தமிழ்நாட்டில் 10,877 அரசுப் பள்ளிகளில் 30 மாணவர்களுக்கும் குறை 12,937 பள்ளிகளில் 100 மாணவர்களுக்கும் குறைவாக படிக்கும் அவலம் By ETV Bharat Tamil Nadu Team Published : July 5, 2024 https://www.etvbharat.com/ta/!education-and-career/school-education-dept-said-most-of-the-govt-school-less-than-30-students-across-in-tn-tns24070501763
TN School Education Dept: பள்ளிக்கல்வித்துறை அதிர்ச்சி தகவல்
சென்னை: கடந்தாண்டில் தமிழ்நாட்டில் உள்ள 10 ஆயிரத்து 877 அரசு ஆரம்பப் பள்ளிகளில், 30-க்கும் குறைவான மாணவர்களே படித்து வந்துள்ளனர் என்ற அதிர்ச்சி தகவலை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. அதில் குறிப்பாக, வட மாவட்டங்களில் உள்ள பள்ளிகளில் மாணவர்கள் குறைவான எண்ணிக்கையில் படிப்பதும் தெரியவந்துள்ளது. அதற்கு காரணம், பள்ளிகளில் போதுமான ஆசிரியர்கள் இல்லாததால், தனியார் பள்ளிகளில் மாணவர்களை சேர்ப்பதையே பெற்றோர்கள் விரும்புகின்றனர் என கல்வியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
ஒருங்கிணைந்த பள்ளிக் கல்லூரி திட்ட இயக்குநரகம் 2023 - 24ஆம் கல்வியாண்டின் அடிப்படையில், தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு பள்ளிகளுக்கு கழிவறைகளை பராமரித்தல், கழிவறையை சுத்தம் செய்வதற்கான பொருட்களை வாங்குதல், பள்ளிகளை பராமரிப்பு செய்வதற்கான பொருட்களை வாங்குதல், பிற செலவுகள் என்று மாணவர்களின் எண்ணிக்கை அடிப்படையில் பள்ளிகளுக்கு நிதி வழங்கி உள்ளார். தற்போது மாணவர்களின் எண்ணிக்கையுடன் இயங்கக்கூடிய அரசு பள்ளிகளின் எண்ணிக்கை குறித்த விவரங்கள் வெளியாகியுள்ளது.
பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், "தொடக்கக் கல்வித்துறையின் கீழ் உள்ள 10 ஆயிரத்து 861 ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிகளில் 1 முதல் 30 மாணவர்கள் வரை படித்து வருகின்றனர். அது குறித்த விபரங்கள் பின்வருமாறு:-
| வ.எண் | மாவட்டம் | பள்ளிகள் |
| 1. | திருப்பூர் | 546 |
| 2. | ஈரோடு | 509 |
| 3. | திண்டுக்கல் | 496 |
| 4. | ராமநாதபுரம் | 475 |
| 5. | திருவண்ணாமலை | 468 |
| 6. | புதுக்கோட்டை | 409 |
| 7. | சிவங்கை | 463 |
| 8. | சேலம் | 401 |
| 9. | தஞ்சாவூர் | 395 |
| 10. | நாமக்கல் | 399 |
| 11. | கிருஷ்ணகிரி | 399 |
| 12. | கரூர் | 327 |
| 13. | தருமபுரி | 346 |
| 14. | திருச்சிராப்பள்ளி | 334 |
| 15. | திருவள்ளூர் | 393 |
| 16. | விழுப்புரம் | 394 |
| 17. | கடலூர் | 330 |
| 18. | தூத்துக்குடி | 353 |
| 19. | விருதுநகர் | 348 |
அதேபாேல், 30 மாணவர்கள் முதல் 100 மாணவர்கள் வரை இயங்கக்கூடிய பள்ளிகள் எண்ணிக்கை 12,937 என்பதும், 100 முதல் 250 மாணவர்கள் வரை இயங்கக்கூடிய பள்ளிகள் எண்ணிக்கை 6,262 என்பதும் தெரியவந்துள்ளது. 250 மாணவர்கள் முதல் ஆயிரம் மாணவர்கள் வரை உள்ள பள்ளிகள் எண்ணிக்கை 1,145 என்ற அளவிலும், ஆயிரத்திற்கும் அதிகமான மாணவர்கள் படிக்கக்கூடிய பள்ளிகள் வெறும் 12 தான் என்பதும் தெரியவந்துள்ளது.
இந்த 12 பள்ளிகளைப் பொறுத்தவரை, சென்னை மாவட்டத்தில் 7, திருப்பூர், தூத்துக்குடி, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் தலா ஒரு பள்ளியும் உள்ளன. தற்போது, தொடக்கக் கல்வித்துறையின் கீழ் உள்ள 31 ஆயிரத்து 217 பள்ளிகளில் 10 ஆயிரத்து 861 பள்ளிகளில் 30 மாணவர்களுக்கும் குறைவாக படிக்கின்றனர். இந்த நிலையில், 1 முதல் 5ஆம் வகுப்பு வரையில் உள்ள பள்ளிகளில் கடந்தாண்டு படித்த மாணவர்களின் எண்ணிக்கை அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.
பள்ளிக்கல்வித்துறையின் கீழ் செயல்படும் 6,254 அரசுப் பள்ளிகளில், 30 மாணவர்கள் வரை இயங்கக்கூடிய பள்ளிகள் எண்ணிக்கை 16 ஆக உள்ளது. அதில், நீலகிரி மாவட்டத்தில் 5 பள்ளிகளும், சென்னை, பெரம்பலூர், ராமநாதபுரம், சிவகங்கை, திருச்சிராப்பள்ளி, திருப்பூர், விருதுநகர் ஆகிய மாவட்டத்தில் தலா ஒரு பள்ளியும், கோயம்புத்தூர், திருநெல்வேலி ஆகிய மாவட்டத்தில் தலா 2 பள்ளிகளும் செயல்பட்டு வருகின்றன.
அதேபோல, 30 முதல் 100 மாணவர்கள் வரை இயங்கக்கூடிய பள்ளிகள் எண்ணிக்கை 536 எனவும், 101 முதல் 250 மாணவர்கள் வரை இயங்ககூடிய பள்ளிகள் எண்ணிக்கை 2,183 எனவும், 250 - 1000 மாணவர்கள் வரை 3,047 அரசுப் பள்ளிகளும், 1000 மாணவர்களுக்கு மேல் 472 பள்ளிகள் மட்டுமே இயங்கி வருகின்றன.
கடந்தாண்டில் அரசுப் பள்ளிகளில் போதுமான ஆசிரியர்கள் இல்லாமல் இருந்ததாலும், ஒராசிரியர், ஈராசிரியர் என பள்ளிகள் அதிகளவில் செயல்பட்டு வந்தன. மேலும், தற்காலிகமாக பெற்றோர் மற்றும் ஆசிரியர் கழகங்களின் மூலம் 14 ஆயிரம் தற்காலிக ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டனர். இதன் அடிப்படையில் தான் நடப்பாண்டில் அரசுப் பள்ளிக்கான பராமரிப்பு மானியம் ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ளது எனவும் கூறப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.
https://www.facebook.com/photo/?fbid=1601898504555898&set=a.677384943673930
தமிழகத்தில் 37,595 அரசுப் பள்ளிகள், 7,289 அரசு உதவி பெறும் பள்ளிகள், 1,046 பகுதி நிதியுதவி பெறும் பள்ளிகள், 12,929 தனியாா் சுயநிதிப் பள்ளிகள், 65 மத்திய அரசுப் பள்ளிகள் என மொத்தம் 58,924 பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் மொத்தம் 1,21,22,814 மாணவா்கள் படித்து வருகின்றனா். அதில் அரசுப் பள்ளி மாணவா்களின் எண்ணிக்கை 42,54,451-ஆகவும், அரசு உதவி பெறும் மாணவா்களின் எண்ணிக்கை 13,51,972-ஆகவும் உள்ளது.
தமிழகத்தில் நிகழ் ஆண்டில் 208 அரசுப் பள்ளிகள் (தொடக்க, நடுநிலை), 114 அரசு நிதியுதவி பெறும் பள்ளிகள், 11 பகுதிநேர நிதியுதவி பெறும் பள்ளிகள், 869 தனியாா் சுயநிதிப் பள்ளிகள், மத்திய அரசின் இரு பள்ளிகள் என மொத்தம் 1,204 பள்ளிகளில் மாணவா் சோ்க்கை நடைபெறவில்லை.
மத்திய சுகாதார அமைச்சகம் கடந்த 2020 ஜூலையில் வெளியிட்ட இந்திய மக்கள் தொகை மதிப்பீடு குறித்த அறிக்கையில், தமிழகத்தில் பிறப்பு விகிதம் ஆண்டுதோறும் குறைந்து கொண்டே வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதில், கடந்த 2011-இல் 0-1 வயதில் 10.74 லட்சமாக இருந்த மக்கள்தொகை 2016-இல் 10.45 லட்சமாகவும், 2021-இல் 9.53 லட்சமாகவும் குறைந்துள்ளது. வரும் 2026-ஆம் ஆண்டைப் பொருத்தவரை அது 8.78 லட்சமாக இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று, தமிழக பொது சுகாதாரத் துறை கடந்த 2024-இல் வெளியிட்ட விவரங்களின்படி 2023-இல் பிறந்த குழந்தைகளின் எண்ணிக்கை 9,02,718 எனவும், 2024-இல் 6.2 சதவீதம் குறைந்து 8.46 லட்சம் குழந்தைகளே பிறந்துள்ளனா்.
நிகழாண்டு மாணவா் சோ்க்கை நிகழாத பள்ளிகளில் 72 சதவீதப் பள்ளிகள் சுயநிதிப் பள்ளிகள் ஆகும். அரசுப் பள்ளி, தனியாா் பள்ளி என்ற எந்தவித வேறுபாடும் இல்லாமல் மாணவா் சோ்க்கை குறைவுக்கு தமிழகத்தில் குழந்தை பிறப்பு விகிதம் குறைவே மிக முக்கிய காரணம்.
மூடப்பட்ட பள்ளிகளில் பெரும்பாலான பள்ளிகள் கிராம மற்றும் தொலைவில் உள்ள பகுதிகளில் அமைந்துள்ளன. இந்தப் பகுதியில் உள்ள குடியிருப்புகளில் பள்ளியில் சேரும் தகுதியான வயதில் 5 மற்றும் அதற்கு மேற்பட்ட குழந்தைகள் யாரும் இல்லை.
மேலும், தனிநபா் பொருளாதார வளா்ச்சி அதிகரித்ததால் தங்களின் பிள்ளைகள் தனியாா் பள்ளியில் சோ்வதைப் பெருமையாக ஒரு சில பெற்றோா் கருதுவதால், தனியாா் பள்ளிகளில் கட்டணம் செலுத்தி ஆங்கில வழிக் கல்வியை தொடருகின்றனா்.
அதேபோன்று கிராமப் பகுதிகளில் வசித்து வரும் மக்கள் தங்கள் வேலை வாய்ப்புக்காக நகா்ப்புறம், அண்டை மாநிலங்களுக்குச் குடும்பத்துடன் இடம் பெயா்கின்றனா். அதனால் அரசுப் பள்ளிகளில் படித்து வந்த மாணவா்களின் எண்ணிக்கை படிப்படியாகக் குறைந்து மாணவா் இல்லாத நிலையை அடைந்துள்ளது.

No comments:
Post a Comment