நாசரேத்தில் பிறந்து நாசரேத்தில் வளர்ந்து 85 வருடங்களாக வாழ்ந்து மரித்துப் போனவர்கள் விதவை ஜெபக்கனி பாப்பாத்தி ஆவார்கள். இவர்கள் நாசரேத் கஸ்பா பாடசாலை முன்னாள் தலைமையாசிரியரும், திருமறையூர் சபையில் 25 வருடங்களுக்கு மேலாக உபதேசியாராகப் பணியாற்றிய திரு ஜே செல்வராஜ் அவர்களின் சகோதரி ஆவார்.
கடைசி காலங்களில் படுக்கையில் கிடந்து கஷ்டப்பட்டு நிர்ப்பந்தமான நிலையில் மரித்தார்கள். அவர்கள் இரண்டு வருடங்களாக சர்ச்க்கு சங்கம் கட்டவில்லை ரூ.100x2= ரூ.200.
நாசரேத் கல்லறை தோட்டத்தில் அடக்கம் பண்ணுவதற்கு அந்த விதவைக்கு சபை போட்ட அபராதம் ரூபாய் 25,000/-. என்ன வேதனை! அந்த பணத்தை வட்டிக்காரன் போல் ஈவு இரக்கமின்றி வாங்கி எண்ணும்போது உங்கள் இருதயம் நடுங்கவில்லையா?
சர்ச் குட்டியாரை அனுப்பி வருடத்திற்கு 100 ரூபாய் வாங்கி இருக்கலாமே, எத்தனையோ காணிக்கை கவர்களை ஒவ்வொரு வீடாக சென்று கொடுத்து வாங்கி வருகிறார்களே. ஆண்டவர் உங்களோடு பேசவில்லையா? இது அநியாயம் இல்லையா? கமிட்டி மேல் பழி போடுவீர்கள்.
யூதாஸ் 30 வெள்ளிக்காசை எறிந்து விட்டு நான்று கொண்டு செத்தான். சகேயு அநியாயமாய் வாங்கினதை நாலத்தனையாகத் திருப்பி செலுத்தினான். அவன் இரட்சிக்கப்பட்டான்.
நீங்கள் அநியாயமாய் வாங்கின 25 ஆயிரத்தை ரூபாய் என்ன செய்வீர்கள்? தேவன் பார்த்துக் கொண்டே இருக்கிறார். ஒரு நாள் கணக்கு ஒப்புவிக்க வேண்டும். உங்களால் ஒருபோதும் முடியாது. உங்கள் முடிவை நீங்களே யோசித்துக் கொள்ளுங்கள். மிகுந்த வேதனையோடு இதை பதிவிடுகிறேன்.
Vanamohan Rajan -#sharedpost https://www.facebook.com/share/p/1DLZGLSEyF/
https://voters.eci.gov.in/eroll/2026/s22/sir-draftroll/215/2026-EROLLGEN-S22-215-SIR-DraftRoll-Revision1-TAM-23-WI.pdf
No comments:
Post a Comment