Wednesday, January 28, 2026

சென்னை தரமணி பாலிடெக்னிக் கல்லூரியில் பீகார்ரைச் சேர்ந்த காவலாளி மனைவி பாலியல் வன்கொடுமை கொலை, தடுத்த கணவர் & 2 வயது குழந்தை கொலை

 சென்னை கல்லூரி வளாகத்தில் பகீர்! பீகார் இளைஞர், மனைவி, குழந்தை கொடூர கொலை! பலாத்காரம் செய்த அநியாயம்

 By Yogeshwaran Moorthi Updated: Wednesday, January 28, 2026

தரமணி மூவர் கொலை; கைது செய்யப்பட்ட அனைவரும் வடமாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என தனிப்படை போலீசார் தகவல்


 சென்னை: சென்னை தரமணியில் உள்ள பாலிடெக்னிக் கல்லூரியில் காவலாளியாக பணிபுரிந்து வந்த வடமாநில இளைஞரின் 2 வயது குழந்தை உட்பட ஒரு குடும்பத்தையே கல்லூரி வளாகத்தில் வைத்து ஒரு கும்பல் தீர்த்து கட்டியிருப்பது பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொலை செய்யப்பட்ட பீகார் இளைஞர் கவுரவ் குமாரின் மனைவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டதாகவும், போதையில் இருந்த 5 பேர் கொண்ட கும்பல் இந்த வெறிச்செயலில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிய வந்துள்ளது. 

சென்னை அடையாரில் உள்ள பிரபல இருசக்கர வாகன ஷோரூம் அருகே ஜனவரி 26ஆம் தேதி சாக்கு மூட்டையில் இருந்து ரத்தம் வழிந்து வந்து கொண்டிருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள், உடனடியாக காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். இந்த தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சாக்குமூட்டையை பிரித்து பார்த்தனர். 

 அப்போது சுமார் 35 வயது மதிக்கத்தக்க வடமாநில இளைஞர் ஒருவர் தலை மற்றும் முகத்தில் வெட்டு காயங்களுடன் கிடப்பது தெரியவந்தது. இதனை அடுத்து போலீசார் கொலையுண்ட இளைஞரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் கொலை செய்யப்பட்ட இளைஞர் மற்றும் அவரின் விவரங்களை சேகரிக்க தொடங்கினர். 

மேலும் 5 தனிப்படைகள் அமைத்து இளைஞரை கொலை செய்து சாக்குமூட்டையில் வீசி சென்ற நபர் குறித்து தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டது. தனிப்படை போலீசார் சம்பவயிடத்தை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்ததில் இரண்டு இளைஞர்கள் பைக்கில் சாக்கு மூட்டையை கொண்டு வந்து வீசி விட்டு செல்வது பதிவாகி இருந்ததாக கூறப்படுகிறது. 

இதையடுத்து போலீசார் அந்த இருசக்கர வாகனத்தின் பதிவு எண்ணை வைத்து விசாரணையை தீவிரப்படுத்தினர். அதுமட்டுமின்றி போலீசார் கொலை செய்யப்பட்ட இளைஞர் பேண்ட் பாக்கெட்டில் இருந்த பேப்பரில் குறித்து வைத்திருந்த சில செல்போன் எண்களை தொடர்பு கொண்ட போது அதில் ஒரு எண் அடையாரில் உள்ள தனியார் செக்யூரிட்டி அலுவலகம் என்பது தெரிய வந்தது.

பின்னர் போலீசார் அங்கு நேரில் சென்று விசாரணை மேற்கொண்டதில் கொலையுண்ட இளைஞர் பீகாரை சேர்ந்த கவுரவ் குமார் (24) என்பது கண்டறியப்பட்டுள்ளது. இவர் தனது மனைவி முனிதா குமாரியுடன் வந்து காவலாளி வேலை கேட்டதும் அதற்கு செக்யூரிட்டி நிறுவனம் தரப்பில் தற்போது வேலையில்லை.. அப்படி தேவைப்பட்டால் அழைப்பதாக கூறி அனுப்பி வைத்தது விசாரணையில் தெரியவந்தது. 

பின்னர் கவுரவ் குமார் தரமணியில் உள்ள பாலிடெக்னிக் கல்லூரியில் காவலாளியாக வேலைக்கு சேர்ந்து தன் மனைவியுடன் அங்கேயே தங்கியிருந்து விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதன்பின்னர் கவுரவ் குமாரின் நெருங்கிய நண்பர் உட்பட 7 பேரை பிடித்து ரகசிய இடத்தில் வைத்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். 

அந்த விசாரணையில் கவுரவ் குமாரின் மனைவி, குழந்தையையும் காணவில்லை என்பது தெரிய வந்துள்ளது. பிடிபட்டவர்களிடம் நடத்திய விசாரணையில் கவுரவ் குமாரின் மனைவி, குழந்தையையும் கொன்று விட்டதாக வாக்குமூலம் அளித்துள்ளதாக கூறப்படுகிறது. இவர் சொல்வது உண்மை தானா? என்ற கோணத்தில் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

இந்த நிலையில் பிடிபட்டவர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் 2 வயது குழந்தையின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து கவுரவ் குமாரின் மனைவி முனிதா குமாரியின் உடலை போலீசார் தேடி வருகின்றனர். போதையில் இருந்த 5 பேர் கொண்ட கும்பல் இந்த வெறிச்செயலில் ஈடுபட்டுள்ளதாக தகவல் சொல்லப்படுகிறது. 

அதுமட்டுமல்லாமல் முனிதா குமாரியை அந்த கும்பல் பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. இந்த வெறிச்செயலை 5 பேர் கொண்ட கும்பல் போதையில் செய்திருக்கின்றனர். கல்லூரி வளாகத்திலேயே வைத்து காவலாளியின் குடும்பத்தை தீர்த்துக் கட்டியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

https://tamil.oneindia.com/news/chennai/bihar-family-murder-a-gang-has-brutally-murdered-an-entire-family-including-a-2-year-old-child-o-769219.html



No comments:

Post a Comment

தவெக ஜோசப் விஜயின் ஆரம்ப கால போராட்டங்கள்: குமுதம் ஆபீசில் கலகம், மூணாறில் குடை மோதல், சங்கீதா காதல் விவகாரம்!

தவெக ஜோசப்   விஜயின்  ஆரம்ப கால போராட்டங்கள்: குமுதம் ஆபீசில் கலகம், மூணாறில் குடை மோதல், சங்கீதா காதல் விவகாரம்!   February 20, 2025   Sour...