Friday, January 9, 2026

முதல்வர் நிகழ்ச்சியில் பிற்படுத்தப்பட்ட(BC/MBC) ஜாதிகளுக்கு கடனுதவி - ஏன் ஸ்டாலின் பதில் சொல்லவில்லை?

 "SC/ST மக்களுக்கு மட்டும் "தாட்கோ" இருக்கின்றது. எங்களுக்கும்(BC/MBC) அது போன்று கடனுதவி வழங்க வேண்டும்" என்று மேடையில் அந்தப் பெண் அறியாமையில் கேட்கின்றார்.


அதற்கு முதல்வர்M.K.ஸ்டாலின் ஏன் சரியாக பதிலளிக்கவில்லை..?? மிகப்பெரிய ஏமாற்றமாக இருக்கிறது.
BC, MBC மக்களுக்கு கடனுதவி மையமாக இருக்கும் TABCEDCO துறை பற்றி முதலமைச்சர் அவர்கள்., அறியாமையில் இருக்கும் அந்த பெண்ணுக்கு அந்த மேடையிலேயே விளக்கி இருக்க வேண்டாமா...??
TABCEDCO என்பது Tamil Nadu Backward Classes Economic Development Corporation (தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம்) என்ற அரசு நிறுவனத்தின் சுருக்கம்.
இது தமிழக அரசின் பிற் படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் (BC, MBC) மற்றும் சீர்மரபினர் (Denotified Communities - DNC) வகுப்பைச் சேர்ந்தவர்களின் பொருளாதார மேம்பாட்டுக்காக செயல்படும் கழகம்.
TABCEDCO லோன் என்பது இக்கழகம் வழங்கும் குறைந்த வட்டியுடன் கூடிய கடன் உதவித் திட்டங்கள்.
இவை சிறு தொழில் தொடங்குதல், வியாபாரம், விவசாயம், பால் கன்று வளர்ப்பு, கல்வி போன்றவற்றுக்காக வழங்கப் படுகின்றன.
மேலும் கடந்த அக்டோபர் 7ஆம் தேதி இது குறித்து ட்விட்டரில் முதல்வர் துணை முதல்வர் புகைப்படங்களோடு விளம்பரங்கள் வந்துள்ளது. 🤔😁
இவையெல்லாம் தெரிந்து மாண்புமிகு முதல்வர் அவர்கள் மேடையில் கடந்து சென்றாரா என்று தெரியவில்லை

/SC/STக்கு மட்டும் தாட்கோ லோன் கொடுத்தா எம்பிசி நாங்கலாம் எங்க சார் போறது//

பிற்பட்டBC? MBC ஜாதிகளுக்கு,

தமக்கு இட ஒதுக்கீடு இருப்பதும், ஸ்காலர்ஷிப் வாங்குவதும் தெரியாது. தாட்கோ போல மானியக் கடன் பெற TABCEDCO இருப்பது தெரியாது. குற்றப் பரம்பரையாக ஒடுக்கப் பட்டதும் சீரமைப்பு பள்ளி, அரசு பிற்பட்ட மாணவர் விடுதி பற்றியும் தெரியாது. உயர் கல்விப் புலத்தில் பிற்பட்ட மாணவர் சாகடிக்கப் படுவதும் அதற்கு பார்ப்பனீயமே காரணமாக இருப்பதும் தெரியாது‌. பிற்பட்டோர் நலத்துறை என ஒன்று இருப்பதே தெரியாதாம்.
மனுஸ்மிருதிப் படி தாம் சூத்திரர் என்பதும் அதுவே OBC இட ஒதுக்கீடு பெற அடிப்படைக் காரணம் என்பதும் தெரியாது. கோயிலைக் கட்டிக் கொடுத்து விட்டு தாம் ஏன் கருவறைக்கு வேளியே நிற்கிறோம் என்பதும், சமஸ்கிருதமே புனித மொழி என்று கூறி தாய்மொழி தமிழை இழிவு செய்வதும் ஏன் என்று தெரியாது. இறந்த ஆத்மாவின் தாகம் தீர்ப்பதாக அச்சுறுத்தி பணம் பறிக்கும் மோசடியை ஆராயத் தெரியாது. இதையெல்லாம் எடுத்துச் சொன்ன ஈவெராவின் உழைப்பு பற்றித் தெரியாது.
இபிகோ/ பிஎன்எஸ் சட்டத்தை எழுதியது அம்பேத்கர் அல்ல என்பது தெரியாது. பிற்பட்டோர் இட ஒதுக்கீட்டுக்கு உதவும் சட்டப்பிரிவை அவர் சேர்த்தது தெரியாது.

குற்றப் பரம்பரைச் சட்டத்தை நீக்குவதில் அம்பேத்கரின் உழைப்பும் இருந்தது தெரியாது. 8 மணி நேர வேலை துவங்கி இபிஎஃப், பேறுகால விடுப்பு, அகவிலைப்படி என பல்வேறு தொழிலாளர் உரிமை மற்றும் நலச் சட்டங்களை அவர் உருவாக்கியது பற்றியும் தெரியாது.
சக மனிதர்கள் மீது ஏன் வன்கொடுமையை ஏவுகிறோம் என்பது தெரியாது. பெண்களையும், குழந்தைகளையும் கூட ஜாதியின் பெயரால் அவமதிக்கும் தம் உளவியல் கோணல் பற்றித் தெரியாது. மன்னராட்சி ஒழிக்கப்பட்டு மக்களாட்சி வந்ததும், மனு ஸ்மிருதி ஒதுக்கப்பட்டு அரசியல் சாசனம் வந்ததும் தெரியாது. பிசிஆர் என்பது, protection of civil rights என்பதே தெரியாது.
இவையெல்லாம் பிற்பட்ட மக்களிடம் பரப்புரை செய்தாக வேண்டியவை என்பது திராவிட அமைப்புகளுக்கோ, அதிகாரத்துக்கோ தெரியாது. அனைத்து மக்களின் வாக்குகளையும் வாங்கி அமைச்சராகி விட்டு, தத்தமது ஜாதி சங்கக் கூட்டத்தில் ஆணவமாகப் பேசுவது சமூக நீதிக்கு எதிரானதெனத் தெரியாது. அவ்வளவு ஏன் விரலைக் கொடுத்தால் கடிக்கவும் தெரியாது‌.

No comments:

Post a Comment

திமுக - காங்கிரஸ் கூட்டணி ஆட்சியின் போது ப. சிதம்பரம் தலைமையில் ஆட்சி (ஹிந்தியை} மொழி நாடாளுமன்றக் குழு ஹிந்தியைபரவலாக்கும் நோக்கில் 117 பரிந்துரைகளில் முக்கியமானவை

  2009- ஆகஸ்ட், 26-ல் உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் ஆட்சி மொழி தொடர்பான நாடாளுமன்றக் குழுவின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அந்தக் குழு...