(Historical & Theological view based on International University researches)
Thursday, December 11, 2025
திருப்பரங்குன்றம் மலை- கோவில் இடத்தில் புதிதாக பிறை கொடி - முருக பக்தர்கள் எதிர்ப்பு
'மதுரை திருப்பரங்குன்றம் மலையில் கோயில் இடத்தில் உள்ள கல்லத்தி மரத்தில், நிலா பிறை போட்ட கொடி புதிதாக கட்டப்பட்டுள்ளது. அதனை அகற்ற வேண்டும்' என சுப்பிரமணியசுவாமி கோயில் நிர்வாகத்திடம் ஹிந்து மக்கள் கட்சியினர் புகார் அளித்தனர்.
திருப்பரங்குன்றம் மலையில் கல்லத்தி மரத்தில் பிறை கொடி: அகற்ற இந்து மக்கள் கட்சி வலியுறுத்தல்
மதுரை: திருப்பரங்குன்றம் மலையில் கல்லத்தி மரத்தில் கட்டப்பட்டுள்ள பிறை கொடியை அகற்ற இந்து மக்கள் கட்சி மனு அளித்துள்ளது.
இது தொடர்பாக மதுரை மாவட்ட இந்து மக்கள் கட்சி தலைவர் சோலை கண்ணன், திருப்பரங்குன்றம் கோயில் அதிகாரியிடம் அளித்த மனுவில், "திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலுக்கு சொந்தமான மலை மீதுள்ள தலைவிரிச்சான் கல்லத்தி மரத்தில் நிலா பிறை போட்ட கொடி ஏற்றப்பட்டுள்ளது.
இக்கொடியை அகற்றவும், திருக்கோயில் இடத்தையும், கல்லத்தி மரத்தையும் ஆக்கிரமிக்க திட்டமிடும் தர்ஹா நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்கவும், கல்லத்தி மரத்தை பாதுகாக்கும் விதமாக மரத்தின் மீது முருகனின் சேவல் கொடியை ஏற்றவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.









































.jpeg)






.jpeg)
