வேதங்கள் - இவை வடமொழியில் செம்மை செய்து இலக்கணம் உருவாகுமுன் இயற்றப் பட்டவை.
வேதம் என்ற வடமொழிச்சொல் 'வித்' என்ற வடமொழி வேரிலிருந்து தோன்றும் சொல். வித்தை (=வித்யை/வித்யா), வித்வான் போன்ற சொற்களும் இதே வேரில் இருந்து தோன்றும் சொற்கள். ஆக வேதம் என்றால் வித்யா (அறிவுக்களஞ்சியம், கற்கவேண்டிய ஒன்று) என்ற பொருள் கொண்டுள்ளது.
தனியாக பொருளும் பிரித்து கூறும் போது சிறப்பான பொருள் தரும் என்பதால் இவை குரு பரம்பரையாகவே கற்று வருவர். அதானால் ஓதிக் கற்காமல் ஒத்து கூறி கற்பதால் ஓத்து (குறள் 134) என ஆகும்.
கேட்டே கற்பதால் இதை ஸ்ருதி எனவும் தமிழில் கேள்வி என் (பதிற்.21:1, பரி.2:24,61;3:48, பரி.தி.1:19 கூறுகிறது. இதையே எழுதாக் கற்பு எனக் குறுந்தொகை(குறுந்.156)
கூறுகிறது.
முதுமொழி (பரி.3:42,47;8:11;13:10), முதுநூல் (புறம்.166.4) அருமறை (பரி;1:13,2:57,3:14,4:65),
எழுதாமல் மறைத்த் ஒலி மூலம் பரப்புவதால் இது மறை எனப்படும். ரிக், யஜுர், சாம, அதர்வண என நான்கு வேதங்கள் என்பதால் நான்மறை எனப்படும்.
நான்மறை (புறம்.26:13;93:7;362:9; பரி.9:12), நால் வேதம் (புறம்.2:18;15:17)
அந்தணர் வேதம் (மது.654-656), அந்தணர் அருமறை (பரி1:13,2:57, 3:14, 4:65), அந்தணாளர் நான்மறை (புறம்.363:8-9)
இன்றைக்கு 2000 ஆண்டுகட்கு முன் தொடங்கி அடுத்த 700 ஆண்டுகளில் எழுந்த சங்க இலக்கியத்தில் வேதங்கள் பற்றிய முழுமையான தெளிவும் மக்கள் பல்வேறுவிதமாகப் போற்றுவதும் உள்ளதில் சில காண்போம்.
ஆறு அங்கங்கள் கொண்டு உணரத்தக்கது வேதம் என்னும் கருத்தைப் பின்வரும் புறநானூற்றுப் பகுதி விளக்கும்.
"நன்று ஆய்ந்த நீள் நிமிரிசடை
முதுமுதல்வன் வாய் போகாது
ஒன்று புரிந்த ஈர் - இரண்டின்
ஆறு உணர்ந்த ஒரு முதுநூல்' (புறம்.166:1-4)
"சொல், பெயர், நாட்டம், கேள்வி, நெஞ்சம் என்று ஐந்துடன் போற்றி அவைதுணையாக எவ்வம் சூழாது விளங்கிய கொள்கை' (பதிற்.21:1-3)
No comments:
Post a Comment