Wednesday, January 28, 2026

தவெக ஜோசப் விஜயின் ஆரம்ப கால போராட்டங்கள்: குமுதம் ஆபீசில் கலகம், மூணாறில் குடை மோதல், சங்கீதா காதல் விவகாரம்!

தவெக ஜோசப் விஜயின் ஆரம்ப கால போராட்டங்கள்: குமுதம் ஆபீசில் கலகம், மூணாறில் குடை மோதல், சங்கீதா காதல் விவகாரம்! February 20, 2025 Source Link

விஜயின் ஆரம்ப கால போராட்டங்கள்: குமுதம் ஆபீசில் கலகம், மூணாறில் குடை மோதல், சங்கீதா காதல் விவகாரம்!

 சென்னை: இன்று பக்குவப்பட்ட, முதிர்ச்சி நிறைந்த நடிகராக விஜய் திகழ்ந்தாலும், ஆரம்ப காலத்தில் நிறைய உணர்ச்சி வசப்பட்டதாகவும், குறிப்பாக எஸ்ஏ சந்திரசேகர் ஆரம்பத்தில் செய்த அட்டகாசம் ஏராளம் என்றும் பிரபல தயாரிப்பாளர் பாலாஜி பிரபு கூறியிருக்கிறார். அத்துடன், தான் சொந்தமாக விஜய்யை வைத்து தயாரித்த "விஷ்ணு" படத்தின் ஷூட்டிங் அனுபவம் குறித்தும் பேசியிருக்கிறார்.

 

AramNaadu யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்திருக்கும் தயாரிப்பாளர் பாலாஜி பிரபு, "நான் நேரடியாகவே பார்த்திருக்கிறேன்.. எஸ்ஏ சந்திரசேகர்தான் இருக்கிறவர்களிலேயே கோபக்காரர்.. மிலிட்டரி மாதிரி இருப்பார்.. எஸ்ஏசி ஒன்னு சொல்வார், விஜய் ஒன்று நடிப்பார்.. இதனால், ஷூட்டிங் ஸ்பாட்டிலேயே, விஜய்க்கும், எஸ்ஏசி-க்கும் நேரடியாகவே மோதல் வரும்..

 

 

ஆரம்பத்தில் எஸ்ஏசி செய்த அமர்க்களம் கொஞ்சம் நஞ்சம் கிடையாது. ரசிகன் படத்திலிருந்துதான் இந்த பிரச்சனை ஆரம்பமானது.. ரசிகன் படத்தின் விமர்சனம், குமுதத்தில் வெளியாகியிருந்தது. அதில், "நெளிந்த தகர டப்பா மூஞ்சி, இந்த மூஞ்சியெல்லாம் பார்க்கணும்னுகிறது தமிழ்நாட்டு ரசிகர்களின் தலையெழுத்து" என்று விமர்சனத்தின் கடைசியில் எழுதப்பட்டிருந்தது.

 

அடித்து நொறுக்கப்பட்ட குமுதம் ஆபீஸ்

 

இந்த விமர்சனத்தை பார்த்ததுமே, எஸ்ஏசி, ஷோபாம்மா, விஜய் எல்லாருமே கொந்தளிச்சிட்டாங்க.. பத்திரிகை என்றில்லாமல், நேரடியாகவே விஜய்யை அந்த காலத்தில் நிறைய உருவகேலி செய்தார்கள்.. ஆனால், குமுதத்தில் இப்படியொரு விமர்சனம் வந்ததால், எஸ்ஏசி நேரடியாகவே குமுதம் ஆபீசுக்கு கிளம்பி போனார்.. 60, 70 பேருடன், குமுதம் ஆபீஸை அடிச்சு நொறுக்கினார்.

 

விமர்சனம் எழுதுனவனை வரச்சொல்லு, கையை வெட்டுறேன் என்றெல்லாம் சீறினார். பிறகு அந்த நேரத்தில் எழுத்தாளர் சுஜாதா உட்பட குமுதம் நிறுவனத்தின் முக்கிய பிரமுகர்கள், எஸ்ஏசியை கட்டுப்படுத்தி, சமாதானப்படுத்தினார்கள்.. விமர்சனம் எழுதிய தவறுக்கு வருத்தம் தெரிவித்ததுடன், இனிமேல் விஜய் பற்றி தவறாக எழுத மாட்டோம் என்றும் சொல்லி அவரை அனுப்பி வைத்தார்கள். இப்படி நிறைய பத்திரிகை ஆபீஸ்களில் கலாட்டா செய்திருக்கிறார் எஸ்ஏசி.

 

100 குடை எங்கே

 

ஒரு படத்திற்காக மூணாறில் ஷூட்டிங் நடந்து கொண்டிருந்தது.. அப்போது அங்கு அடிக்கடி மழை பெய்வதால், 100 குடைகளை வாங்கி வைக்க வேண்டும் என்று கோபி என்ற புரொடக்‌ஷன் மேனேஜரிடம் சொல்லியிருக்கிறார் எஸ்ஏசி. மறுநாள் தூரல் பெய்து, ஷூட்டிங் பாதிக்கும் நிலைமைக்கு சென்றது. அப்போது எஸ்ஏசி அந்த புரடக்‌ஷன் மேனேஜரிடம் குடை எங்கே? என்று கேட்டுள்ளார்..

 

அதற்கு அவர், 100 குடைகள் எப்படி வாங்க முடியும்? என்பதுபோல கேட்டுள்ளார்.. இதைக்கேட்டதுமே டென்ஷனான எஸ்ஏசி, "என்னடா சொன்னே?" என்று கேட்டு, தன்னிடமிருந்த குடையை மடக்கி அவரை தாக்க முயன்றார்..

 

அந்த புரடக்‌ஷன் மேனேஜர், ஒரு மாற்றுத்திறனாளி ஆவார்.. எஸ்ஏசி குடையால் அடிக்க வருவதை பார்த்து, அங்கிருந்த பள்ளத்தில் எகிறி தப்பி ஓடினார்.. எஸ்ஏசி அடிக்க ஓடுவதை பார்த்து, விஜய், ஷோபா அம்மா எல்லாரும் பதறிப்போய் பின்னாடியே ஓடினார்கள். ஒரு பெரிய கலவரமே நடந்தது.. நான் இதையெல்லாம் அமைதியாக அங்கே உட்கார்ந்து வேடிக்கை பார்த்து கொண்டிருந்தேன்.

 

சங்கீதாவுடன் திருமணம்

 

சங்கீதா என்ற பெண்ணை விஜய் காதலித்து கொண்டிருப்பதாகவும், அவரை திருமணம் செய்ய போவதாகவும் பத்திரிகைகளில் அப்போது கிசுகிசுக்கள் வந்து கொண்டிருந்தது. அப்போது விஜய்யின் திருமண அறிவிப்பு செய்வதற்காக, பத்திரிகையாளர் நிகழ்ச்சி ஒன்றை எஸ்ஏசி கூட்டியிருந்தார்..

 

அப்போது பேசிய எஸ்ஏசி, "சங்கீதா என்ற பெண் லண்டனை சேர்ந்தவர்.. அவரை பார்த்து, விஜய்க்காக பெற்றோர்கள் பேசி நிச்சயித்திருக்கிறோம்" என்றார்.

அந்த நேரம்பார்த்து, விஜய் சார், உள்ளே நுழைகிறார்.. அவரை பார்த்ததுமே ஒரு பத்திரிகையாளர், "இதோ விஜய்யே வந்துட்டார், உண்மை என்னன்னு தெரிந்துவிடும்" என்றார்.

 

இதைக்கேட்டதும் எஸ்ஏசி, அந்த பத்திரிகையாளரிடம் மிக மோசமாக நடந்து கொண்டார்.. கர்ஜித்து பேசினார்.. கடுமையாக திட்டினார்.. பிறகு அந்த பத்திரிகையாளரை தனியே அழைத்து சென்ற விஜய், தன் விரலை நீட்டி ஜாக்கிரதை என்பது போல மிரட்டினார்..

 

நெப்போலியன் சார் விஷயத்திலும்

 

ஏன்? நெப்போலியன் விஷயத்திலும் அப்படித்தானே நடந்தது.. நெப்போலியன் சார் என்பவர் தனி ஆளுமை.. தன்னுடைய நண்பர்கள் விஜய்யுடன் சேர்ந்து போட்டோ எடுக்க வேண்டும் என்று ஆசைப்பட்டதால், விஜய் இருந்த கேரவனுக்கு அவர்களை அழைத்து சென்றுள்ளார்.. கேரவனிலிருந்து விஜய், நெப்போலியன் சாரை பார்த்து எப்படியெல்லாம் சத்தம் போட்டார் என்று எல்லாருக்கும் தெரியுமே" என்றெல்லாம் பேசியிருக்கிறார்

No comments:

Post a Comment

தவெக ஜோசப் விஜயின் ஆரம்ப கால போராட்டங்கள்: குமுதம் ஆபீசில் கலகம், மூணாறில் குடை மோதல், சங்கீதா காதல் விவகாரம்!

தவெக ஜோசப்   விஜயின்  ஆரம்ப கால போராட்டங்கள்: குமுதம் ஆபீசில் கலகம், மூணாறில் குடை மோதல், சங்கீதா காதல் விவகாரம்!   February 20, 2025   Sour...