சீன கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்கள் இந்தியா வந்துள்ளார்கள்.
இதில் சீனாவை ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியின் உயர்மட்டக் குழுவினர் வந்துள்ளனர்.
இவர்கள் தலைநகர் டில்லியில் சீன அமைச்சர் சன் ஹியான் தலைமையிலான நிர்வாகிகள் பா.ஜ.க தலைவர்களை நேற்று முன்தினம் சந்தித்துப் பேசினார்கள்.
இரண்டு கட்சியினரும் சந்தித்தார்கள் - பேசினார்கள்.
அடுத்து நேற்று நடந்ததுதான் விசேஷம்.
சீன கம்யூனிஸ்ட் தலைவர்கள் - RSS அமைப்பின் தலைவர்களை சந்தித்து உள்ளார்கள்.
RSS - பொதுச் செயலாளர் தத்தாத்ரேய ஹொஸபலேவை சீன கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்கள் சந்தித்து உள்ளார்கள்.
அரைமணி நேரம் நடந்த சந்திப்பில் - அரசியல் உட்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
RSS அமைப்பு எப்படி 100 ஆண்டுகளாக வெற்றிகரமாகச் செயல்படுகிறது? அதன் கட்டமைப்பு எப்படி உள்ளது? அந்த அமைப்பு 100 ஆண்டுகளாக வெற்றிகரமாக செயல்படுவதன் ரகசியம் என்ன?...
இதை எல்லாம் சீன கம்யூனிஸ்ட் தலைவர்கள் ஆர்வத்துடன் கேட்டறிந்தார்கள்.
இந்த சந்திப்பையும் சீன கம்யூனிஸ்ட்களே வலியுறுத்தி வேண்டிக் கேட்டதாக செய்தி!
No comments:
Post a Comment