Thursday, July 1, 2021

கனடாவில் 10,000 மண்ணின் மைந்தர் குழந்தைகளை வந்தேறி கிறிஸ்தவ மிஷனரிகள் கொலை செய்துள்ளனர்

பேர் வைக்ககூட உரிமை மறுக்கப்பட்ட அமெரிக்க பழங்குடிகளும் இந்தியாவிலே செய்யப்பட்ட கொடுமைகளும

அண்மையிலே கனடாவிலே நூற்றூக்கணக்கான குழந்தைகளின் எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டன. கண்டுபிடிக்கப்பட்ட இடம் ஒரு குறிப்பிட்ட மதம் நடத்தி வந்த தனியான பள்ளிக்கூடம்.
யாருக்கான தனியா பள்ளிக்கூடம்? அமெரிக்கா கண்டத்திலே வாழ்ந்த ஆதிக்குடிகளின் பூர்வகுடிகளின் குழந்தைகளுக்கு என கனடாவிலே நடத்தப்பட்ட பள்ளி.
இது பெரிதாக பேசப்பட்ட போது அப்போது நடந்த ஒரு சிறுவிஷயம் பேசப்படவில்லை.
அது கனடாவிலே இன்னும் இருக்கும் பூர்வகுடிகளுக்கு அவர்களின் பாரம்பரியமான மொழியிலே அவர்களுக்கான பேரை எழுதக்கூடாது ஆங்கிலத்திலே தான் எழுதப்படவேண்டும் என சட்டம் போட்டு அவர்களின் உரிமை பறிக்கப்பட்டது.
அந்த கொடூரமான சட்டம் போன மாசம் தான் விலக்கப்பட்டது.
https://twitter.com/SDonziger/status/1410036528324263937
கனடாவிலே பூர்வகுடிகள், இன்டியூட், மெடிஸ் என பல குடிமக்கள் இருந்தார்கள். அவர்களின் மொழியான க்கரீ எனும் முழுமையாக தடை செய்யப்பட்டது.
கவனிங்க ஒட்டுமொத்த மொழியே காட்டுமிராண்டி மொழி என சொல்லப்பட்டு தடை செய்யப்பட்டது.
கனடாவிலே குறிப்பிட்ட மதம் அந்த பூர்வகுடிகளையும் அவர்களின் குழந்தைகளையும் காப்பாற்றுவதாக சொல்லிக்கொண்டு குழந்தைகளை பெற்றோரிடம் இடம் இருந்து பிரித்து கொண்டு போய் இந்த தங்கி படிக்கும் உறைவிட பள்ளியிலே வைத்து சொல்லொணா கொடுமைகளை செய்து பெரும்பாலானோரை கொன்றார்கள்.
மிச்சம்மீதியிருந்தவர்கள் வாழ்நாள் முழுவதும் நடைபிணமாகவே வாழ்ந்தார்கள்.
அந்த குறிப்பிட்ட மத உறைவிட பள்ளியிலே நடந்த கொடுமைகள் என்ன?
பாலியல் வன்கொடுமைகள். ஆம் சிறுவர்கள் சிறுமியர் இருபாலருக்கும் பாலியல் வன்கொடுமை, கற்பழிப்பு, சித்ரவதை, சவுக்கடி என உண்டு.
பழங்குடி மொழியான க்கரீ எனும் மொழியிலே பேர் வைத்திருந்தால் அதை மறக்கும்படி அடிக்கப்பட்டார்கள்.
அந்த மொழியிலே பேசினால் கடுமையான தண்டனை தரப்பட்டது.
பழங்குடியின மொழியிலே பேர் வைத்திருக்கும் சிறுவர் சிறுமியர் அந்த பெயரை மாற்றீ ஆங்கிலத்திலே பெயர் வைக்கும்படி தினமும் சவுக்கால் அடிக்கப்பட்டார்கள்.
அந்த குழந்தைகளுக்கு நோய் வந்தால் அந்த குறிப்பிட்ட மத பள்ளியிலே மருத்துவசிகிச்சை அளிக்கப்படாமல் கொல்லப்பட்டார்கள்.
கிட்டத்தட்ட மூன்றாயிரம் குழந்தைகள் கொல்லப்பட்டதாக இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட தடயங்கள் மூலம் சொல்கிறார்கள்.
ஒட்டுமொத்தமாக ஒன்றரை லட்சம் குழந்தைகள் இப்படி பிரிக்கப்பட்டதாக தற்போதைய தகவல்கள் சொல்லுகின்றன. முழுவதுமாக எவ்வளவு என தெரியவில்லை.
இது இப்போது தான் கொஞ்சமாக வெளியே வந்திருக்கிறது. ஒரே ஒரு பள்ளியிலே கண்டுபிடித்திருக்கிறார்கள். இதே போல் மற்ற இடங்களிலேயும் நடந்திருக்கலாம் என கனடா முழுமைக்குமான தேடுதல் கோரப்பட்டிருக்கிறது.
கனடாவிலே மட்டுமல்ல, தற்போதையை அமெரிக்கா, மெக்சிகோ, பிரேசில், சிலி, பொலிவியா, பெரு, அர்ஜன்டினா என எல்லா இடங்களிலேயும் இதே கதை தான்.
போத்துக்கிசியர்களும் ஸ்பேனியர்களும் பிடித்த தென்னமெரிக்காவின் கொடூரங்களை கேட்டால் படித்தால் பல நாட்களுக்கு உணவு ஏறாது தூக்கம் வராது அந்தளவுக்கு கொடூரங்கள் நடந்தன.
மாயன் எனும் பழங்குடிகள் பற்றீ கேள்விப்பட்டிருப்பீர்கள் அல்லவா அவர்கள் பேசிய மொழியின் எழுத்துவடிவம் தேடித்தேடி அழிக்கப்பட்டது.
இதையே இங்கே நமது நாட்டிலே நடந்ததை ஒப்பிட்டு பாருங்கள். ஏன் இலங்கை, மியான்மர், கொரியா போன்ற நாடுகளிலேயும் நடந்ததை ஒப்பிட்டு பாருங்கள்.
இங்கே காட்டுமிராண்டி மொழி என சொல்லவைத்தது என்ன சும்மா நடந்ததா?
இங்கே தமிழர்கள் ஆங்கிலத்திலே பெயரை எழுதவும் இன்சியல் போடவும் இன்னமும் தள்ளப்படுவது சும்மா நடந்ததா?
இங்கே சாதிப்பெயரை போடக்கூடாது என சாதி ஒ"ளி"ப்பு செய்தது சும்மா நடந்ததா?
இங்கே பழம்பெரும் காப்பியங்கள் எல்லாம் பாப்பான் எழுதியது எனவே கொளுத்து என்றது சும்மா நடந்ததா?
இங்கே இன்றைக்கும் நம் மன்னர்கள் மீது நடத்தப்படும் அவதூறுப்போர் சும்மா நடக்கிறதா?
இங்கே இன்றைக்கும் அந்த குறீப்பிட்ட மதம் நம்முடைய புனித கோவில்கள் இருக்கும் இடங்களிலே ஆக்கிரமிப்பு செய்வது சும்மா நடக்கீறதா?
யோசித்துப்பாருங்கள்.
இதெல்லாம் எப்படி இன்றைக்கும் நம்முடைய பண்பாட்டை கலாச்சாரத்தை அழிக்கின்றன?
வெறுமனே மொழி, பெயர் என்பதோடு இந்த பண்பாட்டு படுகொலையை நிறுத்தவில்லை
இங்கே பாலுக்கு இன்றைக்கும் ஆடுகளும் எருமைமாடும் தான் பெரிய அளவிலே என்றிருந்த போது இன்றைக்கும் வெளிநாடுகளிலே இருந்து அங்கே குளிர்கால நிலப்பரப்புக்கு பழகிய மாடுகளை இங்கே விவசாயிகளின் தலையிலெ கட்டுவது என்ன?
இதிலெ எந்த மதத்திலே அதிகம் விவசாயிகள் இருக்கிறார்கள்? அவர்கள் வறுமையிலே தள்ளப்பட்டால் யாருக்கு லாபம்?
இங்கே பாரம்பரிய வீடு கட்டும் முறையை மாற்றி கான்கீரிட் கசமுசாக்களை கட்டி தள்ளுவதால் யாருக்கு என்ன லாபம்?
தொடர்ந்து இல்லாத ஒரு இனப்போரை பற்றி பேசுவதும் திராவிடம் என்று ஒரு இனம் இருந்ததாக கட்டமைக்கப்படுவதால் யாருக்கு லாபம்?
அதிலும் கவனியுங்கள்
இந்த ஆட்கள் ஐரோப்பிய அமெரிக்க நாடுகளிலே ஆரியம் என்றொரு இனம் இல்லை என்பார்கள் காரணம் அங்கே வெள்ளையின ஆட்கள் அதை பயன்படுத்தி தீவிரவாத செயல்களிலே ஈடுபடக்கூடாது என. ஆனால் இங்கே இருக்கிறது என "ஆய்"ராய்ச்சி கட்டுரைகள் எழுதுவார்கள்.
இதை நாம் புரிந்துகொள்ளவேண்டும்.
நாம் திரும்ப திரும்ப இந்த முண்டக்களப்ஸ் பேசவில்லை எழுதவில்லை என ஒப்பாரி வைப்பதை விட நாம் இந்த மாதிரி விஷயங்களை பரப்புவோம்.
காப்பிபேஸ்ட் செய்து சொல்வோம். வாட்ஸப், டெலிகிராம் போன்ற ஊடங்களிலே பரப்புவோம்.
நாம் பேச ஆரம்பிக்காமல் இதற்கு எப்படி தீர்வு கிடைக்கும்?
படத்திலே
தன்னுடைய பூர்வக்குடி குழந்தைகளுக்கு அஞ்சலி செலுத்தும் ஒரு பூர்வக்குடியின் தாய்.
Thanks -https://www.facebook.com/rajasankar/posts/10158766527828702?__cft__[0]=AZUkUDwCiiePXe8iv3H0YI_eIY5CD4nAHpVILdxnvBeGKaPjuQDgdsjIupwXti7fEryT3O57jCm6Zfvurkh2YICb3uJ417DmdhEMHw8BPQoFJrp7c2--jySS8vRbzCZNXeSTD2HUgr1tpvV0fTXsUm4MJrDlmcsTHZ2BCOOBf3Z9CUhgfgeI-32rvg5tcRdUZplVUREi8Jo_RXBS2H3jg9bW&__tn__=%2CO%2CP-y-R

No comments:

Post a Comment

காலில் செருப்பு, நெருப்பு இல்லத அடுப்பு பொங்கல் போட்டோ ஷூட் செய்த தமிழர் விரோத்கள்- மனிதர்களா

 காலில் செருப்பு, நெருப்பு இல்லத அடுப்பு பொங்கல் போட்டோ ஷூட் செய்த தமிழர் விரோத்கள்- மனிதர்களா