Monday, January 12, 2026

தவெக ஜோசப் விஜய் 7மணிநேரம் சிபிஐ விசாரணை அடுத்து செந்தில்பாலஜி??

 "ஒரு பார்மாலிட்டிக்கு உங்கட்ட கேள்வி கேப்பாங்க... எந்த கேள்வி கேட்டாலும், எனக்கு அதப்பத்தி தெரியாதுன்னு மட்டும் சொல்லிடுங்க போதும்னு சொல்லித்தான் டெல்லிக்கு கூட்டிட்டு வந்தாங்கம்மா!"


"அப்புறம் என்னாச்சு?"

"மொத கேள்வியே உங்க பெயர் என்னன்னு தான் கேட்டாய்ங்க... சொல்லிக்குடுத்த மாதிரியே, 'அதப் பத்தி எனக்கு தெரியாது!'ன்னு சொன்னேன்மா... நான் பொய் சொல்றேன்னு கண்டுபுடிச்சிட்டாய்ங்க போல!" 

"அப்புறம் என்னாச்சு?"

"சுத்தி நாலு பேரு... ஏழு மணி நேரமா கேள்வி மேல கேள்வி கேட்டாய்ங்கம்மா... நானும் எல்லாத்திக்கும் அதப்பத்தி எனக்கு தெரியாதுன்னே தான் சொல்லிட்டு வந்தேன்மா!" 

"அப்புறம் என்னாச்சு?"

"ஒரு கேள்விக்காவது உண்மைய சொல்லப்போறியா இல்லையான்னு கேட்டாய்ங்க... நான் படக்குன்னு நீங்க என்ன சொன்னாலும் கேட்டுக்கறேன்னு கால்ல விழுந்துட்டேன்மா..."

"அப்புறம் என்னாச்சு?"

"நாங்க மேலிடத்துல கேட்டுட்டு சொல்றோம்னு சொல்லி ஒரு நாள் தங்க வச்சிட்டாய்ங்கம்மா!"

"அப்புறம் என்னாச்சு?"

"டீல் ஓகே! எப்ப கூப்பிட்டாலும் வரணும்னு சொல்லி அனுப்பியிருக்காய்ங்கம்மா!"

"ஏன் அழுறீங்க?"

"என்னைய கேள்வி கேட்டவிங்கள்ல ஒருத்தன், இவன் என்ன கேள்வி கேட்டாலும் எதுத்து ஒரு வார்த்தை பேச மாட்டீங்கறான்டா... இவன் ரொம்ப நல்லவேன்னு சொல்லிட்டாம்மா!!"

- வத்திராயிருப்பு தெ.சு.கவுதமன் 

No comments:

Post a Comment

ஈவெராமசாமியார் புண்ணாக்கு புரட்சி - ஒரே மணமேடையில் ஒரு மணமகனுக்கு - இரு பெண்களோடு திருமணம்

  முதல் “ புண்ணாக்கு  சுயமரியாதைத் திருமணம்’’ நடைபெற்றதன் பின்னணியைப் பார்ப்போம்.  அருப்புக்கோட்டையின் அருகே உள்ளது சுக்கிலநத்தம் நிலங்களுக்...