Friday, January 9, 2026

ஜனநாயகன் படக் கதை மூலம் என சில்லறைகள் கூவல்

 ஜனநாயகன் படம் விஜய் நடித்தது. ஜனநாயகன் படம்வெளியாவதில் உள்ள பிரச்சனை பாஜகவும், விஜய்யும் சேர்ந்து நடிப்பது. விளக்கமாக இதற்கு முந்தைய பதிவில் உள்ளது.இது ஒருபுறம் இருக்கட்டும். Thanks -சில்லறைகள் கூவல்

ஜனநாயகன் கதை என்பது புதிதல்ல. அது தெலுங்கில் பாலகிருஷ்ணா நடித்து 2023 ல் வெளிவந்த பகவந்கேசரி என்பது பலர் அறிந்த ஒன்று தான்.
பகவந்கேசரியும் கூட தமிழில் 1971 ல் வெளிவந்த, நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடித்து வெளிவந்த பாபு என்ற படத்தின் கதை தான் என்ற வரை காலையில் பதிவிட்டிருந்தேன்.
அடுத்து ஒரு தகவலை மூத்த பத்திரிக்கையாளர் தோழர் விஜயசங்கர் அலைபேசியில் அழைத்துச் சொன்னார்.
கேரளாவில் 1965 ல் பிரேம் நசீர், கே.ஆர்.விஜயா நடித்த ரிக்‌ஷாக்கார்ர் ஒருவரின் வாழ்க்கை மற்றும் சமூகப்பிரிச்சனையை வைத்து கே.எஸ்.சேதுமாதவனால் இயக்கப்பட்ட"ஓடையில் நின்னு" என்ற படத்தின் கதை தான் பாபுவாக தமிழில் வந்துள்ளது.
ஓடையில் நின்னு என்ற படத்தின் கதையானது எழுத்தாளர் பி.கேசவதேவ் என்பவரால் 1940 ல் வெளியான நாவல். இதை வைத்தே ஓடையில் நின்னு வெளிவந்துள்ளது.
ஓடையில் நின்னு (மலையாளம்)
பாபு (தமிழ்)
பகவந்கேசரி (தெலுங்கு)
ஜனநாயகன் என்ற வகையில் வரலாறு போகிறது.
இப்ப யாரு ஜனநாயகன்னு சொல்லுங்க?
கேசவ்தேவும்-பிரேம்நசீரும் தான்.

No comments:

Post a Comment