Monday, January 26, 2026

A.R.ரஹ்மான் அலப்பறைகள்

  அல்லா ரக்கா ரஹ்மானின் அலப்பறைகள். பகுதி -1 

நாம் நகைக்கடைக்கும் , புடவைக்கடைக்கும் நம் வீட்டின் பெண்மணிகளோடு பல தடவை சென்றிருப்போம். 

அங்கே நகைக்கடை உள்ள பார்க்கும்போது எல்லாமே 'தக தக" என்று மின்னும்.புடவைகளோ இதுவரைஇந்த கலர் ' யாரிடமும் இல்லாத கலர்' என்று நம் வீட்டின் அம்மணிகளுக்கு தோன்றும்படி அதன் அமைப்பு இருக்கும்.

அதனால் அதை எந்தவித தயக்கமும் இல்லாமல் மகிழ்ச்சியாக வாங்கிவிட்டு ,கடையிலிருந்நு வெளியே எடுத்து வந்து பார்த்தால்.

'ச்சே இதையா வாங்கினோம்'கடக்காரன் நம்மள ஏமாத்திட்டானே என்கிற ஏமாற்றம் மட்டும் மிஞ்சும்.இது தான் அல்லாரக்கா ரஹ்மானின் இசைஃபிராடுத்தரம்.

இதை நான் சொல்லவில்லை ..

ரஹ்மானை தமிழ் இசை உலகிற்கு அறிமுகப்படுத்திய திருவாளர் மணிரத்னமே சொல்கிறார்.

சமீபத்தில் நடந்த தக்லைப் படத்திலோ இல்லை ஏதோ ஒரு பேட்டியிலோ மணிரத்னம் இவ்வாறு கூறுகிறார்..

ரஹ்மான் முயுசிக்கை அவர் ஸ்டுடியோவில் கேட்டால் அதனுடைய Output இல் மயங்கி,  வேண்டாம் என்று சொல்லாமல் 'ஓக்கே' என்று எல்லோரும் சொல்லிவிடுவார்கள். அதனால் அதனை நான் இளையராஜாவின் டியுனை அப்ரோச் செய்வது போல் செய்தால் தான் ,அது நல்ல டியுனா இல்லையா என்று கிரகிக்க முடியும் என்கிறார்..

இப்போது இளையராஜாவோ இல்லை எம்.எஸ்வியோ இல்லை பரணியோ யாராக இருந்தாலும் அவர்கள் ஒரு டியுனை வாசித்துக்காட்டுவார்கள்.

இயக்குனர் அதை கேட்டு இது நன்றாக இருக்கிறது அல்லது நன்றாக இல்லை என்று கூறுவார்.

இசையமைப்பாளர்களும் நன்றாக இல்லை என்றால் அதை மாற்றிக்கொடுப்பார்கள்..அந்த கிரியேட்டிவி பிராசஸ் எல்லோருக்கும் தெரியும்.அதற்கான சான்றுகள் கூட இணையத்தில் நிறைய இருக்கிறது.

ஆனால் ரஹ்மானுக்கு அந்த பழக்கமே இல்லை மாறாக இப்படியொரு பாடல் வேண்டுமென்று ஒரு இயக்குனர் அவரிடம் சொல்லிவிட்டால் அதை அவர் எப்படி உருவாக்குகிறார் என்று யாருக்குமே தெரியாது.அப்படிப்பட்ட தரவுகள் இணையத்தில் எங்குமே இல்லை.

சமீபத்தில் ஒரு கடம் கலைஞரின் பேட்டியை பார்த்து இருப்பீர்கள்.அதில் ரஹ்மான் ஒரு click track ஐ மட்டும் போட்டுவிட்டு மெட்ராஸை பத்தி என்பது பாட்டின் அடிநாதம்.அதற்கு நீங்கள் எதாவது வாசிக்க வேண்டும் என்று கூறுவார்.அது எந்த படம், எங்கே வரப்போகிறது என்று யாருக்கும் சொல்ல மாட்டார்.அது மட்டுமல்லாமல் எல்லோரையும் ஏதோ பேய் ஓட்டும் மந்திரவாதி போல் அர்த்தராத்திரியில் தூக்கத்தில் இருந்து எழுப்பி வரச்சொல்லுவார்.

இந்த சென்னை சேத்துப்பட்டு பகுதியில் அந்த காலத்தில் நிறைய பிக்பாக்கெட் திருடர்கள் இருப்பார்கள்.அவர் பகலெல்லாம் தூங்கிவிட்டு இரவு தான் குளித்துவிட்டு தொழிலுக்கு பயபக்தியுடன் செல்வார்கள்.அது போல ரஹ்மான் இரவில் தான் ஆக்டிவாக இருப்பார்.

சரி விஷயத்திற்கு வருவோம்.

ரஹ்மான் வாசிக்க கூப்பிட்ட அந்த கடம் கலைஞரோ இசை மேல் உள்ள ஆர்வத்தால் தன்னுடைய கிரியேட்டிவிட்டியை பயன்படுத்தி அதை வாசிப்பார்.ரஹ்மான் அதை ரிக்கார்ட் செய்துவிட்டு அவருக்கு எதிர்பார்த்ததை விட அதிக பணம் கொடுத்து அனுப்பி விடுவார்.

ஆனால் அந்த இசை எங்கே எப்படி வரப்போகிறது என்று யாருக்கும் தெரியாது.ஒரு ஆறு மாதம் கழித்து அது ஏதோ ஒரு படத்தில் , ஏதோ ஒரு பாடலாக வரும்.ஆனால் அதற்கான விலையாக ரஹ்மான்  வாங்கியிருப்பது லட்சங்களிலோ இல்லை கோடிகளிலோ இருக்கும்.

சம்மந்தப்பட்ட இசைக்கலைஞருக்கு அப்படி ஒன்று வாசித்தது கூட நினைவிருக்காது.இருந்தும் ரஹ்மான் தம்பி இந்த சிறு வேலைக்கு எவ்வளவோ பணம் கொடுத்திவிட்டார்.ரஹ்மான் சாமிக்குக்குதான்  'தங்க மனசு ' என்று தோன்றும் போதாக்குறைக்கு அவர் பேரை வேறு கேசட்டில் போட்டு விடுவார்(இவர் மட்டுமல்ல ரஹ்மானோடு பணிபுரிந்த அனைவரும் சொல்லும் வாசகம் ரஹ்மான் எதிரப்பார்த்ததை விடஅதிகமான Payment கொடுத்துவிடுவார் என்பதே)

இதைவிட வேறு என்ன வேண்டும் ஒருவருக்கு.கிடைத்த பணத்தில் சந்தோசமாக சென்றுவிடுவார்.

ஆனால் ரஹ்மான் செய்தது மிகப்பெரிய் இசைத்திருட்டு மற்றும் உழைப்பு சுரண்டல் என்பது அவருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

அந்த பாடலை ரஹ்மான் அவர்கள் கோடியில் விற்று பிறகு வாழ்க்கை முழுவதும் அவருக்கு காப்பிரைட்டில் பணம் வரும்படியும் அதை யாராவது எதிர்காலத்தில் பயன்படுத்தினால் அதற்கான விலையை ரஹ்மானுக்கு மொய் வைக்க வேண்டும் என்கிற அளவிற்கு  தனக்கேற்றாற் போல் அந்த பாடலை மாற்றி அமைத்து இருப்பார்.

இதை திருட்டுத்தனம் என்று சொன்னால் அவர் ரசிகர்கள் மனவருந்தக்கூடும் அதனால் இப்போதைக்கு 'ரஹ்மேனிய ராஜதந்திரம்' என்கிற பெயர் வைத்துக்கொள்வோம்.

அந்த கடம் கலைஞரின் ஒப்புதல் வாக்குமூலம் கமண்டில்.

(அலப்பறைகள் தொடரும்)

அல்லா ரக்கா ரஹ்மானின்

அலப்பறைகள்.

பகுதி 2.

ஒவ்வொரு காலத்திலும் ஒவ்வொரு இசையமைப்பாளர்கள் கொடிக்கட்டி பறந்தனர் அவர்களின் காலம் முடிந்த பிறகு மற்றொரு இசையமைப்பாளர் காலத்தின் கோலத்தாலும் தனது ஆசாத்திய திறமையினாலும் முன்னுக்கு வந்தார்.

அவர் வரும்போது ஏற்கனவே இருந்த இசையமைப்பாளரின் மீது மக்களுக்கும், சினிமாகாரர்களுக்கு அதே மரியாதை இருந்தது.அடுத்த வந்த இசையமைப்பாளருக்கும் அந்த மரியாதையும், பக்தியும் இருந்ததால் தனது முந்தைய இசையமைப்பாளரை அவர்கள் ஆசானாகவே கருதினார்கள்.

இதனால் அடுத்துவந்த இசையமைப்பாளரை ஏற்கனவே இருந்த இசையமைப்பாளர்கள் அரவணைத்து வழிநடத்தினார்.அவர்களோடு சேர்ந்து பணிபுரிந்தும் உள்ளனர்.இது தான் தமிழ் திரைஇசையின் மரபு.

இளையராஜா வந்தபிறகு அவரை யாரும் எம்.எஸ் விஸ்வநாதனை அழிக்க வந்தவர் என்று வன்மத்துடன் பேசவில்லை.

ஆனால் இளையராஜாவிற்கு பிறகு வந்ததாய் சொல்லப்படும் ரஹ்மான் அப்படி வரவில்லை.வைரமுத்து  சிலகாலம் முன்பு ஒரு பேட்டியில் இளையராஜாவின் ஆட்டத்தை முடிக்க கிட்டத்தட்ட 37இசையமைப்பாளர்களை கொண்டுவந்ததாக அவரே சொல்லியிருக்கிறார்.

அப்படி ஒருவரை அழிப்பதற்காகவே தமிழ் சினிமாவிற்கு கொண்டு வரப்பட்டு ,அதற்காகவே ஊதிப்பெரியதாய் ஆக்கப்பட்ட பொய்பிம்பம் தான் அல்லா ரக்கா ரஹ்மான்.நீங்கள் கேட்கலாம் வைரமுத்து, பாலசந்தர் , மணிரத்னம் செய்ததற்கு ரஹ்மான் என்ன செய்தார் பாவம் என்று நினைக்கலாம்.

ஆனால் பாருங்கள் ரஹ்மான் ஐநூறு படங்களுக்கு இளையராஜாவிடம் பணியாற்றிஇருக்கிறார்.அதையும் அவர் எங்கேயும் சொல்லியதில்லை , இளையராஜா 75 இல் தன்னுடன் ரஹ்மான் ஐநூறு படங்களுக்கு கீபோர்ட் வாசித்ததாக இளையராஜாவே சொன்ன பிறகு தான் இங்கே பலருக்கு தெரிந்தது.

தன்தந்தையை இழந்த பிறகு வறுமையால் வாடிய தனது குடும்பத்தை மேலும் வறுமையில் விழாமல் இருக்க உதவி புரிந்தது இளையராஜாவிடம் பணிபுரிந்த அந்த காலங்கள்.இதை எங்காவது ஒருதடவையாவது ரஹ்மான் சொல்லி இருக்கிறாரா..?

ஒருமுறை நீங்கள் இளையராஜாவிடம் பணியாற்றி உள்ளீர்களே என்ற பத்திரிக்கையாளர் கேள்விக்கு ரஹ்மானின் பதில்.

'என் தந்தையிடம் கூடத்தான்

இளையராஜா பணியாற்றிஇருக்கிறார் அதற்காக என்ன என்பது போல் பதில் கேள்வி கேட்டவர் தான் ரஹ்மான்.

போகட்டும்..

பாலசந்தருடன் இளையராஜாவிற்கு பிரச்சனை ஏற்பட்ட பிறகு அவருடைய சீடரான வசந்த தனது 'கேளடி கண்மணியில்'இளையராஜா அத்தனை பாடலும் ஹிட் கொடுத்தபிறகும் அவர் அடுத்த படத்திற்கு இளையராஜாவிடம் செல்லவில்லை.அதுவல்லவோ குருவை மதித்தல்.

ஆனால் ரஹ்மானோ  இவர்களிடத்தில் உள்ள பிரச்சனையை பற்றி  நன்கு தெரிந்து இருந்தும் அவர்களோடு சேர்ந்து பயணித்தது எதற்காக? இளையராஜாவை அழிப்பதற்காகத்தான் தன்னிடம் வருகிறார்டள் என்று தெரிந்தும் இவர் அவர்களோடு கைகோர்கிறார் என்றால் இது வன்மம் இல்லையா?

சரி அது அவர் விருப்பம் என்று விட்டாலும் அதன்பிறகு வந்த பேட்டிகளில் அவர் திட்டமிட்டு இளையராஜா பெயரை சொல்லாமல் தனக்கு பிடித்த இசையமைப்பாளர் யார் என்கிற பத்திரிக்கையாளரின் கேள்விக்கு..

எம்.எஸ் விஸ்வநாதன் மற்றும் டி ராஜேந்தர் என்று சொல்லியது வன்மத்திலும் வன்மம் இல்லையா?

இப்படி தனது இசைப்பயணத்தையே வன்மத்தில் ஆரம்பித்தவரை பற்றி உண்மையை சொன்னால் நம்மை வன்மவாதியாக முன்னிருத்துகின்றனர்.

இளையராஜாவை எதிர்க்க 37 இசையமைப்பாளர்களை முன்னிருத்திய வைரமுத்துவின்  நிலைமை என்ன என்று உங்களுக்கே தெரியும். வைரமுத்துவின் வரிகள் இல்லையெனில் ரஹ்மானின் இசை துளி அளவிற்கு கூட தமிழ்நாட்டு மக்கள் ஏற்றுக் கொண்டிருக்கமாட்டார்கள்.

ஏனெனில் ரஹ்மானின் இசையில் என்றுமே தமிழிசையின் கூறுகள் இருந்ததே இல்லை..அந்த மாயையை தனது வார்த்தை ஜாலங்களில் உருவாக்கியவர் வைரமுத்து.

அப்படிப்பட்ட வைரமுத்தவையே தூக்கி எறிந்தவர் அல்லா ரக்க ரஹ்மான் அவர்கள் என்பதை நினைவில் கொள்க..

( அலப்பறைகள் தொடரும்)


அலப்பறைகள்..

பகுதி 3.

'Slum dog Millionaire' இந்த படத்திற்கு ரஹ்மான் ஆஸ்கர் விருது வாங்கியது எல்லோருக்கும் தெரியும்.இந்த படம் இந்தியாவை மிக மோசமாக சித்தரித்தது என்று ஊருக்கே தெரியும்.

ஆனால் அதை விட மோசமான ஒன்று இதில் இருக்கிறது.இப்போது slum dog millionaire என்கிற டைட்டிலை அப்படியே தமிழில் மொழிபெயர்ப்பு செய்தால் எப்படி வரும் என்பதை மனசாட்சியும், நேர்மையும் உள்ளவர்கள் சொல்வார்களா?..

ஒரு சேரி நாய் , பணக்காரனாக ஆகிறதே ! .chat gpt, google translate என்று எதில் போட்டு பார்த்தாலும் சரி இது தான் அர்த்தம்.

இப்படித்தானே வரும்.

அதாவது சேரியில் உள்ளவர்கள் நாயாம்.இந்த படத்தின் டைட்டிலிலேயே இவ்வளவு பிரிவினைவாதம் உள்ளதே.இந்த படத்திற்கு இசையமைக்கும் போது ரஹ்மானுக்கு இது தெரியவில்லையா.இப்படி ஒரு கேவலமான படத்திற்கு ஒருவர் இசையமைத்து இருக்கிறார் என்று கேள்விப்படும் போது இங்குள்ள முற்போக்கு, சமூகநீதி பேசுபவர்களுக்கு கோபம் கொப்பளிக்கவில்லையா? சோறு தானே திங்கிறீர்கள்!

இது ஒரு படமாம் இதற்கு மானமுள்ள, ரோஷமுள்ள எந்த மனிதனாவது இசையமைப்பானா? இந்த கேடு கெட்ட படத்திற்கு இசையமைத்து விட்டு இதற்கு ஆஸ்கர் வேறு வாங்கிட்டு அதை ' எல்லா புகழும் இறைவனுக்கே' என்று வெக்கமில்லாமல் பேசுகிறாரே?.

இது எவ்வளவு பெரிய பிரிவனைவாதம்.

ஏங்க ரஹ்மான் எப்படி தமிழில் பேசினார் பாருங்கள்.அதனால் தான் அவரை தமிழர்கள் கொண்டாடவேண்டும் என்று பல அறிவுக்கெட்ட பதர்கள் பேசுகிறார்கள்.

சரி ' எல்லா புகழும் இறைவனுக்கு' என்பது தமிழா இல்லை இஸ்லாமிய வாக்கியமா? இஸ்லாத்தில் இதை Tahimid என்பர்.All praise and glory to allah என்பது தான் எல்லா புகழும் இறைவனுக்கே இதை அரேபியில் Alhamdulillah என்பர்.ஆக  இது ஒரு இஸ்லாமிய வாக்கியத்தின் தமிழ் மொழிபெயர்பே அன்றி இதற்கும் தமிழுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை..சரி இறைவன் என்றால் எந்த இறைவன் என்று வெளிப்படையாக சொல்ல திராணி இருக்கிறதா.சிவனா, விஷ்ணுவா இல்லை ஜீஸஸா?

அதாவது ஈயம் பூசுன மாறியும் இருக்கணும்  , பூசாத மாறியும் இருக்கணும்..பூவ பூவுனும் சொல்லலாம், பூய்யப்பம்னு சொல்லலாம்..அப்படி..

சரி 'slum dog millionaire' படத்திற்கு இவருக்கு எப்படி ஆஸ்கர் கிடைத்தது? ஆஸ்கர் கிடைத்ததற்கு முன்பு இவருக்கு எப்படி அதற்கான வாய்ப்பு கிடைத்தது.இவர் மட்டுமல்ல இந்த படத்திற்கு ஆஸ்கர் பெற்ற இன்னோரு முக்கியமான நபர் 'ரேசுல் பூக்குட்டி' அவர் ஒரு மலையாள முஸ்லீம்.அது எப்படி இருவருமே முஸ்லீம் மதத்தில் இருந்து இந்த படத்தில் வேலை செய்ய தேர்வாகி இருவருமே ஆஸ்கரும் பெற்றனர்.

2008 மும்பை திரையுலகம் யாருடைய நிழல் கட்டுப்பாட்டில் இருந்தது என்கிற உண்மை உங்களுக்கு தெரிந்தால்.இருவருக்கும் எப்படி இந்த வாய்ப்பு கிடைத்தது என்று தெரிந்திருக்கும்.மும்பை திரையுலகத்தின் இஸ்லாமிய லாபியால் தான் இவருக்கும் ரசூல் பூக்குட்டிக்கும் இந்த வாய்ப்பே கிடைத்தது என்பது கொஞ்சம் ஆராய்ந்தால் எல்லோருக்கும் தெரியும்.

'சேரியில் இருப்பவர்கள் நாய்கள்' எனகிற தலைப்பில் உள்ள படத்தில் பணிபுரியும் போது வராத பிரிவினைவாதம்.இஸ்லாமிய லாபியால் வாய்ப்பு கிடைக்கும் போது வராத  'people who are not creative are making decisions' புலம்பல்.

இப்போது 'Chhava' படத்திற்கு இசையமைக்கும் போது மட்டும் எப்படி வரும்?

இதற்காக தான் வட இந்திய முழுவதும் ரஹ்மானை காய்ச்சு எடுத்து டவுசரை கழட்டி ஓட விட்டு கொண்டிருக்கிறார்கள்.

சரி இவர் எப்படி ஆஸ்கர் விருது வாங்கினார் என்பது பற்றி அடுத்த பகுதியில்.

(அலப்பறை தொடரும்)


அல்லா ரக்கா ரஹ்மானின் அலப்பறைகள் பகுதி 4. 

'சேரி நாய் க்ரோர்ப்பதி' (slum dog Millionaire) திரைப்படம் இடது சாரி - இஸ்லாமிய லாபியால் தான் ஆஸ்கருக்கு தேர்வும் பெற்று வெற்றியும் பெற்றது என்பதை ஹாலிவுட் சினிமாவை பற்றி சிறிது ஞானம் உள்ளவரால் கூட எளிதாக புரிந்து கொள்ள முடியும்..

ஏனெனில் ஒரிஜினல் ஸ்கோர் பகுதியில் சிறந்த ஒரிஜினல் இசையின் ஆஸ்கர் கண்டிப்பாக Thomas Newman இன் Wall - E திரைப்படத்திற்கு தான் கிடைத்திருக்க வேண்டும்.

இல்லையெனில் அடுத்த தேர்வாக 

Alexander desplat இன் The Curious case of Benjamin Button இன் ஸ்கோருக்கு கிடைத்திருக்க வேண்டும்.

ஆனால் மிக மிக மிக சுமாரான Slum dog millionaire திரைப்படத்திற்கு எப்படி கிடைத்தது என்று ஹாலிவுட் பிரஸ்களுக்கே தெரியவில்லை.

இதை விட கொடுமை, 

இதையெல்லாம் தூக்கி சாப்பிட்டுவிடும் ' The Dark knight' திரைப்படத்தின் இசை நாமினேட் கூட செய்யப்படவில்லை..உலக பிரசித்த பெற்ற ஒரு திரைப்படம் எல்லாவற்றிலும் நாமினேட் செய்யப்பட ஆனால் Best Original score இல் நாமினேட் செய்யப்பட்டும் கடைசி நிமிடத்தில் அதற்கு கல்தா கொடுத்து disqualify ஆனது எப்படி?

கேட்டால் ஆஸ்கர் விதிகளை மீறி Hanz zimmer , James Newton Howard தவிர வேறு சிலர் அதில் பங்கு பெற்றதால் அதை போட்டியிலிருந்து கடைசி நிமிடத்தில் எடுத்துவிட்டதாக ஆஸ்கர் குழு தெரிவித்தது.அதாவது இதற்கு முன்பு பல தடவை ஆஸ்கருக்கு நாமினேஷன் செய்த Hanz zimmer க்கு இந்த எளிய விதி தெரியவில்லையாம்.இத்தனைக்கும் இதற்கு முந்தைய ஆண்டுதான் ' There will be blood' திரைப்படத்தின் நாமினேஷனும் இதே காரணத்திற்காக Disqualify ஆனது.எங்கேயோ பிசிறு அடிக்குதுல சாரே?

இதற்கு பின்பு தான் ரஹ்மானும் - ஹான்ஸ் சிம்மரும் இணைந்து நிறைய Colloboration செய்தார்கள்.அது ஏன் என்பதற்கான பதில் தான் மேலே.அதாவது இன்னும் தெளிவாக சொல்ல வேண்டும் என்றால் The Dark knight படத்தை லாபி செய்து அதை இறுதிசுற்றுக்கு வரவிடாமல் செய்தனர்.

நியாயமாக பார்த்தால் இசை, சவுண்ட editing மற்றும் சவுண்ட் மிகஸிங்  விருதுகள் மூன்றுமே The Dark knight திரைப்படத்திற்கு தான் கிடைத்திருக்க வேண்டும்.அங்கேயும் லாபியால் ரசூல் பூக்குட்டிக்கு Sound Mixing கிற்கு கிடைத்தது..

இதைவிட கொடுமை Best Original Song விருது 'Jai ho' பாடலுக்கு கிடைத்தது தான்.ரஹ்மேனிய ரசிகர்களே 'மிக மிக சுமாரான பாடல்' என்று சொல்லும் ஒரு துக்கடா பாடலுக்கு இவர்களுடைய லாபியால் ஆஸ்கர் விருது கிடைத்தது..இந்த பாடலை சுக்வீந்தர் சிங் தான் உருவாக்கினார் என்ற ராம்கோபால் வர்மாவின் பேட்டி பார்த்திருப்பீர்கள்.சுபாஷ கையின் யுவராஜ் படத்திற்கு 2004 - 2005 இல் உருவாக்கப்பட்டது.இதை அவருக்கே தெரியாமல் ஒரு ஹாலிவுட் படத்திற்கு விற்று அதற்கு காசோலையாக 5 லட்சம் வேறு அனுப்பி வைத்தாராம் ரஹ்மான்.

ஆனால் 'ஆஸ்கர்' மட்டும் தன் பெயரில் வாங்கிக்கொண்டார்.அதன் மூலம் கிடைத்த இமாலய புகழும் , பணமும், ஹாலிவுட் வாய்ப்புகளும் அவருக்கு மட்டுமே வந்து சேர்ந்தது.

ஆனால் ஒன்று, இந்த லாபி செய்தால் எளிதாக ஆஸ்கர் விருது கிடைக்கும் என்கிற உன்னத தகவலை இந்தியாவிற்கு எடுத்துரைத்தற்காக வேண்டுமானால் ரஹ்மானை பாராட்டலாம்.விளைவு அதை விட சுமாரான 'நாட்டு நாட்டு' பாடலுக்கு  

அதே போல் சிலிக்கான் வேலியில் உள்ள தெலுங்கர்களின் லாபியை பயன்படுத்தி, எப்படி ரஹ்மான் 'ஆஸ்கர் தமிழன்' ஆனாரோ அதே போல் மரகதமணி என்கிற கீரவாணி தன் உறவினர் ராஜமெளலி உதவியுடன்

'ஆஸ்கர் தெலுங்கனாக' ஆனார்.

இன்னும் பத்து வருடங்களில்

ஆஸ்கர் மலையாளி.

ஆஸ்கர் கன்னடிகா

ஆஸ்கர் மராத்தி என்று பலரை பார்க்கலாம்.

ஆனால் காலத்தின் கணக்கு பார்த்தீர்களா.அத்தகைய 'ஆஸ்கர் வாங்கிய கீரவாணி, வைரமுத்துவால் இளையராஜாவை அழிப்பதற்காக கொண்டு வரப்பட்ட 37 இசையமைப்பாளர்களில் ஒருவரான கீரவாணி, ஆஸ்கர் வாங்கிய கையோடு இளையராஜா காலில்விழுத்து வணங்கியது தான்.இந்த டிவிஸ்ட்ஐ யாருமே எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்.

அதாவது ஆஸ்கரெல்லாம் இளையராஜா காலடி தூசுக்கு சமம் என்று சொல்லாமல் சொல்ல வைத்து விட்டது காலம்.

( அலப்பறைகள் தொடரும்)

அல்லா ரக்கா ரஹ்மானின் அலப்பறைகள்

பகுதி 5.

ரஹ்மான், திலீப் குமாரிலிருந்து ஏ.ஆர் ரகுமானாக 1989 இல் இஸ்லாத்திற்கு மதம் மாறியவர் என்று அனைவருக்கும் தெரியும்.

இஸ்லாத்தில் 'இசை' என்பது 'ஹராம்' அதாவது இசை, பாடல் , ஆடுவது இதெல்லாம் சைத்தானின் குரானில் இருப்பது என்று இஸ்லாமிய அறிஞர்கள் , குரானிலிருந்து பல மேற்கோள் காட்டி இருக்கிறார்கள்.

ஆனால் 'Sufism' இல் இசை என்பது  'Halal' அதாவது நிபந்தனைக்கு உட்பட்டது.இசையை,  இறை சிந்தனைக்கு மட்டும் பயன்படுத்தலாம் அதுவும் குறிப்பிட்ட இசையை மட்டுமே பயன்படுத்தவேண்டும்.

ஒன்று 'சாமா' எனப்படும் இஸ்லாமிய ஆன்மீக இசை இன்னொன்று qawwali , இறைவனுக்கு அதாவது அல்லாவுக்கு நெருக்கமாக ஆகும் ஆன்மீக உச்சத்தின் இசை..

சூப்பி கலைஞர்கள் இதனை அடிப்படையாக கொண்டு தான் இறைவனை துதிப்பதற்கு இந்த இசையை பயன்படுத்தினர்.

(ஏ.ஆர்.ரஹமானின் 'சூப்பி' குரு கவாஜா மொயினுதின் சிருஷ்டி என்பவர் 12 ஆம் நாற்றாண்டில் வாழ்ந்து ஒரு சூப்பி புனிதர்.

இவர் பெயரில் தான் KMMC Conservatory என்று சென்னை அரும்பாக்கத்தில் உள்ள ஒரு இசை கல்லூரியை 2014 ஆம் ஆண்டு தொடங்கினார்.

இந்த பகுதிக்கு பிறகு வருவோம்)

பாரம்பரிய முஸ்லீம் களை விட இந்த மதம் மாறிய முஸ்லீம்களுக்கு ஒரு நெருக்கடி இருந்து கொண்டே இருக்கும் அதாவது அவர்கள் இஸ்லாத்தின்படி ஒழுங்காக நடக்கிறார்களா? என்று அவர்களை அந்த மதப்பெரியவர்கள் கண்காணித்தும்,அவர்களைகுரானின் படியும் வழிநடத்துவார்கள்.

ஏ.ஆர் ரகுமான் ஆரம்பத்தில் வாய்ப்புக்காகவும் , தன் இருப்பை நிலைநிறுத்தவும் சில பாடலகளில் பணியாற்றினாலும்( என் வீட்டு தோட்டத்தில் - ஆண்டாள் பாசுரம்) , இசை வியாபாரத்தில் வெற்றி பெற்ற பின்பு இஸ்லாத்தின் இந்த 'Halal' வடிவமான 'சூப்பி' இசையை அங்கங்கே படத்திற்கு சம்மந்தமே இல்லையென்றாலும் அது எங்கு நடக்கிறது, எந்த கலாசாரத்தில் நடக்கிறது என்கிற குறைந்த பட்ச புரிதல் இல்லாமல் அதை வலுகட்டாயமாக 'திணிக்க' ஆரம்பத்தார்.

ஆரம்பத்தில் இங்கே இருப்பவர்கள் அதை அவ்வளவாக ஆட்சேபிக்கவில்லை காரணம் அவர் இஸ்லாமிய பின்புலம் உள்ள காட்சிகளுக்கு மட்டும் அவர் அந்த இசையை கொடுத்ததால் மற்றும் இளைஞர்கள் இவரின் இசையை நவீனத்துவ இசையின் அடையாளம் என்று கொண்டாடியதால்.

உதாரணமாக ' பம்பாய்' படத்தில் 'கண்ணாளனே' பாடல் அத்தகைய பின்புலத்தை உடையது.அதாவது கவாலி பாடல். நடைபெறுவது ஒரு இஸ்லாமிய திருமணத்தில்.பாடலும், இசையும் அமோக வெற்றிப்பெற்றது.

ஆனால் இசை வியாபாரத்தில் ரஹ்மானுக்கு வெற்றிவரவர அவர் எல்லா படங்களிலும் இதை புகுத்த ஆரம்பித்தது தான் பிரச்சனையே..

'சங்கமம்' படத்தில் வராக நதிக்கரையோரம் என்பது சூப்பியின் qawaali இசை என்பது எத்தனை பேருக்கு இங்கே தெரியும். ஆனால் கதை நடைபெறுவதோ தமிழ்நாட்டு பாரம்பரிய பரதமும், கூத்துகட்டும் இசைக்குழுவிலும்.அதில் யாருமே இஸ்லாமியர் கிடையாது.இஸ்வாமிய பின்புலம் கிடையாது பிறகு எதற்கு இந்த இசை என்று யாருமே கேள்விகேட்கவில்லை..

அதே போல் 'காதல் தேசம்' படம் பார்த்து இருப்பீர்கள் அதில் அப்பாஸ், வினித் இருவரின் கதாபாத்திரங்களும்  இஸ்லாமியர்கள் கிடையாது, நாயகியும் இஸ்லாத்தை சேர்ந்தவர் கிடையாது, படம் நடைபெறும் கல்லாரியும் இஸ்லாமிய கல்லூரி கிடையாது.ஆனாலும் ' முஸ்தபா முஸ்தபா' என்று சம்மந்தமே இல்லாமல்தபாடுவார்.

இது ஏன்? எதற்காக ? என்று யாருமே கேள்விகேட்கவில்லை .இது இல்லாமல் ஹிந்து கடவுளையோ இல்லை கிருஸ்துவ கடவுளையோ புகழ்ந்து பாடுபடி பாடல் அமைந்தால் அதை தன்னுடைய உதவியாளரை வைத்து செய்துவிடுவது அவருடைய வழக்கம்.ஏனென்றால் அல்லாவை தவிர வேறு எந்த கடவுளையாவது புகழ்ந்து இசை அமைத்தால் அது இஸ்லாத்தின் படி Halal இல் இருந்து 'ஹராம்' ஆகிவிடுவதால்

இப்படித்தான் 'பாய்ஸ்' பட ஐயப்ப பாடலை தன்னுடைய உதவியாளரை வைத்து செய்ய வைத்தார்.மின்சார கனவு படத்தில் வெளிவந்த

'அன்பென்ற மழையிலே' பாடலை ஹாரிஸ் ஜெயராஜை வைத்து செய்ய வைத்தார்.இதற்கென்றே ரஞ்சித் பரோட், ஜோஷ்வா ஸ்ரீதர், ஜிம் சத்யா, ஹாரில் ஜெயராஜ் என்ற ஒரு இசை பட்டாளத்தையே உடன் வைத்து இருந்தார்.

நியு படத்தில் 'காலையில் தினமும் கண்விழித்தால் நான் கைதொழும் 'தெய்வம்' அம்மா' என்பதை ' தேவதை' ஆக மாற்றி எழுதச்சொன்னார்.ஏனெனில் அம்மாவை தெய்வமாக பாடினால் ஹராம்.

'லகான்' படத்தில் 'ஓ பல்ன்ஹாரே' பாடலை நிலவை பார்த்து அல்லாவை பாடுவது போல் பாடல் வரிகளுக்கு இசையமைத்து இருப்பார்.அந்த படத்தின் தயாரிப்பாளரும் இஸ்லாத்தை சேர்ந்த அமீர்கான் என்பதால் இன்னும் சுலபமாகி போனது..

'பாபா' படத்தில் காளிகாம்பாள்  கோவிலில், அன்னை சக்தியை பார்த்து ரஜினி பாடும் பாடலில் ' இறைவா" சக்தி கொடு என்று பொருள்படும்படி மாற்றி எழுத வைத்தார்.ஏனெனில் இஸ்லாத்தில் 'இறைவா' என்றால் வேறு யார் சாட்சாத் அல்லா தான்.

இதனால் இஸ்லாத்தின் நெறிமுறைகளுக்கு எதிராக இல்லாமல் ,இந்து மதத்தில் இருத்து  மதம் மாறினாலும் தானும் உண்மையான இஸ்லாமியன் தான் என்று தன் இஸ்லாமிய சொந்தங்களுக்கு நிரூபித்தார்.

அப்போது மற்றவர்களுக்கு 

சாம்பிராணி புகையை முகத்தில் விசிறினார்.

(அலப்பறைகள் தொடரும்)

அல்லா ரக்கா ரஹ்மானின் அலப்பறைகள்.

பகுதி 6.

ரஹ்மானுக்கு உண்மையிலேயே ஏதோ தீவிர உளவியல் ரீதியாக அடையாளச்சிக்கல் இருக்கிறது.இந்த ஆணாய் பிறந்தும் அதை ஏற்க முடியாமல் , பெண்ணாய் மாறி அதிலும் திருப்தி அடையாமல் மனம் குழம்பி  சிலர் சுற்றிக்கொண்டிருப்பார்களே 

அது போல்...

முதலில் இந்துவாக இருந்தார், அது பிடிக்கவில்லை , திலீப்குமார் பெயரே பிடிக்கவில்லை என்று இஸ்லாமியராக மதம் மாறினார்.சரி, இஸ்லாத்திற்கு மதம் மாறிவுடன் அதன் கோட்பாடுகளை தீவிரமாக கடைபிடிப்பது தானே தர்மம்.இஸ்லாத்தின் இசை 'ஹராம்' என்னும் போது, அதற்கு உண்மையாய் இருப்பது என்பது 'திரைஇசையை' கைவிடுவது அல்லவா சரியான முடிவாக இருக்க முடியும்.

மாறாக அதில்  சூப்பி இசை என்னும் ஒரு loopholeஐ கண்டுபிடித்து, சினிமா இசையில் விருப்பமில்லாமல் பணத்திற்காக நுழைந்து, அல்லாவை போற்றும் இசையை தவிர மற்ற இசையை அமைக்கும் நிலைக்கு வந்து, பின்பு தொழில் வேறு, மதம் வேறு என்று பார்க்க தெரியாமல்,எங்கே தன் மதத்தை மீறிவிடுவோமோ என்ற குற்ற உணர்ச்சியால் தத்தளித்து , அதிலிருந்து விடுபடுவதற்காக 

தான் இசையமைக்கும் எல்லா படங்களிலும்  அதன் கலாசாரம், பண்பாடு , நிலச்சூழல் என்று எதை பற்றியும் கவலையில்லாமல் தனக்கு தெரிந்த சூப்பி இசையை யாருக்கும் தெரியாமல் கலந்து, பிற மொழிக்கடவுளை புகழ்ந்து பாடும்படி பாடல் வந்தால் அதை யாருக்கும் சொல்லாமல் வேறு ஒருவரை வைத்து இசையமைத்து விட்டு.திரைப்படத்தின் கலைக்கும் உண்மையில்லாமல்,இசை தொழிலுக்கும் உண்மையில்லாமல் , தனக்கும் உண்மையில்லாமல் இருந்திருக்கிறார்.

இவருக்கு சூப்பி இசைதான் பிடிக்கும் அல்லது அரேபிய இசைதான் வரும் என்பதற்காக கிடைக்கிற எல்லா திரைப்படங்களிலும் சூப்பி இசையே தான் அமைப்பேன் என்று பிடிவாதமாக இருந்தால் பின்பு இந்தியில் மார்கெட் போகாமல் எப்படி?

அதுவும் இந்து மத கோட்பாட்டையும், அவர்களின் ஆதர்ச நாயகர்களின் படங்களிலும், இந்து மத கலாசாரத்தை வலியுறுத்தும் திரைப்படங்களில் கூட நான் அரேபிய இசைதான் அமைப்பேன் , கவாலியில் தான் கதகளி ஆடுவேன் என்றால் இந்துத்துவ கோட்டையான வட இந்தியாவில் எப்படி ஒத்துக்கொள்வார்கள்.

அவர்கள் என்ன சைவ சித்தாந்தத்தை கடைபிடித்த சோழர்களின் ' பொன்னியின் செல்வனில்' அரேபிய , சூப்பி இசை அமைத்தும்அது எவ்வளவு பெரிய துரோகம் என்று அறியாமல் அதற்கும் சில்லறை விட்டெறிந்த சூடுசொரணை இல்லாத தமிழர்களா என்ன?

இப்போது இஸ்லாம் பெரும்பான்மையாக இருக்கும் நாட்டில் எடுக்கும் படங்களில் நான் தியாகராஜரின் இந்துமத பக்திகீர்த்தனையை தான் போடுவேன் என்றால் அது  எவ்வளவு பெரிய தவறு.எவ்வளவு பெரிய மததிணிப்பு , அதை முதலில் எந்த இஸ்லாமியராவது ஒத்துக்கொள்வாரா?

இதை எப்படி தமிழக மக்களுக்கும், இந்திய மக்களுக்கும் ரஹ்மான் செய்யலாம்.செய்துவிட்டு அவர்களை 'மதரீதியாக என்னை அணுகுகிறார்கள்' என்று சொன்னால் அது எவ்வளவு பெரிய அயோக்கியத்தனம்.

இப்படிப்பட்ட கடும் மனச்சிக்கலில் எப்போதும் இருந்ததால் தான் அவர் ஆஸ்கர் வாங்கிய கையோடு இசைதொழிலே வேண்டாம் என்று ஓடிவிட்டார்..ஆனால் வெளியே அவருக்கு ஓய்வு தேவைப்படுகிறது எனறு சொல்லப்பட்டது.

நியாயமாக 2010 - 2012ஆம் ஆண்டோடு அவர் இசையமைப்பதை நிறுத்திவிட்டார்.ஆனால் இவர் பணம் காய்க்கும் மரம் என்பதால் அவ்வளவு லேசில் விடுவார்களா?

அய்யா நீ ஆணியே புடுங்க வேண்டாம, நீ எப்படி இத்தனை காலம் திரைமறைவில் ஒரு அமைப்பை உருவாக்கினாயோ , அதே போல் ஒரு கட்டமைப்பை உருவாக்குகிறோம் என்று ஒரு கார்ப்பரேட போல் உருவாக்கப்பட்டது தான் KMMC என்கிற இசைப்பல்கலைக்கழகம்.

இது  2014  ஆம் ஆண்டு சென்னை அரும்பாக்கத்தில் உருவாக்கப்பட்டது.

அதனை ஆரம்பித்ததன் நோக்கம்.

'இவ்வளவு நாள் உதவியாளர்களை வைத்து இசையமைத்து ஊரை ஏமாற்றியது போதும் இனி ஒரு கல்லூரி ஆரம்பித்து அதில்ஏழை குழுந்தைகளுக்கு இசை சொல்லிக்கொடுத்து அதில் இருந்து வெளியே வரும் இளைஞர்களை வைத்து ,அவர்களுக்கு ஒரு குழு அமைத்து , அதை வைத்து எல்லா படங்களுக்கு இசையமைத்து நாம் மேற்பார்வையாளராய் பெயரை மட்டும் போட்டு இருக்கலாம் என்று முடிவு செய்துவிட்டார்.

அந்த குழுவின் பெயர் தான் 

Qutub - E- Kripa( பெயரை கவனிக்கவும்)

ரஹ்மானை தமிழக்கு பெருமை சேர்த்தார் , பெருமைமிகு தமிழர் , ஆஸ்கர் தமிழன் என்று மார்தட்டிக்கொண்டு இருக்கும் கும்பலுக்கு தெரியாது அவர் கட்டும் கல்லூரியின் பெயரில் தமிழ் இல்லை, அவர் போடும் உடையில் தமிழ் இல்லை அவர் உருவாக்கிய இசைக்குழுவின் பெயரில் தமிழ் இல்லை, அவர் பேசும் மொழியில் தமிழ் இல்லை அவர் அமைக்கும் இசையில் தமிழர் மரபும், கலாசாரம் இல்லை.ஆனால் அவர் ஆஸ்கர் தமிழர்.?

இதனால் தான் அவர் எவ்வளவு இசையமைத்தாலும் அவருடைய இசை தமிழருக்கு , தமிழர் மரபை உணர்ந்தோருக்கும் அந்நியமாகவே இருக்கிறது என்று எப்போது சில ஜென்மங்களுக்கு புரியுமோ தெரியவில்லை.

இந்த Qutub - E - Kripa என்பவர்கள் யார் இவருடைய பங்கு என்ன? இவர்கள் வந்த பிறகு ரஹ்மானின் நிலை என்ன ?

அடுத்த பதிவில்.

(அலப்பறைகள் தொடரும்)


அல்லா ரக்கா ரஹ்மானின் அலப்பறைகள். பகுதி 7.

இந்திய இசையில் , சூப்பி இசையை கலப்பதற்கு ஏ.ஆர் ரகுமானின் மதநல்லிணக்கம் காரணமாக இருக்கலாம் இல்லையா?என்று சிலர் கேட்கலாம்.

2015 இல் முகமது நபி பற்றிய திரைப்படத்திற்கு இசையமைத்ததற்காக இஸ்லாமிய அமைப்புகள் அதன் இயக்குனரான மஜீத்  மஜீதிக்கும், ரஹ்மானுக்கும் fatwa பிறப்பித்து உத்தரவிட்டனர்.அதாவது கடும் கண்டனத்தை தெரிவித்தனர்.

ஏனெனில் 'முகமது' நபியை சினிமா என்கிற 'சைத்தானின்' வடிவத்தில் காண்பிப்பது மிகப்பெரிய 'ஹராம்" மற்றும் இஸ்லாத்தையே அவமதிக்கும் செயல் என்பதால்.

வலிக்காத மாதிரி முட்டுக்கொடுத்து சொல்வது போல் சொன்னால்,

"Fatwa' என்பது இஸ்லாத்தின் அடிப்படையை ஒழங்காக கடைபிடிக்காத தன்மை.

இந்த 'முகமது'நபி இறைவனின் தூதுவன்'திரைப்படத்தில் இந்த கதை , அது நடைபெறும் சூழல், அந்த மண்ணின் கலாசாரத்தின் படி இஸ்லாமிய இசையை தவிர வேறு எதுவும் வராது.ஆனால் இங்கே சரியாக ஏ.ஆர் ரகுமானால் வேறு இசையை கலக்காமல் இசையமைக்க முடிகிறது.

உண்மையில் மதநல்லிணக்கத்தை பற்றி அவருக்கு அக்கறை இருந்தால் இந்த படத்தில் தமிழ் இசையையே இல்லை இந்திய இசையையோ நுழைத்திருக்கலாம் தானே.

ஏன் செய்யவில்லை.? இஸ்லாத்தின் மீது அவ்வளவு பக்தி.ஆனால் இதே இந்து கலாசாரத்தை பற்றி படங்களில் மட்டும் நீங்கள் இஸ்லாமிய இசைக்கூறுகளை நுழைக்கலாமா? இந்த கேள்விக்கு கமண்டுகளில் கதறும் பச்சை சங்கிகளும் , பாவாடை சங்கிகளும் பதில் சொல்ல முடியுமா?

சரி, இந்த KM Conservatory விஷயத்திற்கு வருவோம்."கிவாஜா மொயினுதின் சித்தி' என்று சூப்பி இசைக்கலைஞரின் பெயரில் இது 2008 ஆரம்பிக்கபட்டாலும் அதன் முழு வடிவம் 2014 தான் உருவானது.அப்போதுதான் இதில் படிக்கும் மாணவர்களுக்கு டிகிரி கொடுக்கும் பணி ஆரம்பிக்கிறது.

அக்கல்லூரியில் இருந்து வெளியே வரும் மாணவர்களையும்( Alumini) அங்கே படிக்கும் மாணவர்களையும் வைத்து, அவர்களுக்கு வாய்ப்பு குடுக்குறேன் என்ற பெயரில் இவர் ஒரு இசைக்குழுவை ஆரம்பித்தார்.

இசைக்குழுவின் பெயர் Qutub- E- Kripa.இதன் நடத்துனர் ரஹ்மானின் மைத்துனர்.இந்த குழுவின் நோக்கமே சூப்பி , இஸ்லாமிய இசையின் கூறுகளை இந்திய திரைப்படங்களில் நுழைப்பது ஒரு புறம் , மறுபுறம் இசையமைப்பதை மறந்துவிட்ட ரஹ்மானுக்கு புதிய ஐடியாக்களை தருவதற்கு, ரஹ்மான் வளர்க்கும் பக்ரீத் ஆடுகளாக அவர்களை பயன்படுத்தி, தன் இருப்பை மீண்டும் இசைத்துறையில் நிலைநிறுத்துவதற்காகவுமே.

24, காற்று வெளியிடை , மாம்(இந்தி) , பொன்னியின் செல்வன் இதிலெல்லாம் இவர்களின் முழு பங்கு இசையில் இருக்கிறது.இவர்கள்தான் ஆரம்பம் முதல் இறுதிவரை உள்ள முழு இசையையும் இந்த படங்களுக்கு அமைப்பது.ரஹ்மானின் வேலை இது ஓக்கே ,இது ஓக்கே இல்லை என்று மேற்பார்வையிட்டு முடிவெடுப்பது மட்டுமே.கிட்டத்தட்ட கார்ப்ரேட் முதலாளி வேலைதான் இது.

இப்போது இவரின் மகள் கடீஜாவும் முழுக்க முழுக்க பெண்களை வைத்து ஒரு இசைக்குழுவை ஆரம்பித்து இருக்கிறார் பெயர் Rooh e Noor.இவரும் இசையமைப்பாளர் ஆக துடிக்கிறார் என்று கேள்வி அதற்குத்தான் இவரும் இந்த இசைக்குழுவை உருவாக்குகிறார் போலும்.

ரஹ்மானின் இசையை பெரும்பாலும் ரசிப்பது இந்துக்கள் ஏனெனில் இஸ்லாத்தில் இசை ஹராம்.

இவர் பிறந்தது தமிழ்நாட்டில், ஆனால் பெயர் வைப்பது அரேப்பிக்கில்.உடையணிவது ஏதோ ஆற்காடு நவாப் போல், 

ஆனால் இவர் தமிழர், தமிழரின் அடையளாம்.மதநல்லிணக்கவாதி, மழுமட்டை இத்யாதி இத்யாதி எல்லாம்..இதையெல்லாம் எதற்கு என்று கேட்டால் நாம் "சங்கி'களாம்.

சிலர் கேட்கலாம் அவர் இசைக்கல்லூரி ஆரம்பித்தது இஸ்லாத்தை நம் கலாசாரத்தில் நுழைப்பதற்காக என்று எப்படி சொல்லலாம் என்று?

இசை என்பதே ஹராமாக இருக்கும் ஒரு மதத்தில், இசைக்கல்லூரி வைப்பது எவ்வளவு பெரிய ஹராம்.ஆனால் இஸ்லாமிய கூறுகளை அல்லது அல்லாவை புகழக்கூடிய இசையை அமைக்கும் போது அது இஸ்லாத்தில் ஹலால் ஆக அனுமதிக்கப்படுகிறது என்னும் போது அந்த கோட்பாட்டில் இந்த இசைக்கல்லூரி தொடர்கிறது என்றால் அதைத்தானே இது செய்கிறது என்று அர்த்தம் தவிர இவர் இசையமைக்கும் எல்லா படங்களிலும் இதன் கூறுகள் பட்டவர்த்தனமாக பல்லிளிக்கும் போது இதை எப்படி நாம் சாதாரணமாக கடந்து செல்ல முடியும்.

இந்த இசைக்குழுவை வைத்து தான் 'MOM' என்கிற ஹிந்தி திரைப்படத்திற்காக தேசியவிருதும், பொன்னியின் செல்வனுக்காக தேசியவிருதும் வாங்கினார்.ஆனால் ரஹ்மானே வாங்கியது போல் அவர் ரசிகர்கள் இதை பெருமையாக சொல்வது எப்படி இருக்கிறது என்றால்.

மாப்பிள்ளை இவர்தான் ஆனால் இவர் போடும் முயுசிக்  

QUTUB E KRIPA வினுடையது..

(அலப்பறைகள் தொடரும்)

அல்லா ரக்கா ரஹ்மானின் அலப்பறைகள். பகுதி 8.

'போறாளே பொன்னுதாயி' பாடலை கேட்டு இருப்பீர்கள் அதில் வைரமுத்துவின் வரிகளை எடுத்துப்பார்த்தால் ,அது ஒரு சுத்தமான சூப்பி கஜல்.

ஓரு கிராமத்து பெண், ஏதோ தேர்ந்த கஜல் சிங்கரை போல பாடி இருப்பார்.உபயம் ஸவர்ணலதா..இது கிராமிய இசையயாம்.சரி அதை விடுவோம்.

இந்த பாடல் 1997 ஆம் ஆண்டு இந்தியாவின் 50 ஆண்டு கால சுதந்திர பொன்விழாவை முன்னிட்டு ரஹ்மான் உருவாக்கிய 'வந்தே மாதிரம் ' ஆல்பத்தில் Gurus of Peace டிராக்காக மறுபதிவு செய்யப்பட்டது.அதாவது மீண்டும் பயன்படுத்தப்பட்டது.

இதை பாடியவர் ஒரு பாகிஸ்தானிய இஸ்லாமிய சூப்பி இசைப்பாடகரான்' நுஸ்ரத் அலிக்கான்'.இந்த பாடல் சூப்பி பாடலாக இல்லையெனில் அவர் அந்த பாடலை பாட ஒத்துக்கொள்ளவே மாட்டார்.

ஆனால் அவர் சூப்பி இஸ்லாமிய பாடகர் என்பதை விட அவர் ஒரு பாகிஸ்தானி என்பது தான் முக்கியம்.ஏன் இந்தியாவில் இந்த 'சூப்பி' இஸ்லாத்தை சேர்ந்த பாடகர் ஒருவர் கூடவா இல்லை.

ஆனாலும் வீம்புக்காக ரஹ்மான் அந்த பாடலை அவர் தான் பாட வேண்டும் என்று அடம்பிடித்து பாட வைத்துவைத்தார்.

இந்தியாவை வெறுத்து சென்ற ஒரு நாடு,ஏன் இன்றளவும் இந்தியாவை வெறுக்கும் ஒரு நாட்டிலிருந்து ஒரு பாடகரை கூட்டி வந்த பாட வைத்தால் அதுவும் சுதந்திர பொன்விழா ஆண்டு ஆல்பத்தில் பாட வைத்தால், அது இந்தியர்களை குறிப்பாக,

இந்துக்களை எவ்வளவு புண்படுத்தும் என்று அவருக்கு தெரியாதா?

இப்படிப்பட்ட செயலை இந்திய இஸ்லாமியர்கள் யாராவது கண்டித்தார்களா?குறைந்தது இது இந்தியாவிலுள்ள இந்து - முஸ்லீம் இடையே பிரிவினையை உருவாக்கும் என்றாவது சொன்னார்களா?

ஆயிரம்தான் இருந்தாலும் இவரும் இஸ்லாமியர் தானே என்று அந்த மொத்த வெறுப்பும் இந்திய இஸ்லாமியர்கள் மீது போகாதா? இதைதான் ரஹ்மான் செய்தார்.

தான் சேர்ந்த மதத்திடம் தன் விஸ்வாசத்தை நிரூபிப்பதற்காக, தேசபக்தியை காவு கொடுத்தார்.

அப்துல கலாமை இந்தியர்கள் எல்லோரும் கொண்டாட காரணம் அவர் இந்திய இறையாண்மையை மதித்ததுதான்.அதனால் அவரின் மதத்தை மீறி அவரை ஏற்றுக்கொண்டார்கள்.

ஆனால் ரஹ்மான் அதை செய்யவில்லை.அதையும் மீறி மக்கள் அவரை கொண்டாடவே செய்தார்கள், குறிப்பாக வட இந்தியர்கள்.

அடுத்து 'தமிழணங்கு' விவகாரம்.

தமிழ் தாயை ,அன்னையை கோரமாக ஒரு அரக்கியை போல் வரைந்த ஓவியத்தை தமிழணங்காக அறிமுகப்படுத்தினார்.இது தமிழர்களை காயப்படுத்தாதா? இறைவன் உருவமற்றவன், உருவமோடு இருந்தால் அது சாத்தான் அதனால் தான் தமிழணங்கை அவர் பிசாசை போல் வரைந்ததை ஆமோதிக்கிறார் என்கிற பிரிவினைவாதத்தை தமிழ் இஸ்லாம் சமூகத்திற்கும் மற்ற சமூகத்திற்கும் இடையில் உருவாக்காதா?

அடுத்து தன்னுடைய பெர்சனல் வட்டத்தில், தான் விளம்பரங்கள் செய்த காலத்தில் , திரைப்படங்களுக்கு நீங்கள் இசையமைக்க வேண்டும் என்று ஊக்கமளித்து, உறுதணையாய் இருந்த பிறைசூடனை நெற்றியில் 'பொட்டு வைத்து வரக்கூடாது ' என்று சொன்ன அவர் அன்னையை கண்டித்தாரா..இல்லை தான் பணியாற்றும் ,எந்த படப்பூஜைக்காவது சென்று இருக்கிறாரா?.

நாத்திகரான கமல், சத்தியராஜ் கூட தனக்கு நம்பிக்கை இல்லாமல் அதற்கு செல்வார்கள் காரணம் தொழில் மீதுள்ள பக்தி மற்றும் அடுத்தவர்களின் நம்பிக்கையை கொச்சைபடுத்தாமல் இருப்பது.

இப்படி எல்லாவற்றையும் ஒரு பொருட்டாக மதிக்காமல் தன் மதபற்றை அதுவும் தன்னுடைய 23 வயதில் மாறிய மதத்திற்காக, தான் பிறந்த, இருபது வருடங்கள் இருந்த மதத்தையும்,ஒட்டுமொத்த இந்துக்களையின் நம்பிக்கையை புண்படுத்தினால் பின்பு இவரை மதவெறியராக , தேசவிரோதியாக அடையாளப்படுத்தாமல் வேறு எப்படி அடையாளப்படுத்துவது.

இவரை 'இஸ்லாமியர்' என்கிற ஒரே காரணத்தால் ஆதரித்தால் உண்மையான இஸ்லாமியர்கள் மீது அவப்பெயர் விழாதா?இதனால் இந்துக்களுக்கு இந்திய இஸ்லாமியர்கள் மீது அவநம்பிக்கை வராதா?.

உண்மையில் ரஹ்மான் இந்துவும் இல்லை, இஸ்லாத்தை சேர்ந்தவரும் இல்லை, தமிழனும் இல்லை இந்தியனும் இல்லை.தன்னுடைய தேவைக்காக எதையும் பயன்படுத்தி எக்காலமும் உச்சாணிக்கொம்பில் இருந்துகொண்டு  பணத்தையும் , புகழையும் அடையத்துடிக்கும் சாத்தானின் காரியதரிசி.

நீங்கள் ஏ.ஆர் ரஹ்மானின் இசையை ரசியுங்கள் , ரசிக்காமல் போங்கள் அது அவரவர் விருப்பம்.ஆனால் அவரை அடக்கமானவர், அன்பானவர் , பண்பானவர், அமைதியானவர், சூது வாது இல்லாதவர், அன்பின் வழி நடப்பவர், இந்திய இசையின் இறைவன், தமிழ் இசையின் தவப்புதல்வன் என்று இனி இணையத்தில் யாராவது ஒருவர் பேசினால் இந்த எட்டுபகுதிகளையும் ஞாபகம் வைத்து கொள்ளுங்கள்.அவருக்கு அனுப்பி வையுங்கள்.

( முற்றும்)

அல்லா ரக்கா ரஹ்மானின் அலப்பறைகள் -சிறப்பு பகுதி.


'ரஹ்மான்' என்னும் தனிப்பட்ட மனிதரின் போலியை கிழித்தால் இங்குள்ள இஸ்லாமியர்கள் கோப்படுகிறார்கள்.ஏதோ அவர்களுக்கு எதிராக நான் பதிவிடுவது போல்.

ஆனால் அவர்கள் கோபப்படுவேண்டியது ரஹ்மான் மீதுதானே ஒழிய அதை சுட்டிக்காட்டும் எங்களை போன்றோர் மீது அல்ல.

தங்களுடைய மார்க்கத்தின் பேரில் 'ரஹ்மான்' என்கிற போலி ஒளிந்துகொண்டு அவர்களின் மதத்திற்கு எதிரான செயல்களை செய்து, உண்மையான இஸ்லாமியர்களுக்கு 'கெட்ட பெயர்' உண்டாக்கி அதே போல் இந்துக்களின் மனதை புண்படுத்தி அவர்களிடம் உண்மையான இஸ்லாமியர்களுக்கும், இஸ்லாத்திற்கும் கெட்ட பெயர் வாங்கி கொடுத்து இரு மதத்துக்கு இடையே கலவரத்தையும், கசப்புணர்வையும் உண்டாக்குகிறார் என்பதை உண்மையான இஸ்லாமியர்கள் புரிந்து அவர் மேல் இஸ்லாமிய சட்டத்தின்( ஷரியா) படி நடவடிக்கை எடுக்க  வேண்டும்.

உண்மையான மதநல்லிணக்கம் சாத்தியபடவேண்டுமெனில் இது போன்ற போலிகளை வெறுத்து ஒதுக்க வேண்டும்.அவரின் போலித்தனத்திற்கு இதோ இன்னொரு சான்று.

இசை அமைப்பதே பாவம் அதுவும் அல்லாவை தவிர பிற உணர்வு எழுச்சிக்கு இசையமைப்பது அதைவிட பாவம் அதையும் திருட்டுதனமாக இன்னொருவரிடம் இருந்து பெற்று அதற்கு தன் பெயரை போட்டு கொள்வது என்பது பாவத்திலும் பாவம்.

ஆஸ்கர் விருது பெற்ற "ஜெய் ஹோ ' பாடலுக்கு இசையமைத்தது சுக்வீந்தர் சிங்க தான் என்று அந்த விஷயத்தை ராம்கோபால் வர்மா ஊடங்கங்களில் சொன்னதும் ஆளாளுக்கு ரஹ்மானை போட்டு பொளக்க ஆரம்பிக்க.. ரஹ்மானின் PR Team அதை எப்படியோ பூசி மெழுகி, அவர்களிடம் கெஞ்சி கூத்தாடியோ இல்லை பணம் கொடுத்தோ இல்லை சட்டரீதியாக மிரட்டியோ தற்போது ராம்கோபால் வர்மாவை தான் சொன்னது பொய் என்று வாபஸ் பெற வைத்துவிட்டார்கள்.

ஆனால் காலத்தின் கோலம் பார்த்தீர்களா.சுக்வீந்தர் வாயாலேயே இந்தி 'தால்' பட பாடலை அவர்தான் உருவாக்கினார் என்று அவரையே பேச வைத்துவிட்டது..

பாருங்கள் 'ரஹ்மான்' என்கிற போலியின் திருட்டுதனத்தை..

அல்லாவே அவரின் முகத்திரையை கிழிக்கிறார்.தன் சொந்த மதத்திற்கே உண்மையாய் இல்லாமல் மதம் மாறியவர் இன்னொரு மதத்திற்கு எப்படி உண்மையாய் இருப்பார்.

எல்லா புகழும் இறைவனுக்கே.. 


https://www.facebook.com/search/top/?q=%E0%AE%85%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%20%E0%AE%B0%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%20%E0%AE%B0%E0%AE%B9%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%85%E0%AE%B2%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%20

No comments:

Post a Comment

A.R.ரஹ்மான் அலப்பறைகள்

  அல்லா ரக்கா ரஹ்மானின் அலப்பறைகள். பகுதி -1  நாம் நகைக்கடைக்கும் , புடவைக்கடைக்கும் நம் வீட்டின் பெண்மணிகளோடு பல தடவை சென்றிருப்போம்.  அங்க...