Thursday, January 22, 2026

சனாதனம் என்றால் தமிழக அரசின் பிளஸ் டூ பாடம் - திருவள்ளுவர் கூறுவதையே கூறுகிறது

 தமிழ்நாடு அரசின் மேல்நிலை இரண்டாம் ஆண்டு (பிளஸ் டூ) பாட புத்தகத்தில் பக்கம் 58-இல், "இந்து சமயம், சனாதன தருமம், வேத சமயம், வைதிக சமயம் போன்ற பல்வேறு பெயர்களால் அழைக்கப்படுகிறது. `சனாதன தருமம்` என்றால் `அழிவில்லாத நிலையான அறம்` எனப்படும்," என்று பாடம் இடம்பெற்று இருக்கிறது.

 மனிதப் பிறவி என்பது குற்கிய காலம் வாழ்வது; ஆனால் உயிர் என்பது நிலையானது, பிறந்து இறந்து மீண்டும் பிறந்து  இறந்து மீண்டும் எனும் தொடர்சியானது. இதை வள்ளுவர் மன்னுயிர் எனக் கூற்வார் மேலும் எளிதாகப் புரிய‌ இந்துமதத்தின் புராதனப் பெயரே சனாதன தர்மம்.

திருக்குறள் கூறும் சமயம் சனாதனமே - சமணர் மணக்குடவர் உரைப்படியே


 

 கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்

நற்றாள் தொழாஅர் எனின்.                          குறள் 03 -கடவுள் வாழ்த்து
ஒருவர் கற்ற கல்வியினால் தூய அறிவு வடிவாக விளங்கும் உலகினைப் படைத்த தெய்வத்தின் நல்ல திருவடிகளை தொழாமல் இருப்பாரானால்ஆகிய பயன்  என்ன?

அன்றறிவாம் என்னாது அறஞ்செய்க மற்றது
பொன்றுங்கால் பொன்றாத் துணைகுறள் 36:

மையில் உள்ளவர் பின்னர் அறத்தைச்  செய்யலாம் என்றிடாமல் உடனே அறம் செய்யவேண்டும்அதுவே உடல் அழியும் காலத்திலும் அழியாத் துணையாகும்.

 பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்

இறைவன் அடிசேரா தார்.                             குறள் 10 -கடவுள் வாழ்த்து
பிறவியாகிய  மீண்டும் மீண்டும் பிறந்து வாழும் பெரிய கடலைக் கடக்க உலகினைப் படைத்த தெய்வத்தின்  திருவடியைப் பற்றிக் கொண்டு பின்பற்றினால் மட்டுமேமற்றவரால் இயலாது.

ஆரா இயற்கை அவாநீப்பின் அந்நிலையே
பேரா இயற்கை தரும்குறள் 370: அவாவறுத்தல்.

ஒருபோதும் தணியாத இயல்புடைய ஆசையை விட்டு விட்டால் அந்த நிலையே எப்போதும் மாறாதிருக்கும் (மீண்டும் பிறப்பு இல்லாத பேரா இயற்கை பேரின்ப) வாழ்வைத் தரும்.

பிறப்பென்னும் பேதைமை நீங்கச் சிறப்பென்னுஞ்
செம்பொருள் காண்ப தறிவு.   குறள் 358. மெய்யுணர்தல்

மீண்டும் மீண்டும் பிறப்பு எனும்  அறியாமை நீங்குமாறு முக்தி எனும் சிறந்த நிலைக்குக் காரணமான செம் பொருளைக் காண்பதே மெய்யுணர்வு.

மனிதன் அறிவு எதற்காக?

இந்த உலகியல் மெய்மையை பிறப்பு எனும் அறியாமைலிருந்து வெளியேறவே என மிகத் தெளிவாக உரைக்கிறார்
பிறப்பென்னும் பேதைமை நீங்கச் சிறப்பென்னும்
செம்பொருள் காண்பது அறிவுகுறள் 358:

முவரதராசன் உரை:பிறவித்துன்பத்திற்கு காரணமான அறியாமை நீங்குமாறு முக்தி எனும் சிறந்த நிலைக்குக் காரணமான செம்பொருளைக் காண்பதே மெய்யுணர்வு.

பொருளல்ல வற்றைப் பொருளென்று உணரும்
மருளானாம் மாணாப் பிறப்பு. குறள் 351: மெய்யுணர்தல்
மெய்ப்பொருள் அல்லாதவைகளை மெய்ப்பொருள் என்று தவறாக உணர்கின்ற மயக்க உணர்வால் சிறப்பில்லாத துன்பப் பிறவி உண்டாகும்.

No comments:

Post a Comment