புளியம்கொம்பை கல்வெட்டுகள்
புள்ளிமான்கோம்பை நடுகற்கள் பொமு இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்தவையாகும். இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்ட கல்வெட்டுகளில் மிக பழமையானதாக அசோகரின் பிராமி கல்வெட்டு கருதப்பட்டு வந்தது. ஆனால் இந்தியாவில் இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட நடுகற்கற்களிலேயே மிகவும் பழமையானவை இந்த நடுகற்கள் தான் என்று வரலாற்று ஆய்வாளர்கள் கருதுகின்றார்கள். தமிழர்கள் மொழியறிவு, எழுத்தறிவு பெற்றவர்கள் என்றும் கல்வெட்டுகளில் எழுத்து குறிக்கும் பழக்கம் கொண்டவர்கள் என்றும் புலிமான்கோம்பை கல்வெட்டுகள் நிரூபித்துள்ளன.
மூன்று கல்வெட்டுகளின் விளக்கம்
1: கல்வெட்டு சிதைந்துள்ளதால் (அன் ஊர் அதன் ..(ன்)அன் கல்) முழுமையான பொருளை அறிய முடியவில்லை
2 : வேள் ஊர் அவ்வன் பதவன்- வேள் ஊரைச் சேர்ந்த பதவன் அவ்வன் என்பவனுக்காக எடுக்கப்பட்ட நடுகல்
3 : கல் பேடு தீயன் அந்தவன் கூடல் ஊர் ஆகோள்-கூடல் ஊரில் நடந்த ஆகோள் பூசலில் உயிர் நீத்த பேடுதீயன் அந்தவனுக்காக எடுக்கப்பட்ட நடுகல்
எழுத்தமைதியின் அடிப்படையில் இரு கல்வெட்டுக்களின் காலம் பொமு. 2ஆம் நூற்றாண்டு தொடக்கம் எனவும் மற்றொரு கல்வெட்டின் காலம் பொமு. 2ம் நூற்றாண்டு சற்று பிற்பகுதி எனவும் கணிக்கப் பெற்றுள்ளது.
இந்த கல்வெட்டைப் பற்றி காலம் பற்றியும் முன் தள்ளி பல ஊகங்கள் கூறப்பட்டாலும் பிராமி எழுத்துகளை ஆராயும் பன்னாட்டு பல்கலைக் கழக அறிஞர்கள் ஏற்கும் காலத்தை நாம் தந்து உள்ளோம்
No comments:
Post a Comment