ஐஐடி ஹைதராபாதுக்கு சென்ற உபாஸனா (நடிகர் சிரஞ்சீவி மருமகள் & Vice Chairman of CSR Apollo Hospitals Group and Managing Director of URLife) அங்கே மாணவர்களிடம், "உங்களில் எத்தனை பேர் திருமணம் செய்து கொள்வீர்கள்?" என்று கேட்டதாகவும், "அதற்கு 'ஆம்' என்று பதிலளித்த பெண்களை விட ஆண்களே அதிகம்" என்று பதிவிட்டு "Progressive India" என்று புல்லரித்திருக்கிறார்.
அந்தப் பதிவில், "பெண்களின் பெரிய காப்பீடு அவர்கள் முட்டையை சேமித்து வைப்பது. முட்டையை பாதுகாத்து வைத்தீர்களென்றால், நீங்கள் எப்போது திருமணம் செய்ய வேண்டும், எப்போது பிள்ளைகள் பெற்றுக் கொள்ள வேண்டும் என்பதை நீங்கள் முடிவெடுக்க முடியும். இன்று நான் என் சொந்தக் காலில் நிற்கிறேன், proudly financially independent. இது என்னை தைரியமான (bold ) முடிவுகளை எடுக்க வைக்கிறது. 30 வயதுக்கு முன் உங்கள் இலக்குகளைத் தீர்மானித்துக் கொள்ளுங்கள். உங்கள் career pathஐ முடிவெடுத்துக் கொள்ளுங்கள். எவ்வளவு சம்பாதிக்கப் போகிறோம் என்பதை முன்பே முடிவெடுத்துக் கொள்ளுங்கள்...."
இந்தப் பதிவைப் பார்த்து பலரும் கருத்து தெரிவித்திருக்கிறார்கள், "இது தவறான போக்கு" என்று. அதில் gynecologist ராஜேஷ் பதிவு கவனிக்க வேண்டியது.
ராஜேஷ் தன் பதிவில் சொல்கிறார், "இந்தத் துறையில் அனுபவமுள்ளவன் என்ற முறையில் சொல்கிறேன்... கோடிகளை வங்கிக் கணக்கில் வைத்து இருப்பவர்களுக்குத் தான் இந்த மாதிரி 'முட்டையை' பாதுகாக்க முடியும். பெரும்பாலான பெண்களுக்கு (கோடிகள்) சாத்தியமில்லை. இந்த முறையை முயன்று தோற்ற பல ஜோடிகள் கதறியதை நான் பார்த்திருக்கிறேன். உன் வேலை (திட்டங்களைப்) பற்றி உயிரியலுக்கு கவலை இல்லை (Biology doesn’t care about your career timeline. ). கருவுறுதல் இருபதுகளில் உச்சத்தை அடைகிறது, முப்பதுகளில் குறைகிறது, 35 வயதிற்குப் பிறகு மிக மிகக் குறைகிறது. முட்டைகளை உறைய வைப்பதும் உத்தரவாதமற்றது. இது மிதமான வெற்றி விகிதங்களைக் கொண்ட சூதாட்டம். உங்கள் careerஐப் பற்றி திட்டமிடுங்கள். ஆனால் தொழில்நுட்பம் உங்களை காப்பாற்றும் என்ற நம்பிக்கையை இளம் பெண்களுக்கு ஊட்டாதீர்கள். IVF நமக்கு உதவும் என்று நினைத்துக் கொள்ளலாம். ஆனால் உண்மை யாதெனில், அதை முயலும் பயனாளிகள் அது பலனளிக்காததால் உடைந்து போவது. உணர்ச்சியற்றவர்களாக இருக்காதீர்கள்".
ஐஐடிகளில் ஐஐடி பாம்பே, டெல்லி, காந்திநகர், கான்பூர், மெட்ராஸ் என பலவற்றிலும் இம்மாதிரி அமெரிக்க woke அஜெண்டாக்களைத் திணிக்கும் பிரபலங்களுக்கு ஏன் இடம் கொடுக்கப்படுகிறது என்பது புரியாத புதிர்.
இந்த 'அறிவுரை' கொடுத்த சிரஞ்சீவி மருமகள் தன் முட்டைகளைப் பாதுகாத்து வைக்காமல் ஏன் பிள்ளைகள் பெற்றது என்பதை அந்த ஐஐடி மாணவர்கள் கேட்கவில்லை!
இந்த 'அறிவுரை' கொடுத்த சிரஞ்சீவி மருமகள் தன் முட்டைகளைப் பாதுகாத்து வைக்காமல் ஏன் பிள்ளைகள் பெற்றது என்பதை அந்த ஐஐடி மாணவர்கள் கேட்கவில்லை!

No comments:
Post a Comment