Saturday, July 31, 2021

பாதிரிகளை கைது செய்ய வாடிகனில் போப் அனுமதி பெற சட்டம் தேவை- அமைச்சர் ஐ. பெரியசாமி மருமகள் மெர்சி செந்தில்குமார்

 பாதிரியார்களை கைது செய்ய வாடிகனில் போப் அனுமதி பெற சட்டம் தேவை- அமைச்சர் ஐ. பெரியசாமி மருமகள் பேச்சு

 By Mathivanan Maran Published: Wednesday, July 28, 2021, 19:10 [IST] 

சென்னை: உலகின் எந்த மூலையிலும் எவனாக இருந்தாலும் பாதிரியார்களையும் சிஸ்டர்களையும் கைது செய்ய வாடிகனில் போப் ஆண்டவரின் அனுமதி பெற சட்டம் கொண்டுவர வேண்டும் என்று தமிழக கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ. பெரியசாமியின் மருமகளும் திமுக எம்.எல்.ஏ. ஐ.பி. செந்தில்குமாரின் மனைவியுமான சமூக ஆர்வலர் மெர்சி செந்தில்குமார் பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.



திண்டுக்கல்லில் நடைபெற்ற பாதிரியார் ஸ்டேன் சுவாமிக்கு இரங்கல் தெரிவிக்கும் நிகழ்ச்சியில் மெர்சி செந்தில்குமார் பேசியதாவது:  பாதிரியார் ஸ்டேன் சுவாமி மரணத்துக்கு எல்லோரும் குரல் கொடுக்கிறார்கள். நாமும் குரல் கொடுக்க வேண்டும் என்பதற்காக இங்கு வந்துள்ளேன். நமக்கு எல்லாம் வீடு, குழந்தைகள் என ஒரு வட்டம் இருக்கிறது. நமக்கான ப்ரீ டைமில்தான் சமூக சேவை செய்ய முடிகிறது.

ஆனால் ஒட்டுமொத்த வாழ்க்கையையே சேவைக்காக அர்ப்பணிக்கிற பாதிரியார்கள், சிஸ்டர்களுக்கு நாம் என்ன மரியாதை கொடுக்கிறோம்? ஒரு பாதிரியார் (ஸ்டேன் சுவாமி) இறந்துவிட்டார். இன்று 200 பேர் குரல் கொடுப்பார்கள். நாளையும் ஒரு பாதிரியாரும் சிஸ்டரும் எங்கோ ஒரு இடத்தில் போராடிக் கொண்டுதான் இருப்பார்கள். 







கல்வியும் பகுத்தறிவும் பாதர்ஸும் சிஸ்டர்ஸும் வந்த பின்னர்தான் நமக்கு கிடைத்தது. பள்ளி, கல்லூரிகளில் அரசியலும் சட்டமும் சொல்லித்தரப்பட வேண்டியது அவசியமாக உள்ளது. பெரும்பாலான கல்வி நிறுவனங்கள் பாதிரியார்கள், சிஸ்டர்கள் கைகளில் உள்ளது. இந்த கல்வி நிறுவனங்களில் துறவறம் பற்றியும் சொல்லி கொடுங்கள். 

கார்த்தி சிதம்பரம், ஜோதிமணி.. யாருக்கு சான்ஸ்? தமிழக காங்கிரஸ் தலைமைக்கு இளம் தலைவர்..தலைமை திட்டம் துறவிகளாக வாழ்வது மிகப் பெரிய கடினமானது. உலகத்தில் இருக்கிற பாதிரியார்கள், சிஸ்டர்களை ஹீரோ ஹீரோயின்களைப் போல பார்க்க வேண்டியது அவசியம். இன்னொரு சட்டத்தை கொண்டுவரனும்னு தோணுது.. இனிமே இந்த உலகத்துல எவனாக இருந்தாலும் ஒரு பாதரையோ சிஸ்டரையோ அரெஸ்ட் பண்ணனும்னா வாடிகனில் போப் ஆண்டவரிடம் கேட்கனும். போப் ஆண்டவரிடம் கேட்காம அரெஸ்ட் பண்ணக் கூடாதுனு சட்டம் கொண்டுவரனும். துறவிகளாக இருப்பவர்கள் உலகம் முழுவதும் பணியாற்றுகிறவர்கள். இவ்வாறு மெர்சி செந்தில்குமார் பேசினார். 

இந்த நிகழ்ச்சியில் மார்க்சிஸ்ட் கட்சி முன்னாள் எம்.எல்.ஏ. பாலபாரதி உள்ளிட்டோர் பங்கேற்றனர்

Read more at: https://tamil.oneindia.com/news/chennai/govts-to-get-permission-for-arrest-of-christian-fathers-from-vatican-pope-says-social-activist-merc-428354.html?story=1








No comments:

Post a Comment

பீகார் பெண் மருத்துவர்- ஹிஜாப் வைத்து மதவெறி அரசியல் தூண்டல்

 பீகார் பெண் மருத்துவரும்- ஜார்கண்ட் முஹம்மதிய அமைச்சர் ஆதரவும்   Muslim Doctor Whose Hijab Was Pulled Down By Nitish Kumar Joins Duty 23 Da...