Saturday, November 29, 2025

கோவை 13 வீடு கொள்ளை- உத்தரப்பிரதேச ஆசிப், இர்பான்& ஆரிப் கஜிவாலா- சுட்டுப்பிடித்த போலீசார்

கோவையில் வடமாநில கொள்ளையர்கள் கைவரிசை... 16 மணி நேரத்தில் நடந்த அதிரடி... தோண்ட, தோண்ட வெளியாகும் ஷாக்கிங் தகவல்கள்...!



கோவை வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் 15 வீடுகளில் 100 சவரன் நகைகள் மற்றும் பணத்தை திருடிய வடமாநில கொள்ளையர்களை காவல்துறை 16 மணி நேரத்தில் சுட்டுப்பிடித்தது எப்படி என பார்க்கலாம்... 

உத்தரப்பிரதேச மாநிலத்தை சேர்ந்த

ஆசிப்(48),
இர்பான்(45),
ஆரிப் கஜிவாலா (60),  என்பது தெரிய வந்ததுள்ளது.


சுட்டுப் பிடிக்கப்பட்ட மூவரும் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் அவர்களிடம் மாநகர காவல் துணை ஆணையர் தேவநாதன் நேரில் விசாரணை மேற்கொண்டுள்ளாா். 

கோவை கவுண்டம்பாளையம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் அடுத்தடுத்து 13 வீடுகளின் பூட்டை உடைத்து 56 சவரன் நகைகள் மற்றும் ரூ.3 லட்சம் திருடிய வழக்கில் தொடர்புடைய  உத்தர பிரதேசத்தை சேர்ந்த மூன்று பேரை ஆசிப்,  இர்பான்& ஆரிப் கஜிவாலா தனிப்படை போலீசார் சுட்டு பிடித்தனர். 

கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் வீட்டு வசதி வாரியத்திற்கு சொந்தமான குடியிருப்புகள் அமைந்துள்ளது. 6 பிளாக் உள்ள இந்த குடியிருப்பில் 1,848 வீடுகள் உள்ளது. இங்கு அரசு அலுவலர்கள்,  மாநகராட்சி ஊழியர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் தங்கி உள்ளனர். இந்த நிலையில் நேற்று மதியம் அங்குள்ள ஏ பிளாக்கில் மூன்று வீடுகளிலும், சி(3) பிளாக்கில் 10 வீடுகளின் பூட்டை உடைக்கப்பட்டு நகைகள், பணம்  திருடப்பட்டது  தெரியவந்தது.

இதையடுத்து அக்குடியிருப்பு மக்கள் கவுண்டம்பாளையம் போலீசாருக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் கைரேகை நிபுணர்கள் உதவியுடன் வீடுகளில் பதிவான கைரேகைகளை சேகரித்தனர், மேலும் மோப்ப நாய் உதவியுடன் வளாகம் முழுவதும் சோதனையிட்டனர்.  விசாரணையில் குடியிருப்பில் வசித்து வரும் நில எடுப்பு பிரிவு வருவாய் அலுவலர் வீட்டில் இருந்து 30 சவரன் நகைகள் என கிட்டத்தட்ட 56 சவரன் தங்க நகைகள் மற்றும் ரூ. 3 லட்சம் பணம்  திருடப்பட்டது தெரியவந்தது.

No comments:

Post a Comment

ஈவெராமசாமியார் புண்ணாக்கு புரட்சி - ஒரே மணமேடையில் ஒரு மணமகனுக்கு - இரு பெண்களோடு திருமணம்

  முதல் “ புண்ணாக்கு  சுயமரியாதைத் திருமணம்’’ நடைபெற்றதன் பின்னணியைப் பார்ப்போம்.  அருப்புக்கோட்டையின் அருகே உள்ளது சுக்கிலநத்தம் நிலங்களுக்...