Thursday, January 8, 2026

ஈவெரா வழியினர் ரௌடித்தனம் -புத்தகக் கண்காட்சி முகப்பு நூல் விளம்பரம் நீக்கம்

 ஈவெரா வழியினர் ரௌடித்தனம் -புத்தகக் கண்காட்சி முகப்பு நூல் விளம்பரம் நீக்கம். சில்லறை உபிக்கள் கருத்து சுதந்திரம் பற்றி வாய் திறக்க மாட்டர்கள்

Rajesh Kumar  -சென்னையில் நடக்கும் புத்தகக் கண்காட்சியில் கடை போடாமல் டிஸ்கவரி தனது கடையில் தனியாக ஒரு கண்காட்சி நடத்துவது ஏன் -அல்லது- பெரும்பாலான பதிப்பாளர்கள் அரங்க வாசலில் நின்றுகொண்டு யாரோ ஒரு ரேண்டம் வாசகர் கையை பிடித்து இழுத்து அவரை வைத்து புத்தக வெளியீடு விழா நடத்துவது ஏன்?


- கடந்த ஆண்டு (2025) புத்தகக் கண்காட்சியில் டிஸ்கவரி பதிப்பித்த ஒரு புத்தகத்தின் பெயர் “தமிழ்த் தேசியம் ஏன்? ஏதற்கு? எப்படி?” அதை தொகுத்த பாலமுரளிவர்மன் ஒரு இயக்குநரும் என்பதால் சீமானை வைத்து வெளியிட விரும்புகிறார்
- அந்த புத்தகத்தின் வெளியீட்டு விழா கண்காட்சியின் வெளி அரங்கில்*1 நடக்கிறது
- விழா துவக்கம் “வாழ்வினில் செம்மையைச் செய்பவள் நீயே! மாண்புகழ் நீயே என் தமிழ்த் தாயே!” என்ற தமிழ்த்தாயை புகழும் பாடல்*2 ஒலிபரப்பட்டுகிறது. அதை எழுதியவர் பாரதிதாசன்*3
- விழாவில் பேசிய சீமான் திராவிடத்தையும் தமிழ் தேசியத்தை ஒப்பிட்டு பேசியதுடன், ஆளுங்கட்சியையும் விமர்சிக்கிறார்
- விழா முடிந்த பின்பு டிஸ்கவரி வேடியப்பன் ஒரு அறிக்கை விடுகிறார். அதில் நூலாசிரியரின் பரிந்துரையின் பேரிலேயே சீமானை அழைத்தோம். அரசுக்கு எதிரான கருத்துகளைப் பேசக்கூடாது*4 என்ற அறிவுறுத்தலுடன் தான் பபாசி இதற்கான அனுமதியை வழங்கியது. அதை சீமானிடமும் வலியுறுத்தினோம். சீமானின் விருப்பத்தின் பெயரில் பாடப்பட்ட பாரதிதாசனின் பாடல் புதுச்சேரியின் தமிழ்த்தாய் வாழ்த்து என்பது தெரியாது. இதற்கெல்லாம் எனது அறியாமையே காரணம். சீமான் பேசிய கருத்துகளில் எனக்கு உடன்பாடில்லை. இதை நாங்கள் ஆதரிக்கவில்லை. இதை ஒரு பாடமாக எடுத்துக்கொள்கிறோம் என்றெல்லாம் சொல்லி மன்னிப்பு கேட்கிறார்
- இருந்தாலும் டிஸ்கவரி இந்த வருடமும் புத்தகக் கண்காட்சியில் கடை போட விடாமல் பபாசி தடை செய்திருக்கிறது.
+++
*1. வெளி அரங்கம் என்பது தனி. அதில் பட்டிமன்றம் முதல் கண்ட கண்றாவி நிகழ்ச்சியும் நடக்கும். அதில் அரசியலும் பேசலாம் ஆனால் பேசுவது ஆளுங்கட்சி ஆட்களாக இருக்க வேண்டும். சீமான் பேசினால் பபாசிக்கு வேட்டி நனைந்துவிடும் - பயத்தில் வியர்த்துதான்.
*2. சினிமா கொட்டாயில் தேசிய கீதத்துக்கு எந்திரிக்காமல் உட்கார்ந்திருந்தவனை கண்டித்தவர்களை கருத்து சுதந்திரம் என்று கடித்துக் குதறிய முற்போக்குகள் புத்தக கண்காட்சியில் தனியார் விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து எதற்கு பாட வேண்டும் என்று கேட்காமல் பொத்திக் கொண்டு இருப்பான்கள்
*3. பாரதியார் பார்ப்பான் பாரதிதாசனே எங்கள் ஆசான் என்று அவருக்கு திராவிட புரட்சிக் கவி என்று பட்டமெல்லாம் கொடுத்து மத்த நேரமெல்லாம் வெறி நாய் கடித்தது போல கத்தும் திராவிடர் கழக குஞ்சுகள் புதுச்சேரி வாழ்த்தா இருந்தா என்ன பாரதிதாசன் எழுதியதுதானே அதுவும் தமிழ்த்தாயைத்தானே வாழ்த்துகிறது என்றெல்லாம் கேட்காமல் நீ ரசத்தை ஊத்து மோடில் இருப்பான்கள்
*4. கண்காட்சிக்கு உள்ளே இந்திய சுதந்திரப் போராட்டம் குறித்து குழந்தைகள் கார்ட்டூன் முதல் ஆராய்ச்சி புத்தகம் வரை குறைந்தது 1330 புத்தகங்கள் விற்பார்கள். அதில் ஆங்கிலேய அரசின் அடக்குமுறையில் அவதிப்பட்ட இந்திய பிரஜைகள் குறித்து ஆயிரம் தகவல் இருக்கும். ஆனால் சுதந்திர இந்தியாவில் புத்தக கண்காட்சிக்கு வெளியே ஆளும் அரசுக்கு எதிராக யாரும் எதுவும் பேசி விடக்கூடாது என்று பபாசி அடக்குமுறை செய்யும். மீறி யாராவது பேசிவிட்டால் அவரை ஒன்றும் செய்ய முடியாமல் அவரை அழைத்தவர்களை தொழில் ரீதியாக முடக்கும். ஏனெனில் அரசுக்கு ஏவலாளியாக இருந்து சொம்படிப்பதில் பபாசி சுணக்கம் காண்கிறதோ என்று ஒரு வேளை அரசு நினைத்துவிட்டால் என்னாகுமோ என்ற நினைப்புக்கே பபாசிக்கு வேட்டி நனைந்துவிடும் - இது பயத்தால் இல்லை.

No comments:

Post a Comment

இந்தி பரப்பும் சிபிஎஸ்இ பள்ளிகள் மூலம் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் & திமுக அமைச்சர் குடும்பத்தினர் ஆண்டிற்கு பல ஆயிரம் கோடி வியாபாரம் நடக்கிறது

CBSE பள்ளிகளின் நடத்தும் விவரம் :   முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின், அன்பழகன், துரை முருகன், ஆற்காடு வீராசாமி குடும்பத்தினர் திமுக அமைச்சர்கள...