Wednesday, January 21, 2026

கலப்புத் திருமணம் செய்தால் சாதி ஒழியாது - ஈவெராமசாமியார்

 கலப்புத் திருமணம் செய்தால் சாதி ஒழியாது - ஈவெராமசாமியார் 

// நம் நாட்டிலேயே எத்தனையோ தாசிகள் இருக்கிறார்கள்;நாமாவது ஒரு கலப்பு மணத்தைச் சொல்லுகிறோம்,இவர்கள் ஆயிரம் கலப்பு மணம் செய்து பிள்ளைகள் பெறுகிறார்களே..அந்த சாதிக்குள் கூட சாதி போவதில்லையே? அதிலும் பலசாதிகளாக்குகிறோம்.அவர்களும் மேல்சாதி ஆகத்தானே பார்க்கிறார்கள்?

பட்டிக்காட்டு தாசிகள் சாதி பார்த்துதான் புழங்குகிறார்கள்.இதனால் கலப்பு மணத்தால் சாதி போய்விட்டதென்று கூறமுடிகிறதா?

இப்போது நானும்தான் கலப்புமணம் செய்துள்ளேன்.தோழர் சாமி சிதம்பரனார்,தோழர் சா.குருசாமி,தோழர் எஸ்.இராமநாதன் முதலியவர்களுக்குத்தான் கலப்பு மணம் செய்து இருக்கிறார்கள்.அதனால் சாதி போய்விட்டதா? ஏதோ வசதி இருப்பதால் மக்கள் ஒன்றும் சொல்லாமல் இருக்கிறார்கள்.

அது மட்டுமில்லாமல் எங்களுக்கு குழந்தைகள் இருந்து அவர்களுக்கு கலியாணம் ஆக வேண்டுமானால் அப்போது தகராறுதான்.'கலப்புச் சாதியைச் சேர்ந்தவர்கள்' என்று கூறி கலப்பு சாதியார்கள்தாம் ஒருவருக்குள் ஒருவர் செய்துகொள்ளுவார்கள்.//

- #பெரியார் (22-2-1952 விடுதலை)__________________

மலையாளிகளிலே பெரும்பாலும் பார்ப்பானுடைய தேவடியாள் மகன்தான்,அதிலே ஒன்றும் ஆட்சேபனை இல்லை,திருட்டுத்தனமல்ல.அவனே பெருமைப்பட்டுக் கொள்வான்- 'நான் யார் தெரியுமா? நான் இந்த நாயர் பசங்களுக்கா பிறந்தேன் அந்த பிராமணனுக்கு பிறந்தேன்! என்பான்.காசு கொடுத்து போவான்.

இப்போது அவனுக்கும் உணர்ச்சி வந்துவிட்டது எங்களோடு சேர்ந்து பேசுகிறான்.நானும் சேர்ந்து கொள்கிறேன் என்று எழுதியிருக்கிறான்.தெலுங்கனும் இருக்கிறான் கன்னடியனும் வருவான்.அப்போதுதான் அடுத்தவன் வரமுடியும்.  #ஈவெராமசாமியார் 19/12/1973 டி-நகர் சொற்பொழிவு

காதல் என்பது ஓட்டலில் போய்ச் சோறு தின்பது போல - ஈவெரா

03.07.1968 அன்று நடைபெற்ற பரமசிவம் - பானுமதி திருமணத்தில் ஈவெரா உரையாற்றினார்.

என்ன தெரியுமா?

இந்தப் பெண்டாட்டி போனால், இன்னொன்றைத் தேடிக் கொள்ளலாம் என்று ஆண் கருதுவது போல பெண்களும் கருத வேண்டும்.

காதல் என்பது ஓட்டலில் போய்ச் சோறு தின்பது போல.

நம்மவன் காதலைப் பெரிதுபடுத்தி விட்டான். என்ன காதல் வெங்காயம். அவன் பெரிய பக்தன், அவன் மேல் சாமி இருக்கிறது. அவன் சொன்னால் பலிக்கும் என்று சொன்னால், கேட்கிறவனுக்கு நடுக்கம் தோன்றுவது போல் இருக்கும். அதுபோலத் தான் காதலும். அன்பு என்பது ஒருவருக்கொருவர் காட்டிக் கொள்ளும் வரை தான்.

ஒருவர் மாறினால், மற்றவரும் மாற்றிக் கொள்ள வேண்டியது தான். விடுதலை" -06.08.1968

No comments:

Post a Comment