Tuesday, July 13, 2021

கிறிஸ்துவ சர்ச் - சுவிசேஷம் அறிவித்தல் போர்வையில் விபச்சாரம் செய்த பாஸ்டர் கைது

மத போதகரான லால் ஷைன் சிங் என்பவருக்கு சொந்தமான வீட்டில் பெடரல் சர்ச் ஆப் இந்தியா என்ற பெயரில் தேவாலயம் அமைக்கப் பட்டுள்ளது. 

 
https://www.thanthitv.com/News/TamilNadu/2021/07/13105806/2558393/Kanyakumari-7-arrest.vpf.vpf
ஆனால் இங்கு  இளம் பெண்கள் மற்றும் ஆண்கள் சொகுசு கார்களில் வந்து செல்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து போலீசார் நடத்திய சோதனையில், தேவாலயத்தின் போர்வையில் அங்கு பாலியல் தொழில் செய்யப்படுவது தெரியவந்தது.  

அங்கு இருந்த தாய், மகள் உள்ளிட்ட பெண்கள் மற்றும் லால் ஷைன் சிங் என 7 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் லால் ஷைன் சிங், ஷிபின் ஆகியோர் அந்த பெண்களோடு இணைந்து பாலியல் தொழிலில் ஈடுபட்டதை ஒப்புக்கொண்டனர். 

 

 மேலும், 19 வயது பெண்ணை அவரது தாயாரே பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியது தெரியவந்தது. இதனையடுத்து அவர்கள் மீது நித்திரவிளை போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

No comments:

Post a Comment

உரிமை இல்லாத இடத்திற்கு இழப்பீடு கேட்க முடியாது - சென்னை உயர் நீதிமன்றம்

  உரிமை இல்லாத இடத்திற்கு இழப்பீடு கேட்க முடியாது - சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு! - PANDIYAN LODGE COMPENSATION புறம்போக்கு இடத்தில் கட்டப...