Thursday, November 27, 2025

குற்றாலம் திருக்குற்றாலநாதர் கோவில் பிரசாதத்திற்கு எலி எச்சம் கலந்த அரிசி வினியோகம் -உயர் நீதிமன்ற அறிக்கை

 குற்றாலத்தில் உள்ள திருக்குற்றாலநாதர் கோவிலின் பிரசாதத்தில் எலி எச்சம், வண்டுகள் மற்றும் காலாவதியான நெய் கலந்திருந்ததாக ஒரு வழக்கறிஞர் குழு நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்துள்ளது. இது குறித்து உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகளிடம் முறையிட்டு, அவர்கள் தாக்கல் செய்த அறிக்கையில், உணவுத் தயாரிப்புக்கான சான்றுகள் பெறப்படவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது. 

புகார்: குற்றாலத்தில் உள்ள திருக்குற்றாலநாதர் கோவிலின் பிரசாதம் தயாரிப்பதற்கு எலி எச்சம், வண்டுகள் கலந்த அரிசி, காலாவதியான நெய் பயன்படுத்தப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

  • சம்பவம்: இது தொடர்பாக வழக்கறிஞர்கள் குழு ஒன்று உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் அறிக்கை தாக்கல் செய்துள்ளது.
  • உணவுப் பாதுகாப்பு சான்று: கோவில் நிர்வாகம் உணவுத் தயாரிப்புக்குத் தேவையான உணவுப் பாதுகாப்புத் துறையின் சான்றிதழைப் பெறவில்லை என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
  • விசாரணை: நீதிமன்ற உத்தரவின் பேரில் இது தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது.https://www.seithisaral.in/2023/08/22/seizure-of-substandard-prasad-items-at-courtalam-courtalanathar-temple/
  • குற்றாலம் குற்றாலநாதர் கோவிலில் தரமற்ற பிரசாத பொருட்கள் பறிமுதல்

    Seizure of substandard prasad items at Courtalam Courtalanathar temple

    22.8.2023
    குற்றாலம் குற்றாலநாதர் கோவிலில் பிரசாதம் தயாரிக்க பயன்படுத்திய தரமற்ற பொருட்களை. உணவுத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

    குற்றாலம் கோவில்

    தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் பழமை வாய்ந்த குற்றாலநாதர் கோவில் அமைந்துள்ளது. தினமும் ஏராளமான பக்தர்கள் மட்டுமின்றி குற்றால சீசன் காலங்களில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள் மற்றும் பக்தர்கள் இங்கு வந்து சுவாமி தரிசனம் செய்வார்கள். தரமற்ற பொருட்கள் இதேபோன்று சபரி மலைக்கு மாலை அணிவிந்த அய்யப்ப பக்தர்களும் குற்றாலம் அருவிகளில் குளித்து விட்டு குற்றாலநாதர் கோவிலுக்கு செல்வார்கள். குற்றாலநாதர் கோவிலில் சுவாமிக்கு படைக்கப்படும் உணவும், பக்தர்களுக்கு வழங்கப்படும் பிரசாதமும் தரமற்றதாக இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்து வந்தது.

    இந்நிலையில் தென்காசி வட்டார உணவு பாதுகாப்புத் துறை அலுவலர் நாக சுப்பிர மணியன் மற்றும் அதிகாரிகள் குற்றாலநாதர் கோவிலில் உணவு மற்றும் பிரசாதம் தயாரிக்கும் அறையில் திடீர் ஆய்வை செய்தனர். அப்போது அங்கு சுமார் 850 கிலோ பச்சரிசி கெட்டுப்போன நிலையில் இருந்தது. மேலும் 48 லிட்டர் எண்ணெய் மற்றும் 15 கிலோ பச்சரிசி மாவு, 21/2 கிலோ வெல்லம் உள்ள உள்ளிட்ட தரமற்ற பல்வேறு பிரசாதம் தயாரிக்கும் பொருட்களை பறிமுதல் செய்தனர்.
    மேலும் இது குறித்து சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகளுக்கும் அவர்கள் தகவல் நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்தனர் . ஏற்கனவே குற்றாலத்தில் பல ஓட்டல்களில் உணவுத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தி தரம் இல்லாத உணவுகளை அழித்த நிலையில் தற்போது குற்றாலநாதர் கோவிலில் தரமற்ற உணவுப் பொருட்களை உணவுத்துறை அதிகாரிகள் கைப்பற்றி உள்ளளர்.

No comments:

Post a Comment

மதுரை கம்யூனிஸ்ட் துணை மேயர் பொது மக்களின் பாதையை ஆக்கிரமித்து கட்டிடம்

  கம்யூனிஸ்ட் கட்சியைத் சேர்ந்த மதுரை துணை மேயர் பொது மக்களின் பாதையை ஆக்கிரமித்து கட்டிடம் கட்டி இருக்கிறார். அந்த ஆக்கிரமிப்பை அகற்ற வேண...