Wednesday, September 9, 2015

Ancient Chera Vanchi is Karur.சங்க கால வஞ்சி - கரூர்

Cheras of the Sangam Tamil period had their Capital at Vanchi, which is also called Karur.


கருவூர்ச் சேரர் தலைநகரம்

பல்வேறு ஆழ்வார்களாலும், சங்கப்புலவர்களாலும் பாடப்பெற்ற தலமாகவும் கரூர் விளங்குகிறது. சிலப்பதிகாரத்தில் கருவூர் பற்றிய வரலாற்று தகவல்கள் இடம் பெற்றுள்ளன. கரூர் கொங்கு நாட்டின் ஒரு பகுதியாகவும் அழைக்கப்படுகிறது.
கரூர் பண்டைய காலங்களில் மிகவும் முக்கியமான அயல்நாட்டு வணிகத்தலமாக விளங்கியுள்ளது. அகழ்வாராய்ச்சியின் போதுரோமானிய நாணயங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
ஆன்பொருணை என்றழைக்கப்பட்ட அமராவதி நதிக்கரையிலேயே வஞ்சி மாநகர் அமைக்கப்பட்டதாக வரலாறு கூறுகிறது.மேலும் சேர மன்னன் சேரன் செங்குட்டுவன் வஞ்சி மாநகரை தலைநகராகக் கொண்டு ஆண்டதாக சிலப்பதிகாரம் கூறுகிறது. இவ்வஞ்சி மாநகரே கருவூர் என்றழைக்கப்பட்டு கரூர் என தற்காலத்தில் அழைக்கப்படுகிறது. கரு+ஊர் (கருவூர்) என்பது கரூர் என மருவியது.
கரூர் அருகே உள்ள ஆறுநாட்டார் மலையில் கரூரை ஆண்ட சேர மன்னர்களின் பெயர்கள் அடங்கிய கல்வெட்டு கிடைக்கபெற்றுள்ளது.
பல்வேறு அகழ்வாராய்ச்சிகளின் மூலமும், கல்வெட்டுகளின் மூலமும் கரூர் சங்ககால சேரர்களின் தலைநகராக விளங்கியது நிரூபிக்கபட்டுள்ளது. கரூர் சோழர்களின் தலைநகரமாக விளங்கியுள்ளது. அங்குதான் சோழர்கள் கரூவூலம் வைத்து செயல்பட்டிருக்கின்றனர்.

Chera Rulers:

Karur was ruled by different Chera kings. Kongu Cheras (capital:Karur (Vanji), ruling nearly the whole of old Kongu – lineage unclear- Cheran kootam) [2]
Both Archaelogy and History says that Vanchi of Cheras is Karur.
கொங்குநாட்டுக் கருவூர் சேரநாட்டு வஞ்சியின் முற்றமாக விளங்கிற்று. [புறமதிலுக்கு வெளியே வஞ்சிமரம் இருந்ததால் இந்த ஊர் வஞ்சி எனப் பெயர்பெற்றது. வஞ்சியில் உள்ளிவிழா சிறப்பாக நடைபெறும்.  இளஞ்சேரல் இரும்பொறை, கோதை ஆகிய சேர வேந்தர்களின் தலைநகரமாக வஞ்சி விளங்கியது. சேரமான் பாலைபாடிய பெருங்கடுங்கோ, புகழூர்த் தமிழி (தமிழ்-பிராமி) கல்வெட்டில் குறிப்பிடப் பட்டுள்ளவன். இவனது ஆட்சிக்காலத்தில் பொருநை ஆறு பாயும் கொங்குநாட்டுக் கருவூரும் வஞ்சி என்னும் பெயரால் வழங்கப்பட்டது.


கரூர் - கருவூர் - வஞ்சி - கோருவூரா
தமிழகத்தில் கிடைத்த கிரேக்கக் காசுகளின் பழமை பொ.மு. 300 வரை செல்லும். மேலும், கிடைத்துள்ள காசுகள் பல எந்த நகரத்தில் அச்சிட்டது என்பதைக் கூட அறிய முடிகிறது. கரூர் நகரிலே அதிகக் காசுகள் கிடைத்தது குறிப்பிடத்தக்கது. இக்காசுகளைக் கொண்டு கிரேக்கத் தீவுகளான ரோட்சு, கிறீட்சு, திரேசு, தெசிசு போன்றவற்றுக்கும் தமிழகத்துக்கும் இருந்த வணிகத்தொடர்புகளையும் கிரேக்க நாகரிக கடவுளர்களையும் அறிய முடிகிறது. மேலும், கிரேக்க மன்னர் அலெக்சாண்டர் மரணத்துக்குப்பின் டைகிரிசு நதியில் ஆதிக்கம் செலுத்திய செலியூசிட் வம்சத்தவர் வெளியிட்ட பத்து காசுகள் கரூர் நகர அமராவதி ஆற்றங்கரையில் கிடைத்துளன . இவற்றைக் கொண்டு கரூர் நகரை மையமாக கொண்ட வர்த்தகத்தில் கரூரிலிருந்து சேரர் துறைமுகம் முசிறிக்கு பொருட்கள் கொண்டு சென்று பின் மெசொப்பொத்தேமியா நகரங்களுக்கு எடுத்துச் சென்றனர் என்ற கருதுகோளை உறுதிப்படுத்தினர்
.....
தமிழகத்தில் கிடைத்துள்ள ரோமானியர்காசுகள் - ரோமானியர்கள் (பொ.ஆ.மு. 1 ஆம் நூ. – பொ.ஆ. 3 ஆம் நூ): பொ.ஆ.மு. 1-3 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ரோமானியர் காசுகள் தமிழகத்தில் பரவலாக்க் கிடைக்கின்றன. இது சங்ககாலத் தமிழருக்கும் ரோமானியருக்கும் இடையே நிலவிய கடல் சார் வணிகத்திற்கு மிகச் சிறந்த சான்று ஆகும். தமிழர்கள் கடல் சார் வணிகத்தில் சிறந்து விளங்க தமிழ் நாட்டின் இயற்கையமைப்பும் ஒரு முக்கிய காரணி என்பது நாம் அறிந்ததே. தொன்மைக் காலந்தொட்டே இவர்கள் கடலின் வலிமையை உணர்ந்து அதை அடக்கி ஆண்டுள்ளனர் என்பதற்கு “நளியிரு முந்நீர் நாவாய் ஓட்டி” என்ற புறப்பாடல் வரிகளே சான்றாக உள்ளன. தமிழர்கள் கடலோரங்களில் மட்டுமின்றி நடுக்கடலிலும் பயணம் செய்துள்ளனர். ‘நாவாய்’ என்ற இந்த லத்தீனிய சொல்லே தமிழருடன் யவனர்கள் கொண்டுள்ள கடல் வாணிகத் தொடர்பினை விளக்கும் சான்றாக உள்ளது.
“யவனர் தந்த வினைமாண் நன்கலம் பொன்னொடு வந்து கறியொடு பெயரும்” என்று சங்க இலக்கியமான புறநானூறும் சான்று பகர்கிறது. யவனர்கள் என்ற சொல் பொதுவாக அந்நியர்களைக் குறித்தாலும் பெரும்பாலும் அது கிரேக்க, ரோமானியர்களையே குறித்து நின்றது. ரோமானியரது கலமானது தமிழ்நாட்டின் மிளகை எடுத்துச் சென்று ரோம நாட்டின் பொன்னை இங்கு கொண்டு வந்து சேர்த்ததை மேற்சுட்டிய புறநானூற்றுப் பாடல் சுட்டுகிறது. மிளகு வணிகமே முற்காலத் தமிழ் வணிகர்களுக்குப் பெருஞ் செல்வத்தைக் கொடுத்துள்ளது. ரோமப் பேரரசிற்கும் இந்தியாவிற்கும் இடையே சென்ற கப்பல்களின் சரக்கில் முக்கால் பகுதி மிளகும் வாசனைத் திரவியங்களும், அரிய கல்மணிகளுமாகவே இருந்தன. இவை தென்னிந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்பட்டன. இம்மிளகு மருந்தாகவும் உணவாகவும் பயன்படுத்தப்பட்டதால் ரோம் நகரில் ஒரு பவுண்டு 15 தினாரி வரை விற்கப்பட்டது.
தமிழகத்துடனான ரோமானிய வணிகம் பொ.ஆ.மு. 1 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதி வரையில் செழிக்கவில்லை. இக்கால வரம்புக்கு முற்பட்ட ரோம மன்னர்களின் நாணயங்கள் தமிழ்நாட்டில் இதுவரையில் கிடைக்கவில்லை. ரோமாபுரியின் அகஸ்டஸ் மன்னன் (பொ.ஆ.மு. 34) காலத்திலிருந்தே தமிழகத்துடனான நேர்முக ரோமானிய வணிகத் தொடர்பு கிட்டியுள்ளது. ரோமானிய நாட்டுடனான தமிழரது வாணிகம் பேரரசின் ஆதரவின் கீழ் செழித்து வளர்ந்தது. ரோமிற்கு பாண்டிய மன்னனின் தூதுவன் சென்றுள்ளான். மதுரையிலும் யவனர்களுக்கான தனிச்சேரி இருந்துள்ளது.
ரோமாபுரி வணிகம் சிறந்து விளங்கிய காலத்தில் அரிக்கமேட்டில் பண்டகச் சாலையொன்றும், விற்பனைச் சாலையொன்றும் நடைபெற்றுதையும், ரோம மட்கலங்கள் இங்கு கிடைப்பதையும் அகழாய்வுகள் மெய்பித்துள்ளன. ரோமிலிருந்து ஆண்டுதோறும் 6,00,000 பவுன் மதிப்புள்ள தங்கம் தமிழரின் வாணிகத்திற்காகச் செலவானது. இவ்விதம் ரோமாபுரியின் செல்வம் தமிழகத்திற்குச் சென்றதையும் தமிழகப் பண்டங்களில் ரோமருக்கிருந்த ஆரா வேட்கையையும் மக்கள் சிலரால் கடுமையாகக் கண்டிக்கப்பட்டது.
ரோம பேரரசன் நீரே (பொ.ஆ. 68) காலமான பிறகு வெஸ்பேசியன் அரசேற்றான். இவன் எளிமை விரும்பி. அதனைத் தொடர்ந்து நிலவிய அரசியல் குழப்பங்கள் போன்ற பல காரணங்களால் தமிழக ரோமானிய வணிகம் சிறிது காலம் குன்றியது. பொ.ஆ. மூன்றாம் நூற்றாண்டிற்குப் பிறகு வெளியிடப் பெற்ற நாணயங்கள் தமிழகத்தில் கிடைக்கவில்லையென கே.கே.பிள்ளை குறிப்பிடுவதுடன் இந்த ஒரு காரணத்தை மட்டுமே கொண்டு வாணிகம் அறவே அற்றுவிட்டது என்றும் கூற இயலாது. பேரரசன் கான்ஸ்டன்டைன் (பொ.ஆ. 324-337) காலத்தில் மீண்டும் தமிழகத்துடனான வணிகம் தொடர்ந்து வந்துள்ளது என்றும் உரைக்கின்றார்.
இக்கருத்தை உறுதி செய்யும் சான்றாக பிற்காலத்தைச் சேர்ந்த ரோமானிய செப்புக் காசுகளை ஆர்.கிருஷ்ணமூர்த்தி கண்டறிந்து தெளிவுற விளக்கியுள்ளார். இவை மதுரை, திருக்கோயிலூர், கரூர் போன்ற ஊர்களிலிருந்து கிடைக்கப் பெற்றுள்ளன.
ரோமானியர்களது காசுகளைக் குடியரசு காசுகள், பேரரசுக் காசுகள் என இரு வகைப்படுத்தலாம்.
குடியரசு காசுகள்:
குடியரசு காசுகளில் தொன்மையானதாக்க் கிடைக்கப் பெறுவது சி.நேவியஸ் பல்புஸ் (C.NAEVIOUS BALBUS) என்ற வெளியீட்டாளரின் பெயர் பொறித்த காசுகளாகும். இவ்வகைக் காசுகளில் பெரும்பாலும் ஒருபுறம் வீனஸ், புவன் போன்ற கிரேக்க கடவுளர்களின் தலையும், பின்புறம் ஒரு சில காசுகளில் நின்ற நிலையிலுள்ள பருந்து, அதன் கீழே அரசனின் பெயர் பொறிக்கப் பெற்றுள்ளது. கரண்டி, ஜாடி, மந்திரக்கோல் போன்றவையும் காணப்பெறுகின்றன. இக்காசுகளில் DICTITER COSTER, CASSIVS, MAXIM PONTIF, AVGVR இது போன்ற வாசகங்கள் இடம்பெறுகின்றன.
பேரரசு காசுகள்:
ரோமானியப் பேரரசு காலக் காசுகளில் அகஸ்டஸ், டைபீரியஸ் ஆகியோரின் காசுகளே அதிகம் கிடைத்துள்ளன. டைபீரியஸின் காசுகள் மக்ஸிம் பாண்டிஃப் (maxim pontiff) வகைக் காசுகள் என்றழைக்கப் பெறுகின்றன. மற்ற அரசர்களில் கயஸ் (Gaius) கிளாடியஸ் நீரோ வெஸ்பேசியன், டோமிதியன் (Domitian) அந்டோநியஸ் பயஸ் (antoninus pius) மார்க்கஸ் ஆரேலியஸ் (marcus aurelius) செப்திமியஸ் செவெரெஸ் (septimius severus) கரகல்லா ஆகியோரது காசுகள் குறைந்த அளவிலும் கிடைத்துள்ளன. பொ.ஆ.மு. 100லிருந்து பொ.ஆ. 300 வரைக் கிடைக்கும் ரோமானியர்களது காசுகள் தங்கம், வெள்ளி உலோகத்தாலானதாகவே உள்ளன. குறிப்பாகத் தங்க்க்காசுகளே அதிகம் கிடைத்துள்ளன. இவை உலோக மதிப்புக் கருதி தமிழக வணிகர்களால் வரவேற்கப் பெற்றுள்ளன. ஆனால் பொ.ஆ. 300க்குப் பிறகு தமிழகத்தில் கிடைக்கும் (கரூர், திருக்கோயிலூர் போன்ற இடங்களில்) ரோமானியர்களது காசுகள் செப்பு உலோகத்தாலான குவியல்களாகவே கிடைத்துள்ளன. இது கொண்டு ரோமானியர்களது குடியிருப்புகள் தமிழகத்தில் இக்காலக் கட்டத்தில் நிகழ்ந்துள்ளதாகக் கருதலாம்.
சின்னங்கள்:
ரோமானியர்களது காசுகளில் வீனஸ், புவன் போன்ற அவர்களது தெய்வங்களோ அல்லது அந்தந்த அரசர்களின் தலை உருவத்துடன் எழுத்துப்பொறிப்புகளும் இடம்பெறுகின்றன.
தமிழகத்தில் ரோமானியக் காசுகள் கிடைக்கும்
இடங்கள்:
தமிழகத்தில் அகிலாண்டபுரம், ஆனைமலை, கல்லகிணர், சாவடிப்பாளையம், திருப்பூர், பூதி நத்தம், பெண்ணார், பொள்ளாச்சி, வெள்ளலூர் (கோயமுத்தூர்), உத்தமபுரம் (மதுரை), கத்தாங்கண்ணி (ஈரோடு), கரிவலம் வந்த நல்லூர் (திருநெல்வேலி), கரூர், கலையம்பத்தூர் (திண்டுக்கல்), காருகாக்குரிச்சி (புதுக்கோட்டை), கிருஷ்ணகிரி (தருமபுரி), கோனேரிப்பட்டி (சேலம்), சொறையப்பட்டு, தொண்டைமாநத்தம் (கடலூர்), பிஷப்டவுன் (உதகமண்டலம்), , மாம்பலம் (சென்னை), மதுரை போன்ற இடங்களில் ரோமானியக் காசுகள் கிடைக்கின்றன.
ரோமானிய போலிக் காசுகளும் வெட்டுக் காசுகளும்: (Imitaiton & slash coins)
ரோமானியர்களது காசுகளைப் போல் போலியாகச் செய்யப் பெற்ற காசுகள் இந்தியா முழுவதும் தமிழகத்திலும் காணப்பெறுகின்றன. அரசனின் காசின் பின் பக்கத்தில் மற்றொரு அரசனின் உருவம் பொறிக்கப் பெற்ற காசுகளும், சரியாக அரசனின் முகப்பகுதியில் வெட்டுக் குறியுள்ள காசுகளும் தமிழகத்தில் கிடைக்கின்றன. இவ்விதக் காசுகள் ரோமானிய காசுகளின் உலோக மதிப்புக்கருதி, குறைந்த மாற்றுள்ள காசுகள் புழகத்தில் விடுவதற்காக அச்சிடப் பெற்றிருக்கலாம் என்ற கருத்தும் நிலவுகிறது.
அந்நியரது காசுகளைப் புழகத்திலிருந்து நிறுத்துவதற்காக இவ்விதம் வெட்டுக்குறிகள் இடம்பெற்றுள்ளதாக ஒரு சிலரும், தங்கத்தின் மதிப்பை சோதிக்கவே இவ்விதம் இடம்பெற்றுள்ளது என ஒரு சிலரும் கருதுகின்றனர்.
கருவூரை 150 கிரேக்க புலவர்கள் தங்கள் பாடல்களில் ”கோருவூரா (Korevora)” என்று குறிப்பிட்டு தமிழகத்தின் சிறந்த வாணிப மையம் என்று குறிப்பிட்டுள்ளனர்.
Source : Ancient Tamil Civilization
தமிழகத்தில் ரோமானியக் காசுகள் கிடைக்கும் இடங்கள்:
தமிழகத்தில் அகிலாண்டபுரம், ஆனைமலை, கல்லகிணர், சாவடிப்பாளையம், திருப்பூர், பூதி நத்தம், பெண்ணார், பொள்ளாச்சி, வெள்ளலூர் (கோயமுத்தூர்), உத்தமபுரம் (மதுரை), கத்தாங்கண்ணி (ஈரோடு), கரிவலம் வந்த நல்லூர் (திருநெல்வேலி), கரூர், கலையம்பத்தூர் (திண்டுக்கல்), காருகாக்குரிச்சி (புதுக்கோட்டை), கிருஷ்ணகிரி (தருமபுரி), கோனேரிப்பட்டி (சேலம்), சொறையப்பட்டு, தொண்டைமாநத்தம் (கடலூர்), பிஷப்டவுன் (உதகமண்டலம்), , மாம்பலம் (சென்னை), மதுரை போன்ற இடங்களில் ரோமானியக் காசுகள் கிடைக்கின்றன.
தமிழனின் கலச்சாரம் கொடுமணல் அகழாய்வு - 2013


உலகத்தில் தமிழனுக்கு என்று ஒரு வரலாறு உண்டு. ஆனால், ஏனோ அந்த வரலாற்றை மறந்ததால் நமது அறிவையும், பண்பாட்டையும் இழந்து வருகிறோம். இதோ பாண்டிச்சேரியில் அமைந்துள்ள மத்திய பல்கலைக்கழகத்தின் வரலாற்றுத்துறை கடந்த இரு மாதங்களாக கொடுமணல் என்ற சிற்றூரில் தனது அகழாய்வுப் பணியை மத்திய தொல்பொருள் ஆய்வுத்துறை, பலகலைக்கழக நான்கு குழு மற்றும் செம்மொழி உயராய்வு நிறுவனம் ஆகியவற்றின் உதவியுடன் பேராசிரியர் கா.ராஜன் தலைமையில் மேற்கொண்ட ஆய்வில் தமிழனின் பண்பாடு கலச்சாரம் விவரிக்கின்றன.
ஈரோடு மாவட்டம் பெருந்துறை வட்டம் சென்னிமலைக்கு மேற்கே 15 கி.மீ தொலைவில் நொய்யல் நதியின் வடகரையில் அமைந்துள்ள இவ்வூர் சங்ககாலத்தில் சிறப்புற்றிருந்த வணிகப் பெருநகரமாகும். சங்க இலக்கியமான பதிற்றுப்பத்தில் இவ்வூர் கொடுமணம் என்றழைக்கப்படுகிறது. சங்ககாலத்தில் அரிய கற்களால் ஆன அணிகலங்களை உற்பத்தி செய்யும் தொழிற்கூடமாக விளங்கியிருந்ததை “கொடுமணம் பட்ட ...... நன்கலம்” (பதிற்றுப்பத்து 67) எனக் சங்கப் புலவர் கபிலரும், “கொடுமணம் பட்ட வினைமான் அருங்கலம்” (பதிற்றுப்பத்து 74) என அரிசில்கிழாரும் குறிப்பிடுவதன் மூலம் அறிய முடிகிறது. இவ்வூர் சேரரின் தலைநகரமாக விளங்கிய கரூரையும், அவர்களது சிறப்புப் பெற்ற மேலைக் கடற்கரை துறைமுகமான முசிறிபட்டினத்தையும் இணைக்கும் பெருவழியில் அமைந்துள்ளது. இப்பெருவழி பிற்காலக் கல்வெட்டுக்களில் “கொங்கப் பெருவழி” என அழைக்கப்படுவதன் மூலமும், இப்பெருவழியில் ஏராளமான வெள்ளி மற்றும் தங்க ரோம நாணயங்கள் கத்தாங்கண்ணி, சூலூர், வெள்ளலூர், வேலந்தாவளம் போன்ற இடங்களில் கிடைத்ததன் மூலமும் இது உறுதிபடுத்தப்படுகிறது. 
15 ஹெக்டேர் பரப்பளவு உள்ள வாழ்விடப்பகுதியில் 9 அகழாவுக் குழிகளும், 40 ஹெக்டேர் பரப்பளவுள்ள ஈமக்காட்டில் ஒரு ஈமச்சின்னமும் அகழப்பட்டன. இவ்வகழாய்வில் வெளிப் போந்த பண்பாட்டு எச்சங்கள் இவ்வூர் இரண்டாயிரத்து ஐநூறு ஆண்டுகளுக்கு முற்பட்ட மக்களின் வாழ்க்கை முறையைப் பற்றி எடுத்துரைக்கின்றன.
இதுவரை மேற்கொள்ளப்பட்ட அகழாவுகள் மூலம் இங்கு விலையுயர்ந்த கற்களைக் கொண்டு உருவாக்கப்பட்ட கல்மணிகள் செய்யும் தொழிற்கூடமும், செம்பு, இரும்பு மற்றும் எஃகு உருக்கப்பட்டதற்கான தொழிற் கூடங்களும் கண்டறியப்பட்டுள்ளன. இதைத் தவிர நெசவுத் தொழில் செழ்ப்புற்றிருந்ததை நூல் நூற்கப் பயன்படுத்தப்பட்ட தக்களி மூலமும், சங்கு அறுப்புத் தொழில் சிறப்புற்று இருந்தமையை இங்கு கிடைத்த சங்கு வளையல்கள், கழுத்தணிகள் மூலமும் அறிய முடிகின்றது. யானை தந்தத்தால் ஆன அணிகலங்களும் இங்கு கிடைத்துள்ளன. 
இத் தொழிற் கூடங்கள் குறிப்பாக பச்சைக்கல், நீலக்கல், பளிங்கு, கார்னீலியன், அகேட், அமெதிஸ்ட் போன்ற அரிய கற்களை கொண்டு உருவாக்கப்பட்ட தொழிற் கூடம் அதன் பல்வேறு படிநிலைகளில் கண்டெடுக்கப்பட்டுள்ளமை இந்த ஆண்டு அகழாய்வின் சிறப்பம்சமாகும். 
இத் தொழிற் கூடங்கள் சுமார் 500 ஆண்டுகள் இங்கு நின்று நிலைத்துள்ளது. கொடுமணலில் உருவாக்கப்பட்ட அணிகலங்களை பெறுவதற்காக இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து வணிகர்கள் வந்துள்ளனர். உத்திரபிரதேச மாநிலத்தின் மத்திய கங்கைச் சமவெளிப் பகுதியில் இருந்து வணிகர்களும், கைவினஞர்களும் இங்கு வந்துள்ளதை தமிழ் மயப்படுத்தப்பட்ட பிராகிருத மொழி கலந்த ஆட் பெயர்களும், வணிகர் பெயர்களும் ஊறுதிபடுத்துகின்றன. எல்லாவற்றிற்கும் மேலாக கங்கைச் சமவெளிப் பகுதி பண்பாட்டிற்கே உரித்தான வடக்கத்திய கறுப்பு நிற மட்பாண்டங்கள் இங்கு கிடைத்துள்ளதை முக்கியமாக இங்கு குறிப்பிட வேண்டும். இத்தகைய மட்பாண்டங்கள் கங்கைச் சமவெளிப்பகுதியில் கி.மு 6 ம் நூற்றாண்டுக்கும் கி.மு 2 ம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்ட பகுதியில் கிடைக்கின்றன. கொடுமணலில் கிடைத்த இம் மட்பாண்டம் கி.மு. 3 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியைச் சார்ந்ததாகும். 
இக்காலத்தை மேலும் உறுதி படுத்தும் வகையில் அறிவியல் சார்ந்த கரியமிலக் காலக் கணிப்புக்காக அமெரிக்காவில் உள்ள காலக்கணிப்பு ஆய்வுக்கூடத்திற்கு அனுப்பப்பட்டு கொடுமணலின் காலம் கி.மு.5 ஆம் நூற்றாண்டுக்கு பின்னோக்கி தள்ளப்பட்டது. இக்காலக்கணிப்பு இங்கு கிடைத்த ஐநூற்ற்ய்க்கும் மேற்பட்ட தமிழ்-பிராமி எழுத்துப் பொறிப்புகளுக்கும் பொருந்தும். அந்த வகையில் கொடுமணலில் கிடைத்த தமிழ்-பிராமியின் காலத்தை கி.மு. 5 ம் நூற்றாண்டு எனலாம். அதிந்தை, மாகந்தை, குவிரன், சுமனன் சம்பன், ஸ்ந்தை வேளி, பன்னன், பாகன், ஆதன் என்ற பெயர் பொறித்த மட்பாண்டங்கள் தமிழர்கள் 2500 ஆண்டுகளுக்கு முன்பாகவெ எழுத்தறிவு பெற்று மிகச் சிறந்த சமூகமாக விளங்கியிருக்க வேண்டும் என்பதை இச்சான்றுகள் உறுதிபடுத்துகின்றன. 
எனவே கொடுமணல் என்ற இச்சிற்றூர் சங்ககாலத்தில் மிகச் சிறந்த தொழிற் கூடங்களைக் கொண்ட தொழில் நகரமாக, உள்நாட்டு, வெளிநாட்டு வணிக உரவுகளைக் கொண்ட வணிக நகரமாக, எழுத்தறிவு பெற்ற நகரமாக சமூக, பொருளாதார நிலையில் மேம்பட்ட சமூகமாக விளங்கியிருக்க வேண்டும் என்பதை இவ்வகழாய்வின் மூலம் வெளிக்கொணரப்பட்ட சான்றுகள் மூலம் உய்த்துணர முடிகிறது.
இவ்வகழாய்வில் ஆய்வு மாணவர்களான முனைவர். வி.பி.யதீஸ்குமார், சி.செல்வகுமார், இரா.ரமேஷ், பா.பாலமுருகன், ஜி.பால்துரை ஆகியோரும் தமிழ்நாடு தொல்பொருள் ஆய்வுத்துறையின் முன்னாள் துணை இயக்குநர் முனைவர். தி.சுப்பிரமணியன் அவர்களும் பங்கு பெற்றனர். இவ்வகழாய்விற்கு பாண்டிச்சேரி பல்கலைக்கழக மாண்பமை துணைவேந்தர் பேராசிரியர் சந்திர கிருஷ்ணமூர்த்தி அவர்கள் ஆக்கமும் ஊக்கமும் அளித்ததாக குறிப்பிடுகின்றனர் ஆய்வாளர்கள்.

Later Cheras of 9th Century moved to newly formed Land in Western Coast, i.e., Kodungallur which got recovered when Sea in West Coast caved in and in East Coast Sea came out taking over a Pallava Town as per enclosed link.
http://newindian.activeboard.com/t60836991/tsunami-uncovers-ancient-city-in-india/
_40834149_pallava-1.jpg

Mahabalipuram was once a flourishing
port city
_40818721_relics203afp.jpg
The relics have been buried under the
 sand for centuries
      
_40818751_buddha203afp.jpg
The bronze Buddha which floated up the coast
 at Kalapakkam

No comments:

Post a Comment

மதுரையில் மாநகராட்சி இளம் பெண் ஊழியரிடம் 4 வருடம் உல்லாசமாக இருந்து குழந்தை பிறந்த பின் கழட்டிவிட்ட திருமணமான பாஸ்டர் மீது புகார்.

மதுரையில் பாஸ்டர் செய்த வேலை.. "கணவன் மனைவியாய் வாழ்ந்தோமே".. கமிஷனர் ஆபீசுக்கு ஓடிய மாநகராட்சி பெண்  By Hemavandhana Updated: Wed...