Thursday, January 22, 2026

உலகின் No.2 முதலீட்டுத் தேர்வு நாடு இந்தியா தான்

 இந்தியா வலிமையான பொருளாதாரக் கட்டமைப்பைக் கொண்டுள்ளது, உலகின் சிறந்த நாடாக வளர்ந்து வருகிறது என்ற உண்மையைப் புரிந்து கொள்ள கட்சி சார்பற்று ஒரு மாணவன் போல எப்போதும் வாசிக்க வேண்டும்.

 

இந்தியாவில் இருந்து FII பணத்தை வெளியே எடுத்துச் செல்கிறார்கள். யாரும் மறுக்கவில்லை. FII மட்டும் தான் அளவுகோலா ? FPI, DII & FDI என வேறு முதலீடுகள் குறித்து இவர்கள் கருத்து என்ன ?
● முன்பு அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் முதலீட்டு விகிதம் அதிகமாக இருந்த நிலை (16.7%) மாறி இன்று உள்ளூர் நிறுவன முதலீட்டாளர்கள் (DII) பங்கு இந்தியப் பங்குச்சந்தையில் அதிகரித்துள்ளது. (18%) #ChakkravarthyMariappan
● அதற்குத் தான் Vostro Account, Rupee focus, BRICSPay, interopersble UPI, CIPS, mBridge என்று பல திட்டங்கள் பரிசோதனையில் உள்ளன.
● VISA, MasterCard நிறுவனகள் ஜன் தன் வங்கிக் கணக்குகளில் RuPay கார்டு மட்டுமே கொடுக்கிறார்கள் என்று அமெரிக்க அரசு மூலம் அழுத்தம் கொடுத்தார்கள். NPCI மூலம் வடிவமைத்த RuPay கட்டணத்தில் யார் வேண்டுமானாலும் வரலாம் என்று நாம் பதில் சொன்ன போது முகத்தில் ஈயாடவில்லை.
● இன்று உலகளாவிய வெள்ளி உற்பத்தியில் (சுரங்கத்தில் இருந்து எடுத்து சுத்தகரிக்கப்பட்ட கட்டிகள்) 25% த்தை இந்தியா இறக்குமதி செய்கிறது. அதில் எலக்ட்ரிக் வாகனங்கள், சோலார் பேனல்கள் போன்ற தேவைக்கு அதிகமாக நாம் ஆபரணம், முதலீடு என்று வாங்குகிறோம்.
● இலண்டன் தங்க வணிகர்கள் சங்கம் (London Bullion Market Association) மற்றும் அமெரிக்காவின் Comex இரண்டின் வெள்ளிக் கையிருப்பு வெகுவாகக் குறைந்து வருகிறது என்று தகவல்கள் வருகின்றன.
● இந்திய ரிசர்வ் வங்கியின் SGB - தங்க பாண்டுகள் போல Paper Silver முதலீட்டாளர்களுக்கு வெள்ளி உலோகத்தைக் கொடுக்க இயலாமல் Redemption நேரத்தில் ரொக்கமாகச் செட்டில் செய்கிறார்கள் என்றும் தகவல்.
● டாலரின் ஆதிக்கத்தை கட்டுக்குள் கொண்டு வர தங்கம், வெள்ளி, கச்சா எண்ணெய் போன்ற Asset class இல் சேமிப்பு, பொதுவான கரன்சியில் வர்த்தகம் என்று பிரிக்ஸ் நாடுகள் அடி எடுத்து வைக்கின்றன.
● ரிசர்வ் வங்கி நேற்று e-Rupee (டிஜிட்டல் கரன்சி) மூலம் பிரிக்ஸ் நாடுகள் டிஜிட்டல் முறையில் பரிவர்த்தனை செய்ய அனுமதித்துள்ளது. ஒரு சீனா யுவான் ரியால் அல்லது திர்ஹாமுக்கு சமமான இந்திய ரூபாயை டிஜிட்டல் முறையில் வரவு, செலவு கணக்கில் கொண்டு வருவோம். இதில் டாலர் தேவை + பரிமாற்றக் கட்டணம் குறையும். SWIFT நெட்வொர்க்கையும் பை பாஸ் செய்வோம். #ChakkravarthyMariappan


No comments:

Post a Comment

சனாதனம் என்றால் தமிழக அரசின் பிளஸ் டூ பாடம் - திருவள்ளுவர் கூறுவதையே கூறுகிறது

  தமிழ்நாடு அரசின் மேல்நிலை இரண்டாம் ஆண்டு (பிளஸ் டூ) பாட புத்தகத்தில் பக்கம் 58-இல், "இந்து சமயம், சனாதன தருமம், வேத சமயம், வைதிக சமயம...