரு புத்தன் சிலையை…உள்ளே கூட வேண்டாம் வாசலில் நிறுத்திக்காட்டு.*
வள்ளுவ முகமூடி அணிந்து கொண்டு வந்தேறி மதங்கள் செய்தவற்றின் 2.0 தான் இந்த போதி சத்வ புத்த முகமூடி.
சுனாமியில் முதல் அலையைவிடஇரண்டாம் அலையே அதி அபாயமானது
பேரிடர் வைரஸ்களை விட உருமாறிய வைரஸ்களே அதி அபாயமானவை.
இம்முறை தேசத்தை தனிமைப்படுத்தவேண்டாம்
கிருமித் தொற்று உள்ளவர்களைப்  பூட்டி வைத்தாலே போதும்.
ஆகச்சிறந்த பாடங்கள் என்பவை அனுபவங்களில் இருந்து கற்றுக் கொள்ளப்படுபவைதானே























 

No comments:

Post a Comment

Christians grab SC Reserved seats with Hindu Caste Certficates - Supreme courts helps!

Kerala CPM Devikulam MLA - A.RAJA  a practicing CSI Christian had won Kerala assembly elections in 2021 an was disqualified in 2022 - but Su...