Friday, July 30, 2021

விசித்திரமான சமூக விரோத கம்யூனிஸ்டுகள் -கேரளத்தில் மோசமான ஆட்சியால் கரோனா பாதிப்பு அதிகமாகும் போது கியூபாவிற்கு ஆதரவாக போராட்டம்






Ilango Pichandy
 is with Selva Nayagam and 7 others.

எத்தனை காலம்தான் ஏமாற்றுவார்
இந்த நாட்டிலே?
-----------------------------
எங்கோ கியூபாவில் உள்ள மக்களுக்குப்
போராடுவதாக காட்டிக் கொள்வது!
இங்கே சென்னையில் அரும்பாக்கத்தில்
பட்டியல் இன மக்களின் நூற்றுக்கணக்கான
வீடுகளை திமுக அரசு இடித்துத் தள்ளும்போது
அமைதி காப்பது!.
கொடுமையான கொரோனா காலத்தில்கூட
வீடுகளை இடித்து, வீட்டில் உள்ள குழந்தைகளை
இழுத்து ரோட்டில் தள்ளுகிறது திமுக அரசு!
இதைக் கண்டிக்க மறுக்கிறது விடுதலைச்
சிறுத்தைகள்!
வீடிழந்து நிற்கும் தலித் மக்கள் இங்கே!
விடுதலைச் சிறுத்தைகளின்
போராட்டம் எங்கே?
கியூபா மக்களுக்குப் போராட்டமாம்!!
ஆனால் அரும்பாக்கம் தலித்துகளுக்கு
போராட மாட்டார்களாம்! என்னடா இது,
ஏமாற்று வேலை!
ஏமாற்றுக்காரர்களும் எத்தர்களும்
வாழ்ந்ததாகச் சரித்திரம் இல்லை!
ஏய்ப்பவர்க்கே காலம் என்று
எண்ணி விடாதே!
பொய் எத்தனை நாள் கைகொடுக்கும்
மறந்து விடாதே!
 300 Crore Co-operative bank scam
Supreme court is asking about these activities
அணுஉலை எதிர்ப்பைக் கைவிட்ட போலிகள்!
வினவு, இடைவெளி மார்க்சியப் போலிகள்!
அமெரிக்கக் காசு வரத்து நின்றது!
போராட்டமும் நின்றது!
----------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
--------------------------------------------------------
பத்தாண்டுகளுக்கு முன்பு கூடங்குளத்தில் அணுஉலை
எதிர்ப்புப் போராட்டம் உச்ச கட்டத்தில் இருந்த
நேரம். அப்போது டாக்டர் மன்மோகன் சிங்
பிரதமராக இருந்தார்.
தமிழ்நாட்டில் பின்நவீனத்துவத்தின் செல்வாக்கிற்கு
இரையான அத்தனை குட்டிமுதலாளித்துவக்
கபோதிகளும் கூடங்குளத்தில் அணுஉலை எதிர்ப்பு
என்று சாமியாடிக் கொண்டிருந்த நேரம்.
மகஇக என்று அறியப்படும் (SOC மாநில அமைப்புக்
கமிட்டி) போலி நக்சல்பாரி அமைப்பானது
அணுஉலை எதிர்ப்பில் உச்சம் தொட்டது.
அவர்களின் புதிய ஜனநாயகம் ஏடு. கூடங்குளம்
அணுஉலையை இழுத்து மூடு என்று அட்டைப்
படத்தில் போட்டு பத்திரிகையை வெளியிட்டது.
மேலும் கூடங்குளம் அணுஉலையை இழுத்து
மூடு என்று சுவரொட்டிகள் அச்சிடப்பட்டு
தமிழ்நாடெங்கும் ஒட்டப் பட்டன.
நல்லது. தங்களின் நிலைபாட்டை மகஇக
சிறப்பாக வெளிப்படுத்தி இருக்கிறது என்று
எடுத்துக் கொள்வோம்.
தற்போது ஜூன் 29ல் கூடங்குளத்தில் 5ஆம் 6ஆம்
அணுஉலைகளை நிறுவிட கான்கிரீட் போட்டு
கட்டுமானப் பணிகள் தொடங்கின.
ரூ 49,621 கோடி செலவில் 5ஆம் 6ஆம் அணுஉலைகள்
அமைக்கப் படுகின்றன. இதற்காக 6200 கனமீட்டர்
(62 லட்சம் லிட்டர்) கான்கிரீட் கொட்டப்பட்டு
கட்டுமானப் பணிகள் கோலாகலமாகத் தொடங்கின.
எந்த எதிர்ப்பும் இல்லை. யாரும் எதிர்க்கவில்லை.
அணுஉலை எதிர்ப்புத் தலைமைப் போராளி
உதயகுமார் எத்தகைய போராட்டத்தையும்
நடத்தவில்லை. அது மட்டுமல்ல, நடத்துவது
பற்றி நினைக்கவும் இல்லை. அணுஉலை
எதிர்ப்பை உதயகுமார் கைவிட்டு விட்டார்
என்பதே உண்மை.
"கூடங்குளம் அணுஉலையை இழுத்து மூடு" என்று
கவர் ஸ்டோரி எழுதிய புதிய ஜனநாயகம் இன்று
கனத்த மௌனம். சுவரொட்டி அடித்து ஒட்டிய
மகஇக இன்று கனத்த மௌனம்.
வினவு இணையதளத்தில் கூடங்குளம் அணுஉலை
விரிவாக்கத்தை எதிர்த்து ஒரு சிறு துணுக்குச் செய்தி
கூட இல்லை. SOC ஆட்கள் அணுஉலை எதிர்ப்பைக்
கைவிட்டு விட்டனர் என்பதே உண்மை.
2011ல் மருதையன் கும்பல் அமைப்பில்தான் தலைமை
வகித்தது. இன்று மருதையன் கும்பல் அமைப்பை
விட்டு வெளியேறி உள்ளது.தனியாக இடைவெளி
என்ற பெயரில் ஒரு இணையதளத்தை மருதையன்
நடத்தி வருகிறார். என்றாலும் "இடைவெளி"யில்
கூடங்குளம் அணுஉலை விரிவாக்கத்தை எதிர்த்து
ஒரு சிறு துணுக்குச் செய்தி கூட இல்லை.
மருதையன் கும்பலும் அணுஉலை எதிர்ப்பைக்
கைவிட்டு விட்டது என்பதே உண்மை.
சுப உதயகுமார் முதல் மருதையன் வரை அன்று
போராடினார்கள்; இன்று போராட மறுக்கிறார்கள்.
ஏன்? என்ன காரணம்?
கூடங்குளத்தில் ரஷ்ய அணுஉலையை எதிர்ப்பதற்காக
அன்று அமெரிக்கா காசு கொடுத்தது. ஏகாதிபத்திய
அமெரிக்காவின் கார்ப்பொரேட் முதலாளிகள்
இங்குள்ள போராளி(???)களுக்கு காசு கொடுத்தார்கள்.
ஏகாதிபத்தியத்தின் எச்சில் காசில் போராட்டம்
உச்சம் தொட்டது. இன்று தேவை முடிந்து விட்டதால்
அமெரிக்க காசு கொடுப்பதை நிறுத்தி விட்டது.
போராட்டமும் நின்று விட்டது. இதுதான் உண்மை!
இது மட்டும்தான் உண்மை!
அணுஉலை எதிர்ப்பு என்பது பின்நவீனத்துவக்
கோட்பாடு. அது மார்க்சியக் கோட்பாடு அல்ல.
நல்லது போலிகளே, உங்களையெல்லாம்
அடையாளம் காண, நீங்களெல்லாம் போலிகள்
என்று மக்கள் அறிந்திட காலம் ஒரு வாய்ப்பை
ஏற்படுத்திக் கொடுத்து விட்டது.
கூடங்குளத்தில் 5ஆம் 6ஆம் அணு உலைகளின்
கட்டுமானம் கோலாகலமான தொடக்கம்!
அணுஉலை எதிர்ப்புப் போராட்டத்தை
ஆழக்குழி தோண்டிப் புதைத்த உதயகுமார்!
-----------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
---------------------------------------------------------------
1) ஜூன் 29,2021 தேதியானது கூடங்குளம்
அணுஉலை வரலாற்றில் ஒரு பொன்னாள்.
ஏற்கனவே நான்கு அணுஉலைகள் இருக்கின்ற
கூடங்குளத்தில் 5ஆம் 6ஆம் அணுஉலைகளை
அமைப்பதற்கான கட்டுமானப் பணி அன்றுதான்
தொடங்கியது.
2) ரூ 50,000 கோடி செலவில் இவ்விரு அணுஉலைகளும்
அமைக்கப்படுகின்றன. (துல்லியமாகச் சொல்வதெனில்
ரூ 49,621 கோடி என்கிறது அரசு).
3) கூடங்குளத்தின் 5, 6 அணுஉலைகளைக் கட்டுவதற்கான .
கான்கிரீட் போடும் வேலை முடிந்தது. 6200 கனமீட்டர்
(6200 cubic meter) கான்கிரீட் போடப்பட்டு விட்டது.
6200 கனமீட்டர் கான்கிரீட் என்றால் எவ்வளவு என்று
தெரிய வேண்டும். கனமீட்டர் என்ற யூனிட்
வாசகர்களுக்குத் தெரியாமல் இருக்கக் கூடும்.
எனவே இதை கனசென்டிமீட்டர் என்ற அலகில்
சொல்கிறேன்.
6200 cubic meter = 6.2 x 10^9 cubic centimeter.
கன சென்டிமீட்டர் என்பதை cc என்று
சுருக்கமாகச் சொல்வார்கள். cc என்பது
பரிச்சயமான அலகுதானே.
சரி, இன்னொரு அலகான லிட்டரில் சொல்கிறேன்.
6200 cubic meter = 6 200 000 litres.
அதாவது 62 லட்சம் லிட்டர் அளவுள்ள கான்கிரீட்
போடப்பட்டு உள்ளது. இப்போது புரிந்திருக்கும்
என்று நம்புகிறேன்.
4) டாக்டர் மன்மோகன்சிங் பிரதமராக இருந்த
காலத்தில் கூடங்குளத்தில் அணுஉலை எதிர்ப்புப்
போராட்டம் அதன் உச்சத்தைத் தொட்டது.
இது சர்வதேச அளவில் கவனத்தையும் பெற்றது.
இன்று கூடங்குளத்தில் 5ஆம் 6ஆம் அணுஉலைகளை
அமைப்பதற்கான கட்டுமானத்திற்கு எந்த ஒரு
சிறு எதிர்ப்போ முணுமுணுப்போ இல்லை.
போலிப்போராளி உதயகுமார் கூடங்குளம் சென்று
அணுஉலை விரிவாக்கத்தை எதிர்த்து ஒரு கண்டனக்
கூட்டத்தைக் கூடப் போட முடியாது. முதுகுத்
தொலியை உரித்து விடுவார்கள் கூடங்குளம் மக்கள்.
5) கூடங்குளம் மட்டுமல்ல, சுற்றியுள்ள கிராமங்களான
இடிந்தகரை, கூட்டப்புளி உள்ளிட்ட எல்லா இடங்களிலும்
இதுதான் நிலைமை.
6) டாக்டர் மன்மோகன்சிங் பிரதமராக இருந்த காலத்தில்
நடந்த கூடங்குளம் அணுஉலை எதிர்ப்புப் போராட்டம்
என்ஜிஓ அரசியலின் வெளிப்பாடு. ரஷ்யாவின்
அணுஉலையை எதிர்க்க, அமெரிக்காவின் கொழுத்த
கார்ப்பொரேட் கம்பெனிகள் காசு கொடுத்து
ஆள் பிடித்து எதிர்ப்பு இயக்கம் நடத்தினார்கள்.
7) உதயகுமார் நடத்திய கூடங்குளம் போராட்டம்
பின்நவீனத்துவத்தால் உந்தப்பட்ட போராட்டம்.
பின்நவீனத்துவம் அறிவியலை எதிர்க்கிறது.
அணுஉலைகளை எதிர்க்கிறது.
😎 அமெரிக்கக் கைக்கூலி உதயகுமார் இன்று
நன்றாக அம்பலப் பட்டுப் போனார். அவரது
போராளி வேஷம் கலைந்து விட்டது.
9) கூடங்குளம் போராட்டம் இடிந்தகரையில் உள்ள
லூர்து மாதா சர்ச் வளாகத்தில் மட்டுமே
நடைபெற்றது.ஒருநாள் ஒருபொழுது கூட
இடிந்தகரையைத் தாண்டவில்லை. ஏன் என்று
சிந்தித்துப் பாருங்கள்.
10) உதயகுமாரால் ஒருநாளாவது கூடங்குளம்
செல்ல முடியுமா? செல்லமுடியாது உதயகுமாரின்
போலிப் போராட்டத்தை காலம் முறியடித்து
விட்டது.
*****************************************************
கூத்தாடிப் புயல்களுக்கு சாதகமாக
நீதி வழங்கப் படுகிறதா?
சமூக ஆர்வலர் கோ தேவராஜன் குமுறல்!
--------------------------------------------------------------
பதிவு: திரு கோ தேவராஜன்
----------------------------------------------------------------
வணக்கம் நண்பர்களே...
" கோல் கீப்பர் இல்லாமல் கோல் அடித்து வெற்றி பெற்ற ஏ.ஆர்.முருகதாஸ்.
சர்க்கார் படத்தில் அரசு வழங்கிய இலவச தொலைக்காட்சி பெட்டி, மிக்ஸி, கிரைண்டர் போன்ற பொருட்களை தீட்டு கொளுத்தும் காட்சி அமைக்கப்பட்டது.
இதனால், பல இளைஞர்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட இலவச தொலைக்காட்சி பெட்டி, மிக்ஸி, கிரைண்டர் போன்ற பொருட்களை தீயிட்டு கொடுத்தினார்கள்.
சம்பவத்தில் ரூபாய் பல கோடி மதிப்பு உள்ள பொருட்கள் நாசமானது. இதன் காரணமாக ஏ.ஆர். முருகதாஸ் மீது புகார் அளித்தேன்.
என்னுடைய புகார் மீது உரிய நடவடிக்கையாக FIR போடப்பட்டது.
ஏ.ஆர். முருகதாஸ் சென்னை உயர்நீதிமன்றத்தில் முன் ஜாமீன் கோரியபோது கடும் எதிர்ப்பு தெரிவித்தேன். ஆனாலும், ஏ.ஆர். முருகதாஸ்க்கு முன் ஜாமீன் வழங்கப்பட்டது.
FIR ரத்து செய்ய வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு இதில் என்னையும் ஒரு எதிர்மனுதாராக சேர்க்கப்பட்டது. ஆனால், எனக்கு எந்த விதமான நோட்டிஸ் வழங்க வில்லை. இவ்வழககு குறித்த தகவலும் வழங்க வில்லை.
ஏ.ஆர். முருகதாஸ் -க்கு வழங்கப்பட்ட இந்த தீர்ப்பு ஒருதலைப்பட்சமாக வழங்கப்பட்டுள்ளது. அதாவது " கோல் கீப்பர் இல்லாமல் கோல் அடித்து வெற்றி பெற்று உள்ளார்" என்ற சொல்ல வேண்டும்.
2வது எதிர்மனுதாரருக்கு பேச வாய்ப்பு கொடுக்காமல் அளிக்கப்பட்ட தீர்ப்பு ஒருதலைப்பட்சமனது ஆகும்.
சென்னை உயர் நீதிமன்ற நீதியரசர் 2வது எதிர்மனுதாரருக்கு நோட்டிஸ் வழங்கப்பட்டதா என்று அறிந்து கொள்ளவில்லை அல்லது நினைவுக்கொள்ளவில்லையா? என தெரியவில்லை.
நீதியசரின் கண்ணை கட்டி விட்டு அல்லது நீதியசரை ஏமாற்றி பெற்ற தீர்ப்பு பெற்று உள்ளார்கள் என தெரியவருகின்றது.
அதிமுக ஆட்சியில் போடப்பட்ட வழக்கை தி.மு.க ஆட்சியில் அரசு வழக்கறிஞக்ள் முறையாக கையாளவில்லையா அல்லது எதிர்ப்பு தெரிவிக்கவில்லையா கேள்வி எழுந்து உள்ளது...
ஆட்சி அதிகாரம் மாற்றம் பெற்றதனால், காட்சி் மாற்றம் பெற்றதா என்ற கேள்வி என்னுள் எழுந்து உள்ளது.
எதுவானலும் ஏ.ஆர். முருகதாஸ் பெற்ற இந்த தீர்ப்பு ஒரு மிக பெரிய மோசடியே...
நன்றி
கோ.தேவராஜன்
-சமூக ஆர்வலர்-

No comments:

Post a Comment

'சிங்கம்' போன்ற படங்கள் ஆபத்தான செய்தியை அனுப்புகின்றன: பாம்பே உயர்நீதிமன்ற நீதிபதி

   Films Like 'Singham' Send Dangerous Message: Bombay High Court Judge https://www.newspointapp.com/news/india/films-like-singham-s...