அதிக கமிஷன் தருவதாக மோசடி- பாதிரியார் பாலன் &மூவர் கைது: மக்கள் ஜனநாயகக் கட்சி பொதுச் செயலாளருக்கு வலை!
பணத்தை எண்ணிவிட்டு வருவதாகக் கூறி கீழே சென்ற நவாஷ் வெகுநேரமாகியும் திரும்ப வராததால் சந்தேகமடைந்த ஆல்வின் ஞானதுரை நவாஷை தேடியபோது அவர் அங்கு இல்லாததால் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்து அதிர்ச்சியடைந்துள்ளார்
தனியார் வங்கி வாடிக்கையாளர்களின் 90 லட்சம் ரூபாயுடன் தலைமறைவானவரை போலீசார் தேடி வருகின்றனர்.
சென்னை, முகப்பேரைச் சேர்ந்தவர் ஆல்வின் ஞானதுரை, 30. இவர், ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கிகளில் 'டிபாசிட்' செய்ய இயலாத வாடிக்கையாளர்களிடம் பணத்தை பெற்று வங்கியில் செலுத்தி, அதற்கான 'கமிஷன்' தொகையை பெற்று கொள்ளும் முகவராக செயல்பட்டு வருகிறார்.நேற்று காலை, 70 வாடிக்கையாளர்களிடமிருந்து பெற்ற 90 லட்சம் ரூபாயை வங்கியில் செலுத்த ஆல்வின் ஞானதுரை முற்பட்டார்.
அப்போது, அவருக்கு அறிமுகமுள்ள அய்யப்பன்தாங்கலைச் சேர்ந்த பாதிரியார் பாலன், 41 மற்றும் இடைத்தரகரான வேலாயுதம், 55, ஆகியோர் நாங்கள் சொல்லும் இடத்தில் பணத்தை செலுத்தினால் கூடுதல் கமிஷன் கிடைக்கும் என, ஆசை வார்த்தை கூறியுள்ளனர்.இதை நம்பிய ஆல்வின் ஞானதுரை, ராயப்பேட்டையில் நவாஸ் என்பவரை அவரது அலுவலகத்தில் சந்தித்து, நேற்று மாலை பணத்தை கொடுத்துள்ளார்.பணத்தை எண்ணி விட்டு வருவதாக கீழ் தளத்திற்கு சென்ற நவாஸ், வெகுநேரமாகியும் வராததால் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்து அதிர்ச்சி அடைந்தார். உடனே, காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்பு கொண்டு புகார் அளித்தார்.ஐஸ்ஹவுஸ் போலீசார், பாலன், வேலாயுதம் ஆகிய இருவரை பிடித்து விசாரித்து வருகின்றனர். தலைமறைவான நவாசை தேடி வருகின்றனர்.
https://www.dinamalar.com/news_detail.asp?id=2804858
https://tamil.news18.com/amp/news/tamil-nadu/chennai-district-chennai-money-laundering-3-arrested-anb-mur-510119.html
No comments:
Post a Comment