Thursday, July 1, 2021

இயேசுவின் மரணம் பலி இல்லை. சுவிசேஷக் கதைகளை ஏன் வரலாற்று அறிஞர் ஏற்பதில்லை

வெள்ளிக்கிழமை மாலை ஒருவர் இறந்து ஞாயிற்றுக்கிழமை காலை மீண்டும் உயிரோடு வருகிறார் என்ற கதையில்,  என்ன தியாகம்?  அதனால் என்ன பயன்? எதுவுமே இல்லையே?                               இந்த பூமியில் மனிதன் சாவதற்கு காரணம் ஆதாம் பாவம் என்றால் மன்னாவை சாப்பிட்டவர்கள் பூமியில் செத்தது போல சர்ச் சுவிசேஷக் கதைகளை  நம்பி இயேசுவை ஏற்றவர்களும் செத்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்

உபாக 24:16 பிள்ளைகளின் பாவங்களுக்காகத் தந்தையும்தந்தையின் பாவங்களுக்காகப் பிள்ளைகளும் கொல்லப்பட வேண்டாம். அவரவர் தம் பாவத்திற்காகக் கொல்லப்படடுவர்/

  
இயேசுவின் மரணம் பலி இல்லை.  இயேசு செத்துப் போனதால் எந்த பாவமும் போகவில்லை.                            அதிசயங்கள் நடக்கிறது என்பதில் பெரும்பாலானவை மோசடிகள், பித்தலாட்டங்கள் அல்லது மிகைப் படுத்தப்பட்ட கட்டுக்கதைகள் என பல ஆயிரம் முறை நிரூபிக்கப்பட்டுள்ளது. ஜெபம் செய்து குணமாகும்  என்பதைக் கேட்டு தன் குழந்தைகளை இழந்தவர்கள் மிக அதிகம். இது அமெரிக்கா போன்ற நாடுகளிலேயே நடக்கிறது.


சுவிசேஷக் கதை இயேசு மிகத்தெளிவாக தான் மனிதன் மட்டுமே என பலமுறை சொன்னதும் உள்ளது.  சுவிசேஷங்கள்  வரைவதற்கு முன்பே எழுதப்பட்ட பவுல் கடிதத்தில் இயேசு எந்த அதிசயமும் செல்ல செய்யவில்லை என்கிறது. 

1கொரிந் 1:22 யூதர்கள் அதிசய அடையாளங்கள் வேண்டும் என்று கேட்கிறார்கள்; கிரேக்கர் ஞானத்தை நாடுகிறார்கள்.  23 ஆனால் நாங்கள் சிலுவையில் அறையப்பட்ட செத்த கிறிஸ்துவைப் பற்றிப் பறை சாற்றுகிறோம்.  அச்சிலுவை  யூதருக்குத் தடைக்கல்லாகவும் பிற இனத்தாருக்கு மடமையாயும் இருக்கிறது.  

எனவே இயேசு அதிசயங்கள் செய்ததாக சுவிசேஷங்களில் உள்ளவை கட்டுக்கதை  

இயேசு மோசே சட்டம் மற்றும் தீர்க்கதரிசிகள் சொன்னவை  எல்லாமே யோவான் ஞானஸ்நானம் பிறப்போடு முடிந்து விட்டது. அதற்கு பின்பு எதுவும் நடக்க வேண்டிய எதுவும் அதில் சொல்லப் படவில்லை என தெளிவாக கூறுகிறார்.

மத்தேயு 11:13 மோசேவின் சட்டமும் எல்லா தீர்க்கர் நூல்களும்  யோவானின் வருகை வரைக்கும் தீர்க்கதரிசனம் உரைத்தன. 

தேவதூதன் மிகத்தெளிவாக தாவீது அமர்ந்த யூதேயா இஸ்ரேல் நாட்டு ஆசனத்தில் அரசராக அமர்ந்து யாக்கோபின் மகன்களான இஸ்ரேலின் 12 ஜாதிகள் (கோத்திரங்களை) ஆட்சி செய்வார் என்று சொன்னதாக உள்ளது.

லூக்கா1:30 வானதூதர் -  "மரியா, அஞ்சவேண்டாம்; ... 31 இதோ, கருவுற்று ஒரு மகனைப் பெறுவீர்; அவருக்கு இயேசு என்னும் பெயரிடுவீர். 32 ... அவருடைய தந்தை தாவீதின் அரியணையை ஆண்டவராகிய கடவுள் அவருக்கு அளிப்பார். 33 அவர் யாக்கோபின் குடும்பத்தின் மீது என்றென்றும் ஆட்சி செலுத்துவார். அவருடைய ஆட்சிக்கு முடிவே இராது" என்றார். 

இயேசு யூதராஜா ஆகவில்லை, தாவீது நாற்காலியில் அமரவும் இல்லை. தேவதூதன் சொன்னதாக சுவிசேஷ கப்சா

ஜோசியர்கள் யூதர்களின் ராஜா நட்சத்திரம் கண்டராம்  

மத்தேயு2:1 ஏரோது அரசன் காலத்தில் யூதேயாவிலுள்ள பெத்லகேமில் இயேசு பிறந்தார். அப்போது கிழக்கிலிருந்து ஞானிகள் எருசலேமுக்கு வந்து, 2 யூதர்களின்  அரசரான குழந்தை பிறந்துள்ளதை அறிவிக்கும் நட்சத்திரத்தைக் கண்டோம்அவரை வணங்க வந்திருக்கிறோம் என்றார்கள்.

மாற்கு சுவிசேஷக் கதையிலோ அல்லது மற்ற 3 சுவி கதைகளில் இயேசு கைது -விசாரணை தண்டனை எதுவுமே முதல் நூற்றாண்டின் யூதர்/ ரோமன் சட்டங்களோடு பொருந்தவில்லை 

“Gospel Account of Mark reflects the Undeniable fact that Jesus was convicted by the Roman authority represented by Pilate. This Fact was of some embarrassment  to Christian propaganda, through all the Roman Empire. Morally the account holds the Jewish Sanhedrin and Caiaphas responsible but the form and execution of the punishment was Roman and Responsibility of Pilate.” Page-243   Who’s Who in the New Testament 

Paul Winter (1904–1969) was born in Moravia. He was a successful barrister in Czechoslovakia moved to  London Winter. Winter's 1961 book On the Trial Of Jesus, received hundreds of reviews, because it detailed critical analysis of the evidence regarding the trial of Jesus, from the standpoint of the legal practices which were applied during the 1st century, analyzed according to Jewish Law, and separately according to Roman Law.

 

Haim Cohn, a Justice of the Supreme Court of Israel, and a scholar of Jewish legal history , offers a profound and respectful engagement of the Gospel narrative of the trail and death of Jesus. U

பரப்பாஸ் விடுதலை கப்சா

“There is no Unambigious reference to this customery release any where outside New Testament, with in the NT,all Four Evangeliste mention it.” Page- 306  Book- Who’s Who in the New Testament  

யூத பஸ்கா பண்டிகையின்போது ஒரு குற்றவாளியை விடுதலை செய்ய ரோமன் கவர்னருக்கு அதிகாரம்,  அதில்  கலகக்காரன் பரப்பாஸ் விடுதலை செய்தார் எனக் கதை.   ரோம் கவர்னருக்கு இப்படி அதிகாரம் இருந்தமைக்கு எந்த ஆதாரமும் கிடையாது.  

தீர்க்கம் நிறைவேறல் கப்சா   

 இயேசு தன் கைது &மரணம் பற்றி முன்பே கூறியதான கதைகளில் மாற்கு - மத்தேயு சுவி கதைகளிள் மட்டும்  உயிரோடு மீண்டும் பழைய உடம்பு காட்சி கலிலேயா மலையில் என்றாராம். 


மாற்கு 14:28 .. நான் இறந்த பிறகு மரணத்திலிருந்து எழுவேன். பிறகு நான் கலிலேயாவுக்குப் போவேன். நீங்கள் போவதற்கு முன் நான் அங்கிருப்பேன்” என்றார்.

மீண்டும் பழைய உடம்பு காட்சி கலிலேயா மலையில்

மத்தேயு 26:32 .. நான் இறந்தபின், மீண்டும் மரணத்திலிருந்து உயிர்த்தெழுவேன். பிறகு கலிலேயாவிற்கு செல்வேன். நான் உங்களுக்கு முன்னே அங்கிருப்பேன்” என்றார்.

த்தேயு கதை- சீடருக்கு காட்சி கலிலேயா மலையில் மட்டுமே  

மத்தேயு 28:16 பதினொரு சீஷர்களும் கலிலேயாவில் இயேசு கூறிய மலைக்குச் சென்றார்கள். 17. மலை மீது இயேசுவை சீஷர்கள் கண்டு, வணங்கினார்கள்

லுக்கா கதையில் சீடருக்கு மீண்டும் காட்சி ஜெருசலேமில் மட்டுமே எனவே இயேசு கலிலேயா செல்வேன் - இல்லை

லுக்கா கதையில் உயிரோடு மீண்டும் பழைய உடம்பு காட்சி ஜெருசலேம் மலையில் அன்றே பரலோகம் எடுத்துக் கொள்ளப்பட்டார். 

லூக்கா 24:50 எருசலேமில் இருந்து பெத்தானியா வரைக்கும் இயேசு சீஷர்களை அழைத்துச் சென்றார். பின்பு கைகளை உயர்த்தி அவர்களை ஆசீர்வதித்தார். 51 இயேசு அவர்களை வாழ்த்தும்போது அவர்களிடமிருந்து பிரிக்கப்பட்டு பரலோகத்திற்கு எடுத்துச்செல்லப்பட்டார்

சுவிசேஷக் கதாசிரியர்கள் தாங்கள் தெய்வீகர் என நம்பிய செத்த மனித இயேசு யார் எனத் தெரியாத நிலையில் செவிவழி கதைகளையும் கிரேக்க பழைய ஏற்பாடு கதையின் வசனங்களையும் வைத்து இயேசு யார் பிறப்பு கதைகளை புனைந்தனர்.   

மாற்கு சுவி ஏசு பிறப்பு பற்றி ஏது சொல்லவில்லை. மத்தேயுவும் லூக்காவும் மட்டும் கூறுகின்றனர்.

மத்தேயு சுவி கதை

லூக்காசுவி கதை

தந்தை- பெத்லஹேமில் வாழ்ந்த யாக்கோபு மகன் ஜோசப்

 ஆபிரகாமிலிருந்து தாவீது -  சாலமன்  வரிசையில்  41 வது தலைமுறை  

.

பெரிய ஏரோது ராஜாவின் மரணத்திற்கு 2 ஆண்டுகள் முன்பு அதாவது பொமு 6 - 7 ல் பிறந்திருக்க வேண்டும் 


 தந்தை -நாசரேத்தில் வாழ்ந்த ஏலி மகன் ஜோசப்


ஆபிரகாமிலிருந்து தாவீது - நாத்தன் வரிசையில்  57 வது தலைமுறை


சிரியாவின் கவர்னர் கிரேனியு காலத்தில் யூதேயாவில் மக்கள் தொகை கணக்கெடுப்பின் போது பொகா 6 - 7ல் பிறந்திருக்க வேண்டும்
 

ஒரு தலைமுறை 25 வருடம் எனில் 400 வருடம் முன்பின் வாழ்ந்த இரு ஏசுகள்.


 ஏசுவின் பெற்றோர் யார், எந்த ஊர்க்காரர்கள், எப்போது பிறந்தார் என்பதிலேயே இவ்வளவு முரண்பாடுகள்- அதாவது சுவிசேஷம் எழுதிய கதாசிரியர்கள் ஏசுவை அறிய வில்லை. புதிய ஏற்பாட்டு நூல்கள் 27ல் ஒன்று கூட வரலாற்று ஏசுவினோடு பழகிய யாரும் எழுதியது இல்லை.

The earliest witnesses wrote nothing’ there is not a Single book in the New Testament which is the direct work of an eyewitness of the Historical Jesus.  Page-197, -A Critical Introduction to New Testament. -Reginald H.f. Fuller. Professor OF New Testament, Union Theological Seminary NewYork

சுவிசேஷக் கதைகளில் தன் வாழ்நாளில் உலகம் அழியும் என சென்னை தெரிவித்தார் பிரிந்த யூத இன வெறி ஏற கடவுளின் பிள்ளைகளை நாய் பன்றி என கீழ்த்தரமாக பேசி திரிந்தார்.

  

ஏசு சீடரோடு எங்கே இயங்கினார்? எத்தனை மாதம்?

மாற்குபடி ஏசு சீடரோடு இயங்கிய காலம் 6- 7 மாதங்கள் மட்டுமே, முழுமையாய் கலிலியோவில்(யூத ஏரோது ஆட்சி பகுதியில்)  யோவான்ஸ்நானனிடம் பாவமன்னிப்பு ஞானஸ்நானம் பெற்றிடவும், பின்னர் கடைசி வாரம் பஸ்கா பண்டிகைக்கு ஆடு கொலை பலியை இஸ்ரேலின் கடவுள் உள்ள ஒரே இடமான ஜெருசலேம் ஆலயமுள்ள யூதேயாவிற்கு சென்றதாய்.

யோவான் சுவிபடி 2 வருடம் + ஓரிரு மாதங்கள், கடைசி 8 மாதங்கள் யூதேயாவில் - ரோமன் ஆட்சிப் பகுதியில்.  

Bible Scholar A.M.Hunter- ஸ்காட்லாந்தின் அபேர்தின் பல்கலைக் கழக புதியஏற்பாடு பேராசிரியர்– ஹன்டர் பின்வருமாறு சொல்லுகிறார்–“If we had only Mark’ gospel we should infer that Jesus ministry was located in Galilee with one first and final visit to Jerusalem, and that the Galileen ministry began after Baptist John was imprisoned. 4th gospel takes a different view. Here the scene shifts backwards and forwards between Galilee and Judea during the first six chapters , from chapter 7 onwards the scene is totally laid in Judea and Jerusalem,(See Jn3:24 for Baptist John and Jesus).” –P 45, Works and Words of Jesus.

பவுல் மிகத் தெளிவாய் இன்னுமொன்றையும் சொல்லுவார் - அவர் மதம் மாற்றி பொருள் சம்பாதிக்க மாற்றப் பட்டவர்கள் - பணபலமோ, செல்வாக்கோ, கல்வி அறிவு இல்லாத பாமரர்கள் மட்டுமே. 

1 கொரி 1: 26 சகோதர சகோதரிகளே! தேவன் உங்களைத் தெரிந்து  ள்ளார். அது பற்றிச் சிந்தியுங்கள். உலகத்தார் ஞானத்தைப் பற்றி வைத்திருக்கும் கணிப்பின்படி உங்களில் பலர் ஞானிகள் அல்லர். உங்களில் பலருக்கு மிகப் பெரிய செல்வாக்கு எதுவும் கிடையாது. உங்களில் பலர் பிரபலமான குடும்பங்களிலிருந்தும் வந்தவர்கள் அல்லர். 


நாம் 4 சுவியையும் இணைத்துப் பார்க்கலமா எனில் அப்போது இரண்டு ஏசு யாக்கோபு வழி ஜோசப் மகன் ஒருவர்; ஏலி வழி ஜோசப் மகன் ஒருவர் என ஆகும்.

முதலில் ஏன் இந்தக் கதைகள் நுழைந்தது.  

ஏதோ ஒரு பழைய ஏற்பாடு வாசகம் எடுத்துக் கொண்டு- இது தீர்க்கம்; இது நிறைவேர வேண்டும் என, பெத்லகேமில் பிறப்பு எனக் காட்டல் வேண்டும்;  பின் ஏசு நசரேயன் என தூக்குமரத்தில் நிருபிக்கப் பட்ட குற்றத்தை தன் கையால் ரோமன் கவர்னர் பிலாத்து எழுதியது; 

இரண்டு சுவி கதாசிரியர்களும் குழம்பி தன்னிச்சையாகப் புனைந்தனர்.

மத்தேயு -யாக்கோபு மகன் ஜோசப் பெத்லகேமிலே வாழ்ந்தவர், குடும்பத்தை பெத்லகேமிற்கு அனுப்ப நட்சத்திரக் கதைகள், ஏரோது ஏசுவிற்காக பலப்பல அப்பாவி குழந்தைகாக கொன்றாராம்.  

லுக்கா ஏலி மகன் ஜோசப்பை நாசரேத்தில் வாழ்ந்தவர்.  பிறப்பிற்கு ஏலி மகன் ஜோசப்பை பெத்லகேம் கொண்டு வர மக்கள் குடிமதிப்பு கதை தேவைப்பட்டது. வரலாற்றில் ஒரே ஒரு சென்சஸ் தான்;  பொ.கா. 8 வாக்கில் செய்யப்பட்டது, அது அனைவரும் தாங்கள் தொழில்- சொத்து உள்ள ஊரில் ரோமன் ஆட்சிக்கு வரியை நிர்ணயம் செய்ய, அதற்கு 1000 வருட முன்னோர் ஊர் சென்றால் சொத்து எப்படி தெரியும். அத்தனையும் பொய் கதை.

பெத்லஹேமில் கன்னிக்கு   பிறப்பு கட்டுக்கதை.

பைபிளியல் அறிஞர்கள் கூற்று. கேம்ப்ரிட்ஜ் பல்கலைகழக பேராசிரியர் கூறியது- ஏசு, நாசரேத்தில் வாழ்ந்த ஜோசப்- மேரி மகன், நாசரேத்திலே தான் பிறந்திருக்க வேண்டும். ஏசு பிறப்பில் அதிசயம் இருக்கவேண்டும் என கன்னி கருத்தரிப்பு, பெத்லஹேம் பிறப்பு போன்றவை நுழைந்தன, இவற்றில் உண்மை இருக்க வாய்ப்பில்லை  

“Jesus was the first-born son of a Jewish girl named Mary and her husband Joseph, a descendant of King David, who worked as Carpenter, at small town of Nazareth in the region of Palestine known as Galilee. The date of birth was about -5 B.C., and the place of birth in all probability Nazareth itself. Towards the end of first century A.D. it came to be widely believed by Christians that at the time of his birth his mother was still a virgin, who bore him by the miraculous intervention of God. This view, however though dear to many modern Christians for its doctrinal value, is unlikely to be true in point of fact.” Life of Jesus; J.C.Cadoux, Page -27.

No comments:

Post a Comment

'சிங்கம்' போன்ற படங்கள் ஆபத்தான செய்தியை அனுப்புகின்றன: பாம்பே உயர்நீதிமன்ற நீதிபதி

   Films Like 'Singham' Send Dangerous Message: Bombay High Court Judge https://www.newspointapp.com/news/india/films-like-singham-s...